ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142801 topics in this forum
-
தியாக தீபத்தின் நினைவேந்தல் adminSeptember 15, 2024 ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், மாவீரர் றொஷானின் தாயார் இரத்தினசிங்கம் பொற்கொடியால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தட…
-
- 3 replies
- 872 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ரணிலுக்கு ஆதரவு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் வேட்பாளர் அரியநேத்திரத்துக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், சுமந்திரன் தலைமையிலான மற்றைய தரப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவினை வழங்கியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இவரது இந்த அறிவிப்பின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது மூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ளமை தமிழ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannew…
-
- 0 replies
- 158 views
-
-
எங்கள் கைகளில் ரத்தம் இல்லை! நாங்கள் அப்பாவிகள்! – நாமல் ராஜபக்ச. ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸதெரிவித்துள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ ‘நாம் ஏனோ தனோவென்று வீதிகளை அமைக்கவில்லை. அதேபோன்று குடியிருப்புகளையும் நிர்மாணிக்கவில்லை. முதலீட்டாளர்களும் கொண்டுவரப்படவில்லை. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டமும் தொலைநோக்கு பார்வையும் எங்களிடம் இருந்தது. செய்யப்படும் ஒவ்வொரு முதலீட்டிற்கும் நாங்கள் பொறுப்பு. வாங்கிய ஒவ்வொரு கடன…
-
-
- 2 replies
- 302 views
-
-
சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்! இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”தமிழ்த் தேசியக் கட்சிகள் சஜித் பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நிலை சிங்கள மக்கள் மத்தியில் சஜித்திற்கான ஆதரவினை குறைக்கும் நடவடிக்கையாகும். சஜித் பிரேமதாச சிங்கள தேசிய வாதத்திற்கு நோ்மையாக …
-
-
- 5 replies
- 616 views
-
-
வாக்காளர்களிடம் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும், நாட்டு மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது. காரணமின்றி வாக்குச் சாவடிகளில் அல்லது அருகில் இருக்க வேண்டாம் என்றும் வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்துள்ளார். வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 18 SEP, 2024 | 08:46 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளமையானது, வடக்கு கிழக்கு மக்களின் என்மீதான ஆதரவுக்கு பாதிப்பாக அமையாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தை ஏற்காத நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் விடுக்க வில்லை என்பதை நினைவில் கொள்ளுமாறு சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகவியலாளர்களை நேற்று செவ்வாய்க்கிழமை (17) சந்தித்த ஜனாதிபதி ரணில் அவர்களின் கே…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் கொழும்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளனர். இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஸ் சந்தியில் இன்று பிற்பகல் 2 ம…
-
- 0 replies
- 163 views
-
-
வவுனியாவில் 9000 தேர்தல் பதாதைகள் நீக்கம். எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் இன்று(18). எனவே இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது அதனடிப்படையில் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் பணிகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் இன்று (18) காலை 8.30 மணிதொடக்கம் இந்த பணிகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான 20ற்கும் மேற…
-
- 0 replies
- 346 views
-
-
1.4 மில்லியன் ரூபா கப்பம் வசூலித்த 4 பொலிஸார் கைது! கொழும்பு 15 இல் உள்ள குடியிருப்பு ஒன்றிற்குள் நுழைந்து அதில் வசிப்பவர்களை அச்சுறுத்தி 1.4 மில்லியன் ரூபாவை கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும், கொழும்பு வடக்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இது தொடர்பான மேலதிக விசாரணையினை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1399894
-
- 0 replies
- 295 views
-
-
17 SEP, 2024 | 08:15 PM (இராஜதுரை ஹஷான்) அரச சொத்துக்களை நாங்கள் மோசடி செய்யவில்லை. குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபித்து உலகில் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தாலும் அதை எதிர்க்கொள்வோம். எம்மீதான குற்றச்சாட்டுக்கள் வெறும் அரசியல் சேறுபூசலாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இரத்தினபுரி நகரில் இன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்கொண்ட சவால்களை இன்றும் எதிர்க் கொள்கிறோம். நாட்டுக்கு …
-
- 1 reply
- 322 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 7 17 Sep, 2024 | 09:02 PM (இராஜதுரை ஹஷான்) மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று இருக்குமாயின் நாமல் ராஜபக்ஷவுக்கு அறிவுரை வழங்க வேண்டும். நாமல் ராஜபக்ஷ போட்டியில் இருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என தொடம்பஹால ராஹூல தேரர் தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தலதா மாளிகை இருந்தால் மாத்திரமே பௌத்த சாசனத்தை பாதுகாக்க முடியும். தலதா மாளிகையின் இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு எம்மால் கைகளை கட்டிக் கொண்டு இருக்க முடியாது. ஒரு சில ஜனாதி…
-
- 0 replies
- 172 views
-
-
ஆபத்தான நிலையில் இருந்து “குணமடையும் நோயாளியை” செப்டம்பர் 21ஆம் திகதி அவசர சிகிச்சையின் போது தகுதியற்ற மருத்துவரின் கவனிப்புக்கு மாற்றி தவறு செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்களை எச்சரித்துள்ளார். நோயாளர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் மருத்துவரின் அனுமதிப்பத்திரத்தை இலங்கை மருத்துவ சபை இரத்து செய்வது போன்று, 2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடமையை கைவிட்ட அரசியல் வாதிகளை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் நெருக்கடியான நிலை அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் மாநாட்டிலேயே இன்று(17.09.2024) இந்த கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார். இதேவேளை, நெருக்கடியான நிலையில் இருந்த பொர…
-
- 1 reply
- 165 views
- 1 follower
-
-
17 Sep, 2024 | 08:19 PM பினாரா போயா தினம் மற்றும் ஶ்ரீமத் அநகாரிக தர்மபால அவர்களின் 160ஆவது பிறந்த தின நினைவுநாளை முன்னிட்டு 2024 செப்டெம்பர் 17 ஆம் திகதி இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கொழும்பிலுள்ள தர்மஜயதன விகாரைக்கு தர்மச்சக்கர முத்திரையுடனான புத்தர் சிலையொன்றை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்கள் கையளித்திருந்ததுடன், இந்நிகழ்வில் இலங்கை பிரதமர் மேன்மைதங்கிய தினேஷ் குணவர்த்தன அவர்களும் பிரசன்னமாகியிருந்தார். நான்கு அடிகள் உயரமும் 330 கிலோ நிறையினையும் கொண்ட இந்தச் சிலையானது இலங்கை பிரதமர் மேன்மைதங்கிய தினேஷ் குணவர்த்தன அவர்களது கோரிக்கைக்கு அமைவாக கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையினால் விசேடமாக வழங்கப்பட்டதாகும…
-
- 1 reply
- 170 views
-
-
Published By: DIGITAL DESK 3 17 SEP, 2024 | 04:56 PM ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். கஞ்சா போதை பொருள் அடங்கிய மூட்டைகளை சட்டவிரோதமாக தமிழகத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கி செல்ல காத்திருந்த போது நடுக்கடலில் படகு பழுதாகி நின்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடுக்கடலில் மீனவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடல் பரப்புக்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர். எனினும் இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமில் வைத்து ம…
-
- 1 reply
- 395 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 17 Sep, 2024 | 04:52 PM தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தான் அவர்களின் பொதுவான இயல்பு என கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் இன்று புதன்கிழமை (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தெளிவாக இருக்கின்றார்கள் .தேர்தல் தொடர்பில் நீண்ட கால அனுபவங்கள் அம்மக்களுக்கு இருக்கின்றது.சரியான திசை வழி நோக்கி அம்மக்கள் அணி திரள்வார்கள…
-
- 5 replies
- 531 views
-
-
16 SEP, 2024 | 05:27 PM பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நாடே எமது நாடு. அதனால் இந்த நாட்டின் எதிர்காலம் இந்த பல்வகைமை கொண்ட மக்கட்குழுக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவினால் மாத்திரமே நிலைத்திருக்கும். அதனால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி உங்களின் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை, மொழியைப் பேசுவதற்கான உரிமையை வழங்குகின்ற ஆட்சியாகும். உங்கள் கலாசார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். "நாடு அநுரவோடு" என்கிற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உ…
-
- 7 replies
- 717 views
- 1 follower
-
-
17 Sep, 2024 | 08:06 PM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சார்ள்ஸ் நிர்மலநாதனை மன்னார் தாழ்வுபாடுவில் உள்ள அவரின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) சந்தித்தார். இதன்போது ஜனாதிபதியை சார்ள்ஸ் நிர்மலநாதன் அன்புடன் வரவேற்றதுடன், சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து சிறு உரையாடலில் ஈடுபட்டனர். இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அகில இலங்கை இளைஞர் அமைப்பின் உப தலைவர் சட்டத்தரணி தினேஷ் தலைமையில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் …
-
- 0 replies
- 152 views
-
-
Published By: DIGITAL DESK 3 17 SEP, 2024 | 03:34 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த பாராளுமன்ற உறுப்பிரான ரவிராஜின் மனைவியான சசிகலா மற்றும் மாவை சேனாதிராஜாவின் மகனானா கலைஅமுதன் ஆகியோர் யாழ் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். https://www.virakesari.lk/article/193943
-
-
- 9 replies
- 525 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 11:00 AM "சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. குறித்த பத்திரிகையில் சஜித்தை ஏன் தமிழரசு கட்சி ஆதரிக்கிறது, ரணிலை ஏன் விழுத்த வேண்டும், தமிழ் பொது வேட்பாளர் அரசியல் தற்கொலை என சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. …
-
-
- 36 replies
- 2.6k views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 3 17 SEP, 2024 | 02:57 PM நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து நாளை புதன்கிழமை (18) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளைய தினம் காலை 8.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதனால் வைத்திய சிகிச்சை அளிப்பதில் இடையூறு ஏற்படலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண இணைப்பாளரும், உதவி செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிராக சுகாதார அமைச்சு முன்னெடுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிர்ப்பு …
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, இளைஞரால் துஷ்பிரயோகம் Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 04:36 PM வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை (14) சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக அவர்களுக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பொலிஸார் குறித்த சிறுமியிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், வைத்திய பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட…
-
-
- 8 replies
- 514 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கள ஆய்வுகள் முன்னெடுப்பு! ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தின் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த கள ஆய்வில் மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கள ஆய்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கி.அமல்ராஜ…
-
- 1 reply
- 176 views
-
-
16 SEP, 2024 | 07:09 PM (நா.தனுஜா) தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான சகல சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எனவே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமாக மாத்திரமே சாத்தியமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எ…
-
-
- 3 replies
- 300 views
- 1 follower
-
-
(நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். எனவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் மூவர் பிரதான வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மூவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். மூவருமே உச்சபட்ச அதிகாரப்பகிர்வினை முன்னிறுத்தி செயலாற்றுவதாகக் கூறியிருக்கின்றார்கள். அதில் ஏனைய வேட்பாளர்களை விட சஜித் பிரேமதாச சற்று அதிகமாகக் கூறியிருக்கிறார். எ…
-
-
- 5 replies
- 363 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 SEP, 2024 | 07:34 PM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதியன்று மந்துவில் சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாய்த் தமிழ் பேரவை அமைப்பின், தாய்த்தமிழ் நினைவேந்தல் குழுவால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த படுகொலைச் சம்பவம் இட…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-