ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
தீருவில் சதுக்கத்தில் மாவீரர்நாள் ஏற்பாடுகள் மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் துப்புரவுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறை தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவுச் சதுக்கத்தில் வருடா வருடம் மாவீரர்நாள் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வல்வெட்டித்துறை நகரசபைச் செயலாளரின் ஏற்பாட்டில் தீருவில் சதுக்கத்தில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. இந்தச் செயற்பாட்டுக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். அதனையடுத்து நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்ட…
-
- 0 replies
- 137 views
-
-
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்! அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அச்சிடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், அன்றாடம் சுமார் 6,000 அனுமதிப் பத்திரங்களை அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது. பற்றாக்குறையின் விளைவாக அண்மைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 350,000 சாரதி அனுமதிப் பத்திரங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய அட்டை இருப்புக்கள் இப்போது கிடைத்துள்ளதால், அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் அனுமதிப் பத்திரங்களை விரை…
-
- 0 replies
- 67 views
-
-
வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்குவார்களா தமிழ் அரசியல்வாதிகள் ஞாயிறு, 16 நவம்பர் 2025 05:52 AM மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தினை தெரிவித்தார். மதுபானசாலைக்கான அனுமதி வழங்குபோது இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி, முதலில் விலைமனு தாரர்கள் தெரிவு செய்தல் மற்றும் விலை மனுக்கள் கிடைத்த பின்னர் அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் வழிமுறைகளுக்கு அமைய அனுமதி வழங்கப்படும். விலை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் முறையாக நிலையான கட்டணம் செலுத்தப்பட்டடுள்ளதா? தூரத்துக்க…
-
-
- 5 replies
- 419 views
-
-
Published By: Vishnu 16 Nov, 2025 | 07:36 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கிறார். அதனால் இந்த அரசாங்கம் ஒருபோதும் தாஜுதீனின் கொலையாளிகளை கைது செய்யப்போவதில்லை. முடிந்தால் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்குமாறு சவால்விடுகிறேன் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அலுவலகங்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்றம், ஆணைக்குழுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தாஜுதீன் கொலை செய்யப…
-
- 1 reply
- 157 views
- 1 follower
-
-
16 Nov, 2025 | 06:15 PM ஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நிறுவப்பட்டிருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவ உறுப்பினர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னத்தின் முன்னிலையில் மிகுந்த கௌரவத்துடன் நடைபெற்றது. இந்த நினைவுச் சின்னம் கொழும்பில் செனோடாப் போர் நினைவிடம் (Cenotaph War Memorial) என அழைக்கப்படுகிறது. இது அப்போதைய இலங்கை இராணுவ அதிகாரிகள் இரு உலகப் போர்களிலும் (முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்) உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் நிறுவப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். இது, சர் எட்வின் லேன்ட்ஸீர் …
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
16 Nov, 2025 | 05:11 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். நிலவும் வானிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி வரையான காலப் பகுதியில் பல பகுதிகளுக்கும் சராசரியாக கடந்த 36 மணியளங்களில் 125 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. இந்த நிலைமை இன்னமு…
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
சிறிதரனுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்! இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக முறைப்பாட்டை முன்வைத்த சிவில் அமைப்பின் சஞ்சீவ மஹவத்தவிடம், நேற்றையதினம் 6 மணித்தியாலங்களாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தமக்கு எதிராக குற…
-
- 0 replies
- 181 views
-
-
16 Nov, 2025 | 05:05 PM (இராஜதுரை ஹஷான) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டமளிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்…
-
- 0 replies
- 111 views
- 1 follower
-
-
நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு 14 Nov, 2025 | 12:51 PM யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (13) இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடல் கடந்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்திருக்கிறது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான தா…
-
-
- 4 replies
- 407 views
-
-
சந்தோஷ் ஜா – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இடையில் விசேட சந்திப்பு! இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேவேளை குறித்த கலந்துரையாடலில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தல் மற்றும் இலங்கையின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1452834
-
- 1 reply
- 112 views
-
-
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்! நாளையதினம் (17) அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் தமது சங்கம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. https://athav…
-
- 0 replies
- 65 views
-
-
Published By: Digital Desk 1 16 Nov, 2025 | 07:46 AM மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது டெல்லியில் உயர்மட்ட அரசியல் சந்திப்புகளில் டில்வின் சில்வா தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி குழு பங்கேற்கவுள்ளது. இலங்கை அரசியலிலும், பிராந்திய இராஜதந்திரத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா விஜயத்தை பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி.யின் ஆரம்ப கொள்கைப் பிடிப்புகளில், 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வீதியில் இறங்கிப் போ…
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
Published By: Vishnu 16 Nov, 2025 | 02:40 AM இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழதமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும். அதற்கு தமிழக அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என தொல் திருமாளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சியை திறந்து வைக்க யாழ்ப்பாணம் வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
இந்தோ - பசுபிக் பிராந்தியமும் அநுரவின் காய் நகர்த்தலும். --- ----- --------- *ரில்வின் லண்டன் செல்கிறார் இந்தியாவுக்கும் பயணம் செய்வார். *புலம்பெயர் நாடுகளில் இளஞ்செழியனுக்கு பாராட்டு விழா! பின்னணி என்ன? *தமிழ்த்தேசிய பரப்பு எல்லைக்குள் ஜேவிபி *ரணில் - மகிந்தவை, சந்திரிகா ஆகியோரை விடவும், அநுரவின் மாறுபட்ட அணுகுமுறை ---- --------- ------ 2009 இற்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியல் உள்ளிட்ட இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த செயற்பாடுகளிலும் மாறுபட்ட அணுகுமுறை ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கையாளுகின்றார் என்பதை, அவருடைய சமீபத்திய காய் நகர்த்தல்கள் காண்பிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளையும் இந்திய - சீன அரசுகளையும் கையாளும் அணுகுமுறையானது, தமது கட்சிக் கொள்கைக…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
15 Nov, 2025 | 01:15 PM (இணையத்தள செய்திப் பிரிவு) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தேசிய மக்கள் சக்கி அரசாங்கம் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை தொடர்பான 21ஆவது பொதுக்கூட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 21ஆவது பொதுக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காவிட்டாலும், ஒரு முக்கிய எதிர்க்கட்சி என்ற வகையில், பொதுக்கூட்டம் தொடர்பிலும் பிரச்சினைகள் குறித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தெரிவிப்பது அவசியம் என நாமல் ராஜபக்ஷ தனது Xதளத்தில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230415
-
-
- 4 replies
- 452 views
- 1 follower
-
-
ஷொப்பிங் பைகள் போன்ற பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையில், நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தனர். . பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துவதால், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க ஒரு திட்டத்தை வகுக்க உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் அபேகோன் உள்ளிட்ட மூவரடங்…
-
- 2 replies
- 299 views
- 1 follower
-
-
04 Aug, 2025 | 07:12 PM மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடாக கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடினர். மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரின் அழைப்பிற்கு இணங்க அருட்தந்தையர்கள், மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி, பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இன்றைய தினம் திங்கட…
-
-
- 39 replies
- 1.5k views
- 3 followers
-
-
Published By: Vishnu 14 Nov, 2025 | 08:00 PM தற்கொலை செய்யப்பதாவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (14) அதிகாலை உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஜெ.சுரேந்தன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த எட்டாம் திகதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்ட நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் கதிரையில் அமர்ந்திருந்து கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்பதற்காக மனைவியுடன் தொலைபேசியில் உரையாடினார். கைபேசியில் உரையாடியவ…
-
-
- 1 reply
- 264 views
- 1 follower
-
-
Nov 15, 2025 - 01:25 PM இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 425 கிராம் நிறையுடைய மெக்கரல் டின் மீன் 480 ரூபாவாகவும், 425 கிராம் நிறையுடைய ஜெக் மெக்கரல் டின் மீனின் 560 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhzzsexu01mto29nhqcrpdc3
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
15 Nov, 2025 | 03:14 PM யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதகரினால், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை, உணவகம் ஒன்றின் கழிவு நீரினை வீதிக்கு அப்புறப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது மூவரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்ற…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்! மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபையானது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச்சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, இத்தகைய தெளிவின்மை காரணமாக சரியான மருந்தைக் கண்டறிவது கடினமாகி, நோயாளியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எட…
-
-
- 3 replies
- 192 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 1 15 Nov, 2025 | 01:36 PM பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பத்திநாயக்க, ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக பிரதி பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக லலித் பத்திநாயக்க தொடர்ந்தும் பணியாற்றுவார் என குறிப்பிடப்படுகிறது. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக பணியாற்றிய சஞ்சீவ தர்மரத்ன, குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், குறித்த வெற்றிடத்திற்கு லலித் பத்திநாயக்கவை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வெ…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
15 Nov, 2025 | 09:41 AM (இணையத்தள செய்திப் பிரிவு) 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை அட்டவணையை வெளியிட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நேர அட்டவணைப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17ம் திகதி முதல் 26ம் திகதி வரை நடைபெறும். 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதியும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10ம் திகதி முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும். 2027 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முதன்முறையாக எழுதும் மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை 2026 அக்டோபர் 24ம் திகதி நடைபெறும். 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 டிச…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
14 Nov, 2025 | 04:59 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் கொண்டுள்ள பொறுப்புகள் ,சேவைகளை ஒரு கட்சியின் அரசியல் பிரிவினருக்கு மாற்றுவதற்கான நுட்பமான நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன் ,இதுவரை பரவலாக்கப்பட்ட முறையில் செயல்பட்ட மாகாண சபைகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள், பிரஜா அபிவிருத்தி சபையின் செயற்பாட்டுக்கு அடிபணியச் செய்யும் ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளதுடன் இதனை உடனடியாக வாபஸ் பெறுமா…
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
14 Nov, 2025 | 03:51 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) எவ்வித பரிசோனயின்றி விடுவிக்கப்பட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்குள்ளும் ஆயுதங்களே இருந்தன என்பதை மீண்டும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன் .அது தொடர்பான முக்கிய ஆவணங்கள் எனக்கு கிடைத்துள்ளன.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கோ அல்லது இன்டபோலுக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்று விசாரியுங்கள் நான் பதிலளிக்கின்றேன் என யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்க…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-