ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142788 topics in this forum
-
(எம்.மனோசித்ரா) நாட்டில் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு என்பவற்றின் விளைச்சல் அதிகரித்துள்ளது. எனவே உள்நாட்டு விவசாயிகளுக்கு தமது விளைச்சலை நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இறக்கு செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்தோடு அடுத்த வாரம் முதல் விவசாயிகளுக்கு கட்டம் கட்டமாக 25,000 ரூபா உர மானியக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும், விரைவில் மீனவர்களுக்கும் எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்…
-
- 0 replies
- 212 views
-
-
08 OCT, 2024 | 11:55 AM இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 277 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளன. அதிகளவான யானைகள் பயிர்களை பாதுகாப்பதற்காக காணிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சார கம்பிகளில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காணிகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள மின்சார கம்பிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195741
-
- 3 replies
- 195 views
- 1 follower
-
-
(எம். மனோசித்ரா) சீன இராணுவ பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. சம்பிரதாயப்பூர்வமாக சீன கப்பலுக்கு கடற்படையினர் வரவேற்பளித்தனர். கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீன இராணுவ பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலானது 86 மீற்றர் நீளமானது. சீன இராணுவ கடற்படையின் 35 அதிகாரிகள் உட்பட 130 சிப்பாய்கள் குறித்த கப்பலில் இலங்கை வந்துள்ளனர். இதே வேளை சீன கப்பலின் கட்டளை அதிகாரி மாஹ வெங்யோங், இலங்கை கடற்படையின் மேற்கு கட்டளை அதிகாரி ரியர் அத்மிரால் சிந்தக குமாரசிங்கசை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார். அதே போன்று இருதரப்பு கூட்டு பயிற்சி நடவடிக்கைகளும் …
-
- 1 reply
- 304 views
- 1 follower
-
-
27 SEP, 2024 | 05:36 PM அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார். வடமத்திய மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய இவர் பொலிஸ் சேவையில் 36 வருட காலம் அனுபவமுள்ளவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முதன்முதலாக பொலிஸ் கான்ஸ்டபிளாக தனது சேவையை ஆரம்பித்துள்ளார். இவரது நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194943
-
- 2 replies
- 882 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாடு இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த பக்கங்கள் எவ்வாறு காணாமல் போயின என்பதும், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அனைத்து பக்கங்களும் அப்படியே உள்ளதா என்பதும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/310434
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
Published By: VISHNU 08 OCT, 2024 | 09:08 PM இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 31 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை செவ்வாய்க்கிழமை (08) நேரில் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 வருடங்களின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். முருகன் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் இலங்கை செல்வதற்கு ஆவணங்கள் இல்லை எனும் காரணத்தால் திருச்சி சிறப்பு முகா…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
08 OCT, 2024 | 05:26 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/195791
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.போதனா மருத்துவமனையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் மருத்துவர் எஸ்.சிறிபவானந்தராஜா யாழ்.மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் .போதனா மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய மருத்துவர் சிறீ பவானந்தராஜா பின்னர் களுபோவில மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். கொரோனா தொற்று காலப்பகுதியில் யாழ்.போதனா மருத்துவமனையில் இவர் சிறந்த சேவையை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். யாழில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் மருத்துவர் சிறிபவானந்தராஜா (newuthaya…
-
-
- 4 replies
- 560 views
-
-
யாழில் பழமை மிக்க மரத்தை வெட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு! யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வளாகத்தில் நிற்கும் மலைவேம்பு மரத்தை வெட்டுவதற்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த பாடசாலை வளாகத்தில் வீதியோரமாக மலைவேம்பு மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் உள்ள கொப்புக்களால் ஆபத்து என தெரிவித்து மரக் கூட்டுத்தாபனம் நேற்றையதினம் மரத்தின் கொப்புகளை வெட்டியுள்ளது. அத்துடன் கொப்புகளை வெட்டுவதோடு மட்டுமல்லாமல் மரத்தையே அடியோடு வெட்டுவதற்கு நாளையதினம் மர கூட்டம் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பெற்றோர் கருத்து தெரிவிக்கையில், குறித்த மரமானது பல்லாண்டு காலமாக பாட…
-
- 1 reply
- 605 views
- 1 follower
-
-
இ.தொ.க உப தலைவர் பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகல்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று (07) மாலை அனுப்பி வைத்துள்ளார். மக்களினதும், கட்சி அங்கத்தவர்களினதும் எதிர்பார்ப்புகளை மீறி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நாட்டினை வங்குரோத்து நிலைக்கு அடைய செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தங்களது சுயநல அரசியலுக்காக கண்டி மக்களை அடகு வைத்த உறுப்பினர்களோடு இணைந்து தாம் போட்டியிட தயார் இல்லை எனவும், கட்சியின் தீர்மானத்திற…
-
- 2 replies
- 128 views
-
-
Published By: DIGITAL DESK 2 08 OCT, 2024 | 10:07 AM யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த 69 வயதுடைய திருச்செல்வம் ஞானப்பிரகாசம் என்பவரே உயிரிழந்துள்ளார். தனது கட்டுமரத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற வேளை கட்டுமரம் கடலில் கவிழ்ந்ததில், அவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சடலம் சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195731
-
- 7 replies
- 240 views
- 1 follower
-
-
அநுரவின் பதவியில் முதல் 10 நாள் செயற்பாடுகள்: தொடரும் மாற்றங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முதல் 10 நாள் செயற்பாடுகள்: 01.டொலரின் பெறுமதி 300 ரூபாய்க்கு கீழே காணப்படுகிறது. 02.பங்குச் சந்தை வீழ்ச்சியடையாமல் வரலாற்றில் மிக விரைவான வளர்ச்சியைக் காட்டுகிறது. 03.வரலாற்றில் மிக அமைதியான தேர்தல் நடைபெற்றது. 04. சர்வதேச அளவில் நாடு ஓரங்கட்டப்படாமல் அனைத்து பலம் பொருந்திய நாடுகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை. 05. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தமை. 06. ஆடம்பரமற்ற முறையில் சத்தியப் பிரமான நிகழ்வை நடாத்தி, பல இலட்சங்கள் சேமிக்கப்பட்டமை. 07. பேராசிரியர் பட்டம் பெற்ற பெண்ணை பிரதமராக …
-
-
- 1 reply
- 170 views
-
-
இடமாற்றம் கிடைத்துள்ள கலால் வரி திணைக்கள ஆணையாளர் இடமாற்றத்தில் செல்லாமல், மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரி பிரதேச செயலர்களை எச்சரிப்பதாக வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் செயலாளர் செல்லையா குமாரசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் சங்கானையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சங்கானையில் புதிதாக ஒரு மதுபானசாலையை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டது. இந்த விடயம் எமக்குத் தெரியவந்த நிலையில் கடந்த மூன்றாம் திகதி சர்வதேச நல்லொழுக்க தினத்தன்று சங்கானை பிரதேச பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தோம். இது இவ்வாறு இருக்கையில் கொழும்பு மதுவரித்திணைக்கள …
-
- 0 replies
- 455 views
-
-
ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம். இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்தை நிராகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வை காண அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று வாராந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், 2024 செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக, வெளிவிவகா…
-
- 0 replies
- 302 views
-
-
திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஈபிடிபி கட்சியின் முதன்மை வேட்பாளராக இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றேன். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்.அதுமாத்திரமன்றி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகவும் இருந்து …
-
- 0 replies
- 174 views
-
-
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன் இருந்த களஞ்சியசாலை ஒன்றும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது குறித்த வீதிவழியாக சென்ற அரச பேருந்து சாரதி, நடத்துனர் இதனை அவதானித்து அயல்வீட்டினரின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் பல இலட்சமான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் இது திட்டமிட்ட செயற்பாடா அல்லது மின்னினால் ஏற்பட்ட தீயா என பல கோணங்களில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு , மின்சார சபையினர் , தடயவியல் பொலிஸார் இணைந்து மேலதிக சோதனை நடவடிக்கைகளை …
-
- 0 replies
- 111 views
-
-
இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை; ஜெய்சங்கர்! 05 OCT, 2024 | 05:24 PM (நமது நிருபர்) இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும் இந்தியாவில் இலங்கை பற்றிய மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பில் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தனது நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும் நெருக்கடியில் கைகொடுக்கும் நட்பு நாடாகவும் இலங்கைக்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே தனது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வ…
-
- 2 replies
- 495 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 OCT, 2024 | 07:43 PM கம்பஹாவில் உள்ள ஹோட்டல் மற்றும் ஹன்வெல்லவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இணையம் மூலம் மோசடி செய்த 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகள் உட்பட 40 வெளிநாட்டவர்கள் ஆவர். தடயவியல் பரிசோதனைக்காக 499 மொபைல் போன்கள், 25 மடிக்கணினிகள் மற்றும் 29 டெஸ்க்டாப் கணினிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195647
-
-
- 3 replies
- 610 views
- 1 follower
-
-
08 OCT, 2024 | 11:23 AM இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறும் சிவஞானம் சிறீதரனுக்கு மாவை சேனாதிராஜா, கடிதம் அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா ஆகிய நான் இதுவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றேன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு 2024 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்றபோது பொதுக்குழுவில் தாங்கள் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள். தாங்கள் அந்தவகையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை இன்னும் ஏ…
-
- 2 replies
- 716 views
- 1 follower
-
-
08 OCT, 2024 | 11:24 AM பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி முதல் கட்டமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர், வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காது தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளான். முறைப்பட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்தனர். …
-
- 1 reply
- 340 views
- 1 follower
-
-
08 OCT, 2024 | 10:06 AM மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் திங்கட்கிழமை (07) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் JICA திட்டத்தின் பணிப்பாளர் திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக பாராட்டுக்களை தெரிவித்ததுடன் மாவட்ட அரசாங்க அதிபரும் இத் திட்டத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியுள்ளமைக்கு நன்றிகளையும் இதன்போது தெரிவித்துக் கொண்டார். மேலும், இத்திட்டத்தில் உள்ள சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கும் போது பெண்களைய…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
வடக்கில் காத்திருப்பு காலமின்றி கண்புரை சத்திர சிகிச்சையை முன்னெடுக்க நடவடிக்கை October 8, 2024 வடமாகாணத்தில் காத்திருப்பு பட்டியல் இன்றி கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் , 10 நாட்களுக்கு 2ஆயிரம் கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ் . போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச பார்வை தினத்தினை முன்னிட்டு, யாழ் . போதனா வைத்தியசாலை கண்ணியல் பிரிவில் 2ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்யவுள்ளோம். யாழ் போதனா வைத்தியசாலையில் குறுகிய …
-
- 0 replies
- 122 views
-
-
Published By: VISHNU 07 OCT, 2024 | 10:46 PM (எம்.ஆர்.எம்.வசீம்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக இருந்துவந்த பொலிஸ் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றபோதும் பதில் பொலிஸ்மா அதிபர் அதனை மறுத்துள்ளார். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை இலக்காகக்கொண்டு அவரை அவமதிக்கும் வகையில் போலிப்பிரசாரம் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகிறதை ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் வன்மையாக கண்டிக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை (7) ஊடகங்களுக்கு விடுத்திருந்த விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
https://tamilwin.com/article/kv-thavarasa-resigned-from-all-itak-posts-1728222873 தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது சுமந்திரனின் தன்னிச்சையான செயல் அ…
-
-
- 22 replies
- 1.4k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2024 | 03:32 PM இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதோடு, இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டனர். …
-
- 1 reply
- 143 views
- 1 follower
-