ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு; குற்றம் புரிந்தவர்கள் தப்பிக்க வழி செய்யும்: சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்த விசாணையின் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையில் வெளியிடுவதை தாமதப்படுத்தினால், அது குற்றவாளிகளை தப்பிக்க வழி செய்யும் சந்தர்ப்பத்தை வழங்கும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இவ்வாறான முடிவுக்கு இலங்கை இடமளிக்கக் கூடாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை ஆறு மாத காலத்துக்கு ஒத்திவைப்பதற்கு ஐக்கிய நாடுகளின் உரிமைகள் ஆணையாளர் ச…
-
- 0 replies
- 363 views
-
-
சிறிலங்கா அதிபர் புத்தகயவில் வழிபாடு- இன்று காலை நாடு திரும்புவார் FEB 18, 2015by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று புத்தகயாவுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பிகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவில் உள்ள 2500 ஆண்டுகள் பழைமையான மகாபோதி மரத்தடியில் சுமார் 15 நிமிடங்கள் விழிபாட்டில் ஈடுபட்டார். மைத்திரிபால சிறிசேனவுடன் அவரது மனைவி உள்ளிட்ட 24 பேர் புத்தகயாவுக்குச் சென்றிருந்தனர். அங்கு சுமார் ஒரு மணிநேரம் வழிபாடுகளை செய்த அவர், பின்னர், அங்குள்ள பௌத்த துறவிகளுடன் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடினார். இதனை முன்னிட்டு புத்தகயவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. …
-
- 2 replies
- 352 views
-
-
இனப்படுகொலையைக் கண்டித்து பன்னாட்டு சுதந்திர விசாரணைக்கு, இலங்கை ஆட்படுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை. கடந்த வாரம் லண்டனில் தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி, இலங்கையில் நடந்த மாபெரும் இனப்படுகொலையை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த இறுதிக்கட்ட போரின் கடைசி வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 70,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தாமதமாக ஒப்புக்கொண்டிருக்கிறது ஐ.நா அமைப்பு. பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை இராணுவம் பொழிந்த குண்ட…
-
- 0 replies
- 394 views
-
-
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் கடந்த 9ஆம் திகதி கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் சட்டத்தரணி கே.துரைராஜசிங்கமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் செயலாளர் அமைச்சர் ஹசன் அலியும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ§க்கு முதலமைச்சர் பதவி கிடைப்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி, கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுக்களையும் பிரதி தவிசாளர் ஒருவரையும் பெற்றுக்கொள்வது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை செய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்…
-
- 1 reply
- 439 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு குற்றப்புலனாய்பிரிவினர் சென்றிருக்க கூடாது அவரை தமது அலுலகத்திற்கு அழைத்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் ரவிகருணநாயக்க தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவிற்கு என விசேட சட்டப்பிரிவுகள் உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கோத்தபாயவிற்கு எதிராக போதிய ஆதாரங்கள்; இருந்தால் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை தமது அலுவலகத்திற்கு அழைத்திருக்க வேண்டும். அவர் தற்போது முக்கிய பிரமுகர் இல்லை அதனால் அவர்கள் அவரின் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. புதிய அரசாங்கத்தில் சட்டத்தின்கீழ் அனைவரும் சமமானவர்கள், எவருக்கும் விசேட சலுகையில்லை. என அவர் க…
-
- 1 reply
- 461 views
-
-
கழிவகற்றும் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பிரணவநாதன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாநகரசபையினால் அகற்றப்படும் திண்மக் கழிவுகள் இதுவரை கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகர சபை கழிவகற்றல் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இந்த கழிவு அகற்றும் முறை மீண்டும் ஆரம்பிக்கும் வரை மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் அரச, அரச …
-
- 2 replies
- 566 views
-
-
வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் கழிவு எண்ணெய் கசிவு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 10 கிணறுகளிலிருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளை பரிசோதனைகளுக்குட்படுத்திய போது, ஒரு கிணற்றில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவு உறுதிப்படுத்தப்பட்ட கிணறு அமைந்துள்ள ஜே - 129 கிராமஅலுவலர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தெரிவித்தது. மானிப்பாய், சுதுமலை, மாசியப்பிட்டி ஆகிய இடங்களிலுள்ள கிணறுகளின் நீர் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பட்டது ஒரு கிணற்றில் எண்ணெய் கசிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில், புதன்கிழமை (18) நடைபெறவுள…
-
- 0 replies
- 344 views
-
-
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் தரை – கடற்தோற்றத்தை மீளவடிவமைக்கும் சீனாவின் மூலோபாய நகர்வு FEB 15, 2015 | 9:52by நித்தியபாரதிin கட்டுரைகள் இந்திய மாக்கடலின் கரையோரம் முழுவதிலும் பாதுகாப்பான வலைப்பின்னலை உருவாக்கும் நோக்குடன் சீனாவால் மேற்கொள்ளப்படும் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கமானது தனது ஒப்புதலை வழங்கியதானது அதிர்ச்சியளிக்கும் விடயமாகும். இவ்வாறு foreignpolicy இணையத்தளத்தில், KEITH JOHNSON எழுதியுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது பல பில்லியன் டொலர் பெறுமதியான சீனத் துறைமுகத் திட்டத்தை மீளவும் தொடர்வதற்கான ஆதரவை வழங்குவதென அதிர்ச்சி …
-
- 0 replies
- 391 views
-
-
பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாம் FEB 18, 2015 | 1:47by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் எல்லா மக்களுக்கும் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம், மற்றும் மனிதஉரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்தும் கடப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் கீத் ஹாப்பர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கையைப் பிற்போட ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள முடிவை வரவேற்று கீத் ஹாப்பர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “சிறிலங்கா தொடர்பான அறிக்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள ஒருமித்த முடிவை அமெரிக்கா ஆதரிக்கிறது. மு…
-
- 0 replies
- 367 views
-
-
வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் சம்பந்தர், சுமந்திரன் ஆகியோரை கைவிட்டு கூட்டமைப்பினை பதிவு செய்யும் முயற்சிகள் மத்தியில் அவற்றிற்கு எதிரான காய்நகர்த்தல்களை இந்தியா ஆரம்பித்துள்ளது.பதிவு இணைய செய்தி இது தொடர்பில் கண்டியில் உள்ள துணைதூதுரகத்தில் இரகசிய மாநாடொன்று நடத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஈபிடிபி தலைமை மற்றும் கூட்டணியின் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எவ் வரதர் அணியினருடன் புளொட் சித்தார்த்தன் ஆகியோர் இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. மாநாட்டில் யாழ்.துணைத் தூதுவராலயத்தைச் சேர்ந்த இரண்டு றோ அதிகாரிகளும் அதே போன்று கொழும்பு தலைமையகத்தை சேர்ந்த றோ அதிகாரிகளும் பங்கெடுத்ததாகத் தெரியவருகின்றது. கூட்டமைப்பினுள் ஆனந்தசங்கரி…
-
- 11 replies
- 1.3k views
-
-
சர்வதேச அனுசரணையுடனான உள்ளூர் விசாரணையை ஏற்றுக்கொள்வதென்பது கூட்டமைப்பின் முடிவல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். "ஐ.நா.விசாரணையாளர்கள் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம் எனவும் ஐ.நா. மனிதவுரிமை பேரவையின் மேற்பார்வை யின் கீழ் உள்ளக விசாரணை ஒன்று நடைபெறுமாயின் அவ்விசாரணையை நாம் வரவேற்போம்' எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்திற்கு கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்…
-
- 8 replies
- 719 views
-
-
இலங்கையில் இந்தியா, அணு உலையை அமைக்காது என்று இந்திய-இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது நேற்று இரண்டு நாடுகளுக்கு இடையிலும் அணுசக்தி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன்படி, இலங்கையர்களுக்கு மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளில் அணு தொடர்பான பயிற்சிகளை இந்தியா வழங்கவுள்ளது. இந்த பயிற்சிகள் இந்தியாவில் வைத்தே வழங்கப்படவுள்ளன. எனினும் இதன்போது இந்தியாவின் கூடங்குளம், கல்பாக்கம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளமையை போன்று இலங்கையிலும் அணுஉலைகள் அமைக்கப்படாது என்று இந்தியா, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாடுகளுக்கு இடையிலும் உடன்படிக்கை இல்லாதபோதும் இந்தியா…
-
- 3 replies
- 511 views
-
-
காலதாமதம் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான காலஅவகாசமாக அமையக் கூடாது – அனைத்துலக மன்னிப்புச் சபை FEB 17, 2015 | 7:07by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்த அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போட ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள முடிவு, அத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கு அனுமதிப்பதாக அமையக் கூடாது என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ரிச்சர்ட் பெனெட் இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையில், ‘சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மை மற்றும் நீதிக்காக காத்திருக்கின்றனர். பாலியல் வதைகள் உள்ளிட்ட சித்திரவதைகளில் இருந்து தப்பிய…
-
- 0 replies
- 337 views
-
-
ஐ.நா அறிக்கையை வெளியிடுவதில் பிரித்தானியா உறுதி FEB 17, 2015 | 12:19by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான, ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதில், பிரித்தானியா உறுதியாக இருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார். ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுவது செப்ரெம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அறிக்கையை வெளியிடுவதில் பிரித்தானியா இன்னமும் உறுதியாக உள்ளது. சிறிலங்காவில் நடந்த சம்பவங்கள் குறித்த உண்மை கண்டறியப்படுவது, நல்லிணக்கத்தை நோக்கிய முக்கிய நகர்வாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். http://www.…
-
- 0 replies
- 437 views
-
-
சிறிலங்கா – இந்திய உறவு நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சியாம் FEB 17, 2015 | 13:31by கார்வண்ணன்in செய்திகள் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பெண் பேச்சாளர், ஹுவா சுன்யிங்கிடம், சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உள்ளிட்ட உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவும் இந்தியாவும், சீனாவின் மிக முக்கியமான அயல் நாடுகள். அமைதி மற்றும் செழுமைக்கு மூலோபாய ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்கு இந்…
-
- 0 replies
- 396 views
-
-
ஜ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு பிற்போடப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உத்தியோகபூர்வ கருத்துக்கள் இன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com/news/37879/57//d,article_full.aspx
-
- 0 replies
- 365 views
-
-
ராஜபக்சவின் நிகழ்சி நிரல் முடிந்துவிட்டது அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இப்போது, உகலத்திலிருந்து வரும் அழுத்தங்களை மென்மையாக்கும் அணியின் நிகழ்ச்சி நிரல் அரங்கேறியுள்ளது என சென்னையில் இடம்பெற்ற அறிவாயுதம் கருத்தரங்கில் மருத்துவர் எழிலன் அவர்கள் உரையாற்றும் போது கூறியுள்ளார். அவரின் முழுமையான உரை காணொளியில் http://www.pathivu.com/news/37867/57//d,article_full.aspx
-
- 0 replies
- 443 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. இதனை வெளியிட விடாது சிலர் தடுத்துவருவதாக அறிகின்றோம். இவைகுறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.இராஜகுமாரன் பதிவு இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல். http://www.pathivu.com/news/37866/57//d,article_full.aspx
-
- 0 replies
- 269 views
-
-
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவருடனான குழுவினருக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று (16) ராஷ்டிரபதிபவனில் இராபோசன விருந்தளித்து கௌரவித்தார். ராஷ்டிரபதிபவன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இரு நாடுகளின் கலாசார நிகழ்வுகளினால் விருந்து வண்ணம் சேர்க்கப்பட்டது. http://www.tamilmirror.lk/139954
-
- 4 replies
- 673 views
-
-
ஐ. நா விசாரணை ஆறு மாதங்கள் வரை ஒத்திவைப்பதாக அறிவித்தமை இலங்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேரா குறிப்பிட்டுள்ளர். இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் வரை ஒத்தி வைப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐ.நாவின் இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ள வெளிவிவகாரப் பிரதி அமைச்சர், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் பாரிய பிரதிகூலங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார். சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எண்ணம். ஐ…
-
- 8 replies
- 587 views
-
-
நாங்களும் இணக்க அரசியல் தான்; வடக்கு முதல்வர் இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க வேண்டும் என வடக்கு முதல்வர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரின் இன்றைய வடமாகாண விஜயம் எமக்கெல்லாம் ஒரு புதிய உத்தியோகபூர்வ வாழ்க்கைக்கு இடமளிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. உத்தியோகபூவமாக எமக்கிருக்கும் வெற்றிடங்கள், பிரச்சனைகள், தடங்கல்கள் தடைகள், நிதிபற்றாமை பற்றி எல்லாம் ஆங்கிலத்தில் ஏற்கனவே கூற…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள தீர்மானம், தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்டம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐநா மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் புதிய அரசு இந்த விஷயத்தில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்துவதாக உறுதியளித்து , விசா…
-
- 4 replies
- 501 views
-
-
மூளாய் ஐயனார் விளையாட்டுக்கழகம் நடாத்திய 11 பேர் கொண்ட ரி-20 கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் காமாச்சி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது. நேற்று மூளாய் ஐயனார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் போட்டியில் உடுவில் சலஞ்சஸ் அணியும் கொக்குவில் காமாச்சி அணியும் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற உடுவில் சலஞ்சஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 147ஓட்டங்களுக்கு 7விக்கெட்டுக்களை இழந்தது.இதில் கிங்சன் தனக்கென 48 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் காமாச்சிக்கு வெற்றி இலக்காக 148 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.அதன்படி காமாச்சி 17.2ஓவர்கள் நிறைவில் 152 ஓட்டங்களுக்கு 8விக்கெட்டுக்களை பெற்று வெற்றி பெற்றது…
-
- 0 replies
- 444 views
-
-
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை கைது செய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அமைச்சர் அமரதுங்க நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடவுச் சீட்டுக்களில் பிறந்த திகதி உள்ளிட்ட தகவல்களை மாற்றியமைத்து பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. சாதாரண கடவுச்சீட்டு மற்றும் ராஜதந்திர கடவுச்சீட்டுக்களில் பெயர், பிறந்த திகதி உள்ளிட்ட தகவல்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில் பெரும்பா…
-
- 0 replies
- 338 views
-
-
இந்தியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆந்திராவிலுள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரர் தேவஸ்தானத்தை வழிபடவுள்ளார். இன்று காலை இந்திய பீஹார் மாநிலத்திலுள்ள பெளத்தர்களின் புனிதத் தலமான புத்தகயாவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி புத்தகயாவைச் தரிசித்த பின் புத்த பகவான் ஞானம்பெற்ற மஹாபோதி விஹாரைக்கும் செல்லவுள்ளார். அதனையடுத்து திருப்பதிக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் தேவஸ்தானத்திற்கு சென்று அங்கு நடைபெறவுள்ள விஷேட வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளார். அதனையடுத்து நாளை புதன்கிழமை கொச்சின் விமான நிலையத்திலிருந்து அவர் இலங்கைக்குத் திரும்பவுள்ளார். http://seithy.c…
-
- 0 replies
- 223 views
-