ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கிடைத்த 12 தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் யாருக்குப் பகிர்ந்தளிப்பது என்பது குறித்த இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லையெனத் தெரியவருகிறது. எனினும், மகிந்த தரப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரி தரப்பிற்கும் இடையே தேசியப்பட்டியல் குறித்து காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நேற்று இரவுடன் நிறைவடைந்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதற்காக தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து தரப்பினரும் பொது இணக்க…
-
- 0 replies
- 766 views
-
-
12 பெண்களே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு – வீழ்ச்சி காணும் பெண்களின் பிரதிநிதித்துவம்AUG 20, 2015 | 2:30by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம். 8ஆவது நாடாளுமன்றத்துக்கு, 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளனர். சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில், 556 பெண் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். இவர்களில் 12 பேர் மட்டுமே, நாடாளுமன்றத்துக்குத் தெரியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும், ஐதேக மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டவர்களாவர். மாவட்ட ரீதியாக 14 ஆசனங்களை வென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து இம்முறை ஒரு பெண் உறுப…
-
- 2 replies
- 724 views
-
-
மகிந்த – மைத்திரி அணிகளின் தேசியப்பட்டியல் மோதல் தீவிரம்AUG 20, 2015 | 1:15by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேசியப் பட்டியல் ஆசனங்களை நிரப்புவது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கடுமையான இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 12 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே, தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் 29 பேர் மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்களை உள்ளடக்கியதாக, 12 பேரை இந்தக் கட்சியினால் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்க முடியும். ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய செயலராக நியமிக்கப்பட்ட மைத்திரி அணியைச் சேர்ந்த பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவினது தேசி…
-
- 0 replies
- 540 views
-
-
தேசியப்பட்டியல் விவகாரம்: ஜேவிபிக்குள்ளேயும் இழுபறி – அந்தனி ஜீவாவுக்கு வாய்ப்புக் கிட்டுமா?AUG 20, 2015 | 1:25by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களை பெற்றுள்ள ஜேவிபிக்குள்ளேயும், அந்த ஆசனங்களுக்கான நியமனங்களை செய்வது தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஜேவிபியால் சமர்ப்பிக்கப்பட்ட 29 பேர் கொண்ட தேசியப்பட்டியல் வேட்பாளர்களில் கட்சிக்கு வெளியே உள்ள புலமையாளர்களே இடம்பெற்றிருந்தனர். எனினும், அவர்களில் இருவரை தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமிப்பது தொடர்பாக ஜேவிபி தலைமை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கட்சிக்கு வெளியில் உள்ளவர்களை நியமித்தால் அவர்கள் கட்சியின் நலனைப் பாதுகாப்பார்கள் என்று நம்பமுடியாது என ஜேவ…
-
- 0 replies
- 378 views
-
-
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிந்த, மைத்திரி ஏட்டிக்குப் போட்டியாக சந்திப்புAUG 20, 2015 | 1:34by கி.தவசீலன்in செய்திகள் புதிதாகத் தெரிவாகியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன் போது. ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களான நிமால் சிறிபால டி சில்வா மற்றும், ஜோன் செனிவிரத்ன ஆகியோர், தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கிடையே…
-
- 0 replies
- 454 views
-
-
நிமால் சிறிபால டி சில்வாவுக்கு பிரதிப் பிரதமர் பதவி?AUG 20, 2015 | 0:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மிக முக்கியமான அரசியல் பிரமுகர் ஒருவர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவிருப்பதாக, கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ள முக்கிய பிரமுகரே அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளார். தாம் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விரும்புவதாக இவர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு அரசாங்…
-
- 0 replies
- 522 views
-
-
"புலம்பெயர் தமிழர்கள் றிமோட் கொன்ட்ரோல் அரசியலை கைவிட வேண்டும்": நாடாளுமன்ற தேர்தல் - 2015 முடிவுகள் வெளியாகிய பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் வழங்கிய நேர்காணல். நேர்காணலை கேட்க: https://soundcloud.com/imurasu/11gthouquyyp
-
- 2 replies
- 399 views
-
-
தெற்கே மகிந்தவையும் வடக்கே கஜேந்திரகுமாரயும் தோற்கடித்து இனவாதத்துக்கு இடமில்லை என இலங்கை மக்கள் ஒட்டு மொத்தமாக நிரூபித்து விட்டார்கள் என ஊடகவியலாளர் உபுல் ஜோசப் பெனாண்டோ, சிலோன் டுடே பத்திரிகையில் எழுதி உள்ளார். இந்த ஆரோக்கிய நிலைமையினை புதிய அரசு, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர். மகிந்தவுக்கு புதிதாக சொல்லிக் கொண்டு வாக்குக் கேட்க எதுவும் இருக்கவில்லை. இனவாதம் கதைத்தே கரை சேரலாம் என்று நினைத்தார். எனினும் மக்கள் அவரது எதிபார்ப்புக்கு செவி சாய்க்க வில்லை. மறுபுறத்தே, அதே போல் வீராவேசமாக பேசி தமிழர் வாக்குகளை பெற முடியும் என கணக்கு போட்ட கஜேந்திரகுமாரயும், வடக்கே மக்கள் வீட்டுக்கே அனுப்பி விட்டார்கள். ஐ தே க வாக்குகள் 2 மில்லியனில் இருந்து …
-
- 11 replies
- 1.5k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில் அவர் நாடாளுமன்றம் செல்வதற்குப் பதிலாக மறியலுக்கு செல்வார் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவிக்கின்றார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன், சாதாரண நாடாளுன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பும், சலுகைகளுமே மகிந்தவிற்கு வழங்கப்படும் என்றும், மாறாக முன்னாள் ஜனாதிபதி என்பதற்காக முன்னர் வழங்கப்பட்ட சலுகைகள் எதிர்காலத்திலும் வழங்கப்பட மாட்டதென்றும் அவர் தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிலையில் இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய க…
-
- 0 replies
- 806 views
-
-
நல்லாட்சி, பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளை புதிய அரசு முன்னெடுக்க வேண்டும்- பான் கீ மூன்AUG 19, 2015 | 5:47by கார்வண்ணன்in செய்திகள் நல்லாட்சி, பொறப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கான மேலதிக நகர்வுகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன். சிறிலங்கா அதிபர் தேர்தலில், வெற்றி பெற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள, ஐ.நா பொதுச்செயலர், நல்லாட்சி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கான மேலதிக நகர்வுகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். http://www.puthinappalakai.net/2015/08/19/news/8996 இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா பொது…
-
- 2 replies
- 425 views
-
-
ஜனவரி 8 புரட்சிக்கு மக்கள் மீண்டும் அங்கீகாரம்! ரணில் பெருமிதம்[Wednesday 2015-08-19 18:00] கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டில் ஏற்பட்ட புரட்சியை மக்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பதவியேற்றதன் பின்னால் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இன்று காலை அலரி மாளிகை முற்றவெளியில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதத் தலைவர்கள், சிவில் தலைவர்கள் உளி;ட்ட அனைத்து தரப்பி…
-
- 1 reply
- 830 views
-
-
தேசிய பட்டியல் மூலம் க. அருந்தவபாலனை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்ற தலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட க.அருந்தவபாலன் 42ஆயிரத்து 925 விருப்பு வாக்குகளை பெற்று இருந்தார். இருந்த போதிலும் அவருக்கு ஆசனம் கிடைக்கவில்லை. சாவகச்சேரியை பிரிதிநிதித்துவ படுத்தும் முகமாக நடராஜா ரவிராஜ்க்கு பின்னர் எவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. அதனாலையே தேசிய பட்டியல் ஆசனத்தினை அருந்தவபாலனுக்கு வழங்க வேண்டும் என நாம் கோருகின்றோம். அருந்தவபாலன் கடந்த 1977ம் ஆண்டு முதல் தமிழரசு கட்சியில் உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு பாராளுமன்ற த…
-
- 2 replies
- 1.4k views
-
-
நல்லாட்சி, பொறுப்புக்கூறல் விடயங்களில் முன்னேற்றத்தை காணுமாறும் ஐ.நா பொதுச்செயலர் வேண்டுகோள்! [Wednesday 2015-08-19 19:00] இலங்கையில் இடம்பெற்ற மிகவும் அமைதியான -அனைவரும் பங்களிப்பு செய்த தேர்தலுக்காக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் புதிய அரசாங்கத்தை நல்லாட்சி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் போன்ற விடயங்களில் மேலும் முன்னேற்றத்தை காணுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில்- அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் நடைமுறையை முன்னெடுத்தமைக்காக ஜனாதிபதிக்கும், இலங்கை மக்களின் வாக்களிப்பு உரிமையை உறுதிசெய்வதற்காக மிகவும் முன்னுதாரமான முயற்சிகளை முன்னெடுத்த தேர்தல் ஆணையாளரையும் அவர் பாராட்டியுள்ளார். இலங்…
-
- 0 replies
- 361 views
-
-
சகலருக்கும் சம அந்தஸ்துடன் கூடிய புதிய நாடு: ரணில் விக்ரமசிங்க 18 ஆகஸ்ட் 2015 சகலருக்கும் சம அந்தஸ்துடன் கூடிய புதிய நாட்டை உருவாக்குவோம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டுடன் கூடிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜனவரி 8ஆம் தேதி ஏற்படுத்திய புரட்சியையும் இணக்கப்பாட்டினையும் முன்னெடுத்துச் செல்வதற்கு நாட்டின் பெருந்தொகையான மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், "தற்போது வெற்றியாளர்கள், தோல்வியடைந்தவர்கள் என பிரித்துப் பார்த்தலாகாது. புதிய யுகத்தின் சவால்களுக்கு மு…
-
- 6 replies
- 912 views
-
-
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களை உள்ளடக்கிய கட்சிகளாக போட்டியிட்ட இ.த.அ.க (த.தே.கூ), ஈ.பி.டி.பி மற்றும் முஸ்லிம்களை உள்ளடக்கிய கட்சிகளாக ஶ்ரீ.ல.மு.கா மற்றும் அ.இ.ம.கா என்பன தனியாகவும் ஐ.தே.கவுடன் இணைந்தும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் த.தே.கூ. தேசியப்பட்டியல் ஆசனங்கள் இரண்டுடன் 16 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி 01 ஆசனத்தையும், ஶ்ரீ.ல.மு.கா தனித்து 01 ஆசனத்தையும் ஐ.தே.கவுடன் இணைந்து 04 ஆசனங்களையும் அ.இ.ம.கா, ஐ.தே.கவுடன் இணைந்து 04 ஆசனங்களைக் கைப்பற்றியது. இதேவேளை ஐ.ம.சு.மு விலிருந்து ஒரே ஒரு முஸ்லிம் உறுப்பினராக கே.கே. மஸ்தான் 7,298 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார். அத்துடன் இக்கட்சியிலிருந்து எவ்வித தமிழ் பிரதிநிதியும் தெரிவாகவில்லை என்பது குறிப்ப…
-
- 4 replies
- 706 views
-
-
முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஸல் சரத்பொன்சேகா யுத்த வெற்றியை முன்னிறுத்தி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார். இதேவேளை சரத்பொன்சேகாவின் கட்சியும் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி 5, 238 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 4, 706 வாக்குகளை மாத்திரமே ஜனநாயக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது. அந்த மாவட்டத்தில் சரத் பொன்சேகாவின் பாரியார் அனேமா பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு அக் கூட்டணி ஏழு ஆசனங்களைப் பெற்றிருந்தது. அதி…
-
- 2 replies
- 326 views
-
-
புதிய அரசாங்கத்திற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். முகநூலில் இது பற்றி கோதபாய ராஜபக்ஸ அறிவித்துள்ளார். மேன்மைதங்கிய மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரளித்த அனைவருக்கும் இ;தயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். வெற்றியைப் போன்றே மஹிந்த ராஜபக்ஸ, தோல்வியையும் எளிமையாக ஏற்றுக ;கொள்ளக்கூடிய மனமுடையவர் என அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் அமைதியானதும் சௌபாக்கியம் மிக்கதுமான நாட்டை கட்டியெழுப்ப ஆதரவளிக்கப்பட…
-
- 1 reply
- 646 views
-
-
பதினைந்தாவது நாடாளுமன்றத்துக்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல், இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுத் தேர்தல்களை விட முக்கியமானதாக இந் நாட்டு சிறுபான்மையினர் கருதியதாகவே கூற முடியும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ -பிரதமராவதன் மூலம் மீண்டும் அதிகாரத்துக்குவர மேற்கொண்ட முயற்சியே அதற்குக் காரணமாகும். மஹிந்தவைப் பிரதமராக்குவதே தேர்தல் பிரசார நாட்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான சுலோகமாக இருந்தது. இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளை விடவும் பிரதமர்களை விடவும் சிறுபான்மை மக்கள், மஹிந்தவை வெறுத்தனர். அது கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது மிகத் தெளிவாக தெரியவந்தது. அந்த நிலையில் தான் மஹிந்த இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிய…
-
- 0 replies
- 889 views
-
-
படுதோல்வி கண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாAUG 19, 2015 | 3:29by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் படுதோல்வி கண்டுள்ளது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி. 2010ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவிபியுடன் இணைந்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி, 7 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆனால், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சொற்ப வாக்குகளையே பெற்று தோல்வியுடைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா படுதோல்வியடைந்தார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார். இம்முறை கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக கட்சிக்கு 5,238 வாக்குகளே கிடைத…
-
- 5 replies
- 1.4k views
-
-
நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடப் போவதாக மகிந்த அறிவிப்புAUG 19, 2015 | 11:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தாம் பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகவும், தொடர்ந்து நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “ வரலாறு காணாத தடைகளை நாம் எதிர்கொண்ட போதிலும், எமது கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் அளித்துள்ள ஆணையைப் பாதுகாக்கும் வகையில், நான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவென். நாட்டையும், ஜனநாயக முறைமையையும் பாதுகாக்க நாடாளுமன்றத்துக்குள் இருந்து,…
-
- 0 replies
- 488 views
-
-
சீனாவை சிறிலங்கா புறக்கணிக்க முடியாது – சீன அரசு ஊடகம் கருத்துAUG 19, 2015 | 11:50by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா சீனாவைப் புறக்கணிக்க முடியாது, ஏனென்றால், கொழும்புடனான அதன் உறவு ஒருதலைப்பட்ச அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று சீன அரசு நாளிதழான குளோபல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், சீன சார்புடைய மகிந்த ராஜபக்ச தோல்வி கண்டுள்ள நிலையிலேயே, சீனாவின் அதிகாரபூர்வ நாளிதழில் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவின் மூலோபாய முக்கியத்துவம் குறித்து விபரித்துள்ள, அந்த ஊடகம், மேற்குலக, இந்திய ஊடகங்கள், ராஜபக்சவை சீன சார்புடையவர் என்று முத்திரை குத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. “மைத்தி்ரிபால சிறிசேன அரசாங்கம் தனது வெளிவிவகாரக் கொள்க…
-
- 0 replies
- 441 views
-
-
கூடுதல் ஆசனங்களை வென்றெடுக்க முடியும் என தாம் எதிர்பார்த்ததாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தலில் ஜே.வி.பி எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு தமது கட்சிக்கு மக்கள் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கட்சியின் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்து அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் அளித்த வாக்குகளுக்கு உரிய பலன்களை நிச்சயமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். GTN
-
- 0 replies
- 281 views
-
-
தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேiவாயற்றுவதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் கோரியுள்ளார். சற்று முன்னர் அலரி மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இணக்கப்பாடுகளுடன் கூடிய கூட்டு தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேiவாயற்றுவதற்கான இந்த முயற்சியிலிருந்து எவரும் விலகிச் செல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மிகவும் நீதியானதும் சுயாதீனமானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதியும் தாமும் ஏனைய அனைத்து கட்சி உ…
-
- 0 replies
- 556 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முரண்பாட்டை தவிர்க்குமாறு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் மஹிந்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி கூடவுள்ள புதிய பாராளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக பெரும்ப…
-
- 0 replies
- 382 views
-