ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
ஹிந்தி மொழியை பேசவோ. எழுதவோ அல்லது வாசிக்கவோ தெரிந்த வடமாகாண மக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை யாழ். இந்தியத் துணைத்தூதரகம் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தால் வெள்ளிக்கிழமை (03) வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதரகமானது 2010ஆம் ஆண்டு நவம்பரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. தூதரகமானது தற்பொழுது, வட மாகாணத்திலுள்ள ஹிந்தி மொழி பேசக்கூடிய மக்களைப் பதிவு செய்ய விரும்புகின்றது. ஹிந்தி மொழியை பேசவோ, எழுதவோ அல்லது வாசிக்கவோ தெரிந்தவர்கள் இந்தியத் துணைத்தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளவும். பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தூதரக இணையத்தளத்திலிருந்து (றறற.உபதையகக…
-
- 4 replies
- 466 views
-
-
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பொலிஸார் ஒருவரைக் கதுசெய்தனர். அவர் கஞ்சா கடத்திச் சென்றமை கைதின் பின்னர் தெரியவந்தது. மற்றுமொருவர் தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிஸார் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர். அதன்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சந்தேக நபர்கள் இருவர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார். அவர்களைப் பிடிப்பதற்காக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது ஒருவரை பொலிஸார் கைது செய்து சோதனை நடத்தியபோது கஞ்சா கடத்திச் சென்றமை தெரியவந்தது. குறித்த நபரிடமிருந்து 250 கிறாம் கஞ்சா கைப்பற்றப்பட்டத…
-
- 0 replies
- 227 views
-
-
கதிர்காம யாத்திரிகர்களை அவமதிக்கும் வகையில் கிழக்கிலுள்ள முஸ்லிம் பகுதிகளில் சில சம்பவங்கள் இடம்பெற்றமை கவலையளிக்கும் விடயமாகும் என்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கு, கிழக்கிலிருந்து கதிர்காமத்துக்கு இந்து மத பக்தர்கள் வருடந்தோறும் பாத யாத்திரை செல்வது வழக்கமாகும். இம்முறையும் இந்து மத பக்தர்கள் பெருமளவானோர் பாதயாத்திரை சென்றிருந்தனர். இவ்வாறு பாதயாத்திரை சென்றவர்கள் கிழக்கில் முஸ்லிம் பகுதிகள் சிலவற்றில் கேலிக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவமானப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடு கண்டிக்கத்த…
-
- 3 replies
- 280 views
-
-
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கிராம மட்டத்திலான அரச நிர்வாகத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரிகள் 11 பேரை இராணுவத்தினரின் புனர்வாழ்வு முகாமின் பயிற்சிக்காக அதிகாரிகள் அனுப்பியிருக்கின்றனர். இலங்கை இராணுவத்தினர் ( ஆவணப்படம்) இவர்களுக்கு வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு முகாமில், கடந்த வாரம் முதல் புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் இளம் தாய் ஒருவர் உட்பட பெண்களும் அடங்குவார்கள் என கூறப்படுகின்றது. நான்கு வருடங்கள் வரையில் பணியில் இருந்த இவர்கள் தொடர்பான பாதுகாப்பு அறிக்கைக்காகவே இவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக இது குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் யாழ் மாவட்ட நாட…
-
- 0 replies
- 139 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குதிக்க பல தலைகளும் ஆலாய் பறக்கும் நிலையினில் தமிழரசுக்கட்சி தரப்பினில் போட்டியிட பணம் கொடுத்து கதிரை வாங்கப்பட்டுக்கொண்டிருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைகள் சில கவலை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தினில் எவரும் எதிர்பார்க்காத நிலையினில் மாவை சேனாதிராசாவின் நீண்ட கால நண்பரும் தொழில் அதிபருமான இராசேந்திரா களமிறங்கவுள்ளார்.நெருக்கடியான நிலையினில் கட்சிப்பணிகளை மேம்;படுத்த நிதியினை அவர் அள்ளி வழங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. அதே போன்று மன்னாரிலிருந்தும் பிரபல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் களமிறங்க கட்சி மேம்பாட்டிற்கு பணம் வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.இவ்விவகாரம் தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட ஆதவாளர்களிடையே கடு;ம் சீற்றத்தையு…
-
- 0 replies
- 355 views
-
-
தாராபுரம் வைத்தியசாலையை அமைச்சர் ரிஷாத் பதியுதீனே திறக்கவேண்டும் என்று கோரி, வடக்கு மாகாண சுதாராத அமைச்சரை வைத்தியசாலைக்குள் நுழையவிடாது இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதி மக்கள். 2013ஆம் ஆண்டு வட மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதி வழங்கப்பட்டு நிர்மாணப் பணிகள் 2014ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் நிறைவு பெற்றிருந்தாலும் அமைச்சார் ரிஷாத் பதீயுதீனால்தான் திறக்கப்படவேண்டும் என தெரிவித்து நீண்டகாலம் திறக்கப்படாமல் உள்ளது. இன்று மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் ஆரம்ப சுகாதார வைத்தியசாலை, பண்டாரவெளி வைத்தியசாலை, எருக்கலம்பிட்டி கிராமிய வைத்தியசாலை, ஆகியவற்றை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் திறந்துவைத்தார். அத்துடன் நீண்டகாலம் திறக்கப்படாதுள்ள தாராபுரம் ஆர…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழரசுக் கட்சியையும் த.தே.கூட்டமைப்பையும் கலைத்து விடுமாறு ஆனந்தசங்கரி கோரிக்கை [ வியாழக்கிழமை, 02 யூலை 2015, 12:23.18 PM GMT ] எனது புனிதமான கடமையாகக் கருதி தமிழரசுக் கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலைத்து விடுமாறு கேட்டுக் கொள்கினறேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- தமிழ் மக்கள் சார்ந்த சகல நடவடிக்கைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக உரிமை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே உண்டு. பிரபல சட்டமாமேதைகளான (இராணி அப்புக்காத்து) தந்தை செல்வநாயகம்மும் அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலமும் 1942 களில்…
-
- 7 replies
- 842 views
-
-
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முள்ளிப்பொத்ததானை சதாம் நகரின் மீள்குடியேற்ற கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் நேற்று வெள்ளிக்கிழமை(03) திறந்து வைக்கப்பட்டது. சீ.டி.சி நிறுவனத்தின் தலைவர் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் மௌலவி முகம்மட் நஸீர், பள்ளிவாசலை திறந்து வைத்தார். இந்நிகழ்வு, முள்ளிப் பொத்தானை அல் மஸ்ஜிதுல் ஸலா ஜூம் ஆப் பள்ளி வாயல் தலைவர் வீ.அமீர் முகம்மட் தலைமையில் இடம்பெற்றது. குவைத் நாட்டு தனவந்தர் ஒருவரின் நிதி பங்களிப்புடன் சீ.டி.சி நிறுவனத்தின் அனுசரணையுடனும் இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது. மீள் குடியமர்த்தப்பட்டு சுமார் 20 வருடங்களின் பின்னரே பள்ளிவாசல் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilm…
-
- 0 replies
- 234 views
-
-
உணவு, சுற்றுச்சூழல், சுகாதார பாதுகாப்புகளுக்கு சேதன விவசாய முறை அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது. இது ஒரு புலமைசார் கோட்பாட்டு விடயமாக இல்லாது வாழ்வியலுடன் தொடர்புடையதாகவும் காணப்படுகின்றது. சேதனப்பசளைப் பயன்பாடு என்பது இன்று பூகோள ரீதியாக முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது என வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார தெரிவித்தார். சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பில் யாழ்.பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற கலந்துரையாடலில் தலைமையுரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், சேதனப் பசளைப் பயன்பாடு என்பது வாழ்வியலுடன் தொடர்புடையது ஆகும். இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். மாகாண கட்டமைப்புக்கள், மத்திய கட்டமைப்புக்கள் மற்ற…
-
- 2 replies
- 1.2k views
-
-
பொதுத் தேர்தல் - 2015 நடந்து முடியும் வரை பொதுமக்களுக்குப் பெரும் குழப்பமாகவே இருக்கப் போகிறது. யாரை நம்புவது? எது உண்மை? என்று எதுவும் தெரியாத சூழ்நிலைக்குள் பொதுமக்கள் அகப்பட்டு அல்லலுறுவது தவிர்க்க முடியாத தொன்றாகிவிட்டது. வட புலத்தில் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது கடினமான காரியமாகி உள்ளது. ஒரு சீற் தாருங்கள் என்று கேட்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆசனம் கிடைக்காதவர்கள் குறித்த கட்சிக்கு எதிராகச் செயற்படுவர் என்பதும் உண்மை. எதுவாயினும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேவையான எண்ணிக்கை கொண்ட வேட்பாளர்களைத் தெரிவு செய்து களமிறங்குவது கட்டாயம். அதேநேரம் அரசியல் தலைமையில் உள்ளவர்கள் தங்களின் வெற்றியை உறுதிப்டுத்தும் வகையிலேயே வேட்பாளர்களை…
-
- 1 reply
- 209 views
-
-
ராஜிவ்காந்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மார்க்கண்டே கஜ்ஜு தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் கடந்த 24 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இது அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை காட்டிலும் அதிகமாகவும் எனவே அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்திய அமைதி காக்கும் படையினரை சிறிலங்காவுக்கு அனுப்ப ராஜிவ் காந்தி மேற்கொண்ட தீர்மானம் அநாவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட…
-
- 0 replies
- 172 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. இன்றையதினம் இந்த சந்திப்பு நடைபெறும் என்று முன்னதாக கூறப்பட்டிருந்தது. எனினும் இன்றைய கூட்டத்தில் சம்மந்தனினால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து எதிர்வரும் ஆறாம் திகதி இந்த கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றையதினம் வேட்பாளர் தெரிவு மற்றும் தொகுதி பங்கீடுகள் தொடர்பில் உறுதியாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/41335/57//d,article_full.aspx
-
- 0 replies
- 321 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்மன் கோவில் பகுதியில் 180 கிலோகிராம் கஞ்சாவுடன் 4 சந்தேகநபர்களை விசேட அதிரடிப் படையினர் வியாழக்கிழமை(02) அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர். கடல் மார்க்கமாக கேரள கஞ்சாவை கடத்திவந்து இறக்கிக் கொண்டு இருக்கும் போதே நால்வரையும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நால்வரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ள விசேட அதிரடிப் படையினர் விசாரணை செய்து வருகின்றனர். http://www.tamilmirror.lk/149517#sthash.W0d0m7iF.dpuf
-
- 3 replies
- 250 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை! [ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 01:22.30 AM GMT ] முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிடுவது தற்போதைய அரசியல் சூழல்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவர்களுக்கு தோல்வியொன்று ஏற்படுமாயின் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் ஆராயவுள்ளமை குறித்து வினவிய போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரு…
-
- 7 replies
- 552 views
-
-
உள்ளகப் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் எந்தவொரு கலந்தாய்வையும் இலங்கை அரசு செய்யவில்லை என்று சுட்டிக்காட்டி ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு, தமிழ் சிவில் சமூக அமையம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம், யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம், வவுனியா பிரஜைகள் குழு, மன்னார் பிரஜைகள் குழு, காணாமல் போனோரின் உறவினர் சங்கம், கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பு உட்பட வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 15 வெகுஜன அமைப்புக்கள் சேர்ந்து கூட்டாக கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளன. மார்ச் மாதம் 28ஆவது கூட்டத்தொடரில் தொடக்கவுரை ஆற்றிய போதும், கடந்த மாதம் 29ஆவது கூட்டத்தொடரில் தொடக்கவுரை ஆற்றிய ப…
-
- 0 replies
- 128 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். நகரிலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர். அதனடிப்படையில் 'உரிமைக்கு குரல் உறவுக்கு கரம்' என்னும் தொனிப்பொருளில் தனித்து போட்டியிடவுள்ளோம்' என்றார். 'பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்து நாங்கள் விலகவில்லை. அவர்களுடன் உடன்பட்டு இருக்கின்றோம். எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிச…
-
- 3 replies
- 314 views
-
-
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் வேட்புமனு இறுதிநாளான ஜூலை 15ம் திகதி வரை தாமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் கசிந்துள்ளது. 7 வேட்பாளர்களுக்காக 10 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். இவர்களில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ,ஈ.சரவணபவன், சுரேஸ் பிரேமச்சந்திரன்(ஈபிஆர் எல் எப்) , க.அருந்தவபாலன், சிறிகாந்தா(ரெலோ), சித்தார்த்தன்(புளொட்) ,சிறீதரன் ஆகியோரின் இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு பெண் வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் அவர் அனந்தியாக இருக்க மாட்டார் எனவு…
-
- 9 replies
- 730 views
-
-
இலங்கையில் இரகசிய முகாம்கள் இருக்கின்றன என்றால் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். நகரத்திலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் திருகோணமலை கடற்படை தளத்துடன் இரகசிய முகாம்கள் உள்ளன என்றும் அங்கு தமிழ் இளைஞர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர்' என்றார். 'இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்ட போது, அப்படி ஒரு முகாமும் இல்லை என மறுத…
-
- 3 replies
- 277 views
-
-
அடிமட்ட நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த விளைகின்ற அதேவேளையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை நோக்கிய நகர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன். நேற்றுமுன்தினம் புதன்கிழமை குடத்தனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் பல தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 6 வருடங்களுக்கு முன்பு மே மாதம் 19ஆம் திகதி முடிவுக்கு வந்தது. எமது மக்களும் எமது பிரதேசமும் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். யுத்தம் முற்றுப் பெற்றதெ தவிர அடக்குமுறைகள் ஓயவில்லை. முட்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டவர்களாய் தமது சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்கள…
-
- 2 replies
- 265 views
-
-
கே.பி.யை தவறாக புரிந்துகொண்ட அமைச்சர் தன்னை தவறாக புரிந்துகொண்டிருந்ததாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை, முல்லைத்தீவிலுள்ள பாரதி இல்லத்துக்கு அமைச்சர் சுவாமிநாதன் சென்றிருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு முகாமாகவே இந்த பாரதி இல்லத்தினை கே.பி. நடத்தி வருகிறார். அவ்வில்லத்துக்கு திடீரென விஜயம் செய்த சுவாமிநாதன், கே.பி.யை அடையாளம் கண்டுகொள்ளாமல் யார் நீங்கள் என வினவியுள்ளார். அப்பொழுது தான்தான் குமரன் பத்மநாதன் என அறிமுகப்படுத்தியிருக்கிறார் கே.பி. உடனே ஆச்சரியப்பட்ட சுவாமிநா…
-
- 2 replies
- 518 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பு-தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடையேயான போட்டியே பிரதான களமாக திறக்கவுள்ளது. இத்தேர்தலில் ஜந்து கட்சிகளின் தலைவர்கள் நேரடியாகவும் போட்டியிடவுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈபிடிபி சார்பில் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரே போட்டியிடவுள்ளனர். நடந்து முடிந்த தேர்தல்களினில் கூட்டமைப்பு- ஈபிடிபி போட்டி நிலவிய போதும் இம்முறை அது கூட்டமைப்பு - தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடையேயான போட…
-
- 5 replies
- 557 views
-
-
ப. பன்னீர்செல்வம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சாதாரணமாக எம்.பி. பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட தயார் இல்லை என தெரிவிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடலாம் என்ற சுசில் பிரேமஜயந்தவின் அறிவிப்பை நிராகரிப்பதாகவும், தாம் புதிய கூட்டணி ஒன்றை அமைத்து மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவ வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை தொடர்பில் அவரிடம் வாசுதேவ நாணயக்காரவிடம் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesar…
-
- 0 replies
- 190 views
-
-
கடந்த ஜூன்மாதம் 30ஆம் திகதி முதல் காணாமற்போன வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களும் கொழும்பு கொம்பனித் தெருவில் இருந்து வியாழக்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த எஸ்.விஸ்ணுராஜா (வயது 15), கம்பர்மலையைச் சேர்ந்த இ.தர்ஷன் (வயது 16), வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பா.சுகிர்தன் (வயது 15) ஆகிய 3 சிறுவர்களுமே காணாமற் போயிருந்தனர். வவுனியாவில் உறவினர் ஒருவரின் பிறந்ததின நிகழ்வுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர்கள் அங்கும் செல்லவில்லையெனவும் மீண்டும் வீடு திரும்பவில்லையெனக்கூறி உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் கொம்பனித் தெருவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்குச் வியாழக்கிழமை (02…
-
- 0 replies
- 204 views
-
-
உள்ளகப் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் எந்தவொரு கலந்தாய்வையும் இலங்கை அரசாங்கம் செய்யவில்லை என்று சுட்டிக் காட்டி ஐ. நா மனித உரிமை ஆணையாளருக்கு, தமிழ் சிவில் சமூக அமையம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம், யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம், வவுனியா பிரஜைகள் குழு, மன்னார் பிரஜைகள் குழு, காணாமல் போனோரின் உறவினர் சங்கம், கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பு உட்பட வடக்கு கிழக்கை சேர்ந்த 15 வெகுசன அமைப்புக்கள் சேர்ந்து கூட்டாக கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளன. மார்ச் மாதம் 28ஆவது கூட்டத்தொடரில் தொடக்கவுரை ஆற்றிய போதும், கடந்த மாதம் 29ஆவது கூட்டத்தொடரில் தொடக்கவுரை ஆற்றிய…
-
- 0 replies
- 324 views
-
-
நாடாளுமன்ற தேர்தலிற்கான முன்னேற்பாடுகளினில் முனைப்பு காட்டிவரும் முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவளிப்பதில்லையென கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பினில் ஆராய கூட்டப்பட்ட கூட்டத்தினையும் அவர்கள் புறக்கணித்துள்ளனர்;.பதிவு இணைய செய்தி வடமராட்சியினில் தேர்தல் களமிறங்க தீர்மானித்துள்ள சுமந்திரன் கூட்டமைப்பு வசமுள்ள பருத்தித்துறை நகரசபை ,பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் கரவெட்டி பிரதேசசபைகளது உறுப்பினர்களை கூட்டமொன்றிற்கு அழைத்திருந்தார். எனினும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டனர்.கலந்து கொண்ட பலரும் வடமராட்சியினில் மக்கள் முற்றுமுழுதாக தங்களிற்கு எதிரான மனோநிலையினில் இருப்பதாகவும…
-
- 39 replies
- 2.1k views
- 1 follower
-