Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்மை எங்கு அழைத்துச் செல்லும்? - இலைஜா ஹூல் தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறிக் கொண்டு ஒரு குழு கிளர்ந்தெழுந்துள்ளது. தமிழர் அரசியலில் திருப்பங்கள், திருத்தங்கள் அவசியம் என்பது உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 'எம்மைத் திடப்படுத்துங்கள்' என்று மக்களை வலிந்து கோருவதைக் காட்டிலும் தம்மைத் திருத்துவதில் அதிக நேரத்தினை செலவழிக்க வேண்டும் என்பதே பொதுவான பெரும்பான்மைத் தமிழர் நிலைப்பாடும். ஆனால், இந்தக் குறித்த குழு - குறிப்பாகக் கூறின் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியும், அக் கட்சியின் புலம்பெயர் விழுதுகளும் உள்நாட்டு அப்புக்காத்துகளும் - வேண்டி நிற்கும் மாற்றம் என்ன? இவர்கள் உண்மையிலேயே புதிதாக எதையும் கூறி நிற்கின்றார்களா…

    • 1 reply
    • 1.1k views
  2. யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா திடீர் விஜயம் மேற்கொண்டு நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார். கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு ஆலய சூழலில் ஜனாதிபதிக்கு அருகில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் யாழில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதன் அருகில் உள்ள வாறான சுவரொட்டிகள் பெருமளவில் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த சுவரொட்டிகளை ஜனாதிபதி ஆலயத்திற்கு வருவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்னராக சிவில் உடை தரித்த ஒருவர் கிழித்து அகற்றினார்கள். அதில் ஜனாதிபதியின் படம் இருக்க கூடியவாறு தனியே அங்கஜனின் படங்களை மட்டுமே கிழித்து அகற்றினார்கள். என்பது குறிப்பிடத…

    • 5 replies
    • 622 views
  3. நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி இனவாதத்தைத் தூண்டி, தெற்கில் வெற்றிபெறுவதற்கு மகிந்த ராஜபக்ச முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த மகிந்த ராஜபக்ச தரப்பினர் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் யட்டிநுவர பிரதேசத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் தேசிய கொடிக்கு ஒத்த 'சிங்கள கொடி'' ஒன்று பரப்புரை நடைபெற்ற மைதானத்தில் பறக்கவிடப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது. இந்தக் கொடியில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் அகற்றப்ப…

    • 0 replies
    • 333 views
  4. இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்தியா செல்வதை தடுக்கும்படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பியும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வன்னியில் போட்டியிடும் வேட்பாளருமான சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நிலைப்பாடு தாங்களும் அக்கட்சி எம்.பி என்ற வகையில் என்னவாக இருந்தது என கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - நாங்கள் எல்லோரும் நாடாளுமன்றத்தில் இருந்தோம். அங்கு அமர்வு நடைபெற்றுக் க…

  5. 13க்குள் தான் அரசியல் தீர்வாம் – இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகிறார் மகிந்தJUL 29, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்குள்- மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும், அரசியல் தீர்வு ஒன்று, ஆட்சியமைத்து ஆறுமாதங்களுக்குள் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்ட, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சகல மக்களினதும் நியாயத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதற்காக, பரந்த அதிகாரங்கள் மற்றும் மாவட்ட ரீதியிலான பொறிமுறை ஒன்றுடன் கூடிய தேசிய நல்…

    • 0 replies
    • 382 views
  6. சிறிலங்கா துறைமுகங்களை கவர்வதில் சீனா விடாப்பிடிJUL 28, 2015 | 10:08by நித்தியபாரதிin கட்டுரைகள் வரலாற்று ரீதியாக நோக்கில், அம்பாந்தோட்டை துறைமுகமானது கிழக்காசிய கடற் செயற்பாடுகள் மற்றும் ஆபிரிக்கா அல்லது மத்திய ஆசியாவிற்கான வர்த்தக சார் கப்பல் போக்குவரத்தின் கேந்திர முக்கியத்துவம்மிக்க மையமாகக் காணப்படுகிறது. இவ்வாறு The Diplomat ஊடகத்தில், Ankit Panda எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் புதிய வசதிகளை நிர்மாணிக்கப்பதற்கான திட்டம் ஒன்றை சீனத் துறைமுக பொறியியல் நிறுவனம் (China Harbour Engineering Company -CHEC) முன்மொழிந்திருக்கிறது. இந்த நிறுவனமானது சீன அரச…

    • 0 replies
    • 1.3k views
  7. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிளவை வெளிப்படுத்திய தேர்தல் அறிக்கை வெளியீடுJUL 28, 2015by கி.தவசீலன்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் அறிக்கை இன்று கொழும்பில் இன்று நடந்த நிகழ்வில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் வெளியிடப்பட்டது. முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் அறிக்கை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களால் கையளிக்கப்பட்டது. அதிபர் செயலகத்தில் இன்று காலையில், தேர்தல் அறிக்கையைக் கையளிக்கும் நிகிழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய தலைவர்களாக சுசில் பிரேம்ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா,தினேஸ் குணவர்த்தன, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ,குணசேகர, டிலான் …

    • 0 replies
    • 368 views
  8. தகவல்களை வழங்குவோருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- காணாமல் போனவர்களை கண்டறிய தனது தலைமையில் செயலணி ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் உறுதி அளித்துள்ளார். யாழுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அங்கஜன் இராமநாதன் வீட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்தார். அதன் போது காணாமல் போனவர்களின் உறவுகள் காணாமல் போனவர்களை கண்டறிந்து தர வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.அதற்கு பதில் அளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்ட வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி தலைமை…

  9. கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களைப் புறக்கணிக்கும் விக்னேஸ்வரன் அவர்கள். இது தொடர வேண்டும். வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபன வெளியீடு மற்றும் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாது அதனைப் புறக்கணித்திருந்தார். முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் தொடர்ந்து கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களைப் புறக்கணித்துவருகிறார். இது கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களைப் பயன்படுத்தி தாம் பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுவிடலாம் என கனவுகண்டவர்களுக்கு விக்னேஸ்வரன் அவர்களின் போக்கானது ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களை தமக்கு ஆதரவாக தே…

    • 0 replies
    • 474 views
  10. அமரத்துவமடைந்த உயிரிழந்த இந்திய முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல்கலாமிற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட் இவ்வஞ்சலி நிகழ்வு கைலாசபதி கலையரங்கிற்கு முன்பாக உள்ள மாவீரர் நினைவு தூபி மற்றும் அதனையண்டிய அரங்கினில் இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்துல்கலாமில் உருவப்படத்திற்கு மலர் அணிவித்தும், தீபங்கள் ஏற்றியும் மாணவர்கள் தமது இதனபூர்வமான அஞ்சலியினை செலுத்தியிருந்தனர். இதே வேளை பல்கலைக்கழக சூழல் எங்கும் கறுப்புகொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் அஞ்சலி செலுத்தும் பதாதைகள் தொங்கவிடப்பட்டிருந்தது. http://www.pathivu.com/news/41889/57//d,article_full.aspx

    • 0 replies
    • 299 views
  11. பொன்னாலை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சிறிலங்காவின் கடற்படையினர் அத்துமீறி அளவுக்கு அதிகமான குடிநீரை இறைத்து செல்கின்றனர். இதனால் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சுழிபுரம், சம்பில்துறை மற்றும் மாதகல் ஆகிய இடங்களில் உள்ள கடற்படை முகாம்களுக்கும் சம்பில் துறையிலுள்ள விகாரை மற்றும் விடுதிகளுக்கும் இவ்வாறு நீர் எடுத்துச் செல்லப்படுகின்றது. இதன் காரணமாக, குறித்த பகுதியில் உள்ள ஏனைய கிணறுகளின் நீர் வற்றிப் போவதுடன், உவர்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.pathivu.com/news/41882/57//d,article_full.aspx

    • 0 replies
    • 239 views
  12. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இன்றைய விஜயத்தின் போது ஜனாதிபதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.குறிப்பாக மக்கள் மட்டுமல்லாது ஊடகவியலாளர்களும் பலத்த சோதனைகளின் பின்னரே கைலாச பிள்ளையார் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கோயிலுக்குள் கலாசாரத்தை மீறும் வகையில் சப்பாத்து அணிந்து கொண்டு உள்நுழைந்தனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=121824170028213747#sthash.Elh3eGfa.dpuf

    • 5 replies
    • 1.1k views
  13. தேர்தல் நெறிமுறைகளுக்கு மாறாக சன்மானங்களை வழங்கி வாக்குக்களை கவரும் நடவடிக்கையில் தமிழ் தேசியக் கூத்தமைப்பும் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கூத்தமைப்பால் வவுனியாவில் சைக்கிள்களும் ஊர்காவற்துறையில் புத்தகங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. මහ ජන්දය වෙනුවෙන් ඉකුත් දින කිහිපයේ භාණ්ඩ හා මුදල් බේදා දීමේ සිද්ධි කිහිපයක් උතුර , දකුණ හා නැගෙනහිර පළාත් වලින් වාර්තා වු බව මැතිවරණ ප්‍රචණ්ඩ ක්‍රියා නිරික්ෂණ මධ්‍යස්ථානය කියයි. සමෘද්ධිලාභින්ට රුපියල් ලක්ෂය බැගින් සජිත් ප්‍රේමදාස ඇමැතිවරයා විසින් බෙදාදීමේ සිද්ධියක් ද , රිෂාඩ් බදුර්දීන් ඇමතිවරයා නැගෙනහිර පළාතේ ස්ථාන කිහිපයකදී මහන මැෂින් ස…

  14. (புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி) தனது கைகள் கறை படியாதவை என்றும். கடந்த 25 வருடங்களில் ஒரு சதத்தையேனும் தான் ஊழல் மோசடி செய்யவில்லை என்றும் மேடைக்கு மேடை கூறி வருகின்ற சகோதரர் ஹிஸ்புல்லாஹ், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திடமிருந்து பெற்றுக் கொண்ட 25 இலட்சம் ரூபாவில் 23,30,000 ரூபாவுக்கு காணிகளைக் கொள்வனவு செய்தார். அக்காணிகளுக்காக எஸ்.எச். அப்துர் றஹீம் என்பவரின் பெயரில் 3 கோடியே 06 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாவுக்கு 03.04.2012ம் திகதி மற்றும் 26.04.2012ம் திகதிகளில் இரண்டு காசோலைகள் மூலம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக பணம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்ப…

  15. https://https://www.youtube.com/watch?v=iRPgXLD2q7owww.youtube.com/watch?v=iRPgXLD2q7o

  16. மஹிந்த தலைமையில் நடைபெற்ற தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் நிமால் சிறிபால டி சில்வா பங்கேற்கவில்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் ,முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பங்கேற்கவில்லை. கொழும்பு மார்கஸ் பெர்னாண்டோ மைதானத்தில் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. “நாட்டுக்கு உயிரூட்டி, புதிதாக தொடங்குவோம்” என்ற தொனிப் பொருளில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவும் பங்கேற்கவில்லை. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Articl…

  17. ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122388/language/ta-IN/article.aspx பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் வீட்டில் காணாமல் போனர்களின் உறவினர்கள், இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் , வாழும் மக்கள், வேலையில்லா பட்டதாரிகள் , தொண்டர் ஆசிரியர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளை சந்தி…

  18. யாழ்ப்பாணம் நல்லுார் ஆலயத்தின் முன்றலில் காணாமல் போனோரின் உறவினர்களால் இன்று (28) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல்போன தமது பிள்ளைகள் தொடர்பில் தமக்கு உரிய பதில் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் ''நல்லூர் கந்தனே எனது அப்பாவை மீட்டுத் தருவாயா?'' 'தேர்தல் காலத்தில் மட்டுமா நாமும் மற்றவர்களுக்கு சமமாக தெரிகின்றோம்?' 'எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா'' உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் சமூக அமைப்புக்கள் கல…

  19. கொடும் போரிலும் கல்வியை கைவிடாதவர் நாங்கள் என்று தெரிவித்த ஈழக் கவிஞர் தீபச்செல்வன் போரால் அழிக்கப்பட்ட இனத்தின் உரிமையை வெல்லும் ஆற்றலை கல்வி தரும் என்றும் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் பல்கலைக்கழகத்திற்கு தேர்வான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் ஆற்றிய உரையின் முழு வடிவம்: அன்பிற்குரிய மாணவர்களே! எப்போதும் இந்த மண்ணுக்கென்று, இந்த நகரத்திற்கென்று சில பெருமைகள் உண்டு. அந்தப் பெருமைகள் உலகம் இந்த மண்ணை நோக்கி பார்க்க வைத்திருக்கின்றன இந்த நகரத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. முப்பது வருடங்களாக நாங்கள் போருக்குள்ளேயே வாழ்ந்தோம். எல்லாமும் போருக்குள்ளேதான். கொடும் போரி…

  20. எதிர்வரும் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகின்ற ஜனநாயக போராளிகளுக்கு ஐந்து ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் போராளிகளைக் கொண்ட அமைப்பான இந்த அமைப்பு, முன்னாள் ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகிறது. இதற்கு ஐந்து ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. http://www.pathivu.com/news/41853/57//d,article_full.aspx

  21. எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை பெரும்பாலானவர்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை.யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்திற்கு வருவதற்கு சில சான்றாதாரங்கள் தேவை. இதற்கப்பால் முன்பு வாக்களித்து நாம் கண்டது என்ன என்ற கேள்வியும் வாக்களிப்பில் ஒரு மனச் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களின் மனச்சோர்வு-வாக்களிப்பதில் காட்டும் அசமந்தம் எதுவும் பாராளுமன்றத் தேர்த லைப் பாதிக்காது.100 பேர் வாக்களித்தாலும் போதும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு.எனவே வாக்களிப்பதற்கு மனம் விரும்பவில்லை என்ற வெறுப்பு நிலையை தொடரவிட்டால் இன்னும் மோசமான சூழ்நிலை வந்துவிடலாம். எனவே வாக்களிப்பது என்பது மிகவும் முக்கியமானது. இதுபற்றி முன்பும் இவ்விடத்தில் பி…

  22. தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தால், மீண்டும் எவ்வாறு அதிகாரத்தை கைப்பற்றுவார்? மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினர் மிக இரகசியமான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலின் பின்னர் உறுதியாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்று உருவாகினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழுத்தம், அதிகாரத்தை பிரிக்கும் போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் கோரிக்கை, எதிர்வரும் காலத்தில் ஏற்படவுள்ள சர்வதேச அழுத்தம் போன்ற காரணங்களில் சிங்கள பௌத்த மக்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரும்பான்மை சிங்கள மக்களை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுத்துவதற்கு இக்குழு கலந்துரையாடல் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்களின் சில…

    • 0 replies
    • 396 views
  23. தமிழர்களுக்கான தீர்வு உள்ளிட்ட தேர்தல் முறை மறுசீரமைப்பு, மனித உரிமை, ஊழல் மோசடிகளைத் தடுத்தல், கருத்தறியும் சுதந்திரம் உள்ளிட்ட இலங்கை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவின் இந்து நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காலாவதியாகயுள்ள 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்குப் பதிலாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டிய தேவை, சிங்களத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசாங்கத்திற்கும், மாநில ஆளுநர்களுக்கும் மாத்திரம்…

    • 1 reply
    • 312 views
  24. “2016ஆம் ஆண்டு அரசியல் தீர்வைப் பெறுவதற்கான ஆண்டாக இருக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை என்றுமில்லாதவாறு பலப்படுத்திக்காட்டுங்கள் வென்று தருவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலையில் நடைபெற்ற த.தே. கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2010ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் தோல்வி பெற்று தெற்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடுமுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் தலைவரென மமதை கொண்டார். உண்மையில் சிங்கள தேசத்தின் தலைவராக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2010, ஆண்டு தேர்தலின் போது …

    • 4 replies
    • 505 views
  25. சிறிலங்காவின் இரகசியத் தடுப்பு முகாம்களை அம்பலப்படுத்தும் அனைத்துலக அறிக்கை வெளியானதுJUL 28, 2015 | 2:20by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்பு போன்ற வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவதாக அனைத்துலக ஆய்வு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. அனைத்துலக மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகா தலைமையிலான சிறிலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்க மற்றும் பாதுகாப்புப் படைகளின் உயர் மட்டத்தினால், சித்திரவதைகளும், பாலியல் வன்முறைகளும் எவ்வாறு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கொள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.