Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு கடர்சார் பாதுகாப்பு அமெரிக்கா பாதுகாப்பு உதவி: [Tuesday 2015-05-05 21:00] சிறிலங்காவுக்கு கடர்சார் பாதுகாப்பு உதவிகளை வழங்கும் திட்டம், அமெரிக்காவுக்கு இருப்பதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் ஜெப் ரத்கே தெரிவித்துள்ளார். வொசிங்டனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பிராந்திய விவகாரங்களின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருப்பதாகவும், எனவே கடல்சார் பாதுகாப்பில் அமெரிக்காவின் பங்கு என்ன என்றும், இந்த விவகாரத்தில் சிற…

  2. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் குழுவுக்கு தலைமையேற்பார் மஹிந்த? [Tuesday 2015-05-05 20:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று அரசியல் அவதானிகள் ஆரூடம் தெரிவிக்கிறார்கள்.இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் எதிர்வரும் 06 ஆம் திகதி முக்கிய சந்திப்பு இடம்பெற உள்ள நிலையில் இவ்விதம் எதிர்வு கூறப்படுகிறது. இச்சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சம்பந்தப்படுத்தி இரு நிபந்தனைகளை முன்வைப்பார் என்று சொல்லப்படுகின்றது.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட…

  3. போதைப் பொருள் விற்பவர்கள் யார் என்பது தெரிந்தும் முறையிட பயப்படுகிறார்கள் : ஜெயசேகரம் கிராமிய மட்டத்திலும் போதைப்பொருள் அதிகரித்துள்ளது. இதனை யார் விற்கின்றார்கள், எங்குள்ளது என்பது பற்றி கிராமிய மட்ட அமைப்புக்களுக்கு தெரிகின்றது. ஆனால் அவர்கள் முறைப்பாடு செய்வதற்கு பயப்படுகின்றார்கள் என்று, யாழ். வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். அவ்வாறு முறைப்பாடு செய்து குற்றம் சுமத்தப்பட்டவர் பிணையில் வெளிவந்து, தன்னை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பதை அறிந்துகொள்கின்றார். இதனால் முறைப்பாடு செய்தவருக்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. இதனால் தகவல்கள் தருபவரின் பாதுகாப்பு பேணப்பட்டு, அவரது இரகசியமும் பேண பொலிஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். …

    • 1 reply
    • 592 views
  4. யாழ்.சுன்னாகம் மல்லாகம் கல்லாரை பகுதியில் இன்று திங்கட்கிழமை மின்சார வயர் (மின்கடத்தி) அறுந்து வீழ்ந்ததில் தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர். பாலச்சந்திரன் ரஜீவன்(வயது 29) மற்றும் மகனான ரஜீவன் நிரூசன்(வயது 9)ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர். இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்த போது மின்சார இணைப்பு வயர் அறுந்து நிலத்தில் வீழ்ந்திருந்துள்ளது. அவ்வேளையில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த தந்தை, மகன் ஆகியோர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. மின் விநியோகத்தைத் துண்டிக்குமாறு மின்சார சபைக்கு அறிவித்த போதும் 45 நிமிடங்களுக்கு பின்னரே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட…

  5. ஒரே இரவில் நல்லாட்சி வந்து விடாது: சுமந்திரன் நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது அது படிப்படியாகவே நிகழவேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான எம்.கே. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா வன்னி இன் ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டது. இதில் விசேடமாக, அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட…

  6. நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 5 ஈழத்தமிழர்களுக்கு சிறைத்தண்டனை! [Friday 2015-05-01 08:00] விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்கில் உள்ள நீதிமன்றம் நேற்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 43 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும், ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்…

    • 46 replies
    • 2.8k views
  7. இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கோப் கனவு காண்பிப்பதற்கல்ல வழிகாட்டுவதற்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ், இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில்,தெல்லிப்பளை, காரைநகர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கான உபகரணம் வழங்கும் நிகழ்வும் அணிக்கு ஐவர் கொண்ட புட்சல் உதைபந்தாட்டப் போட்டியும் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தேசிய இளைஞர் கழக சம்மேளன உபதலைவர் எஸ்.விஜிதரன், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் லக்ஷன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி வினோதினி ஸ்ரீமேன…

    • 2 replies
    • 307 views
  8. தாய்மையில் 92 ஆவது இடம் வகிக்கும் இலங்கை தென்னாசியாவில் இலங்கை மற்றும் மாலைதீவு என்பன தாய்மையில் சிறந்த இடங்களை பெற்றுக் கொண்டுள்ளன. சேவ் த சில்ரன் அமைப்பு வெளியிட்டுள்ள 'உலகளாவிய அன்னை 2015' பட்டியலிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகலாவிய ரீதியில் 179 நாடுகளில் இலங்கை 92 ஆம் இடத்தில் உள்ளதுடன் மாலைத்தீவு மற்றும் ஜமேக்கா என்பன அதே இடத்தில் உள்ளன. இதேவேளை, கடந்த வருடம் வெளியிடப்பட்ட பட்டியலில் இலங்கை 89ஆவது இடத்தில் இருந்தது. 1400 பேருக்கு 1 என்ற நிலையில் இலங்கையில் தாய்மார் மரணவீதம் காணப்படுவதாக அந்த பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோர்வே.பின்லாந்து, ஜஸ்லாந்து,, டென்மார்ன் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள…

  9. இளைஞர்கள் வீதிகளில் கூடி நின்றால் கைது செய்ய நடவடிக்கை யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகன், வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்மன் ஜெயசேகர மற்றும் பிரதேச செயலர்கள் சிவில் அமைப்பினர் ஏனைய அரச அதிகாரிகள் பிரதேச சபை தவிசாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள போதைப் பாவனை, வாள்வெட்டு, அடிதடிக் கலாசாரம்,மிருக பலியிடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. மாலை நேரங்களில் தனியார் வகுப்புக்கள் நிறைவடைந்ததும் இளைஞர்கள் தேவையற்ற விதத்தில் வீதிகளில் கூடி நிற்க முடி…

  10. அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் மொழியும் அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை மாற்றத்திற்கு உட்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .எ.சுமந்திரன் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்துள்ளார். இப்படியான மாற்றம் ஒன்றை ஏற்படுத்த எந்தவொரு நேரத்திலும் தமிழ் மக்கள் ஆணை பெறப்படாத போதிலும் இப்படி ஒரு முடிவு எப்படி எடுக்கப்பட்டதென தமிழ் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கடந்த 28 ஆம் திகதி 19 வது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதங்கள் இடம் பெற்ற வேளையில் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகள் காரணமாகச் சில மாற்றங்கள் மேற் கொள்ளப்பட்டன. அதன் பிரதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட…

    • 8 replies
    • 850 views
  11. யாழ்.வீரர்களுக்கு வளப் பற்றாக்குறை - சரவணபவன் எம்.பி வடமாகாண வீரர்களிடத்தில் தேசிய ரீதியாகவோ அல்லது சர்வதேச ரீதியாகவோ சாதிப்பதற்குரிய திறமைகள் உள்ளன. அந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமும் அவர்களிடத்தில் உள்ளன. திறமைகளும் ஆர்வமும் இருந்த போதிலும் அவற்றை மேலும் வளர்த்துக்கொள்ளத் தேவையான வளங்களின் பற்றாக்குறையே எமது வீரர்கள் மாகாணத்துடன் தமது விளையாட்டுப் பயணங்களையும் சாதனைகளையும் முடித்துக்கொள்ள பிரதான காரணமாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார் யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் 'ஹோப்' திட்டத்தின் கீழ் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே…

    • 1 reply
    • 360 views
  12. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸன் பெர்னாண்டோவிடம் நாளை விசாரணை! - சிறையில் அடைக்கப்படலாம். [Monday 2015-05-04 09:00] முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நாளை விசாரணை நடத்த உள்ளனர். கடந்த காலங்களில் சதொச நிறுவனத்திடமிருந்து ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ள நாளை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமராக்க வேண்டுமென கோரி 8ம் திகதி குருணாகலில் …

    • 2 replies
    • 494 views
  13. விகிதாசார தேர்தல் முறைப்படி தான் பொதுத்தேர்தல்! - என்கிறார் அமைச்சர் கபீர் ஹாசிம். [Tuesday 2015-05-05 08:00] அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கபீர் ஹாசிம், தற்போதைய விகிதாசார தேர்தல் முறையிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் கபீர் ஹாசிம் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 100 நாள் வேலைத்திட்டத்தின் பின்னர் அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தது. எனினும், 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதில் சற்று காலதாமத…

  14. கோட்டாபய தலைமையில் புதிய கட்சி; தொடங்குகின்றது பொதுபலசேனா பொதுபலசேனா அமைப்பு நாளைய தினம் தேர்தல்கள் திணைக்கள ஆணையாளரை சந்தித்துப் புதிய கட்சியொன்றை தொடங்குவது தொடர்பில் பேச்சுக்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. பௌத்த கடும்போக்குவாதிகளான பொதுபலசேனா அமைப்பினர் மஹிந்த ராஜபக்சவின் மீள்வரவை ஆதரித்து வருகின்றனர். .அதற்கான போராட்டங்களையும் அண்மைக்காலத்தில் மேற்கொண்டிருந்தனர். ஆயினும் பொதுபலசேனா போன்ற அமைப்புக்களே தனது வீழ்ச்சிக்குக் காரணம் என அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். ஆயினும் கோட்டாபயவை தலைமையாகக் கொண்டு புதிய அரசியல் கட்சியொன்றைப் பதிவுசெய்வது தொடர்பிலான முனைப்புக்களில் பொதுபலசேனா ஈடுபட்டுவருவதாகத் தெரியவருகின்றது. அதன் ஒரு கட்…

  15. திஸ்ஸவின் பதவி தப்பியது; உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்காவின் கட்சி நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை சட்டத்துக்குப் புறம்பானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐ.தே.கவின் முன்னாள் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்து பிரிந்துசென்றிருந்தார். கடந்த தேர்தல் பரப்புரைக் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கையெழுத்துக்களைப் பயன்படுத்திப் போலி ஆவணமொன்றை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற உத்தரவிற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஐ.தே.கவி…

  16. பசிலுக்கு 7ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராபக்ஷவுக்கான விளக்கமறியல், மே மாதம் 7 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திவிநெகும நிதி மோசடி தொடர்பில் அவருடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் விளக்கமறியலும் 7ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் இன்று முற்படுத்தப்பட்ட போதே அவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=307804018005471054

  17. கோண்டாவில் டிப்போ சந்தியில் விபத்து: ஸ்தலத்தில் ஒருவர் சாவு யாழ். கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக, வீதியில் நின்ற வயோதிபரை கூலர் ரக வாகனம் மோதியதில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். கூலர் ரக வாகனம் மோதியதில் உரும்பிராய் தெற்கு சேர்ந்த சீனியர் ஞானம் (வயது 55) என்பவர் உயிரிழந்தவராவார். இதனையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொதுமக்கள், கூலர் ரக வாகனத்தை பெற்றோல் ஊற்றி கொளுத்த முற்பட்டனர். அவ்விடத்துக்கு சென்ற கோப்பாய் பொலிஸார் பதற்றத்தை தணித்து, பொதுமக்களை விரட்டினர். பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://onlineuthayan.c…

  18. இலங்கையர்களுக்கு புதிய கடவுச்சீட்டு புதிய கடவுச் சீட்டொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பொது அமைதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். உத்தேச புதிய கடவுச் சீட்டில் உள்ளடக்கப்படவேண்டிய விபரங்கள் குறித்து ஆராய்ந்து, அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார் எவ்வாறாயினும் இந்த நடவடிக்கை பூர்த்தியாவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படலாம் எனவும் பொது அமைதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆள் அடையாளத்தை உறுதிபடுத்துவதற்காக, கைவிரல் அடையாளத்தை பயன்படுத்துவது தொடர்பிலும், இதன்போது ஆலோசித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=…

  19. வெதுப்பகங்களில் தராசு இல்லாவிடின் 100,000 ரூபாய் தண்டம் வெதுப்பகம் மற்றும் வெதுப்பக உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கு தராசு வைக்கப்படவேண்டும். அவ்வாறு தராசு வைக்கப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பாண் உள்ளிட்ட வெதுப்பக தின்பண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சாதாரண நிலையங்களில் தராசு இல்லாவிடின் 10ஆயிரம் ரூபாய் தண்டமும் கூட்டிணைந்த அல்லது பெரிய நிறுவனங்களில் தராசு இல்லாவிடி…

  20. இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை: இலங்கைக்கு எதுவித பாதிப்புமில்லை பப்புவா நியூகினி தீவில் இன்று 7.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தோனேசியா மற்றும் சுலைமான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூகினியா தீவில் ராபாலுவுல நகரத்திலிருந்து தெற்காக 15 கிலோமீற்றர் தூரத்திலேயே ஜி.எம்.டி நேரப்படி 1.40க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த சுனாமி எச்சரிக்கையினால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=311484017005573413

  21. பொலிஸார் இடைநிறுத்தம்; நீதவான் அதிரடி ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத குற்றத்தடுப்பு பொலிஸ் பரிசோதகர் தற்காலிகமாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பரிசோதகர் சிசேர என்பவரே இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவர் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் யாழ். நகரப்பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குப் பிணை வழங்கப் பொலிஸார் ஆட்சேபம் தெரி…

  22. கொழும்பு கம்பன் விழா - 2015 கோலாகலமாக ஆரம்பம் ஆனது. தொழிலதிபர் ஈஸ்வரனின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலை அமர்வில் கலந்து கொண்டார்.இவர் அரங்கத்தின் நடுவில் சிம்மாசனம் கொடுக்கப்பட்டு அமர்த்தப்பட்டார். தசரத சக்கரவர்த்தியாக உருக் கொடுக்கப்பட்டார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119346/language/ta-IN/article.aspx

    • 9 replies
    • 1.2k views
  23. கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்களும் – முரண்படுபவர்களும் தொடர்ந்து முட்டி மோதி இராணுவ புலனாய்வுக் கட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் மூழ்கப் போகிறீர்களா? என்பதனை தீர்மானியுங்கள்..... நீண்ட் நாட்களாகவே என் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் முக்கிய விடயத்தை பதிவிட வேண்டும் என நினைப்பது உண்டு... பின்பு ஏன் இந்த கட்சி அரசியல் வில்ங்கங்களுக்குள் நேரத்தை மண்ணாக்குவான் என ஒதுங்கிக் கொள்வது உண்டு... ஆனால் நேற்று (04.05.15) எனக்கு வந்த ஒரு செய்தி எனது பதிவின் அவசியத்தை உணர்த்தி நின்றது... அதனை நான் வெளியிடவில்லை காரணம் ஆதாரம் இல்லாத செய்திகளை நான் பதிவிடுவதில்லை.... ஒரு சந்திப்பாக இருந்தால் அந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் அதனை உறுதிப்படுத்தி தெரிவிக்க வேண்டும்...…

    • 0 replies
    • 275 views
  24. யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (05) உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை, நெடியகாடு பகுதியை சேர்ந்த சிவனடியார் நவரட்ணம் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்;. வல்வெட்டித்துறை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுவருவதால், இவர் அங்கு தண்ணீர் பந்தல் அமைந்திருந்தார். இந்த நிலையில்,வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு முன்பாகவுள்ள வீதிக்கு இவர் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த மின்சார வயரில் தண்ணீர் பட்ட நிலையில் இவர் மின் தாக்குதலுக்கு உள்ளானார். பிரேத பரிசோதனைக்காக சடலம் ஊறணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். - http://www.tami…

    • 0 replies
    • 233 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.