ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
Published By: VISHNU 03 OCT, 2024 | 09:06 PM இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் வியாழக்கிழமை (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்த போதே இந்த உடன்பாட்டை வெளியிட்டனர். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது. அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பத…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
03 OCT, 2024 | 03:02 PM மத்திய வங்கியின் ஆளுநர்களிற்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. செப்டம்பர் 11ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் ஓய்வூதியம் இரத்து செய்யப்படுகின்றது. ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கான ஓய்வூதியம்11 முதல் நிறுத்தப்படும் என வர்த்தமானியில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195388
-
-
- 1 reply
- 430 views
- 1 follower
-
-
-
வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசா…
-
- 1 reply
- 170 views
- 1 follower
-
-
03 OCT, 2024 | 03:05 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகத்துறை அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் தனது தமது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி கட்டணத்திற்காகச் செலுத்தப்பட வ…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 03 OCT, 2024 | 09:52 AM உலகளாவிய ரீதியில் சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று வியாழக்கிழமை (03) அனுஷ்டிக்கப்படுகிறது. உலகளவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 30 இலட்சம் மக்கள் மது பாவனைக்கு அடிமையாகி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 50 பேர் உயிரிழப்பதாகவும், வருடாந்தம் 237 பில்லியன் ரூபா நோயாளர்களுக்காக அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மது பாவனையை குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைபடுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை செய்யப்பட்டுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப…
-
- 1 reply
- 512 views
- 1 follower
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்க முயற்சிக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. சிறுவர் தின நாளில் வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டத்தில் ஒருவர் குழப்பம் விளைவித்தமை குறித்து கண்டனம் தெரிவித்து இன்று (03) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எட்டுமாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் சர்வதேசத்திடம் நீதி கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராட்டமானது பல இன்னல்களையும் துன்பங்களையும் சுமந்த போராட்டமாக பதினைந்து வருடமாக போராடிக்கொண்டு வருகின்றோம். …
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 OCT, 2024 | 11:40 AM பரீட்சை மோசடிகளில் 473 பேர் ஈடுபட்டுள்ளதால் பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றியமைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 2024 ஆம் ஆண்டு பரீட்சைகள் சம்பந்தமான மோசடிகளில் ஈடுப்பட்ட 473 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்கள் எந்தவொரு பரீட்சைகளின் போதும் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், பிரதேச பணிப்பாளர் நாயகம் மற்றும் மூத்த அதிகாரிகளின் பெயர்களும் அடங்குகின்றது. எனவே, தற்போதைய ச…
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடும் பக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனிடையே, இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிய கிடைக்கின்றது. https://thinakkural.lk/article/309094
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் - சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ வீடு! Vhg அக்டோபர் 03, 2024 முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தியோகபூர்வ இல்லம் அமைச்சரவையின் அனுமதியுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்த வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் பெறுவதற்கு முன்னைய அமைச்சரவை முடிவை மாற்றி புதிய அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதித…
-
-
- 1 reply
- 360 views
-
-
Published By: VISHNU 03 OCT, 2024 | 03:24 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமளில்லை என தாயக மக்கள் கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான தலைமையிலான தாயக மக்கள் கட்சியின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவும், பிரதி தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமனவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் திலதி ஜயவீரவினால் புதன்கிழமை (2) நி…
-
- 1 reply
- 323 views
- 1 follower
-
-
29 SEP, 2024 | 01:47 PM யாழ்ப்பாணத்தில் கன்றுத்தாச்சி பசுமாட்டினை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், மாட்டினை வெட்டிய குற்றத்தின் பேரில் மூவரை கைது செய்தனர். பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள புதர் ஒன்றினுள் கடந்த வெள்ளிக்கிழமை (27) ஐந்து மாத கன்றுத்தாச்சி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய பின்னர், இறைச்சி கழிவுகளை அப்பகுதிகளில் வீசிச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்ன…
-
-
- 2 replies
- 463 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசிய அரசியலில் இன்று நிராகரிக்க முடியாத தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்கிறார் கஜேந்திரகுமார் தமிழ்த் தேசிய அரசியலில் இன்று நிராகரிக்க முடியாத ஒரே ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியே உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02) மாலை மாங்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளர் தவபாலன் தலைமையில் இடம்பெற்றது நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,…
-
- 0 replies
- 359 views
-
-
ரணிலை ஆதரித்தவர்கள் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க முடிவு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இயலும்…
-
- 0 replies
- 381 views
-
-
இணையத்தினூடாக இடம்பெறும் பண மோசடிகள் அதிகம் பதிவாகுவதாக பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர். எனவே வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தற்காலிக கடவுச்சொற்கள் (OTP) அல்லது வங்கி வழங்கிய கடவுச்சொற்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்களின் போதே இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். எந்தவொரு லொட்டரிகள், வாடிக்கையாளர் கணக்கெடுப்பு, நன்கொடைகள் போன்றவற்றில் தனக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று சம்பத் வங்கி அறிவித்துள்ளது. பிரபலமான வர்த்தக நாமங்கள் மற்றும் சேவைகள் என்ற போர்வையில் தள்ளுபடிகள், பரிசுகள், அதிர்ஷ்ட சீட்டி…
-
- 0 replies
- 580 views
- 1 follower
-
-
Published By: VISHNU 03 OCT, 2024 | 02:51 AM இலங்கைக்கான அவுஸ்திரேலிய துணை உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் புதன்கிழமை (02) முல்லைத்தீவு- கள்ளப்பாட்டிலுள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கான அவுஸ்திரேலிய துணைத்தூதுவர் லலிதா கபூர் ரவிகரனை எதிர்கால பாராளுமன்ற உறுப்பினர் என விளித்திருந்தார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பாக வன்னித் தேர்தல் தொகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் போட்டியிடுவார் எனப் பரவலாகப் பேசப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே இன்று இட…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார் October 2, 2024 ஆயுதம் ஏந்திய அனுபவம், புதிய ஜனாதிபதியால் உருவாக்கப்படவுள்ள எதிர்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தகுதியாக தமிழ் துணை இராணுவக் குழுவின் தலைவர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் என்ற அடிப்படையில் நல்ல புரிந்துணர்வு இருப்பதாக முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். “தேர்தல் முடிந்த பின்னர், அந்த வெற்றிக்கு பின்னர் ஆட்சியில் இருக்கின்றவர்களோடு கலந்துரையாடி, ஏனென்றால் அவ…
-
-
- 6 replies
- 651 views
-
-
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மூடி மறைத்துள்ளதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி குற்றம்சாட்டியுள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சமூக செயற்பாட்டாளரான சுனந்த தேசப்பரியவினால் எழுதப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தொிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை செய்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை நாம் பார்க்க வேண்டும். சிலர் எம்மிடம் கேட்கிறார்…
-
- 1 reply
- 170 views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 SEP, 2024 | 06:27 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கும் 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வது குறித்து ஆராயப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி பேரவையில் அதுகுறித்த தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (9) ஜெனிவாவில் ஆரம்பமானது. அன்றைய தினம் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, அதன்மீதா…
-
-
- 3 replies
- 272 views
- 1 follower
-
-
02 OCT, 2024 | 05:44 PM தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ள பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் 25 வீத பெண்களின் உரிமையினை உறுதிப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (02) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மிரேகா நாகேஷ்வரன் மற்றும் மட்டக்களப்பு சிவில் வலையமைப்பின் உறுப்பினர்களான குணரெட்னம் யுனிதா, பிரசாந்தன் பவித்திரா ஆகியோர் கருத்துகளை முன்வைத்தனர். இதன்போது அவர்கள் கூறுகையில், வடகிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டோம். ஆனால், ஒற்றுமையின்மை காரணமாக தற்போது பாராளும…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவரும் முயற்சிகளை ஜனாதிபதி கைவிடவேண்டும் தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவரும் முயற்சிகளை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க கைவிடவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் கடும் போக்குடைய சிங்கள பௌத்த தேசியவாதிகளை; கவரும் முயற்சியில் ஈடுபட்டால் தேசிய மக்கள் சக்தி புதிய ராஜபக்சாக்களாக மாறும் என தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் இடம்பெறுகின்ற விடயங்களை பார்க்கும் நல்லாட்சி 2 என்ற உணர்வும்,முன்னர் ந…
-
- 0 replies
- 158 views
-
-
28 SEP, 2024 | 11:52 AM (எம்.நியூட்டன்) வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,” எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, நான்காம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான, மூன்று தினங்கள் கண்காட்சி நிகழ்வு இடம் பெறவுள்ளது. முப்பதிற்கும் மேற்பட்ட விடயத் தலைப்புக்களை உள்ளடக்கியதாக இக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். …
-
- 1 reply
- 890 views
- 1 follower
-
-
02 OCT, 2024 | 03:24 PM ராஜபக்ச குடும்பத்தினர் உகன்டாவிலும் வேறு பல நாடுகளிலும் மில்லியன் கணக்கான டொலர்களை மறைத்துவைத்திருக்கின்றனர் என்ற தனது குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நிதி களவாடப்பட்டுள்ளது என ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பல ஆண்டுகளாக தெரிவித்துவருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான தருணம் இது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195323
-
-
- 2 replies
- 309 views
- 1 follower
-
-
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்ந்தும் தெரிவிக்கையில், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். அந்தவகையில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. அந்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவர் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/tam…
-
-
- 1 reply
- 362 views
- 1 follower
-
-
யுத்தத்தால் மரணித்தோருக்கு நினைவு துாபி – ஜனாதிபதிக்கு அங்கஜன் கடிதம். யுத்தத்தால் மரணித்தோருக்கான நினைவுத் தூபியை அமைப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குறித்த கடிதத்தில்” யுத்தத்தினால் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் அனுபவித்த துன்பங்களை ஏற்று, அமைக்கப்படும் நினைவுத்தூபியானது முழு நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதோடு நினைவேந்தலுக்கான அடையாளமாகவும் மாறும் எனவும் குறிப்பிட்டுளு்ளார். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக…
-
-
- 2 replies
- 599 views
-