Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2015-09-03 18:28:29 | General பா.கிபாகரன், உதயகார்த்திக் எதிர்க்கட்சித் தலைவராக தான் இருந்ததை நிமல் சிறிபால டி சில்வா இன்னும் மறக்காததனால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் என சபாநாயகர் கூறியவுடன் தனது பழைய பதவியை மறக்காத நிமல் சிறிபால டி சில்வா பேச எழுந்து நின்றது சபையில் பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தியது. - See more at: http://www.thinakkural.lk/article.php?local/vercprngi43922d90e5b662817747bdmhjb4291225cba0bdc643c295ewtpf#sthash.v2JoJqoS.dpuf

  2. வட கிழக்கு பிரச்சினையை தீர்க்க சுதந்திர கட்சியின் ஆதரவு அவசியம்: லக்ஷ்மன் கிரியெல்ல [ வெள்ளிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2015, 10:36.16 AM GMT ] வட கிழக்கு பிரச்சினைக்கு முடிவொன்று வழங்குவதென்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு அவசியம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவின்றி தேசிய பிரச்சினையை தீர்க்க முடியாதென சுட்டிக்காட்டிய அமைச்சர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஒரு கருத்தின் கீழ் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேச பிரச்சினைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணங்கினால் நாட்டை காப்பாற்…

    • 3 replies
    • 413 views
  3. அபயக் குரல் கேட்டு உதவிக்கு ஓடியவருக்கு வாள்வெட்டு! - இணுவிலில் கொள்ளைக் கும்பல் அட்டகாசம் [Friday 2015-09-04 19:00] இணுவில் கந்தசாமி கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த முகமுடிக் கொள்ளையர்கள் ஒருவரை வாளால் வெட்டி விட்டு அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த வாள் வெட்டுச் சம்பவத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான சிகாமணி சுகந்தன் (வயது38) இரு முழங்கால்களும் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள்வெட்டில் காயமடைந்தவரின் சகோதரியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், குடும்பத்தில் உள்ள அனைவரையும் மிரட்டி 35…

    • 0 replies
    • 408 views
  4. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டம்! [Friday 2015-09-04 19:00] சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்களை புரிந்தவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வலியுறுத்தி யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்து போராட்டம் இன்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘இலங்கைத் தீவில் நடைபெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகின்றோம்’ எனும் தொனிப்பொருளில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை அரசினால் உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளக பொறிமுறையினையும், விசாரணையையு…

    • 0 replies
    • 359 views
  5. பிரபாகரனுக்கு என்ன நடந்தது?; எவராலுமே கூற முடியாது; கே.பி. தெரிவிப்பு 2015-09-03 18:39:15 | General விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதி யுத்தத்தின் போது எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் எவராலும் சரியான தகவல்களை வெளியிட முடியாதென புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி. தெரிவித்துள்ளார். தற்போது பிரபாகரனின் மரணம் தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோர் பல முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் பிரபாகரனுடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.thinakkural.lk/article.php?local/n…

  6. காலம் தாழ்த்தியென்றாலும் இணக்க அரசியலில் கூட்டமைப்பு; வாழ்த்தி வரவேற்பதாக கூறுகிறார் டக்ளஸ் 2015-09-03 18:40:22 | General பா.கிருபாகரன், உதயகார்த்திக் காலம் தாழ்த்தியேனும் எமது வழியில் இணக்க அரசியலைப் பின்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியையும் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வாழ்த்தி வரவேற்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். http://www.thinakkural.lk/article.php?

    • 2 replies
    • 403 views
  7. அமெரிக்காவின் தலைகீழ் மாற்றம் 2015-08-28 12:29:01 | General 2009 மே யில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த யுத்தத்தின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர், உடைமை இழப்புகள் ஏற்பட்டிருந்ததுடன், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். அத்துடன் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரும் சர்வதேச மனித உரிமைகள், சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மோசமாக மீறியிருந்ததாக பரவலாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன், இவை போர்க்குற்றப் பரிமாணத்தை கொண்டவையெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணையை நடத்தி "பதிலளிக்கும் கடப்பாடு' நிலை நிறுத்தப்பட வேண்டுமெனவும் உண்மையை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களின் குட…

    • 0 replies
    • 470 views
  8. "கூட்டமைப்புக்குள் இருந்தே கஜேந்திரகுமார் போராடியிருக்க வேண்டும்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 31.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'சதுரங்கம்' நிகழ்ச்சியில் பிரபல ஆய்வாளரும் அரசியல் விமர்சகருமான யதீந்திரா வழங்கிய சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர்: தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/pqqpnvxeoyte

  9. No limit போன்றவற்றை எரிக்க பயன்படுத்தியது பொற்றோல் அல்ல என்றும், யுத்த காலங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனத்தினால் என்று பிரபல சிங்கள பத்திரிகையாளர் விக்ரர் ஐவன் ஐ.ரி.என் இற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் குறிப்பிடுகின்றார். சுருக்கமான மொழி பெயர்ப்பு: என். சரவணன் • No limit” எரிக்கப்பட்டதன பின்னர் அதனை தீர விசாரிப்பதற்காக அதன் உரிமையாளர்கள் ஒரு நிறுவனத்திடம் கையளித்தார்கள் . உலகில் உள்ள மிகவும் தலைசிறந்த இராசாயன பகுப்பாய்வாளர்கள் அதனை ஆராய்ந்தார்கள். அந்த அறிக்கை எனது கைகளுக்கும் வந்து சேர்ந்தது. நம்புங்கள்...No limit” எரிக்கப்பட்டது பெட்ரோலால் அல்ல. போரின்போது பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனத்தைப் பயன்படுத்தி அதனை எரித்துள்ளார்கள். நான் அதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். …

  10. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி’ என்னும்; விவசாயக் கண்காட்சி நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இந்தக் கண்காட்சியை வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்தார். உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற விவசாயச் செயன்முறைகளைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மைகளை விளைவிக்கக் கூடிய முறைகளை விவசாயத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு காட்சிக்கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. …

    • 10 replies
    • 899 views
  11. மலசலகூட குழிக்குள் லட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் மொரட்டுவ பிரதான தபால் நிலையத்தின் கைவிடப்பட்ட மலசலகூட குழிக்குள் இருந்து ஒருதொகை கடிதங்கள் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் வான் அஞ்சல்கள், சாதாரண கடிதங்கள், தபாலட்டைகள் மற்றும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களது பரப்புரை கடிதங்கள் என்பனவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன, தபால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அங்கிருந்து குறித்த கடிதங்களை மீட்டுள்ளனர்.இந்நிலையில், இது தொடர்பில் மொரட்டுவ பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளர் மொரட்டுவ பொலிஸ் ந…

  12. அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம் [ வெள்ளிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2015, 11:44.42 AM GMT ] அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்கள் அடுத்த வாரத்திற்குள் நியமிக்கப்படுவார்கள் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த பின்னர், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு முழு அதிகாரங்கள் கிடைத்துள்ளன. இதனடிப்படையில், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பிரதிநிதிகளை அரசியலமைப்புச் சபை நியமிக்கும். கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசியலமைப்புச் சபை கலைந்தது. புதிதாக தெரிவு செய்யப்படும் பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட…

  13. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைலையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்போது பதவியேற்றுக்கொண்டிருக்கின்றது... 12.11க்கு ஜனாதிபதி வருகை 12.12க்கு தேசிய கீதம் இசைத்தல் 12.15க்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று உறுதிமொழி செய்தனர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 01- ரணில் விக்கிரமசிங்க (ஐ.தே.மு) - தேசிய கொள்கை மற்றும் பொருளாதாரா அலுவல்கள் அமைச்சர் 02- ஜோன் அமரதுங்க (ஐ.தே.மு) -சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் 03- காமினி ஜயவிக்கிரம பெரேரா (ஐ.தே.மு)- வலுவாதார அபிவிருத்தி வன ஜீவராசிகள் அமைச்சர் 04- நிமல் சிறிபால டி சில்வா (ஐ.ம.சு.கூ.)- போக்குவரத்து அமைச்சர் 05-…

  14. இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அரசியல் இலாபத்தை மறந்து மக்களுக்கான இரண்டு வருடங்கள் இணநை;து புதிய முறைமையின் ஊடாக வெற்றிக்கரமாக சோதனை செய்துபார்ப்போம் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்காலத்துக்கு முகம்கொடுப்போம் என்றார். இந்த இணக்கத்தின் காரணமாக வெளிநாட்டு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க முடியும் என்பதுடன் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். (அந்த உரையின் சுருக்கம்) ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 10 மற்றும்…

  15. ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் அரசியல் தீர்வு, உள்ளக விசாரணை பற்றி எதுவுமில்லை September 1, 2015 செய்திகள்022 ஸ்ரீலங்காவின் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அறிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையின் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை பற்றி எதுவும் கூறவில்லை. மாறாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றியே ஜனாதிபதி கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். …

    • 6 replies
    • 552 views
  16. எதிர்க்கட்சிகளின் குரல்களை கட்டுப்படுத்த சதி: உதய கம்மன்பில [ வெள்ளிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2015, 10:02.39 AM GMT ] சபாநாயகரின் செயற்பாடு, எதிர்க்கட்சிகளின் குரல்களை கட்டுப்படுத்தும் வகையில் அமைவதாக உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் நாடாளுமன்றில் கட்சித் தலைவர்களுக்கான சிறப்புரிமையை இழந்தமையை குறித்து உதய கம்மன்பில தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு கட்சிகளையும் நாடாளுமன்றில் தனிக் கட்சியாக கருதுவதில்லை என பிரதான கட்சிகளின் தலைவர்களின் தீர்மானித்தினை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது. இந்நிலையில் எதிர்தரப்பின் குரல்களை பாராளுமன்றத்தில…

  17. அமெரிக்க செனட்டின் உயர் அதிகாரிகள் சிறிலங்காவில் – அரசதரப்பு, கூட்டமைப்புடன் சந்திப்புSEP 04, 2015by கார்வண்ணன்in செய்திகள் அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் இரண்டு மூத்த அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் மூத்த நிபுணத்துவ அதிகாரிகளாகப் பணியாற்றும், டாமியன் எவ் முர்பி மற்றும் சாலோட் ஓல்ட்டாம் முரே ஆகியோரே சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடன் இணைந்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். அதேவேளை, இவர்கள் தனித்தனியாகவும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப…

  18. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. http://newsfirst.lk/tamil/2015/09/எதிர்க்கட்சி-பிரதம-கொரட/

    • 2 replies
    • 1.5k views
  19. சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும்- சந்திரிகாவிடம் மோடி உறுதிSEP 04, 2015by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று புதுடெல்லியில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லியில் நடக்கும், உலக இந்து- பௌத்த மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள, சந்திரிகா குமாரதுங்கவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் …

  20. சிறிலங்காவின் புதிய அமைச்சர்கள் இரண்டு கட்டங்களாக இன்று பதவியேற்கின்றனர்SEP 04, 2015 | 2:06by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடக்கவுள்ள முதற்கட்ட நிகழ்வில், அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக பதவியேற்கவுள்ளனர். பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பிற்பகல் 3 மணியளவில் அதிபர் செயலகத்தில் நடக்கும் இரண்டாவது கட்ட நிகழ்வில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக பதவியேற்கவுள்ளனர். 45 அமைச்சர்கள் மற்றும் 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதால், ஒரே தடவையில் பதவியேற்க நீ…

  21. 2016ம் ஆண்டில் தீா்வைப் பெற்றுத்தருவேன் என்று நான் கூறவில்லை” “அவ்வாறு வெளியான சுடரொளி பத்திரிகையின் தலைப்புச் செய்தியை நான் ஏற்றுக்கொள்வில்லை“ “2016ம் ஆண்டில் இந்தத் தீா்வு ஏற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு..... அதைப் பெறுவதற்கு எம்மாலான அத்தனை முயற்சிகளையும் பெறுவோம் என்று உறுதியாகக் கூறியது உண்மை! நாங்கள் தீா்வைப் பெற்றுக்கொள்ள எம்மாலான அனைத்து நடவடிக்கை முயற்சிகளையும் மட்டுமே நாம் மேற்கொள்வோம்! (23.50ல் இருந்து கேளுங்கள்) ஐயா! என்னே உங்களின் ராசதந்திரம்! 2016ம் ஆண்டில் நாம் தீா்வைப் பெற்றுத்தருவோம். எமக்கு ஒரு சந்தா்ப்பத்தைத் தாருங்கள் என்ற தோ்தல்கால பிரசாரங்கள் என்னவாயிற்று! https://soundcloud.com/imurasuweb/i0wiuf6ehmt3

  22. சிங்களவர்களின் “பெருந்தன்மையும்”, தமிழர்களின் “பெருமிதமும்” சம்பந்தமா? [ Thursday, 3 September 2015 ,12:37:46 ] என்.சரவணன் சம்பந்தரின் எதிர்கட்சித் தலைமையேற்பு குறித்து பல கோணங்களில் இருந்தும் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. சிங்கள பேரினவாத தரப்பு இந்த தெரிவு குறித்து கொதித்துப் போயுள்ளது. நாட்டைப் பிரிப்பதற்காக தமிழர்களுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் இது இந்த அடையாளம் என்கின்றனர். இன்னொருபுறம் ஆளும் சிங்கள தரப்பு தமிழர்களுக்கு சிங்களவர்களால் காட்டப்பட்டுள்ள பெருந்தன்மை என்கிற அர்த்தத்தில் குதூகலமடைகின்றன. தென்னிலங்கை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கூட இதனை ஆதரித்து கருத்து வெளியிடுவது கூட இனவாதிகளையும் மீறி தென்னிலங்கை தமது இனத்தாராளவாத சமிக்…

  23. இலங்கையில் குறைகிறது திருமணங்கள்! [Wednesday 2015-09-02 19:00] இலங்கையில் இடம்பெறும் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான கடந்த 4 ஆண்டுகளில் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு 2 லட்சத்து 314 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன. 2012 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 710 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன. 2013 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 760 திருமணங்கள் நடந்துள்ளன. 2014 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 728 திருமணங்கள் நடந்துள்ளதாக இலங்கை சனத் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு…

    • 10 replies
    • 649 views
  24. அமைச்சர்கள் தொகை அதிகரிப்புக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்SEP 03, 2015 | 16:09by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் 127 மேலதிக வாக்குகளால்,நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கையை, 48 ஆகவும், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆகவும் அதிகரிக்கும் பிரேரணை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விவாதங்களை அடுத்து, இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பிரேரணைக்கு ஆதரவாக 143 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 16 பேர் எதிர்த்து வாக்களித…

  25. சீனாவை சிறிலங்காவிடம் இருந்து ஓரம்கட்ட முடியுமா?SEP 03, 2015 | 5:15by நித்தியபாரதிin கட்டுரைகள் இந்தியா தனது நலன்களை பராமரித்துக் கொள்வதுடன் கொழும்புடன் தொடர்ந்தும் உறவைப் பேணுவதையும் இதன் மீது தான் செல்வாக்குச் செலுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் அதேவேளையில், சீனாவிடமிருந்து சிறிலங்காவை ஓரங்கட்டுவதில் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. இவ்வாறு thewire ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் சர்மா. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்கா தலைநகரில் உள்ள பிரபலமான, காலி முகத்திடலில் உள்ள இரு பீரங்கிகள் இப்போது இந்திய மாக்கடலைக் கண்காணிக்கவில்லை. சீனாவினால் நிதியிடப்பட்ட- கடலுக்கு மேலாக, வானுயர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.