Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போட்டியால் பொலிஸ் நிலையம் சென்ற பேருந்துகள் யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தும் வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் முந்திச் செல்வதில் ஏற்பட்ட போட்டியால் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் செல்லும் பயணிகள் பேருந்து மாலை 4 மணிக்கு யாழ்.பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. அதேபோல பிற்பகல் 3.50 மணிக்கு தனியார் பேருந்து வவுனியா நோக்கிச் செல்ல வேண்டும். எனினும் தாமதமாகியே சென்றிருந்தது. எனினும் ஏ9 வீதி நாவற்குழி பாலத்தில் குறித்த இரண்டு பேருந்து சாரதிகளுக்கும் இடையில…

  2. மார்ச் மாதமே அறிக்கையை வெளியிடவும்; வடக்கு முதல்வர் இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான அறிக்கை காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் வெளிவரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிக்கை தாக்கல் செய்வதை 6 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளார். இந்த அறிக்கையில் காலம் தாழ்த்தாமல் உரியதினத்தில் அதாவது மார்ச் மாதம் 28 ஆம் திகதியே வெளியிடவேண்டும் …

  3. இந்தியாவில் இருந்தே 80 சதவீத மருந்துகள் கிடைக்கின்றன;ராஜித இலங்கையில் பாவனையிலுள்ள மருந்துகளில் 80 சதவீதமான மருந்துகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையின் மருந்து தேவைகளில் 80 வீதமானவை இந்தியாவிலிருந்தே பெறப்படுகிறன. தெற்காசியாவில் மலேரியா இல்லாத நாடாக முதலில் சிங்கப்பூர் இனங்காணப்பட்டது. தற்போது தெற்காசியாவிலே மலேரியா இல்லாத இரண்டாவது நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் இரண்ட…

  4. தனியார் துறையின் சம்பளம் 15- 35 வீதத்தால் அதிகரிப்பு தனியார் துறைகளின் சம்பளத்தை 15 -35 சதவீதமாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை இணக்கம் தெரிவித்துள்ளது. சம்பள நிர்ணய சபை , தொழிற்சங்கங்கள் என்பவற்றுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கமைய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 10,000 ரூபாவாகவும் ஏனைய நிறுவனங்களின் வருமானத்திற்கமைய அவர்களின் சம்பளம் 15 - 35 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் சம்பள நிர்ணய சபையின் கீழ் வராத ஹோட்டல்கள் க…

  5. முல்லையில் 2500 பேருக்கு அடையாள அட்டை இல்லை ; கபே முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர் அட்டை உள்ளவர்களில் 2500 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டையில்லை என கபே அமைப்பு சுட்டுக்காட்டியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு, கரைத்துறைபற்று இரு பிரதேசங்களிலும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. எனினும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 2500 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு முன்னர் நடமாடும் சேவை மூலம் குறித்த 2500 பேருக்கும் தேசிய அடையாள அட்டை பெற்றுதருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தேர்தலுக்கு முன்னர் குறித்த பிரதேசத…

  6. வெலிக்கடை சூட்டுச்சம்பவம்; விசாரணைக்கு குழு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியசரசர் விமல் நம்புவாசம் தலைமையில், அசோக வியஜதிலக்க (ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர்), ஓய்வு பெற்ற நிர்வாக உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.கே.லியனே ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்தக் குழு, இச்சம்பவம் தொடர்பிலான ஆதாரங்கள் அல்லது ஏதேனும் தகவல்களை பொதுமக்கள் வழங்கு முன்வருவார்களாயின், அதனை வரவ…

  7. உதய கம்பன்பில சவாலை தவறுதலாக புரிந்து கொண்டுள்ளார் ; அசாத் சாலி அரசியலிருந்து விலுமாறும் அவ்வாறு விலகாவிட்டால் நான் நடமாடும் பிணம் என்று உதய கம்பன்பில கூறியிருந்தார்.இருப்பினும் நான் அரசியலிருந்து விலகப் போவதில்லை என மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நடைபெற்ற பொதுக் கூடத்திற்கு முடியும் என்றால் 5 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி காட்டுங்கள் என்று விமல் வீரவன்சவுக்கு மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில் 'மஹிந்தவுடன் நாட்டை வெல்வோம்" எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது கூட்டமொன்று நுகேகொட பகுதியில் நேற்று நடைபெற்றது. இதன் போது உர…

  8. பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளதாத அமைச்சர்கள் மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்த அக்கரப்பத்தனை, டொரிங்டன் தோட்டத்தை சேர்ந்த 98 பேருக்கும் இதுவரையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என பாதிப்பக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதுவரையில் அமைச்சர்களான திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம் ஆகியோர் இதுவரையில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்து பார்வையிடவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் கடந்த வாரம் பெய்த கடும் மழையின் காரணமாக டொரிங்டன் தோட்டத்தில் இரண்டாம் இலக்கம் கொண்ட குடியிருப்பு பகுதியில் உள்ள 23 வீடுகளில் வாழ்ந்து வந்த 98 பேர் அப்பகுதியில் மண்சரிவு ஏற்ப்படும் அபாயம் காரணமாக தோட்ட பிரசவவிடுதியிலும் த…

  9. கே.பிக்கு தொடர்ந்தும் தடை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் 26 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=299933880919594436#sthash.fUM7L3DS.dpuf

  10. திருப்பதியில் மைத்திரிக்கு சங்கடம்: திறக்க மறுத்தது கருவறை தங்கக் கதவு – பூட்டை உடைத்து தரிசனம் FEB 19, 2015by கார்வண்ணன்in செய்திகள் திருப்பதி ஆலயத்தில் நேற்று அதிகாலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழிபாடு நடத்தச் சென்ற போது, ஏழுமலையானின் கருவறை தங்கக் கதவு திறக்கப்பட முடியாமல் பூட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் தங்கக் கதவின் பூட்டை உடைத்து சிறிலங்கா அதிபரை வழிபாடு நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் இதுபோன்றதொரு சம்பவம் இதற்கும் முன் நிகழ்ந்திருக்கவில்லை என்று ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை வழிபாடு செய்வதற்காக நேற்று அதிகாலையில் மைத்திரிபால சிறிசேன தனது மனைவியுடன் சென…

    • 2 replies
    • 2.8k views
  11. நான்கு இலங்கையர்களை திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி அவுஸ்திரேலிய கோகஸ் தீவு கடற்பரப்பில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்ட இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இலங்கைக்கு திருப்பு அனுப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் பீட்டர் டுடோன் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்தே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் பீட்டர் டுடோன் குறிப்பிட்…

  12. இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான அறிக்கை காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளிவரவேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சையத் அல் ஹுசைன் அறிக்கை தாக்கல் செய்வதை 6 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளார். இந்த அறிக்கையில் காலம் தாழ்த்தாமல் உரியதினத்தில் அதாவது மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடவ…

  13. யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் வடமாகாண அமைச்சர்களும் பங்கேற்பதாக சேஞ்ச் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்நிகழ்ச்சியில் வடமாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் என முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் சேஞ்ச் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜியாஉல் ஹசன் ரவூப்புக்கு கடிதமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சேஞ்ச் நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள நிகழ்வொன்றில், மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மீன்பிடி அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோரு…

  14. முன்னைய அரசின் உடன்பாட்டை மதிக்க வேண்டியது சிறிலங்கா அரசின் கடமை – சீனா FEB 19, 2015 | 2:07by கார்வண்ணன்in செய்திகள் இன்னொரு நாட்டுடன் முன்னைய அரசாங்கம், செய்து கொண்ட இருதரப்பு உடன்பாட்டை மதிக்க வேண்டியது ஜனநாயக நாடு ஒன்றின் கடப்பாடு என்று சீனா தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக, புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்தப் போவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம், கருத்து வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரி ஒருவர், “கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்து விசாரணை நடத்தும் இலங்கை அரசாங்கத்தின் முடிவுக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், இன்னொர…

  15. துறைமுக நகரத் திட்டத்தினால் சீனாவுடனான உறவை முறிக்க முடியாது – நாடாளுமன்றில் ரணில் FEB 19, 2015 | 1:26by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் 1.5 பில்லியன் டொலர் செலவில் கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்மாணிக்க சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு, அமைச்சரவை அனுமதியின்றி, சட்ட நடைமுறைகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பா அவர், நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். துறைமுக நகரத் திட்டம் தொடர்பான எல்லா உடன்பாடுகளும், வெளிப்படைத்தன்மையின்றி, பல சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல் முன்னெடுக்கப்பட்டுள்ளது…

  16. A rally organized by several political parties and held in Nugegoda supporting former President Mahinda Rajapaksa draws a large crowd as the former President delivers a message. ரணில் அமெரிக்க இந்தியக் கனவுகள் பொய்க்கும் போல் உள்ளது.

    • 2 replies
    • 912 views
  17. இந்தியாவின் பிடிக்குள் சிக்காமல் நழுவினார் மைத்திரி FEB 18, 2015 | 0:50by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், சீனாவையோ, இந்தியாவையோ சார்ந்திருக்கப் போவதில்லை என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக, கடந்த 15ம் நாள் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம், இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களின் போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து இந்தியாவிடம் திட்டவட்டமான சி…

  18. மதிப்புக்குரிய திருவாளர்கள் சம்பந்தன் அவர்களுக்கு, நான் ஒரு நாவல்-சிறுகதை-நாடக எழுத்தாளன், அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய’அமிர்தலிங்கம் சகாப்தம்”, ”சத்தியங்களின் சாட்சியம்” மற்றும் தமிழ் அரசுக் கட்சியை வளர்த்தெடுத்த கோப்பாய்க் கோமான் வன்னியசிங்கம் அவர்கள் பற்றிய ”சாணக்கியன்” நூல்களின் ஆசிரியர். தமிழ் அரசுக்கட்சி யாழ்ப்பாணத்தில் கைலாய பிள்ளையார் கோவில் வீதியில் 1949இல் முதலாவது கூட்டத்தை வைக்க முடியாமல், தமிழ்க் காங்கிரஸ் குண்டர்கள் அடக்குமுறை கையாண்ட வேளை, மேடையில் நின்றவன். இன்னும் ஏராளம் சொல்லாம். அன்று அக் கூட்டத்தில் பங்குகொண்ட தமிழரசுக் கட்சியினரில் என்னைவிட எஞ்சியிருப்பவர் சிலர்தான். தமிழ் அரசுக் கட்சியில் இன்றுள்ள தலைமைகளில் தங்கள் சாதுரிய மிக்க பங்களிப்பைப் பெரிது…

  19. சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒத்திவைத்துள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், மார்ச் மாத அமர்வில் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கையை வெளியிடுவதை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது தொடர்பாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில்- பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, காணாமற்போதல், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் உட்பட இலங்கையில் நட…

  20. தற்போதைய ஆட்சியின் கீழ் வடக்கில் எந்த நேரத்திலும் துப்பாக்கிகள் மீண்டும் வெடிக்கலாம் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்க தெரிவித்தார். நுகேகொடையில் இன்று நடைபெறும் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரைப்பில் மீன்பிடிக்கின்றனர். இருந்தாலும் இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கைதுசெய்வதில்லை. பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கரில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பவுள்ள அகதிகள் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களில் அகதிகள் மாத்திரம் வருவதில்லை இந்திய றோவினால் இந்…

  21. இந்திய – சிறிலங்கா அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? FEB 18, 2015 | 8:22by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்காவில் அதிகரித்துள்ள சீனாவின் செல்வாக்கை இல்லாதொழித்தல் என்பது குறுகிய காலத்தில் சிறிலங்காவைப் பொறுத்தளவில் இலகுவான காரியமல்ல. இவ்வாறு firstpost.com இணையத்தளத்தில் ராஜீவ் சர்மா எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்ட போது, திங்களன்று இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இந்தியாவில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடானது நரேந்திர மோடி அரசாங்கத்தின் முதலாவது பாரிய இராஜ…

  22. பிரபாகரனின் செவ்வியுடன் வெளியான புரொன்ட்லைன் இதழ் கொழும்பில் தடுத்து வைப்பு FEB 18, 2015 | 5:08by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்திருந்த, இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகை சிறிலங்காவில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தி ஹிந்து நாளிதழ் குழுமத்தினால் வெளியிடப்படும், புரொன்ட்லைன் சஞ்சிகையில், 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வி ஒன்று வெளியாகியிருந்தது. அந்தச் செவ்வியை தற்போது புரொன்ட்லைன் மறுபிரசுரம் செய்துள்ளது. புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியுடன் வெளியாகியுள்ள புரொன்ட்லைன் சஞ்சிகையை, இலங்கையில் விற்பனைக்காக விடுவிக்க சிறிலங்கா சுங்…

  23. சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணை கவனமாக மதிப்பீடு செய்யப்படும்- ஐ.நா FEB 18, 2015 | 4:41by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் பொறுப்புக்கூறும் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா கவனமாக மதிப்பீடு செய்யும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹன் ஹக் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “புதிய அரசாங்கம் பொறுப்புக்கூறும் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது குறித்து ஐ.நா பொதுச்செயலர் அறிவார். அதன் முன்னேற்றங்கள் குறித்து கவனமாக மதிப்பீடு செய்யப்படும். கடந்த வெள்ளிக்கிழமை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தி…

  24. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஓர் கட்சியாக செயற்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பதில் முக்கியமான பங்களிப்பு வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் எவ்வாறான பங்கினை வகிப்பது என்பது பற்றி இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறான பங்களிப்பினை வழங்குவது என்பது பற்றி கட்சி இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்காத போதிலும், அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் …

    • 11 replies
    • 890 views
  25. ஜெரா ஐ.நாவின் விசாரணைகளைத் தள்ளிப்போடுதல் – இப்படியொரு முடிவுதான் இந்த முறை வருமென்பதை ஏற்கனவே நண்பர்களுக்குள் கதைத்திருந்தோம். சமூக வலைதளங்களிலும் இதுதொடர்பிலான பதிவிடல்களை மேற்கொண்டோம். வாதிட்டோம், சொற் போரிட்டோம். ஆனால் வென்றது, இம்முறையும் இலங்கை அரசுதான். இந்தத் தீர்மானப் பிற்போடுதல் குறித்து எங்களைப் போன்ற பலரும் ஏற்கனவே அறிந்திருந்தாலும், உத்தியோகபூர்வ முடிவு நேற்று அறிவிக்கப்பட்டதும் கவலையையும், எங்கள் அரசியலின் இயலாமையையும் எண்ணி விசனம் கொண்டோம். யாரோடு நோவது, எல்லோருமே நொந்தவர்கள்தானே, எனவேதான் நொந்தவர்களிலும், மிகவும் நொந்தவர்கள் இந்தத் தள்ளிப்போடல் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை பதிவுசெய்ய முடிவெடுத்தேன். அதிலும் சர்வதேசத்தை அதிகம் நம்பியிருக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.