Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்களவர்களும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்! சிங்கள மக்கள் கூட தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்த பின்னர் ஏனைய இரு விருப்பு வாக்குகளையும் தாம் விரும்புபவருக்கு அளிக்கலாம் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”தமிழ் பொது வேட்பாளர் தான் தமிழ் மக்களுக்கு தேவை. சங்கே தமிழர்களின் அடையாளம். அதனால் அனைத்து தமிழ் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் தமிழ் மக்களின் குரலை வலுப்படுத்தவேண்டும் முஸ்லீம் மக்களும் மதங்களை தாண்டி தமது முதல் வ…

  2. தமிழ் பொதுவேட்பாளர் குறித்து தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சம் – அரியநேத்திரன்! தென்பகுதி வேட்பாளர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ளமையானது தமிழ் பொதுவேட்பாளர் குறித்து அவா்களிடத்தில் ஒருவித அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டுவதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற நமக்காக நாம் பிரசாரப்பணிகளில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டதன் பின்னர் தெற்கில் உள்ள பிரதான வேட்பாளர்கள் தெற்கில் பிரசாரங்களை முன்னெடுக்காமல் வடகிழக்கில் முகா…

  3. 10 SEP, 2024 | 10:04 AM யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (09) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாலி வீதி திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 86 வயதுடையரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை. மனைவியும் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் சாப்பாட்டினை வெளியில் இருந்து தினமும் பெற்று உண்பது வழக்கம். அந்தவகையில் இவருக்கு வழமையாக சாப்பாட்டினை கொடுக்க வந்த பெண் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அவர் உயிரோட்டம் இன்றி இருப்பதை அவதானித்துள்ளார். இந்நிலையில் அயல் வீட்டாரின் …

  4. Published By: VISHNU 10 SEP, 2024 | 02:29 AM (நா.தனுஜா) அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்வதன் ஊடாகவும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (9) ஜெனிவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணி) பேரவையின் தலைவர் ஓமர் நிபர் தலைமையில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்…

  5. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று! September 10, 2024 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழு இன்று வவுனியாவில் கூடவுள்ளது. மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், பா.சத்தியலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவே இன்று கூடுகின்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கத்தின் வவுனியா பணிமனையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளை ஆராய்ந்து அறிக்கையிடும் நோக்கில் இந்த சிறப்ப…

      • Like
      • Thanks
      • Haha
    • 15 replies
    • 814 views
  6. தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு – கிளிநொச்சிக் கிளை ஏகமனதாக தீர்மானம்! adminSeptember 10, 2024 தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று (09.09.24) பிற்பகல் 3 மணியளவில் மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிக்கப…

  7. 09 SEP, 2024 | 05:26 PM யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பகுதியின் புதிதாக கட்டுமானம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டுமானத்திற்கு அருகாமையில் சடலமானது மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள் காணப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுமானத்தில் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளன. இந் நிலை…

  8. 09 SEP, 2024 | 05:10 PM தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாக முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுறும் வரைக்கும் விடுதலைப்புலிகள் இருந்தார்கள். அவர்களின் ஆயுதப் பலம் பேரம் பேசக்கூடிய பெரும் சக்தியாக இருந்தது. இப்போது எம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரேயொரு ஆயுதம் வாக்குகள்தான். யுத்தத்தின் பின்னரான கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் இந்த வாக்குபலத்தை நாம் வீணடித்துவிட்டோம் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இம்முறையாவது நமது வாக்குகளை இலக்கு தவறாமல் பிரயோகிப்போம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கழமை…

  9. 09 SEP, 2024 | 05:17 PM தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க கோரி மருதங்கேணி பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தபோது அங்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் துண்டுப்பிரசுரங்களை பறித்துள்ளனர். இதனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் மருதங்கேணி பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் துண்டுப்பிரசுரங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மருதங்கேணி பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. …

  10. 09 SEP, 2024 | 05:25 PM ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் கிழக்கு மாகாணத்துக்கு திங்கட்கிழமை (09) விஜயம் செய்தபோது மேள தாள வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டார். தமிழ் பொது வேட்பாளரான அரியநேத்திரன் வடக்கில் தமது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதையடுத்து, தான் பிறந்த மண்ணான கிழக்கு மாகாணத்துக்கு இன்று விஜயம் செய்துள்ளார். இதன்போதே அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அரியநேத்திரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தரப்பில் போட்டியிட பொதுக் கட்டமைப்பினாலும் அரசியல் கட்சிகளினாலும் களமிறக்கப்பட்டவர் ஆவார். https://www.virakesari.lk/article/193249

  11. Published By: VISHNU 09 SEP, 2024 | 08:40 PM ஆசியாவில் நிலவும் சுவாச நோய் தன்மைகளை எதிர்த்துப் போராட உலக முன்னணி வல்லுநர்கள் இலங்கையில் ஒன்று கூடுகின்றனர். உலகெங்கிலும் உள்ள சுவாச சுகாதார நிபுணர்கள் இந்நோய் தாகத்திற்கு எதிரான தங்கள் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையிலும், ஆசிய பிராந்தியத்தில் சுவாச நோய்களின் பாதிப்புகளை குறைத்திட நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சியின் பரந்துபட்ட விடயங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கொழும்பில் ஒன்று கூடுகின்றனர். சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த் ரிசர்ச் யூனிட்டின் (RESPIRE) வருடாந்த அறிவியல் கூட்டம் 2024 ஆவணி 27 முதல் 29 வரை நடைபெறுகிறது, மேலும் 2016 இல் ஆரம்பி…

  12. 09 SEP, 2024 | 03:13 PM மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியை புனர்நிர்மானம் செய்து, அதில் ”இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்கள்” என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்று திங்கட்கிழமை (09) பதித்துக்கொண்டிருந்தபோது, இக்கல்வெட்டை பொலிஸார் பலவந்தமாக அகற்றி, அங்கு புனரமைப்பு செய்யவிடாமல் தடுத்துள்ளனர். அதனையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. அத்துடன், அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உட்பட 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். 1990 செட்டெம்பர் 9ஆம் திகதி கொக…

  13. Published By: DIGITAL DESK 7 09 SEP, 2024 | 10:28 AM கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன் 15 நாட்களுக்கு மேலாக இரவு பகலாக குழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருக்கும் பெரும் அவலம் நிகழ்கிறது. என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கழிவு வாய்க்காலின் மிக மோசமான துர்நாற்றம், நுளம்பு கடி தொல்லை, பாம்புகளின் நடமாட்டம் என பெரும் அவலத்திற்கு முகம் கொடுத்து வாரக்கணக்கில் இரவு பகலாக படுக்கை விரிப்புக்களை விரித்து படுத்து உறங்குவதாகவும், தெரிவித்துள்ள பொது மக்கள், இந்த பெரும் அவலத்திற்கு விரைவில் தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 60 கடவ…

  14. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடும் பக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனிடையே, இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிய கிடைக்கின்றது. https://thinakkural.lk/article/309094

  15. மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள் September 9, 2024 தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என முன்னாள் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு அதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பரப்புரை நடவடிக்கை அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பரப்புரைக்கூட்டத்தில் உரைய…

  16. கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு! கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15,491 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், 4,860 மில்லியன் ரூபா பெறுமதியான 511 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அந்தக் காலப்பகுதியில் கேரள கஞ்சா, ஹாஷிஸ், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களையும் கடற்படையினர் கைப…

  17. மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு சிறப்பு விருதுகள்! உலக சுகாதார நிறுவனத்தினால் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார, தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று (7) கொழும்பில் இடம் பெற்றுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, நோயாளிகள் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இருநுாறுக்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்குள் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ம…

  18. புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்ளும் போது வரி இலக்கத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவு இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. வருமான உரிமம் வாகனப் பதிவு, வருமான உரிமம் பெறுதல், நடப்புக் கணக்கு தொடங்குதல், நிலம், அசையாச் சொத்து உள்ளிட்ட சொத்துகளைப் பெறுதல் போன்ற வழக்குகளில் வரி இலக்கத்தை பெறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது தொடர்பான பரிந்துரை நிதித் திணைக்களத்திடம் சமர்ப்…

  19. நாட்டில் காணப்படும் விசேட தேவையுடையோர்களுக்கு காப்புறுதிகளையும் வழங்குவோம் என என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். அத்துடன், அத்தோடு விசேட தேவையுடையோர்கள் பயன்படுத்துகின்ற உபகரணங்களுக்கு அறவிடப்படும் வரியையும் நீக்குவோம் என குறிப்பிட்டுள்ளார் கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியால் வகுக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பேண தனியான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்படும். 2012 ஆ…

  20. 07 SEP, 2024 | 10:26 PM வடக்கு மக்களுக்கு சட்டத்தின் மூலம் முழுமையாக பாதுகாப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி என்ற வகையில் உறுதி அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று ஜே.வி.பி.யின் கொள்கைகளை சுமந்து வரும் அநுரகுமார திஸாநாயக்க வடக்கு மக்களை அச்சுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கில் மக்களை அச்சுறுத்தியது தொடர்பில் வடக்கு தமிழ் மக்களிடமும் தென்னிலங்கை மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பிரதேசத்தில் இன்று (07) பிற்பகல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனா…

  21. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றிரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார். தீர்க்கப்படாத இனப்பிரச்சினை இதன்போது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பொருளாதாரத்தின் ஊடாக வளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தேர்தலின் பின்னர்…

  22. காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா (India) 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதென இலங்கையின் விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (07) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் நிதியுதவிகள் மேலும், இந்த நிதி வழங்கலுக்கமைய குறித்த துறைமுகம் விரைவில் கப்பல் பயணங்களுக்கு தயாராகி விடும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, வடக்கில் விமான நிலையம், தீவுகளில் காற்றாலை மின்சாரம் மற்றும் தொடருந்து போக்குவரத்து துறைகளில் இந்தியா நிதியுதவிகளையும் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளமை குறி…

  23. 07 SEP, 2024 | 06:22 PM (நா.தனுஜா) நாட்டின் சிங்கள மக்கள் கடந்த காலங்களில் தமிழர்களை நசுக்கும் சிங்கள ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தனர் எனவும், ஆகவே அநுரகுமார திஸாநாயக்க கூறுவதைப்போன்று சிங்கள மக்களுக்கு எது தேவையோ அதற்கேற்றவாறு தமிழ் மக்களால் வாக்களிக்கமுடியாது எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: 'நா…

  24. 07 SEP, 2024 | 05:30 PM (நா.தனுஜா) எனது அரசியல் பயணத்தையும் அது சார்ந்த பணிகளையும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன் அடிப்படையிலேயே காலத்தின் தேவையுணர்ந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் …

  25. 07 SEP, 2024 | 02:22 PM (நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெறுகின்ற செல்வாக்கைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், அதில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார். இத்தேர்தலில் அவர் வெல்லப்போவதில்லை என்றாலும், இதன்மூலம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.