Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இளைஞர் சமு­தா­யத்தின் தெளி­வான சிந்­த­னையும் ஆற்­ற­லுமே நாட்டை சரி­யான பாதையில் கொண்டுசெல்லும். இலங்­கையில் இளைஞர் சமூகம் மிகச்­ச­ரி­யான தலை­மைத்­து­வத்தை உரு­வாக்க வேண் டும் என்று இந்­தி­யாவின் முன்னாள் ஜனாதி­பதி கலா­நிதி அப்துல் கலாம் தெரி­வித்தார். இலங்கை இன்று சரி­யா­ன­தொரு பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. அதே போல் பசு­மை­யான நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்­திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். “அறிவுப் பொரு­ளா­தா­ரத்தில் சக்தி சவா ல்கள்” எனும் தலைப்பிலான மாநாட்டில் கலந்துகொள்­வ­தற்­காக இலங்கை வந்­தி­ருக்கும் இந்­தி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் நேற்று பாட­சாலை மாண­வர்­களை கொழும்பு பண்டாரநாயக்க சர்வ…

    • 31 replies
    • 3.3k views
  2. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயம் போட்டியிடுவார் என்றும், அவருடன் இணைந்து தேசிய சுதந்திர முன்னணியும் போட்டியிடும் என்றும் அந்தக் கட்சியின் தலைவரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மகிந்த ராஜபக்சவுடன் இணைந்தே தேசிய சுதந்திர முன்னணி போட்டியிடும். அவர் எந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறாரோ அவர்களுடன் இணைந்தே நாமும் போட்டியிடுவேன். வழக்கம் போலவே நான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவேன். மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இடம் அளிக்கப்படுமா என்பது குறித்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜெயந்தவுடன் பேசி முடிவெடுக்கப்படும். எனினும், மகிந்த…

    • 0 replies
    • 390 views
  3. தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்த குற்றச்சாட்டில், கைதடியில் வைத்து இரண்டு பேரை சிறிலங்கா காவலதுறையினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தகவல் ஒன்றை அடுத்து, கைதடியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று பிற்பகல் சோதனையிட்ட சிறிலங்கா காவல்துறையினர், அங்கிருந்து விடுதலைப் புலிகளின் வரிப்புலி சீருடை, 3 தொப்பிகள், 2 ஜக்கட்டுகள் என்பனவற்றைக் கைப்பற்றினர். புதுக்குடியிருப்பில் இருந்து இரகசியமாக இவற்றை எடுத்து வந்து, கைதடியில் வைத்திருந்த நிலையிலேயே காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, புதுக்குடியிருப்பு, வள்ளிபுனத்தைச் சேர்ந்த மனோகரன் மயூரன், கைதடி மேற்கைச் சேர்ந்த வாரித்தம்பி பரத்குமார் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட…

  4. இன்புளுவென்சா H1N1 இலிருந்து பாதுகாப்பது எப்படி? இன்புளுவெனசா (Influenza) H1N1 என்பது புளு (Flu) காய்ச்சல் போன்ற நோயாகும். இந்நோய் ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு மூக்கிலிருந்து வெளியேறுகிற சளி மற்றும் இருமும் போது வெளியேறும் கிருமிகள் மூலம் தொற்றுகிறது. இந்நோய் முன்னர் 'பன்றிக் காய்ச்சல்' என்றழைக்கப்பட்டது. ஆயினும், இந்த நோய் பன்றிகளிலிருந்து தொற்றுவதில்லை என்ற காரணத்தினால். இப்பொழுது 'பன்றிக் காய்ச்சல்' என்றழைக்கப்படுவதில்லை. இது ஒரு புதிய வகை வைரஸ் கிருமியினால் ஏற்படும் நோய் ஆகையால் பெரும்பாலன மக்கள் இந்நோய்க்கான எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதில்லை. ஆகவே, இந்நோய் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இது சிறு பிள்ளைகள் மற்றும் இளம் வயதினர் மத்தியில் அதிகமாக பரவிவருகின்றது…

    • 0 replies
    • 873 views
  5. யாழ்.மாவட்டத்தில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் யுத்தத்திற்கு பின்னர் பாரிய அளவில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இப்போதைப் பொருள் தாக்கத்தினால் தற்கொலை செய்போரின் தொகையும் சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 5 பேர்வரை தற்கொலைக்கு முயட்சித்து சிகிச்சைக்காக யாழ்;.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்றும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்.மருத்துவ சங்கத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இது தொடர்பில் மருத்துவ சங்கத்தினர் மேலும் தெரிவிக்கையில்:- வடமாகாணத்தினைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களுன் ஒப்பிடுகையில்…

    • 0 replies
    • 425 views
  6. மன்னார் தலைமன்னார் கிராமப்பகுதியில் வைத்து மன்னார் மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும்,மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான எஸ்.ஜி.வாஸ்கூஞ்ஞ என்பவர் இனம் தெரியாத குழு ஒன்றினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் அச்சுறுத்தப்பட்டுள்ளார். தலைமன்னார் கிராமம் பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் நீண்ட நாட்களாக விளையாடி வரும் இளைஞர் குழு ஒன்றினால் தொடர்ச்சியாக அப்பகுதி மக்களுக்கும்,அவ்வீதியால் செல்பவர்களுக்கும் தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகள் விளைவிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடையம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸாருக்கும் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்த நிலையில் தலைமன்னார் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் அசமந்த போக்குடன் செயற…

    • 0 replies
    • 357 views
  7. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து பெரும்பான்மை ஆதரவை பெறுவதற்கு பல வாரங்களாக முயற்சிகளை மேற்கொண்டு தோற்றுப்போன பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதியாக மேற்கொள்ளகூடிய சிறந்த நடவடிக்கை எதுவோ அதனை செய்தார்- பாராளுமன்றத்தை கலைத்தார். கடும் அழுத்தங்களிற்கு உட்பட்ட நிலையில் வேறு வழியில்லாததால் அவர் அந்த நடவடிக்கையை எடுத்தார். அது அவரை தனதுசொந்தக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, சர்வதேச சமூகம் ஆகியவற்றிலிருந்து மேலும் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்த்துக்கொண்டுள்ளார். இலங்கை ஆகஸ்ட் 17 ம் திகதி தேர்தலை சந்திக்கின்றது-திங்கட்கிழமை.புதிய பாராளுமன்றம் செப்டம்பர் முதலாம் திகதி கூடும். இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்தகுற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய…

    • 0 replies
    • 177 views
  8. பேராதனை பல்கலைக்கழக மாணவி பானுசா சிவப்பிரகாசம் தற்கொலை தொடர்பினில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் புலனாய்வு கட்டமைப்பின் முன்னாள் பணிப்பாளர் ஹெந்தவிதாரண ஆகியோரினை பங்காளிகளாக கொண்ட டாண் தொலைக்காட்சி குழும ஊடகவியலாளர் ஒருவர் தேடப்படுகின்றார். அர்ஜீனன் கோவிந்தபிள்ளை என்றழைக்கப்படும் குறித்த நபர் தன்னையொரு ஊடகவியலாளர் எனவும் தன்னை காவல்துறையோ எவருமோ ஒன்றும் செய்யமாட்டாதெனவும் சவால் விடுத்தே பாலியல் துண்புறுத்தல்களை செய்திருந்ததாக தெரியவருகின்றது. முகப்புத்தகம் மற்றும் கைதொலைபேசி ஊடாக விடுக்கப்பட்ட தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாகவே குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளமை விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது. மாணவியின் தற்கொலையினையடுத்து குறித…

    • 2 replies
    • 2.4k views
  9. போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள், தொழில்களை பெற்றுக்கொள்ளும் போது பலாத்காரமாக பாலியல் இம்சைகளுக்கு இசைய வைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏஎவ்பி செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்போது தாம் தமது சமூகத்தினரின் உடல்ரீதியான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் உள்ளாவதாக பாதிக்கப்பட்ட பெண்களை கோடிட்டு செய்திசேவை தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை கணவன்மாரை இழந்த பெண்களுக்கு தமது சமூகத்திலேயே உரிய இடம் வழங்கப்படுவதில்லை என்று சமூக சேவையில் ஈடுபட்டுள்ள கிறிஸ்டின் மனோகரன் என்பவர் தெரிவித்துள்ளார். தமது நிலையை பலர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக கணவன்மாரை இழந்த பலர் வெளிநாட்டு செய்திசேவையிடம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சிலர் குற்றவாளிகளால் பால…

    • 0 replies
    • 396 views
  10. நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர்களினில் ஒருசாராரும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் நோக்கம் இல்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளில் மாற்றம் இல்லை என்றும் மைத்திரிபால அரசாங்கத்துக்கு துணைபோகும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது எனவும் முன்னணி தெரிவித்துள்ளதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாகவும் அந்த மூத்த உறுப்பினர் கூறினார். வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி ச…

    • 0 replies
    • 477 views
  11. வட மாகாணத்தில் இப்போது நீதிபதிகளின் ஆட்சி ஆரம்பமாகியுள்ளது.இலங்கையில் எந்த மாகாணத்திலும் எப்போதும் இல்லாத பெருமையை வடக்கு மாகாணம் கொண்டிருப்பது கண்டு புளகாங்கிதம் அடையாமல் இருக்க முடியாது. ஆம், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் இந்த நாட்டின் நீதியரசராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன். எதையும் வெளிப்படையாகக் கருத்துரைக்கக்கூடிய நீதியரசரின் கீழ் வடக்கு மாகாண ஆட்சி வந்ததால் தமிழ் அரசியல்வாதிகள் தங்களை ஒழுங்குபடுத்தவும்- தமக்கிருக்கக்கூடிய கடமைகளை உணரவும் தலைப்பட்டுள்ளனர். இதன்மூலம் வடக்கு மாகாணத்தில் நல்லதொரு அரசியல் அமைப்பு உருவாகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போனவர்கள். தமிழ் அரசியல்வாதிகள் ஆற்றுகின்…

    • 6 replies
    • 422 views
  12. மகிந்த - மைத்திரி அணிகளுக்கிடையிலான பேச்சு - புதனன்று இறுதி முடிவு! [Sunday 2015-06-28 08:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு அணியினருக்கு இடையே முன்னெடுக்கப்படும் பேச்சுக்கு வரும் புதன்கிழமை முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இரு அணியினரும் நாளை கூடிப் பேசவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவான அணியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காகவும் அது பிரதான அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரசாரம் செய்யமுடியும் எனத் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் போட்டியிடுவதை விரும்பவில்லை. எனினும் முன்னாள் ஜனாதிபதியே பிரதமர் வேட்பாளராக நியமிக்க…

  13. இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை , சித்தன்கேணி வீதயில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிளையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நிர்வாக செயலாளருமான மாவை சேனாதிராசா திறந்துவைத்தார். முன்னதாக வட்டுக்கோட்டை அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கட்சியின் அலுவலக பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் கட்சயின் அலுவலகத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயக மூர்த்தி, சுமந்திரன் ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் நாடாள…

    • 8 replies
    • 1.9k views
  14. நானாட்டான் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்புவிழா! [Sunday 2015-06-28 20:00] பனை மரங்களை கள்ளையும் வடிசாராயத்தையும் பெறுவதற்குரிய ஒரு வளமாக மாத்திரமே நாம் கருதி வருகிறோம். பல்வேறு பரிமாணங்களில் பொருளாதார ரீதியாக உதவக் கூடிய பனை மரங்களை, போதைக்கு மட்டுமே பயன்படுத்துவது தமிழ் மக்களின் பேதைமை என்று வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மன்னார், நானாட்டான் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இத்திறப்புவிழா நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர…

  15. ஐ.நா அறிக்கை கையில் கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை! [Sunday 2015-06-28 20:00] ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும் வரை, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படமாட்டாது என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் 14ம் திகதி தொடக்கம், ஒக்ரோபர் 02ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னதாக, ஜனாதிபதியின் கையில், ஓகஸ்ட் 21ஆம் நாள் அந்த அறிக்கையின் பிரதி ஒன்று கிடைக்கும். அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள…

  16. மகிந்த ராஜபக்சவை வெற்றிபெற வைப்பதற்கு இம்முறை பிரபாகரன் இல்லை! - என்கிறார் ரணில் [Sunday 2015-06-28 20:00] மகிந்த ராஜபக்சவை தேர்தலில் வெற்றிபெற வைப்பதற்கு இம்முறை பிரபாகரன் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இன்று பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. கூட்டணியில் சிலர் மஹிந்தவை பிரதமராக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவிடம் வலியுறுத்துகின்றார்கள். மீண்டும் மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வந்து பழைய முறையிலேயே ஊழல் மோசடிகளை மேற்கொண்டு வெள்ளை வான் கலாச்…

  17. தேர்தலில் ஐதேகவுக்குத் தோல்வி ஏற்படும்! - என்கிறது மற்றொரு கருத்துக் கணிப்பு.[Sunday 2015-06-28 20:00] பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே அதிக ஆசனங்களை கைப்பற்றும் என கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்று மேற்கொண்ட கருத்துக்கணிப்பொன்று தெரிவிக்கின்றது. இதன்படி, எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே அதிக ஆசனங்களை வெல்லும் வாய்ப்புள்ளது. இக்கருத்துக்கணிப்பின் படி ஐக்கிய தேசியக் கட்சி பின்னடையும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இக்கணிப்பீட்டில் கருத்துத் தெரிவித்திருக்கும் 60 வீதமானோர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெல்லும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஐ.தே.க. வெல்வதாக தெரிவித்திருப்போர் வீதம் 40 ஆகும்.…

  18. ஜூன் 21, 2015 அன்று சுமந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களுக்கு (Tamils Relief <tamils.relief@gmail.com>)எழுதிய கடிதமொன்றில், உள்நாட்டு பொறிமுறை இல்லையெனில் செப்டெம்பர் வெளியாக உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது வெறுமனனே அறிக்கையுடன் நின்றுவிடும் அது ஜெனிவாவில் ஒரு அறையிலேயே இருந்துவிடும் என்று கூறியுள்ளார். சுமந்திரன் அனுப்பிய கடிதத்தின்ஆங்கில உள்ளடக்கமும் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. "I have said that after the tabling of the report there has to be a domestic mechanism ... Otherwise that report will sit on a shelf in Geneva." 'நான் சொல்வது என்னவெனில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு உள் நாட்டு பொறிமுறை ந…

  19. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்புமனு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், அவரின் முடிவை மாற்றியமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்தவின் விசுவாசிகள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஓர் அங்கமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டுவரும் சுசில் பிரேமஜயந்தவை தமது பக்கம் வளைத்துப் போட்டுள்ளனர். மஹிந்தவை ஆதரிக்கும் முடிவை அவர் இன்று பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது. இதனால் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, சு.கவின் உயர்மட்ட பிரமுகர்களுடன் தொடர் பேச்சு ந…

  20. அண்மையில் இலண்டனில் மங்கள சமரவீரவும் சுமந்தினும் சில தமிழர்களைச் சந்தித்ததற்குப் புலம்பெயர் தமிழர்களைப் பிரிப்பதே பிரதான காரணமாக இருந்தது என சிறிலங்காவின் அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதைத் தெரிவித்தார். இதோ அந்த விவாதம்.. http://www.lakway.org/view.php?pid=416

    • 5 replies
    • 583 views
  21. உலக மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்பட்டுவரும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையானது கடந்த 2000 ஆம் ஆண்டில் மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் என்று சுமார் 60 இலக்குகள் வரை பிரகடனப்படுதியிருந்தது. குறிப்பாக 3ஆம் உலக நாடுகளை மையப்படுத்தி வரையறை செய்யப்பட்டு அபிவிருத்தி அடைவதற்கு பிரயத்தனப்பட்டு வரும் நாடுகளுக்கென சில விசேடமான இலக்குகளையும் நிர்ணயித்திருந்தது. பட்டினி மற்றும் வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி, பாலின சமத்துவம், சிசு மரண வீதத்தை குறைந்த மட்டத்தில் பேணுதல், சூழலியல் சார் அபிவிருத்திக்கான உலகமயமாதல், தாய் சேய் நலன்களைப் பேணல், மலேரியா, எய்ட்ஸ் மற்றும் ஏனைய கடும் தாக்கத்தை விளைவிக்கக்கூடிய நோய்களுக்கு எதிராக போராடுதல் முதலிய 8 இலக்குகளும் முக்கியத்துவதிற்குரியனவாக…

    • 2 replies
    • 475 views
  22. இலங்கையில் முதல்முறையாக அமெரிக்க கண்காணிப்பாளர்கள்! [Sunday 2015-06-28 08:00] நாடாளுமன்றத் தேர்தலின் போது கண்காணிப்பு பணிகளுக்காக அமெரிக்காவில் இருந்தும் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படவுள்ளனர். இலங்கையில் தேர்தல் ஒன்றுக்கு முதல் தடவையாக அமெரிக்காவில் இருந்து கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுகின்றனர். இதற்காக தேசிய ஜனநாயக நிறுவனம் மற்றும் ஜிம்மி கார்ட்டர் நிறுவனம் என்பனவற்றுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. கடந்த கால தேர்தல்களின் போது ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றின் கண்காணிப்பாளர்களே வரழைக்கப்பட்டு வந்தனர். அவர்களும் இந்த முறை வரவழைக்கப்படவுள்ளனர். இதனை தவிர தாய்லாந்தின் சுயாதீன தேர்தலுக்கான ஆசிய வலையமைப்பின் பிரதிநிதிகளும் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். …

  23. நீதியான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தால் சிறைத்தண்டனை! - அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை[Sunday 2015-06-28 08:00] நாடாளுமன்றத் தேர்தலை நீதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையர், இலங்கை அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய தனக்கு இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நீதியான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்கத் தவறும் அரச பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விள…

  24. இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்! - புலித்தேவன் மனைவி குறிஞ்சி கோரிக்கை [Saturday 2015-06-27 20:00] தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரியிருக்கிறார் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலக பணிப்பாளராக செயற்பட்ட புலித்தேவனின் மனைவி குறிஞ்சி. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள், தளபதிகள் தொடர்பில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியாக புலித்தேவனின் மனைவி மாறியுள்ளார். இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து…

  25. யாழ்ப்பாணத்தில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள் - விசாரணைக் குழு நியமனம்! [Sunday 2015-06-28 08:00] புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையை அடுத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சிறுமியர் மீதான பாலியல் பலாத்காரங்கள், தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக்குழுவில் சட்டம், சமூக, மருத்துவம் மற்றும் சிறுவர் நலன் உட்பட்ட துறைகளில் உள்ளவர்கள் உள்ளடக்கப்பபட்டுள்ளனர். இந்தக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளது. இந்தக்குழுவில் இளைப்பாறிய பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரக்டர், ஹேய்லிஸ் குழுமத்தின் முன்னாள் பாதுகாப்பு முகாமையாளர் பிரசாந்தி மஹேந்திரரட்ன, சட்ட வைத்திய அதிகாரி அஜித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.