Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும்: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் என ஜெர்மனி அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஸயம் செய்துள்ள ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் பிரான்க் வோல்டர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பினை ஏற்று ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் வோல்டர் ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இலங்கைக்கு ஆதரவாக செயற்பட உள்ளதாக ஜெர்மன் அறிவித்துள்ளது. ஜெர்மன் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவடைந்ததனை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உர…

  2. ஜெனீவாவில் உள்ள இலங்கை பிரதநிதிகள் பின்பற்றும் அணுகுமுறை நிமால்ஹா பெர்ணாண்டோ அதிர்ச்சி ஜெனீவாவில் உள்ள இலங்கை பிரதநிதிகள் பின்பற்றும் அணுகுமுறை குறித்து இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் நிமால்ஹா பெர்ணாண்டோ அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து நடைபெறும் கலந்துரையாடல்களில் இலங்கை பிரதிநிதிகள் முன்வைத்துள்ள நிலைப்பாடுகள் குறித்தே அவர் அதிர்ச்சி அளித்துள்ளார். "இவர்கள் வெளிப்படுத்துவது கொழும்பின் நிலைப்பாட என்பது எனக்கு தெரியாது , இது கொழும்பின் நிலைப்பாடாக இருந்தால் அது எனக்கு ஆச்சரியமளிக்கும். குறிப்பிட்ட நகல் வடிவில் பாலியல் வல்லுறவு சித்திரவைதைகள் போன்ற விடயங்களை பற்றி குறிப்பிடப்படுவதை கூட அவர்கள் விரும்பவில்லை" என ந…

  3. கிளிநொச்சிக்கு ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் உள்ளிட்ட குழுவினர் விஜயம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கிளிநொச்சிக்கு செவ்வாய் கிழமை விஜயம் மேற்கொண்ட ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிரான்க் வோல்டர் ஸ்டேன்மேரியர் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற இலங்கை ஜேர்மன் தொழிற் பயிற்சி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டாh. 6.7 மில்லியன் யூரோ பெறுமதியில் அமைக்கப்பட்டு வருகின்ற இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப நிலையத்தில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கற்கை நெறிகள் ஆரம்பமாகவுள்ளது என நிறுவனத்தின் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் உட்கட்டுமானங்கள், தளபாடங்கள், கற்கைகளுக்குரிய உபகரணங்கள் அடங்கலாக 6.7 மில்லியன் யூரோ பெறுமதியில் அமைக்கப்பட்டு வருகின…

  4. நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில் அவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண அமைச்சர் ப. டெனீஸ்வரன் தெரிவித்தார். ஐ. நா. சபை மாநாட்டில் கலந்துகொள் ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் இச்சந்திப்பை ஒழுங்கு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியுள் ளதாகத் தெரிவித்த அமைச்சர், டெனீஸ்வரன் பெரும்பாலும் எதிர்வரும் ஒக்டோபர் 7ம் திகதிக்குப் பின்னர் அந்த விடயம் கைகூடலாம் என்றும் தெரிவித்தார். அத்துடன் வடக்கில் தொழில் வாய்ப்பின்றி வாழும் பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் மூலம் தொழில் வாய்ப்புக்களைப…

  5. உள்ளக விசாரணைக்கான அரசின் முயற்சி வெற்றி பெறுமா? தென் பகுதியில் 1971 மற்றும் 1988-89ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இரண்டு கிளர்ச்சிகளின் போது, சாதாரண மக்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டு, வீதிகளிலும் ஆறுகளில் தூக்கியெறியப்பட்டார்கள். அந்த எண்ணிக்கை 64 ஆயிரம் எனக் கூறிய அப்போது எதிர்க்கட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலர், அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர், அச் சடலங்களின் படங்களை எடுத்துக் கொண்டு ஜெனீவாவுக்குப் புறப்பட்டார்கள். ஆனால், அதே மஹிந்த உட்பட தென் பகுதியில் பெரும்பாலானவர்கள், புலிகளின் கிளர்ச்சியின் போது வட பகுதியில் சாதாரண மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்கிறார்கள். அதேபோல் தான், …

  6. இலங்கை வந்தடைந்தார் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வோல்ட்டர் ஸ்டெய்ன்மியர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கிற்கு செல்லவுள்ள ஜேர்மனிய அமைச்சர், கிளிநொச்சியில் நிறுவப்பட்டு வரும் ஜேர்மன் பயிற்சி நிலையத்தையும் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/news/506

  7. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை அவசியமானது – பேராயர் ஜோசப் பொன்னய்யா 23 செப்டம்பர் 2015 யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை அவசியமானது என மட்டக்களப்பு பேராயர் ஜோசப் பொன்னய்யா தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மெய்யாகவே நியாயம் வழங்கப்பட வேண்டுமாயின் சர்வதேச ரீதியான விசாரணைகள் மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளக விசாரணைப் பொறிமுறைமையானது நீதியை வழங்கக்கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் நிறுவப்பட்ட பல ஆணைக்குழுக்கள் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்…

  8. [ செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2015, 02:23.22 AM GMT ] ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, போர்க்குற்ற விசாரணைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பேச்சாளர் ரவீனா தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் சார்பில் வெளிநாடுகளில் இயங்கியவர்களுக்கும் விசாரணைகளில் ஒரு பங்காக இருப்பர் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறப்பு பேச்சாளர் ரவீனா சம்டாசனி தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசாங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியிட்ட அடிப்படையில் அதில் இலங்கை இராணுவம் மற…

  9. மஹிந்தவுக்கு அழைப்பு 23-09-2015 08:55 AM பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குவுக்கு இன்று புதன்கிழமை சமுகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான விளம்பரங்களுக்கு பணம் செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/154837#sthash.zMkbyBdv.dpuf

  10. சர்வதேச தலையீடற்ற உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும்! - நாடாளுமன்றில் ரணில் அறிவிப்பு[Tuesday 2015-09-22 20:00] உள்நாட்டு பொறிமுறைமையின் ஊடாக மட்டுமே போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என பாராளுமன்றில் இன்று ஆற்றிய விசேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறைமை ஒன்றின் ஊடாக தீர்வு வழங்கப்படும். இந்த அனைத்து பொறிமுறைமைகளும் உள்நாட்டு ரீதியில் வடிவமைக்கப்பட்டு அமுல்படுத்தப்படுமே தவிர, இந்த விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களோ சர்வதேச பிரதிநிதிகளோ உள்வாங்கப்பட மாட்டார்கள். 2009ம் ஆண்டு நாடு எதிர்நோக்கிய பயங்கரவாத சவால்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பி…

  11. நான் ஊமை;இனி அதிகம் பேசமுடியாது :வடக்கு முதல்வர் இனி அதிகம் பேசமுடியாது. நான் ஊமையாகவே வந்துள்ளேன். வாய் திறந்தால் பிரச்சினை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று யாழ்.பண்ணைக் கடற்கரையில் இடம்பெற்ற தேசிய கடலோரச் சுத்திகரிப்புத் தினநிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரிடம் அங்கு அவர் ஆற்றிய உரை தொடர்பான மேலதிக விபரங்களைக் கோரிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்றைய தினம் முதலமைச்சர் தனது உரையில், இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளும் பேசித் தீர்வு காண வேண்டும் எனக் கூறியிருந்தார். இது தொடர்பில் அவரிடம் விரிவான தகவலைப்பெற முயன்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.மேற்கொண்டு அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. http://onlineuthayan.c…

  12. இனப்படுகொலை குறித்து ஐ.நா அறிக்கையில் கூறப்படாதது ஏன்? - பேச்சாளர் விளக்கம்[Tuesday 2015-09-22 20:00] ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றவை 'இனப்படுகொலை' எனக் குறிப்பிடாமல் 'அமைதி' காத்தமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து 'தி இந்து' நாளிதழ் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலிடம் கேள்வி எழுப்பியது. அந்தக் கேள்விக்கு ஆணையாளரின் பேச்சாளர் ரவீனா சம்தாசினி அளித்த பதிலில், “இலங்கையில் இடம்பெற்றவை இனப்படுகொலை இல்லை என்று நாம் கூறவில்லை. இதன் முடிவை நடைபெறவுள்ள குற்றப் புலனாய்வு விசாரணைகள் மற்றும் எமது பரிந்துரைகளான நீதிமன்ற விசாரணைகளின் மூலமே கண்டறியப்பட வேண்டும். இனப்படுகொலை என்பதை சில வரையறைகளுக்கு உட்பட்டே கூறமுடியும். ஆனால் …

  13. அமெரிக்கத் தீர்மானத்தை பலவீனப்படுத்த பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா முயற்சி! - சுரேஸ் பிரேமச்சந்திரன்[Tuesday 2015-09-22 20:00] அமெரிக்காவின் தீர்மான வரைவினை பலவீனப்படுத்துவதற்காக பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா போன்ற நாடுகள் முயற்சிப்பதாக மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவின் ஆரம்ப திட்ட வரைபு தொடர்பாக ஆராயும் முதல் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் தீர்மான வரைவினை பலவீனப்படுத்துவதற்காக பாகிஸ்தான், சீனா, கியூ…

  14. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி! [Tuesday 2015-09-22 20:00] வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்தக் கடமையைச் செய்யாது போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்த சம்பவம், வடமாகாண சபை முன்றலில் இன்று நடைபெற்றது. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து வடமாகாண சபை முன்றலில் வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் செய்தனர். இந்தப் போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை சீர்செய்வதற்காக அங்கு வருகை தந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி ஒருவர், போக்குவரத்துச் சீர்செய்யும் பணியை விடுத்து, கமெரா மூலம் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்தார். அவர், கையில் சிறிய ரக கமெராவொன்று இருந்ததுடன், …

  15. பொறுப்புக்கூறல் விசாரணைகளுக்கு உதவத் தயார்! - ஜேர்மனி உறுதி[Tuesday 2015-09-22 19:00] இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த, இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக, ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிராங் வோல்டர் ஸ்ரெய்மேய்யர் உறுதியளித்துள்ளார். இன்று காலை கொழும்பு வந்த அவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய பேச்சுக்களில், பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும், ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர் கூறினார். http://www.seithy.com/breifNews.php?newsID=140980&category=TamilNews&language=tamil

  16. தனியார் காணிகளில் தங்கியுள்ள இராணுவம், பொலிஸார் வெளியேற வேண்டும்! -வடமாகாண சபையில் பிரேரணை[Tuesday 2015-09-22 19:00] வவுனியாவில் தனியார் காணிகளில் தங்கியுள்ள இராணுவம், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் அந்தக் காணிகளிலிருந்து வெளியேற வேண்டும் என வடமாகாண சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று நடைபெற்ற போது, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இந்தப் பிரேரணையை முன்வைத்தார். அவர் உரையாற்றுகையில். 'செட்டிக்குளம் விசேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு அருகில் வேப்பம் இலை பிடுங்கச் சென்ற கந்தசாமி இராஜேஸ்வரி என்ற பெண், முகாமின் வேலியிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். யுத்தம் முடிவடைந்த…

  17. இணையத்தளங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் அவசியம்! - வடக்கு மாகாணசபையில் தீர்மானம்[Tuesday 2015-09-22 19:00] அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டவிதிகள் இலங்கையில் அமுலில் இருப்பது போன்று, இணையத்தளங்களையும் ஒழுங்குபடுத்த சட்டங்கள் அவசியம் என்று வெகுஜன ஊடக அமைச்சைக் கோருவதற்கான பிரேரணை வடமாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தார். இதன்போது அவர் உரையாற்றுகையில், 'இலங்கையில் அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டவிதிகள் அமுலில் இருக்கின்றன. ஆனால் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள் அமுலில் இல்லை. சில இணையத்தளங்…

  18. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இறுதி அறிக்கையில் 400 இராணுவத்தினரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்சவுக்கு நெருக்கமான இணையத்தளங்கள் இது தொடர்பான செய்தியொன்றை பிரசுரித்துள்ளன. குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பங்கேற்ற சுமார் 400 இராணுவத்தினரின் பெயர்கள் போர்க்குற்றவாளிகளாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் ஆணையம் மேற்கொண்ட விசாரணையின்போது தகவல்களை வழங்கிய 6000 பேரின் சாட்சியங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பான தகவல்களை …

  19. 'மஹிந்தவை மந்திரிதுமா என்றா அழைப்பது' முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அவரை எவ்வாறு அழைப்பது என்பது பற்றி உறுதியற்ற தன்மை நிலவுவதாக, ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். அதிகாரங்களை தன்வசப்படுத்திக் கொள்ள நினைத்ததாலேயே மஹிந்த ராஜபக்ஷ அவருடைய நற்பெயரை இழந்தார். இதுவே இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடாமல் இருந்திருந்தால், நாம் அவரை முன்னாள் ஜனாதிபதி என்று அழைத்திருப்போம் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது அவரை, நாடாளுமன்ற உறுப்பினர் (மந்திரிதுமா) அல்லது முன்னாள் ஜனாதிபதி என்ற இரண்டை கொண்டு எவ்வாறு அழைப்பது என்று கூட தெரியாத சங்கட நிலைக்கு நாம் தள்ளப்…

    • 2 replies
    • 609 views
  20. இசை நிகழ்ச்சியைப் பார்வையிடுவதற்காக காவியுடையைக் களைந்து விட்டு, டெனிம் உடையில் சென்ற பௌத்த பிக்குமார் ஐவர், ஞாயிற்றுக்கிழமை இரவு மகரகமையில் பொலிசாரிடம் வசமாக மாட்டினர். ஞாயிறு இரவு மகரகமையில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பாதுகாப்பு வழங்கிய பொலிசார், பார்வையாளர்கள் மத்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஐந்து வாலிபர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். குறித்த வாலிபர்கள் ஐந்து பேரும் மிகவும் கண்ணியமான முறையில் டெனிம் டிரவுசர் மற்றும் சேர்ட் அணிந்து காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை பார்வையிட பொலிஸ் நிலையத்துக்கு ஏராளமான பிக்குகள் வருகை தந்த நிலையில் அது தொடர்பிலும் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கைதிக்கூண்டில…

    • 2 replies
    • 605 views
  21. நேபாளத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பற்ற சமஷ்டி அரசியலமைப்பு இலங்கைக்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக அமைந்திருப்பதாக அரசியலமைப்பு நிபுணரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிபிசி சிங்கள சேவைக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், நேபாளம் முன்னர் இந்து முடியரசு நாடாக இருந்தது. ஆனால் இப்போது அங்கு மதச்சார்பற்ற சமஷ்டி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்குள்ள மக்கள் அரசியலமைப்பு மற்றும் அடுத்தவர்களின் உரிமைகள் தொடர்பில் எந்தளவு தூரம் திறந்த மனதுடன் இருக்கின்றார்கள் என்பதையும், அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் தேசியப் பிரச்சினைகளின் போது வெளிப்படுத்தும் தலைமைத்துவப் பண்பும் தெளிவாக வெளிப்பட்டு…

  22. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். நாட்டின் முன்னாள் தலைவர் என்ற வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து தனது அவதானிப்புக்களை மக்களுக்கு வெளியிடுவது பொருத்தமானது என அவர் கூறியுள்ளார். பல்வேறு காரணங்களுக்காக இந்த விசாரணைகளுக்கு தனது அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் ஐநா மனித உரிமைகள் பேரவை நிறுவப்பட்ட நடைமுறைக்கு புறம்பாக இந்த விசாரணை நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். பேரவையில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய சுயாதீன விசாரணை…

  23. 5 வயது சிறுமி படுகொலையை கண்டித்து யாழ்.பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட 5 வயதான செயாசந்தவமியின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களால் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி வேண்டும்,குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம்' மற்றும் 'சிறுமியை கொலை செய்த கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்' ஆகிய வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கியவாறு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. http://onlineuthayan.com/news/503 சேயாதவ்மியின் வன்முறையே கடைசியாக இருக்கட்டும்! : யாழில் ஆர்ப…

  24. இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் நாங்கள் சட்ட பூர்வமான நடவடிக்கையை சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம். போரின் போது பாலியல் பலாத்காரக் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்திய அமைதிப்படை 1987 ஜூலை முதல் 1990–ம் ஆண்டு மார்ச் வரை இலங்கையில் முகாமிட்டிருந்தது. அப்போது அவர்கள் மீது இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டன. அதேபோன்று ஈழப்போரில் ஈ…

  25. இடம்பெயர்ந்து 26 வருடங்களாகியும் தாங்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதை கண்டித்தும், மீள்குடியேற்றத்தை விரைந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மயிலிட்டி வாழ் மக்கள், இன்று மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தற்போது உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் தமது பகுதி விடுவிக்கப்பட்டு, தாங்கள் மீள்குடியமர்த்தப்படுவதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளலாம் எனவும், இடம்பெயர்ந்நது தாங்கள் பல துன்பங்களைச் சந்தித்து வருவதாகவும் அந்த மக்கள் கூறினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் பிரமுகர்கள், அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் கே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.