ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 20 SEP, 2024 | 04:50 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பன் பிரதேச வைத்தியசாலையானது பிரதேச வைத்தியசாலை தரம் இரண்டு ஆகும். இங்கு இரண்டு வைத்தியர்கள் பகலில் கடமையில் உள்ளனர். ஆனால் இரவு வேளைகளில் வைத்தியர்கள் எவரும் கடமையாற்றுவதில்லை. இரவு வேளைகளில் வைத்தியசாலைக்கு அவசர நோயாளர்கள் செல்லும் போது நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவது வழமையாகும். இந்நிலையில், நேற்றைய தினம் 19/09/2024 அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு நாக…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
மீனவ மக்களை மூச்சுவிட வைத்தவர் ரணில்; நன்றிக்காக வாக்களிப்போம் - மீனவ அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்! இந்திய எல்லை தாண்டிய மீனவர்களினால் அழிக்கப்பட்டு வந்த எமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருபவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக ஆட்சிப்பீடம் ஏற்ற வேண்டும் என யாழ். மாவட்ட கடற்தொழில் சங்கங்கள் கூட்டாக அழைப்புவிடுத்தன. புதன்கிழமை யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்ஃ எமது மீனவர்கள் இந்திய எல்லை தாண்டிய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடியினால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இவ்விடையம் இன்று நேற்று ஆரம்பித்த விடையம் அல்ல நாங்க…
-
- 0 replies
- 382 views
-
-
தமிழ்ப் பொதுவேட்பாளரைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் காரணம் வெளிப்படையானது. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிகழுகின்ற நிலையில் அவர்களுக்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் இடையூறாக இருக்கிறார். ஆனால் தமிழ்த் தேசியம் பேசுகின்ற சிலரும் தமிழ்ப் பொதுவேட்பாளர் மீது வசைபாடுகின்றனர். யானை பார்த்த அந்தகர்களைப் போன்று, தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதன் தார்ப்பரியங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாத அரசியல் அந்தகர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து இணுவில் அண்ணா சனசமூகநில…
-
- 2 replies
- 510 views
-
-
45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 நாட்டுப்படகு மீனவர்கள், 10 விசைப்படகு மீனவர்கள் என 45 தமிழக மீனவர்களுக்கு மொத்தம் 10 கோடி ரூபா அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதியன்று கைது செய்தனர். அவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் முற்படுத்தியபோது நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்…
-
-
- 5 replies
- 497 views
-
-
வல்லிபுர ஆழ்வார் தீர்த்தக்கடலில் காணாமல் போனவரை தேடும் பணி தீவிரம்! துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தத்தில் கடலில் காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞரை தேடும் முயற்சி தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் அவர் தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் கடலில் நீராடிய அம்பனைச் சேர்ந்த கந்தசாமி வினோகரன் (வயது-54) என்ற குடும்பத் தலைவர் உயிரிழந்தார். அன்றைய தினம் தம்பு வீதி, நுணாவில் சாவகச்சேரியைச் சேர்ந்த தயாசீலன் வைஷ்ணவன் (வயது -28) என்பவர் தாயாருடன் ஆலயத்துக்கு வருகை தந்த நிலையில் தனது உடமைகளை தயாரிடம் ஒப்படைத்துவிட்டு கடலில் நீராட சென்ற நிலையில் …
-
- 2 replies
- 586 views
-
-
20 Sep, 2024 | 12:02 PM லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என லெபனானிற்கான இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் பேஜர்கள் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆயிரக்கணக்கில் வெடித்துசிதறிய சம்பவத்தின் பின்னர் லெபனானில் உள்ள இலங்கையர்களிற்கு இலங்கை தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளை பொதுநிகழ்வுகளை நீண்டதூர பயணங்களை தற்காலிகமாக தவிர்க்கவேண்டும் என இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இக்காலப்பகுதியில் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதை தற்காலிகமாக தவிர்க்குமாறும் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளத…
-
- 0 replies
- 290 views
-
-
Published By: DIGITAL DESK 3 20 SEP, 2024 | 11:23 AM யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சகோதரியான இரண்டு மாத குழந்தையின் தாயாரும் உயிர் மாய்க்க முயன்ற நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/194165
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 SEP, 2024 | 11:05 AM யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை வைத்தியசாலை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற வேளை ஊரவர்கள் மடக்கி பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை கணவன் - மனைவி இருவரும் சுன்னாகம் பகுதியிலும் கடந்த வாரம் நபர் ஒருவருடைய சங்கிலியை அறுத்ததாகவும், அதனை யாழ். நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்னர். விசாரணை…
-
- 0 replies
- 890 views
- 1 follower
-
-
சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று வியாழக்கிழமை (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு வியாழக்கிழமை (19) உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற ஆளுநர், படகை பார்வையிட்டார். இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது 52 மில்லியன் ரூபாய் செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமது தீவில் நீண்டகாலமாக காணப்பட்ட போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில், ஆளுநருக்கு நெடுந்தீவு மக்கள் நன்றியை …
-
- 0 replies
- 903 views
- 1 follower
-
-
எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்? September 19, 2024 தேர்தல் பரப்புரைகள் நிறைவுறுகின்றன. இன்னும் மூன்று தினங்களில் நாட்டின் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். தேர்தல் முடிவுகள் ஒன்றில் சாதாரணமான ஒன்றாக இருக்கலாம் அல்லது ஒரு வரலாற்று மாற்றமாக இருக்கலாம். எது நடப்பினும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பில் எந்தவோர் அதிசயமும் நடந்துவிடப் போவதில்லை. எப்போதும் போல, தமிழரின் வாழ்வு வழமைபோல் உப்புச்சப்பு இல்லாத நிலைமை என்று சொல்லக்கூடிய நிலையிலேயே தொடரப்போகின்றது. இந்த இடத்தில் எழும் கேள்வி – தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கும் வாக்களித்தால் என்ன அதிசயம் நிக…
-
-
- 15 replies
- 983 views
- 1 follower
-
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று (20) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.05 இற்கு Emirates விமானமான EK-649 இல் துபாய் நோக்கி புறப்பட்டதாக விமான நிலைய தவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள “கோல்ட் ரூட்” முனையத்தை பயன்படுத்துவதற்கும் அவர் 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், பசில் ராஜபக்ச துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, …
-
-
- 28 replies
- 1.8k views
- 2 followers
-
-
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த அனுமதிக்க கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டத்தரணி மணிவண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் திலீபனின் நினைவிடத்திற்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில்,இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன் போது சட்டத்தரணி மணிவண்ணன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சியில் உள்ள வழக்கொன்றுக்காக சென்றதால் இந்த வழக்கில் அவரால் கலந்து கொள்ள முடியவி…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
வட மாகாணத்தில் 32 ஆயிரம் வீடுகளை நிர்மானிப்பதற்கான நிதி மூலத்திற்கு அங்கீகாரம்! வடக்கு மாகாணத்தில் சன் பவர் குழுமத்தினால் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 32 ஆயிரம் வீடுகளுக்கான நிதி மூலத்திற்குரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட வங்கி ஒன்றின் ஊடாக இந்த திட்டத்திற்கான நிதி வழங்கப்படவுள்ளது. தலா 50 இலட்சம் ரூபா செலவில் முற்றுமுழுதாக இலவசமாக பயனாளர்களுக்கு இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள சன் பவர் குழுமத்தினால் சுமார் நான்காயிரம் ஏக்கர் காணியில் சூரிய மின்கல பூங்கா (Solar Park) நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான முழுமையான காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. இதேவேளை சர்வதேச நாணய நி…
-
- 2 replies
- 364 views
-
-
Published By: DIGITAL DESK 7 19 SEP, 2024 | 04:14 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்துவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமது குடும்பத்தை கருத்திற் கொண்டு அவதானத்துடன் செயற்படுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாகவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். போலிச் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்காதீர்கள். எதிர்வரும் 22ஆம் திகதிக்குள் உத்தியோகபூ…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
Published By: VISHNU 19 SEP, 2024 | 08:26 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி சுமார் 17.5 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வர்த்தகக் கடன்வழங்குனர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சீன அபிவிருத்தி வங்கியுடன் 3.3 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மறுசீரமைப்பதற்கான இணக்கப்பாடு இலங்கையால் எட்டப்பட்டுள்ள நிலையில், சீன எக்ஸிம் வங்கி, உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு, வர்த்தகக் கடன்வழங்குனர்கள், சர்வதேச பிணைமுறிதாரர்கள் ஆகியோருடன் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் மூலம் இலங்கையால் சுமார் 17 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மறுசீரமை…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
ஒன்று கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டால் கைது-தேர்தல் ஆணைக்குழு! ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு பின்னர் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறு ஒன்றுக்கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டால் அவர்களை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது மேலும் அவசர நிலைமைகளில் முப்படையினர் அழைக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1400148
-
- 0 replies
- 267 views
-
-
ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும்-பிரதிப் பொலிஸ் மா அதிபர்! ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நேர்ந்தால், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும் என்றும் பொலிஸாருக்கோ பாதுகாப்பு பிரிவினருக்கோ அதுதொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் 63,000ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். htt…
-
- 0 replies
- 144 views
-
-
இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி! 18 SEP, 2024 | 05:14 PM (எம்.மனோசித்ரா) வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனேயே இருக்கின்றனர். நாட்டைக் கட்டியெழுப்பிய தலைவருக்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பம்பலப்பிட்டியில் இன்று புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை ம…
-
- 2 replies
- 250 views
- 1 follower
-
-
18 SEP, 2024 | 07:38 PM (எம்.நியூட்டன்) காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (18) நடைபெற்றது. உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு சீமெந்து தயாரித்து பொதி செய்து உள்நாட்டு தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலைக்கான முதலீட்டை மேற்கொள்ளவுள்ள ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆளுநரிடம் தெரிவித்தனர். இந்திய முதலீட்டில் மேற்கொள்ளவுள்ள சீமெந்து தொழிற்சாலையில் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும், இதனூடாக உள…
-
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக குற்றஞ்சாட்டிய மூத்த போராளி இராகவன் தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி அல்ல அது கூட்டு களவு என்றார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொது வேட்பாளர் தரப்பைச் சேர்ந்தவர்கள் குறுகிய நோக்கில் இனவாதத்தை பேசி தமது எதிர்கால அரசியலுக்கு திட்டமிடுகின்றனர். இன்று புலம்பெயர் நாடுகளில் செல்வ செழிப்போடு வாழ்பவர்கள் விடுதலைப் போராட்டத்திற்காக பணம் தாருங்கள் என புலம்பெயர் தமிழ் மக்களிடம் பணத்தைப் பெற்று அதனை கையகப்படுத்தி உள்ளனர். அவர்கள…
-
- 2 replies
- 599 views
-
-
தென்னிலங்கை அரசியல்வாதிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வரும் தமிழ் அரசியல்வாதிகள் ஆளுநர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் தமிழ் மக்களை விலை பேசி விட முடியாது என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். வட்டுக்கோட்டை தொகுதி கிளை நேற்றையதினம்(17) ஏற்பாடு செய்த பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு தேர்தல்கள் வருகிற பொழுது நாங்கள் சொல்லுகின்ற வார்த்தைகள் தேர்தல் முடிவுற்றதும் எங்களுக்கு ஒரு பயனையும் தரவில்லை என 2009 பின் பல தடவைகள் கூறியிருக்கிறோம். காரணம் நாங்கள் ஆயுதம் ஏந்தி …
-
-
- 5 replies
- 458 views
- 1 follower
-
-
Published By: VISHNU 18 SEP, 2024 | 08:06 PM வவுனியா ஓமந்தை பகுதியில் புதன்கிழமை (18) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்…. ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இருவர் ஓமந்தை எரிபொருள் நிரப்புநிலையத்திற்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியில் நின்ற ஒருவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சம்ப…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களினுள்ளும் வாக்கெண்ணும் நிலையங்களிலுள்ளும் தடைவிதிக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் இன்றையதினம்(18) விசேட ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாக்கெடுப்பு நிலையங்களினுள்ளும் வாக்கெண்ணும் நிலையங்களினுள்ளும் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதும், அவ்வாறான நடவடிக்கைகளை தவிர்ந்துகொள்வது அத்தியாவசியமானது என்பதும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுக்கும் வலியுறுத்தப்படுகிறது. கையடக்கத் தொலைபேசிகளைப் பாவித்தல் நிழற்படமெடுத்தல் வீடியோ செய்தல் ஆயுதங்களை தம் வசம் வைத்திருத்தல் புகைபிடித்…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி adminSeptember 18, 2024 சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த 15 விரிவுரையாளர்களை விமர்சித்து யாழ் பல்கலை வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர்களின் செயலை விமர்சித்து இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/206845/
-
-
- 9 replies
- 826 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ரணிலுக்கு ஆதரவு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் வேட்பாளர் அரியநேத்திரத்துக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், சுமந்திரன் தலைமையிலான மற்றைய தரப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவினை வழங்கியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இவரது இந்த அறிவிப்பின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது மூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ளமை தமிழ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannew…
-
- 0 replies
- 158 views
-