ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
வாக்குறுதிகளை வாரி வழங்கி ஏமாற்றும் வேலை தொடர்கிறது ` இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப் படுகின்றமை குறித்து, சர்வதேச அமைப்புகள் மற் றும் உலக நாடுகள் தொடர்ந்து குரல் எழுப்பி வரு கின்றன. ஆனால் அவை எல்லாம் "புறக்குடத்து நீராக', "செவிடன் காதில் ஊதிய சங்காக' வீணானமைதான் மிச்சம். களத்தில் எந்த முன்னேற்றமுமே இல்லை. அவலங்கள், அபத்தங்கள் கட்டுமட்டின்றித் தொடர் கின்றன. அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களினால் சிறு வர்கள் பலவந்தமாக மடக்கிப்பிடிக்கப்பட்டு அக் குழுக்களின் படைகளில் இணைக்கப்படுகின்றமை குறித்தும், அந்த நடவடிக்கைகளில் அரசுத்தரப்பின் பங்களிப்புக் குறித்தும் மீண்டும் வெளிச்சம் போட் டுக் காட்டியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயோர்க் கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ம…
-
- 0 replies
- 955 views
-
-
பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாரிஸ் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 17 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடாகியுள்ளது. இவ் எதிர்ப்புப் போராட்டத்திற்கு பாரிஸ் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இவ் போராட்டதிற்கு பிரான்ஸ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் வர்த்தக சங்கம், விளையாட்டுக் கழகங்கள் என பல தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டு இவ் போராட்டம் இடம்பெறுகின்றது. ரொக்கட்றரோ (Tரொcஅடெரொ) சதுக்கத்தில் 3 மணி முதல் 5 மணி வரை எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களும…
-
- 13 replies
- 2.5k views
-
-
தமிழர்கள் நிலத்தை, வளத்தை இழந்து நிற்கதியாக நிற்கிறார்கள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் நேர்காணல். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் உக்கிரமாக நடந்த கிளிநொச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார். இலங்கையில் தமிழர்கள் அனுபவித்துவரும் துயரமும், அவலமும் அவருடைய பேச்சில் மட்டுமின்றி, அவருடைய முகத்திலும் நிரந்தரமாக குடிகொண்டிருந்தது. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய சிறீதரன், இலங்கையில் போருக்குப் பின் மக்களுடைய வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை ஆழமாக விவரித்தார். சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு தமிழ்.வெப்துனியா.காமிற்கு ஒ…
-
- 1 reply
- 711 views
-
-
’பொதுமன்னிப்போ அல்லது வேறு எந்தப் பொறிமுறையிலோ விடுதலை வேண்டும்’ பா.நிரோஸ் பொதுமன்னிப்பு அல்லது வேறு எந்தப் பொறிமுறையிலாவது, தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அரசியல் கைதிகள், தங்களது விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்காவிட்டால், புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்படப்போவதாக எச்சரித்துள்ளனர். வெலிக்கடை புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சிலர், தமிழ்மிரருக்கு பிரத்தியேகமாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தனர். இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள…
-
- 0 replies
- 306 views
-
-
இயக்கச்சிப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படைச் சிப்பாய் ஒருவர் தனக்குத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இப் பகுதியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 19 வயதுடைய வசந்த என்ற படைச்சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். இவரது சடலத்தை பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்குமாறு உத்திரவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி இராணுவக் காவற்றுறையினர் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மணலாற்றுப்பகுதியிலும் ஒரு சிப்பாய் மர்மமான முறையில் மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கத…
-
- 3 replies
- 623 views
-
-
சனல் 4வின் ஜோன் ஸ்னோ - கலம் மெக்ரேவிற்கெதிராக மூன்று சிங்கள அமைப்புகள் 28 ஜூன் 2011 வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை : சனல் 4வின் ஜோன் ஸ்னோ - கலம் மெக்ரேவிற்கெதிராக மூன்று சிங்கள அமைப்புகள் கண்ணில் கண்ட சாட்சி இல்லாமல் இலங்கை மக்களை அவமானப்படுத்தும் நோக்கில் போலியான வீடியோ படத்தை உலகம் முழுவதும் ஒளிபரப்பியமை சம்பந்தமாக சனல் 4 தொலைக்காட்சியில் ஜோன் ஸ்னோ மற்றும் அந்தத் திரைப்படத்தின் இயக்குனர் கலம் மெக்ரே ஆகியோரிடம் 100 மில்லியன் டொலர்களை இழப்பீடாகக் கோரி அவுஸ்திரேலியா, கனடா மற்றும் சுவிஸர்லாந்திலுள்ள மூன்று சிங்கள அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன. பிரித்தானிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த வழக்கு தொடர்பில் ஐந்து பேர் அ…
-
- 2 replies
- 798 views
-
-
காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மத்தியில் மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்கள் October 16, 2018 விடுவிக்கப்பட்ட காணிகளில் தற்காலிக கூடாரங்களை அமைக்க கடற்படை தடை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இடம் பெயர்ந்து மீள் குடியேறிய முள்ளிக்குளம் மக்கள் தங்களுக்கு விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட காணியில் பாதுகாப்பு கருதி தற்காலிக கொட்டகைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது கடற்படையினர் குறித்த நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளதாக பாதிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு,காட்டு யானைகளினாலும் அந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக…
-
- 0 replies
- 321 views
-
-
வவுனியாவில் ஆயுதக்குழு அட்டகாசம் பத்து வீடுகளில் தொடர் கொள்ளை! வந்து வீதியை மூடிவிட்டு விடிய விடிய தங்கி நின்று சூறை வவுனியா, ஏப்ரல் 20 வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளைக் கும் பல் ஒன்று, அடுத்தடுத்து உள்ள பத்து வீடு களில் புகுந்து அங்கிருந்தவர்களை துப் பாக்கி முனையில் மிரட்டிப் பயமுறுத்தி விட்டு, சுமார் இரண்டு கோடி ரூபா பெறு மதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பவற்றைச் சூறையாடிச் சென்றிருக் கிறது. நள்ளிரவு நேரம் முகத்தை மூடி மறைத் துக்கொண்டு வந்த கொள்ளையர்கள் வீடுகள் அமைந்துள்ள வீதியை மூடிவைத்துக் கொண்டு விடிய விடிய அங்கே தரித்து நின்று சூறையாடியிருக்கின்றனர். நேற்றுமுன்தினம் (புதன்) நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடம்பெற்ற இந்தத் …
-
- 3 replies
- 1.3k views
-
-
2009ல் ஈழத்தமிழர்களை இலங்கையோடு சேர்ந்து இனப்படுகொலை செய்த இந்தியா மற்றும் அமெரிக்கா.2009க்கு பிறகான தமிழீழக்கோரிக்கையை 2012 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐநாவில் தீர்மானங்கள் மூலம் நீர்த்துப்போகச் செய்தது. குறிப்பாக இலங்கையின் மீது சர்வதேச விசாரணை வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஒரு வேளை வந்துவிட்டால் அது 60 ஆண்டுகளுக்கான போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது (60அண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் அது இனபப்டுகொலை என எளிமையாக நிருபிக்கமுடியும் மேலும் தமிழீழம் அமைத்து தரவேண்டிய அவசியமும் ஏற்படும்) என்பதற்காகவும் முதலில் உள்நாட்டு விசாரணை என்றது .பின் 2002 முதல் 2009வரை மட்டுமே விசாரணையென்று சுருக்கியது அமெரிக்கா.இதன் பிண்ணணியில் இருந்தது இந்தியாதான். …
-
- 0 replies
- 527 views
-
-
குற்றவியல் நீதிமன்றில் கையொப்பம் இடாவிட்டாலும் இராணுவத்தை விசாரிக்கமுடியும் Thursday, July 7, 2011, 11:00 சிறீலங்கா ஹேக்கில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடர்வது குறித்த ரோம் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. நல்ல காலம் நாம் தான் அப்போது (2002) இல் கையொப்பம் இடவில்லை அப்படி இட்டிருந்தால் இப்போ நிலமை என்னவாகி இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார் மங்கள சமரவீர. ஆனாலும் இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன. கையையொப்பம் இடாத நாடாக இருந்தாலும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையில் கோரிக்கையின்படி நெதர்லாந்தின் ஹெய்ட் நகரில் உள்ள சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றிற்கு எமது இராணுவத்தினரை…
-
- 0 replies
- 289 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை ஒரு மாத காலத்துக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கும் தரப்புக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பில் இடம்பெறுகின்ற புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். தற்போது இலங்கையில் அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியிருக்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கா அல்லது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புக்கா ஆதரவு வழங்குவது என்ற விசயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இணைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறும் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டாக எடுக்கும் முடிவுக்கு தமது அமைப்பு ஆதரவு வழங்கும் என்று கூறியதுடன், இருந்தபோதிலும்,…
-
- 0 replies
- 388 views
-
-
பெண்களை ரகசிய இடங்களில் வைத்து விசாரிக்கும் படையினர். Written by Ellalan - May 01, 2007 at 12:46 PM பண்ணை அல்லைப்பிட்டி சோதனைச்சாவடி ஊடாக பயணம் செய்யும் ஆண்களை படையினர் சோதனை என்ற பெயரால் சேட்டுகளை கழற்றி சோதனை செய்வதுடன் பெண்களை ரகசிய மறைவிடங்களுக்கு அழைத்துச்சென்று சோதனை செய்வதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் பெண்கள் உளவியியல் ரீதியாக பாதிக்கப்படுவதுடன் படையினரின் பாலியல் சேட்டைகளுக்கும் உள்ளாகுவதாகவும் அடையாள அட்டைகளை கேட்கும் படையினர் அடையாள அட்டைகளுடன் பெண்களின் கைகளை சேர்த்து பிடிக்கும் அநாகரிகமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன்; பெண்கள் மீதான மீதான பாலியல் வன்முறைகளிலும், ஆண்களை அச்சுறுத்தும் செயல்பாடுகளிலும் ஈடுபட்ட இரு…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையின் கொலைக்கள கோரக் காட்சிகள் குறித்து இதுவரை அசைந்து கொடுக்காத மத்திய அரசு இதுவரை உலக அளவில் பல்வேறு பகுதிகளில் ஒளிபரப்பாகி வந்த இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரிலான லண்டன் சானல் 4 நிறுவனத்தின் டாக்குமென்டரி படம் இந்தியாவில் ஒளிபரப்பாகிய நிலையில் இதுகுறித்து மத்திய அரசிடமிருந்து ஒரு வார்த்தை கூட வெளியாகவில்லை. கிணற்றில் போட்ட கல் போல மத்திய அரசு பெருத்த அமைதி காத்து வருகிறது. உலகில் எங்கு மனித உரிமைகள் மீறப்பட்டாலும், அப்பாவி மக்களுக்குத் துன்பம் விளைவிக்கப்பட்டாலும், உடனடியாக குரல் கொடுப்பது இந்திய அரசின் வழக்கம். ஏன், வடக்கு சூடானுடன் நடந்த 56 ஆண்டு கால கடும் ரத்தப் போராட்டத்தின் விளைவாக சுதந்திரம் பெற்றுள்ள தெற்கு சூடானுக்கு இந்திய அரசு வாழ்த்து தெரிவித…
-
- 4 replies
- 773 views
-
-
யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் சிறிலங்கா அரசு வழங்கிய வாக்குறுதிகள் குறித்து அல் ஜெஸீராவில் ஒளிபரப்பான ஆய்வரங்கம் Top News [Friday, 2011-07-15 10:00:46] சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்து இரு வருடங்கள் சென்ற நிலையில் இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களின் தற்போதைய நிலைவரம் குறித்து அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஆய்வரங்கம் ஒன்று ஒளிபரப்பியுள்ளது. The Stream என்ற இந்த ஆய்வரங்கத்தில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி ஆகியன தொடா்பில் சர்வதேச சமூகத்துக்கு வழங்கி இருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசு நிறைவேற்றுகின்றதா? என்பது குறித்துவிவாதிக்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=46520&category=TamilNews&language…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கையில் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் தென்னாபிரிக்காவில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாமை நடத்தியதாக கூறப்படும் இரகசிய ஆவணமொன்றை மேற்கோள் காட்டி அல் ஜெசிரா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளை சேர்ந்த புலம் பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இதை முற்றாக மறுத்துள்ள தென்னாபிரிக்கா புலனாய்வு பிரிவினர், அவ்வாறான முகாம் எதுவும் தென்னாபிரிக்காவின் எந்தப் பகுதியிலும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv6A.html
-
- 1 reply
- 645 views
-
-
பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு இணைப்பு சம்மந்தமாக திரு.கயேந்திரகுமார் அவர்களினால் வழங்கபட்ட பதில்
-
- 0 replies
- 411 views
-
-
பிள்ளையானுக்காக அனுதாப வாக்குச் சேகரித்தவர்களும் பதில் கூற வேண்டும் - எழுந்துள்ள கண்டனங்கள்! கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இந்த மிலேச்சத்தனமான ஈஸ்டர் தாக்குதலுக்கு பதில் கூற வேண்டும் என்று பலத்த கண்டனங்கள் எழுந்து வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் சிறைச்சாலையில் இருந்து கொண்டு அனுதாப வாக்கை பெறுவதற்காக மட்டக்களப்பில் பிரபலமான கல்விமான்கள் வைத்தியர்கள் சட்டத்தரணிகள் சமூகத்தில் நற்பெயர் கொண்டவர்கள் ஆன்மீகவாதிகள் என பலரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ஆட்சி பீடம் ஏறிய சந்திரகாந்தனின் கபட நாடகங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்ற…
-
- 3 replies
- 538 views
-
-
சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. . அவ்வாறு அவர் இணைந்து கொள்ளும் பட்சத்தில் அவருக்குக் கட்சியில் பிரதித் தலைவர் பதவியை வழங்கவும் ஐ.தே.க தீர்மானித்துள்ளது. . சரத் பொன்சேகாவை கடந்த வாரம் சிறையில் சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க, தனது கட்சியின் இந்தத் தீர்மானம் தொடர்பில் அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். . இதேவேளை, கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளராக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவை நிறுத்துவது எனவும் தீர்மானிக்கபட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது. …
-
- 0 replies
- 584 views
-
-
மொட்டில் போட்டியிடுகிறார் நாமல் குமார – வெளுத்தது சாயம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். தாம் பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாமல் குமார் அறிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் படுகொலைச் சதித் திட்டத்தில் முதலில் பாதாள உலகை சேர்ந்தவரையும், காவல்துறை அதிகாரி ஒருவரையும் குற்றம்சாட்டிய நாமல் குமார பின்னர், சரத் பொன்சேகாவையும் அதில் தொடர்புபட்டுள்ளார் என்று கூறியிருந்தார். மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பி…
-
- 1 reply
- 753 views
-
-
வரலாற்று நாயகன் லெப். செல்லக்கிளி அம்மானின் வீரவணக்க நாள் Saturday, July 23, 2011, 0:38கட்டுரைகள், தமிழீழம், மாவீரர்கள் 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்…
-
- 12 replies
- 891 views
-
-
இந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள் MAR 11, 2015 | 7:54by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்தியாவில், ஒரு இலட்சத்து, இரண்டாயிரத்து நான்கு இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாக, இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில், எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில அரசாங்கங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 2014 டிசெம்பர் 1ம் நாள், 1,02,004 இலங்கை அகதிகள் தங்கியிருக்கின்றனர். இவர்களில், 64,931 அகதிகள், தமிழ்நாட்டில் உள்ள 109 முகாம்களிலும், ஒடிசாவில் உள்ள ஒரு முகாமிலும், வசித்து வருகின்றனர். எஞ்சிய 37,073 இலங்கை அகதிகள், அருகிலுள்ள காவல்நிலையங்களில் பதி…
-
- 0 replies
- 291 views
-
-
இலங்கை அரசின் உள்ளக விசாரணை சர்வதேசத்தின் மேற்பார்வையுடனேயே நடக்க வேண்டும். இல்லையேல் மகிந்த ஆட்சிக்கு ஏற்பட்ட நிலையே இந்த ஆட்சிக்கும் ஏற்படுமென தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பி.யான எம்.ஏ. சுமந்திரன், காணாமல் போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லைன்றும் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில்; காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் சரியான முறையில் இடம்பெறவில்லை. இந்த ஆணைக்குழுவின் ச…
-
- 3 replies
- 701 views
-
-
மகிந்தவின் தரப்பில் இரகசியப் பேச்சு நடத்தியவர்கள் – அம்பலமானது விபரம் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேர் கொண்ட, அரச தரப்புக் குழுவே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இரகசிய சந்திப்பை நடத்தியிருந்தது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர் மகிந்த சமரசிங்க, அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த மற்றும், கூட்டு எதிரணியின் வெளிவிவகாரக் குழு உறுப்பினராக இருந்த தரிந்து பாலசூரிய ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ரொரிங்டன் அவென்யூவில் உள்ள கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனின் இல்லத்தில் இந்தச் …
-
- 0 replies
- 238 views
-
-
எமது நாட்டில் ஒற்றையாட்சி முறைநீக்கப்பட்டு கூட் டாட்சி முறை கொண்டு வரப்பட வேண்டும். பலவாறான கட்டமைப்புக் குறைபாடுகளினிடையே தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கை இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இப்பேர்ப்பட்ட கட்டமைப்புக் குறைபாடுகள் எமது தமிழ்ப் பேசும் மக்களுக்கு விமோசனத்தை அளிக்காது நல்லாட்சியை உறுதிப்படுத்தாது, என்பதே எனது வாதம். என்று வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதன் கீழ் அநியாயமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் பொது மன்னிப்பில் வௌிவர வேண்டும். அடுத்து அரசியல் யாப்பு இந் நாட்டை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டும். சமஷ்டி அடிப்படைய…
-
- 2 replies
- 961 views
-
-
18 OCT, 2023 | 10:47 AM பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்றை இலங்கை பொலிஸ் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகளை “118” என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும். குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும் எனவும் முறைப்பாடுகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/167140
-
- 0 replies
- 159 views
- 1 follower
-