ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142788 topics in this forum
-
எஸ்.ஆர்.லெம்பேட் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் மாத்திரமே உறுதி செய்யப் பட்டுள்ளார். மேலும் இரு வேட்பாளர்கள் தெரிவில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன், தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்குவதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். எனினும், ஆதரவாளர்களின் வற்புறுத்தல்களால் பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும், அதிலிருந்து வெளியேறுவதாக, செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளார். இந்த நிலையில் மன்னாரில் …
-
-
- 4 replies
- 433 views
-
-
புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் Vhg அக்டோபர் 09, 2024 புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என முன்னாள் போராளி கந்தசாமி இன்பராஜா தெரிவித்துள்ளார். வவுனியா வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை கந்தசாமி இன்பராஜா தலைமையிலான சுயேட்சைக்குழு இன்றையதினம் (09-10-2024) தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சை குழுவில் போட்டியிடுகின்றது. நாடாளுமன்ற தேர்தல் இதனையடுத்து, வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (09-10-2024) …
-
- 0 replies
- 349 views
-
-
09 Oct, 2024 | 06:21 PM தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் ராஜினாமா கடிதங்கள் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் புதன்கிழமை (09) தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் விடயங்களை கையாள்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் புதன்கிழமை (09) கூடியது. இதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. வன்னியின் மூன்றுமாவட்டத்தினதும் வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி விபரம் அறிவிக்கப்படும். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா கடிதம் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை…
-
-
- 3 replies
- 308 views
-
-
இலங்கையில் தொழுநோயை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறு திருமுருகன் தெரிவித்ததுடன் யாழில்(jaffna) சங்கானையில் அதிகளவான நோயாளர்கள் இருப்பது கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கையில்(sri lanka) தொழுநோயாளர்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக உழைத்து வரும் மாற்று மக்கள் சபை அங்கத்தவர்களை சந்திக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள தொழு நோயாளர்களை மலர்ச்சி காண வைப்பதற்காக உருவாக்கப்பட்ட நோயாளர்களுக்கான மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு மற்றும் (மாற்றும் மக்கள் சபை) காவேரி கலா மன்றத்தின் கூட்டு முயற்சிகளை பாராட்டுகிறேன். இலங்கையில் தொழுநோய் இலங்கையில் தொழுநோய் என…
-
- 0 replies
- 446 views
- 1 follower
-
-
தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கூட தங்களின் சுய இலாபத்திற்காக ஒற்றுமையாக செயல்பட்டு பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தாங்கள் சுயநலத்திற்காக தங்களது கட்சி பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் நடந்து கொண்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (09) அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் தமது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தன. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் …
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக யாழ்பாணத்திற்கு லொறி வாகனத்தில் கடத்தப்பட்ட 20 மாடுகளை கடந்த திங்கட்கிழமை மீசாலைப் பகுதியில் வைத்து சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது 19மாடுகள் உயிருடனும் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டதுடன், வாகனச் சாரதி மற்றும் உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக யாழ்பாணத்திற்கு கடத்தப்பட்ட 20 மாடுகள் (newuthayan.com)
-
- 0 replies
- 654 views
-
-
தன்னாட்சி - தற்சார்பு - தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை விடயங்களை முன் வைத்தே தேர்தலில் போட்டியிடவுள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் இல்லத்தில் இன்று புதன்கிழமை (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய கூட்டணி இளைஞர்களையும், அனுபவமுள்ளவர்களையும் வேட்பாளராக நியமித்துள்ளோம். நான் முன்பே கூறியது போன்று தேர்தல் அரசியலிலிருந்து விலகியுள்ளேன். எமது வேட்பாளர்களின் சராசரி வயது 42 ஆகும். இளம் வேட்பாளர்கள் என இவர்களைச் சொல்லலாமா என சிலர் கேட்டார்கள். எங்களுடைய அரச அலுவலர்கள் 60 வயது வரை வேலை செய்கின்றனர். எனவே 60 வயதுக்கு உட்பட்டவர…
-
- 0 replies
- 292 views
-
-
09 Oct, 2024 | 05:33 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமாக சங்கு சின்னம் அமைந்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். களுவாஞ்சிகுடியில் புதன்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் தற்போது தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் பொதுமக்கள் சபையானது ஜனாதிபதி தேர்தலின் போது சுயேச்சை சின்னமாகதான் சங்கு சின்னம் அமைந்துள்ளது. இப்போது அந்த சங்கு சின்…
-
- 0 replies
- 94 views
-
-
09 Oct, 2024 | 05:20 PM கல்முனை பிரதேச செயலகத்தை உட்பட்ட பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சவப் பெட்டியைத் தூக்கி இன்று புதன்கிழமை (09) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறா இருப்பதாகவும் போராட்டதாரர்கள் தெரிவித்ததுடன், பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை முன்வைத்தனர். ஏற்கனவே ஒரு மதுபானசாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில் புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல்லை எனவும், சிறிய கிராமமான…
-
- 0 replies
- 99 views
-
-
இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விஸ்தரிக்கவேண்டும் என என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது உலக தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணையர் இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் (Situation of Human Rights in Sri Lanka) மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 57 ஆவது அமர்வில் நடைபெற்ற உரையாடல் ஆகியன அடங்கிய அறிக்கையொன்றை சமீபத்தில் வெளியிட்டமையை உலகத் தமிழர் பேரவை (GTF) வரவேற்கிறது. தொடரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி இலங்கையில் பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் முன்னெடுக்கப்படுவதற்கு தேசிய, சர்வதேச செயற்பாடுகள் அவசியம் என்பதை இவ்வறிக்கை முன்வைக்கிறது. சிவில்…
-
- 0 replies
- 197 views
-
-
Published By: DIGITAL DESK 7 07 OCT, 2024 | 05:47 PM (நா.தனுஜா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்திருந்த பின்னணியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்று திங்கட்கிழமை (07) கட்சியிலிருந்து விலகினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினா…
-
- 3 replies
- 158 views
- 1 follower
-
-
ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்! கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் இதனை கூறினார். இது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், விசாரணைகளின் தீவிரம் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள ஆவலையும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403207
-
-
- 11 replies
- 762 views
- 1 follower
-
-
09 OCT, 2024 | 09:38 AM (இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அவசியமற்றது. பொதுத்தேர்தலில் ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க வேண்டாம்.113 ஆசனங்களை வழங்கினால் போதும் என்பதை மக்களிடம் வலியுறுத்துகிறேன் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள மவ்பிம ஜனதா கட்சி காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மவ்பிம ஜனதா கட்சியின் சார்பில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் வேட்பாளர்களை களமிறக்குவோம். பாராளுமன்றத்தில் பிரதான அரசியல் …
-
- 1 reply
- 139 views
- 1 follower
-
-
09 OCT, 2024 | 11:12 AM வடக்கு மாகாணத்தில் போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வுகளை தடுத்தல், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலர்கள், பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாண இராணுவ, கடற்படை,விமானப்படை பொறுப்பதிகாரிகள், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண…
-
- 2 replies
- 194 views
- 1 follower
-
-
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல். யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகள் இன்று சாவகச்சேரி நீதிமன்றில், நீதிபதி ஜுட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வைத்தியர் அர்ச்சுனா தான், சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தவறிய…
-
- 2 replies
- 221 views
- 1 follower
-
-
கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களைப் பரிசோதிப்பதற்கு இலங்கையில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் இதனால் லேபிள்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் போலியானவை என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க வலியுறுத்தினார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் முட்டை அல்லது வெண்ணெய் அல்லது மார்ஜரின் போன்றவற்றை கேக் உற்பத்திக்கு பயன்படுத்துவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, தயாரிப்புகளில் பெரும்பாலும் வெண்ணெய் சுவை மற்றும் செயற்கை முட்டை சுவை உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குறிப்பிட்டார். மேலும் சந்தையில் இருந்து கொள்வனவு செய்யப்படும் கேக்குகள் முட்டை அல்லது வெண்ணெய் அல்லது மார்ஜரின…
-
- 0 replies
- 811 views
- 1 follower
-
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போ வதில்லை என்று தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியானது ஜனநாயக தேசியக் கூட்டணியில் அங்கத்துவம் வகிப்பதுடன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு ஏற்ப இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடும் முகமாக இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்குத் தான் தீர்மானித்துள்ளார் என்று சிவசக்தி ஆனந்தன் அறிவ…
-
-
- 12 replies
- 804 views
-
-
Published By: RAJEEBAN 09 OCT, 2024 | 11:28 AM பொதுமக்கள் தற்போதைய ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதால் பொருத்தமான உரிய வேட்பாளர்களை நிறுத்தாவிட்டால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதான கட்சிகள் முற்றாக நிராகரிக்கப்படலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழவில் சிவில் சமூக பிரதிநிதிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் இணைந்து பொருத்தமான வேட்பாளரை பொதுமக்கள் தெரிவு செய்வதற்கான 10 அம்ச அளவுகோல்களை மக்களிற்கு அறிமுகப்படுத்தியுள்ளன. சுத்தமான கரங்களை கொண்ட ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளை எதிர்காலத்தில் தெரிவு செய்யவேண்ட…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
எம்.மனோசித்ரா மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. உலக சந்தையில் விலை அதிகரித்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலும் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. இவ்வாறான போர் சூழல் ஏற்படும் போது எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பது வழமையானதாகும். எனவே உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்தால், அது இலங்கையிலும் தாக…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த விசாரணைகள் உரிய முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரலாற்று தவறுகள் இனி இடம்பெறாது. தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடந்த அரசாங்கங்களைப் போன்று இந்த விவகாரம் குறித்த விசாரணைகளை காணாமலாக்குவதற்கோ அல்லது மறைப்பதற்கோ எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்குவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற போது இதனைத் தெவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், …
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
இலங்கை அனைத்து நாடுகளுடனும் சமமான இராஜதந்திர உறவை பேணும் எந்த நாட்டிற்கும் விசேட சலுகையையோ முக்கியத்துவத்தையோ வழங்காது என வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் எப்படி ஈடுபாட்டை பேணுகின்றோமோ அது போலவே சீனாவுடன் ஈடுபாட்டை கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் சீன இராணுவத்தின் பயிற்சி கப்பலை இலங்கைக்குள் அனுமதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கான நோக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜித ஹேரத் இது நாட்டின் இராஜதந்திர ஈடுபாட்டின் கட்டமைப்பை மீறாத விடயம் என குறிப்பிட்டுள்ளார். இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இந்த மாதம் வந்துசேரும்; என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 205 views
- 1 follower
-
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான் Vhg அக்டோபர் 02, 2024 எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளராக கருணா அம்மான் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/10/blog-post_87.html
-
-
- 21 replies
- 1.5k views
-
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! October 8, 2024 எனக்கு மதுபான சாலை இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். இது உண்மையென நிறுபிக்கப்படுமாகில் நான் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திக் கொள்வேன் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் திங்கள் கிழமை (07) மன்னார் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகச் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில். அண்மை காலமாக ஜேவிபி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு ஊழல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்…
-
-
- 21 replies
- 1.1k views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள கட்சியின் மகளிர் அணியினர், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்கள். தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினர். இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணித் தலைவி மதனி நெல்சன் தெரிவித்ததாவது:- “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்குக…
-
- 4 replies
- 380 views
- 1 follower
-
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார். இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள நாடா…
-
-
- 45 replies
- 2.8k views
-