ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
இலங்கையின் 67 வது சுதந்திர தின நிகழ்வு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாளை காலை நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று இருவரும் கூட்டமைப்பின் சக உறுப்பினர்களிடம் கருத்துப் பரிமாறிக் கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவர்கள் இருவரும் கலந்து கொள்வது குறித்து கட்சி தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர் என்றும் தெரியவருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் 1948ஆம் ஆண்டு தொடக்கம், தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்து, அந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாக…
-
- 4 replies
- 601 views
-
-
வேலூர்: எக்காரணம் கொண்டும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார். பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் இன்று வேலூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''எந்த காரணத்தைக் கொண்டும், இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. அதேநேரத்தில், இந்திய-இலங்கை பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்'' என்றார். http://news.vikatan.com/article.php?module=news&aid=38150
-
- 1 reply
- 611 views
-
-
வவுனியா ஒமந்தை சோதனை சாவடி வழமை போலவே செயற்படும் என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதன்படி பொதுமக்கள் குறித்த சோதனை சாவடியில் வழமைப்போலவே கண்காணிக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் வடக்கிற்கு மரக்கறி மற்றும் பழங்கள் கொண்டு செல்லும் லொறிகளுக்கு சோதனை சாவடியில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். ஓமந்தை சோதனை சாவடியில் பொதுமக்கள் கண்காணிப்பின்றி பயணிக்க முடியும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் அதில் உண்மையில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயவீர தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்தி- வவுனியா ஓமந்தையில் இனி சோதனை நடவடிக்கை இல்லை: வன்னிப் படைகளின் தளபதி tamilwin.com
-
- 1 reply
- 510 views
-
-
இலங்கையில் ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை. புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு திரும்புமாறு அழைக்கும் அரசாங்கம் மறுபக்கம் அவர்களை இரகசியமாக கைது செய்கின்றது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், இன்று காலை டுபாய் நாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பிய மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இலங்கை புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். கொக்கட்டிச்சோலை 9ம் வட்டாரத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தாமோதரம் பாஸ்கரன் (வயது 29)என்பவ…
-
- 0 replies
- 730 views
-
-
யாழ். மீசாலை சந்தியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையூடாக கடக்க முற்பட்ட உழவு இயந்திரம் ஒன்று இன்று காலை ரயிலில் மோதியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது. அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரம், புகையிரதம் வருவதற்கான சமிக்ஞை ஒலியையும் மீறி கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது உழவு இயந்திரத்தின் பெட்டி தூக்கி எறியப்பட்டதால் மேற்படி கடை மீது விழுந்து கடைக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=1252…
-
- 1 reply
- 568 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தமிழ் மக்களிடம் இருந்து அபகரித்த காணிகள் மீண்டும் அவர்களிடமே வழங்கப்படும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கில் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில இடங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவை தொடர்ந்தும் அவ்வாறே காணப்படும். ஆனால், கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச தன்னிச்சையாக தனது சொந்த வியாபார நோக்கத்திற்காகவும் தமிழ் மக்களின் காணிகளைக் கைப்பற்றியுள்ளார். அவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை மீண்டும் தமிழ் மக்களுக்கே வழங்குவோம். தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, இந்தப்ப் பிரச்சினை சிங்கள மக்களுக்கும் உள்ளது என அவர் சுட்டிக்க…
-
- 0 replies
- 533 views
-
-
நம்பகமான பொறிமுறை உருவாக்காவிடின் அனைத்துலக விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் – மங்கள சமரவீர FEB 03, 2015 | 13:17by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் வலுவானதொரு நீதித்துறைப் பொறிமுறையை உருவாக்குவது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சிறிலங்காப் படையினர் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை தவிர்க்க உதவும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சீன செய்தி நிறுவனத்துக்கு செவ்வி அளித்துள்ள மங்கள சமரவீர, “சிறிலங்காவின் நீதித்துறை, திறன்வாய்ந்தது, சுதந்திரமானது, பாரபட்சமற்றது என்பதை உலகத்துக்கு அரசாங்கம் எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அனைத்துலக விசாரணை இப்போது, இறுதிக்கட்டத்தை எட…
-
- 0 replies
- 437 views
-
-
மலையக மக்களை மாற்றானிடம் அடகு வைத்து வாழ்ந்தவர்களுக்கு பொது வாக்கெடுப்பு’ அர்த்தமற்றது, என்று கூற என்ன அருகதை உண்டு? ******************************************* மு.வே.யோகேஸ்வரன் ********************************* மலையக மக்கள் யார்..? எங்கள் இரத்த நாடிகள்!..என்றோ ஒருநாள் , ஒரு பொன்னம்பலம் அவர்களை சிங்களவர்களோடு சேர்ந்து கொண்டு புறக்கணித்தார்..அவர்கள் சிலரின் குடியுரிமையை பறித்தார்.. என்பதற்காக தந்தை செல்வாவோ,அல்லது தம்பி பிரபாகரனோ ஒருபோதும் புறக்கணிக்கவில்லை..என்பதை நம் மலைய உறவுகள் நன்கு அறிவார்கள்!..அதற்கு மாறாக தலைவர் பிரபாகரனின் காலத்தில்..வடக்கிற்கு இடம் பெயர்ந்து வந்த மலையகத்தை சேர்ந்த எங்கள் உறவுகளுக்கு வன்னிப் பகுதியில் குடியிருப்புகளும் வாழ்வாதாரங்களும் அ…
-
- 0 replies
- 585 views
-
-
நிஷா பிஸ்வாலுக்கும் அப்பம் – கொழும்பில் தொடரும் ‘அப்பம்’ இராஜதந்திரம் FEB 03, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தனது நேற்றைய நீண்ட சந்திப்புகளை, இராப்போசன விருந்துடன் நிறைவு செய்ததாக டுவிட்டரில் எழுதியுள்ளார். இந்த இராப்போசன விருந்தில் தாம் முதல் முறையாக சிறிலங்கா அப்பத்தை சுவைத்துப் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இராப்போசன விருந்தில் சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் அமர்ந்திருக்கும் ஒளிப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். சிறிலங்காவில் அண்மைக்காலமாக அரசியலில் அப்பம் முக்கிய இடத்தை வகித்து வருகிறது. தன்னுடன் ஒன்றாக இராப்போசனமாக அப்பம் சாப்பிட்ட, மைத்திர…
-
- 1 reply
- 486 views
-
-
இந்திய அகதி முகாமில் தங்கியுள்ள இலங்கை மாணவி மாநில அளவில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். திருகோணமலையை சேர்ந்த மாணவி சல்மியா என்ற மாணவியே இந்த சாதனையினை படைத்துள்ளார். இவர் கடந்த மாதம் மாவட்ட அளவில் நடந்த ஓவிய போட்டியில் முதலிடம் பிடித்தார். பின்,' மரம் நடுவோம், மழை பெறுவோம்' என்ற தலைப்பில், வேலூரில் நடந்த மாநில ஓவிய போட்டியில், 2ஆம் இடம் பிடித்து கல்வி அமைச்சரிடம் பரிசு பெற்றார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,இலங்கை இரானுவத்தின் குண்டு மழைக்கு எனது குடும்பம் தப்பினாலும், அங்கு பல சொந்தங்களை இழந்தோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தூங்கும் போது கூட கனவில் குண்டு சத்தம் கேட்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகில் அ…
-
- 3 replies
- 435 views
-
-
இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான சர்வதேச விசாரணைச் செயற்பாடுகளுக்கு தற்போது அவசியமில்லை எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் தெரிவித்துள்ளார். அரசாங்க மாற்றத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது. உள்ளக செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் சர்வதேச விசாரணைப் பொறி முறையினை விடவும் சுயாதீன உள்ளக விசாரணைகளுக்கு முக்கியத்துவமளிப்பது நாட்டின் இறையாண்மைக்கும் வென்றெடுத்துள்ள ஜனநாயகத்துக்கும் பலமானதாக அமையும். அத்தோடு வென்றெடுத்துள்ள சமாதானத்தையும் நல்லாட்சியினையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். http://www.virakesari.lk/…
-
- 1 reply
- 373 views
-
-
இலங்கை அரசியலில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது. காட்டுத் தீ போல் சுதந்திரக் கட்சி ஆதிக்கம் சந்திரிக்காவினதும் மைத்திரியினதும் கட்டுப்பாட்டில் வந்த கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தற்போது இலங்கை அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு விவகாரம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபே ராஜபக்ஷ பற்றியது. அவர் எங்கிருக்கின்றார் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டாரா? சிங்கப்பூர் போய்விட்டார். மாலைதீவு போய்விட்டார் என்று ஒன்றுக் கொன்று முறனான செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் எமக்கு கிடைக்கின்ற நம்பகத்தனமான தகவல்களின் படி அவர் கொழும்பை விட்டு எங்கும் செல்லவில்லை. அவரை அப்படி சுலபமாக அனுப்பிவைக்கவும் தற்போதய ஆளும் தரப்பு கடும் ப…
-
- 6 replies
- 923 views
-
-
தான் வளர்த்த பூனைக்குட்டிகளில் ஒன்றை சகோதரி பிடித்து உறவினருக்கு கொடுத்தமையால் மனமுடைந்த நிலையில் வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தனால் தனது செல்லப்பிராணிக்காக தற்கோலை செய்து கொண்டவர் கந்தையா சண்முகலிங்கம் என்ற 80 வயதுடைய வயோதிபராவார். திருமணம் செய்யாத இவர் சகோதரியுடன் வாழந்து வந்துள்ளார். இவர் வளர்த்த பூனைக்குட்டியை பிடித்துக்கொடுத்தமை தொடர்பாக சகோதரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் வீட்டை விட்டுப் புறப்பட்டவர் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவரைக் காணாது தேடியவர்கள் அயலில் உள்ள வயல் வெளியில் மருந்து அருந்தி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்…
-
- 0 replies
- 340 views
-
-
நாட்டில் குற்றச்செயல்களின் சதவீதம் அதிகரிக்குமாயின் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசு ஆலோசிக்கும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் மரண தண்டனை உள்ளடக்கப்பட்டிருந்தாலும், 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கு பின்னர் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதியே இறுதியாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=269203853303818300
-
- 0 replies
- 294 views
-
-
நெடுந்திவு பிரதேசத்தில் குதிரைகள் சரணாலயம் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆ.சிறி திங்கட்கிழமை (02) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கூறிய அவர், 'எமது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் நலன்கருதி வடமாகாண காணி ஆணையாளரின் அனுமதியுடன் பிரதேச செயலகத்தின் ஊழியர்களைக் கொண்டு இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். 537 ஹெக்டேயர் காணியில் குதிரைகள் சரணாலயம் அமைக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்துக்கு காணி கையளித்தல் தொடர்பான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தோமையர் கிராமத்தில் 4 பரப்பு காணியும் கையளிக்கப்பட்டுள்ளது' என …
-
- 6 replies
- 4.6k views
-
-
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணத்தை மீட்பதற்காக நிதி புலனாய்வு பிரிவொன்றை உருவாக்குவதற்கு இலங்கைக்கு இந்தியா உதவி வழங்கவுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பல பில்லியன் டொலர் பணத்தை மீட்பதென்று தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் புதிய அரசாங்கம் உறுதியாகவுள்ளது. இதற்காக நிதிபுலனாய்வு பிரிவொன்றை அமைப்பதற்காக புதிய அரசாங்கம் மோடி அரசாங்கத்தை உத்தியோகப்பற்றற்ற முறையில் நாடியுள்ளது. உத்தியோகபூர்வ வேண்டுகோள்களை விரைவில் சிறிசேன அரசாங்கம் முன்வைக்கலாம். இந்தியாவில் காணப்படும் நிதி புலனாய்வு அமைப்பின் பாணியிலேயே இலங்கை அமைப்ப…
-
- 0 replies
- 214 views
-
-
நிஷா பிஸ்வாலுடன் கூட்டமைப்புத் தலைவர்கள் சந்திப்பு FEB 03, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை சுமார் 2 மணிநேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் …
-
- 1 reply
- 408 views
-
-
ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை என பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். முன்னரைப் போலவே ஓமந்தை இராணுவ முகாம் அவ்விடத்தில் இருக்கும். ஆனால் யுத்த காலத்தை போன்று அல்லாமல் அதனை சோதனை நடவடிக்கைகளில் தளர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓமந்தை ஊடாக பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவே சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=673103853803201771
-
- 0 replies
- 292 views
-
-
போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான குழுவினரே அவரை பார்வையிட்டதுடன் நலன்விசாரித்துள்ளனர். இதில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் செனவிரத்ன, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, லக்ஷ்மன் வசந்த பெரேரா மற்றும் லலித் திஸாநாயக்க ஆகியோரே அவரை பார்வையிட்டுள்ளனர். போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசின் முன்னாள் சுகாத…
-
- 0 replies
- 273 views
-
-
புதிய அரசு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர் இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தேர்தலுக்குப் பின் இலங்கையின் நிலைமை, புதிய அரசின் 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. 100 நாள் வேலைத் திட்டத்தில் பல நல்ல விடயங்கள் செயற்படுத்தப்பட்டுள்ள போதும் வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க கூடிய கவன…
-
- 0 replies
- 201 views
-
-
பொலநறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரியந்த சிறிசேன, இன்னமும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியுள்ளது. ஜனாதிபதியினால் சட்டவிரோத மணல் அகழ்வு தடை செய்யப்பட்டுள்ள போதும், அவருடைய சகோதரர் இரகசியமாக இதனை மேற்கொண்டு வருவதாக ஜே.வி.பியின் பொலநறுவை மாவட்ட தலைவர் சரத் குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கந்த, மன்னம்பிட்டிய ஆகிய இடங்களில் இடம்பெறுகின்ற இந்த நடவடிக்கைகள் சிலவேளைகளில் ஜனாதிபதிக்கு தெரியாமல் இருக்கலாம் என்றும் சரத் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்தக் குற்றச்சாட்டை பிரியந்த சிறிசேன நிராகரித்துள்ளார். - See more at: http://www.canadamirror.com/canada/37515.html#sthash.oHvweG3B.dpuf
-
- 1 reply
- 1.1k views
-
-
மாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாக பெற்று வந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி FEB 03, 2015 | 12:47by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர், சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும், தாமரைக் கோபுரம் (Lotus Tower) கட்டுமானப் பணிக்கான ஆலோசனைக் கட்டணமாக மாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாகப் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும், மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவுக்கே, இந்த தொகையை சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் இரகசியமாக வழங்கி வந்துள்ளார். 2013ம் ஆண்டுக்கான ஆலோசனைக் கட்டணம் முழுவதும் , ஸ்ரான்டட் ஸ்ராட்டட் வங்கியில் உள்ள மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவின் 001131168901 இல…
-
- 0 replies
- 519 views
-
-
அரச நியமனங்கள் வழங்குவதில் தமிழ் இளைஞர், யுவதிகள் புறக்கணிக்கப்படுவது மனித உரிமை மீறலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதன் ஊடாக அவர்களுக்கு நியமனங்கள் பெற்றுக் கொடுத்தமைக்கு, நாவலர் கலாச்சார மண்டபத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக எங்கள் பக்கமுள்ள சரியான ஆதாரங்களை முன்வைத்து நியமனங்களை பெற்றுக்கொண்டோம். நியமனங்கள் பெற்ற சகலரும் தமது செயற்றிறன்களைக் காட்டி மற்றவர்களுக்கு ஒரு சவாலாக விளங்கவேண்டும். குறித்த வழக்கானது 278 பேர் கொண்ட…
-
- 5 replies
- 510 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட பாவனைக்காக திறைசேரிப் பணத்திலிருந்து கொள்வனவு செய்ய முயன்ற விமானத்துக்கான ஓடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆலோசித்தே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்குப் பதிலாக குறித்த பணத்தைக் கொண்டு நஷ்டத்தில் இயங்குவதனால் ஒன்று சேர்க்கப்படவுள்ள சிறிலங்கன் – மிஹின் லங்கா விமானங்களுக்கான உதிரிப் பாகங்கள் கொள்வனவுக்காக குறித்த நிதி ஒதுக்கப்படும் எனவும் வார இறுதியில் இடம்பெற்ற தொலைக் காட்சி நேர்காணலின் போது ஜனாதிபதி தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.canadamirror.com/canada/37469.html#sthash.o3UeENsf.dpbs என்ன லூசுத்தனமான வேலையிது, மீண்டும் நா…
-
- 1 reply
- 545 views
-
-
அதிமேதகு என்ற சொல்லை இன்று முதல் தனது பெய ருக்கு முன்னால் இணைத்து உபயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வேண்டு கோள் விடுத்துள்ளார். முதற் பிரஜையுடன் முதலாவது உரையாடல் என்னும் தலைப்பில் அரச ஊடகங்களில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது இலங்கை ஜனநாயகச் சோலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி என இதுவரை காலமும் ஊடகங்கள் உட்பட அரச சேவைகளில் உபயோகிக்கப்பட்டு வந்தது. என்றாலும் இன்று முதல் எனது பெயருக்கு முன்னால் அதிமேதகு என்ற சொல்லை உபயோகிக்கவேண்டாம் இலங்கை ஜனநாயக சோலிசக் குடியரசின் ஜனாதிபதி என உபயோகித்தால் போதுமானது. அதேபோன்று எனது மனைவிக்கும் ஜனாதிபதியின்…
-
- 12 replies
- 1.1k views
-