Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மைத்திரியை இந்தியா வருமாறு மோடி அழைப்பு JAN 09, 2015 | 11:07by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், அவரை இந்தியாவுக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து. இன்று காலை இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் அழைத்து அவருக்கு வாழ்த்துக் கூறினார். அத்துடன் இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கு தன்னுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் நரேந்திர மோடி கூறியள்ளார். தொலைபேசி மூலம், வாழ்த்துக் கூறிய மோடி பின்னர், மைத்திரிபால சிறிசேனவுக்கு கடித…

  2. புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா அறிவிப்பு - 09 ஜனவரி 2015 புதிய ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஜோன் கெரி கருத்து வெளியிட்டுள்ளார். புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். சுபீட்சமானதும் அபிவிருத்திiயானதுமான இலங்கையை கட்டியெழுப்பும் முனைப்புக்களில் புதிய அரசாங்கத்துடன் இணைந்…

    • 4 replies
    • 552 views
  3. மைத்ரிபாலவின் முதல் 'பஞ்சாயத்து': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முன் அதிபராக பதவியேற்க மறுப்பு! Posted by: Mathi Updated: Friday, January 9, 2015, 12:00 [iST] கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சிராணி பண்டாரநாயக்கா. அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே தம்மிடம் அதிகாரங்களைக் குவித்து வைக்கக் கூடிய திவிநெகும என்ற சட்டத்தைக் கொண்டுவந்தார். ஆனால் இந்த சட்டத்தை செல்லாது என்று அதிரடியாக சிராணி தீர்ப்பளித்தார். இதனால் அவர் மீது நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு பத…

  4. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://seithy.com/breifNews.php?newsID=124260&category=TamilNews&language=tamil

  5. *வடகிழக்கில் 654,531 மேலதிக வாக்குகள் மைத்திரிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.. அந்த வகையில் மைத்திரியின் வெற்றியை சிறுபான்மையினரே தீர்மானித்திருக்கிறார்கள்.. . யாழ் - 176,120 வன்னி- 107,040 மட்டகளப்பு- 167,811 அம்பாறை- 112,333 திருகோணமலை- 88,227 http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115345/language/ta-IN/article.aspx

  6. க.ஆ.கோகிலவாணி '2015 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலானது வரலாற்றில் மிகமுக்கியமாக பதியப்பட வேண்டிய தேர்தலாகும். செருப்பை காட்டினாலும் எமக்கு வாக்களிப்பார்கள் என எண்ணியிருந்த சில தலைமைகளுக்கு மலையக மக்கள் பதலிடி கொடுத்துள்ளதுடன் இனியும் எம்மை யாரும் ஏமாற்ற முடியாது என்று சாட்டையடி கொடுத்துள்ளனர். மலையக மக்கள் தந்த சாட்டையடியை எதிர்வரும் காலத்தில் வரும் தலைமைகளும் நன்குணர்ந்துகொள்ள வேண்டும்' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெ.இராஜதுரை தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் வெற்றி தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் பாரிய பங்களிப்புச் செ…

  7. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சத்தியப்பிரமாணம், உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ள நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. http://www.tamilmirror.lk/137362

  8. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதா, அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் நேற்று மேற்கண்மவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/137364

  9. மைத்திரிபாலாவின் வெற்றி மகிந்தாவின் தான், தன் குடும்பம் என்ற மமதைப் போக்கிற்கு கிடைத்த மிகப்பெரிய கற்பிதம் என்றும், தனது கட்சியின் செயலரே கட்சியை விட்டு விலகி பொது வேட்பாளராக வந்தார் என்பதும்,.. 27 ஆளும்கட்சி உறுப்பினர்கள் பொது அணியென்ற பெயரில் தாவியது மகிந்தாவிற்கான ஊழ்வினை என்றும், இன்றைய தேர்தல் தொடர்பாக நடந்த நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு. சுதர்மா அவர்கள் கருத்தத் தெரிவித்தார். மைத்திரிபாலா சொல்லும் விடயங்களில் 25 வீதமானவை கூடச் அவரால் நிறைவேற்றப்பட முடியாதவை என்றும், அடுத்த பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பாண்மை எட்டப்படாதவிடத்து சிறுபாண்மையின தேசியம் பேசும் கட்சிகளின் ஆதரவுடன் அரசை அமைக்கும் ஒரு நிலை ஏற்படும் என்றும், அவ்வாறான வேண்டுகோள் விடு…

  10. -யா.வித்தியா தேசிய அரசை அமைக்கப்போவதாக மைத்திரி கூறியுள்ளார். அதன் சாதக பாதகங்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை தெரியப்படுத்தியுள்ளார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதன் மூலம் எதையோ எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகள் இந்த அரசில் சாத்தியமாகவும் இருக்கும். சாத்தியமற்றதாகவும் இருக்கும். இராணுவத்தை அகற்ற மாட்டோம், நாட்டை பிரிக்க மாட்டோம் என்றுதான் இவ…

  11. மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தினில் எதிர்வருங் காலங்களிலேனும் நான் போட்டியிடும் சூழல் உருவாக வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மஹிந்தவிற்கு வாக்களிக்கச் சொல்லி பகிரங்க பிரச்சாரங்களை செய்துவரும் அவர் பின்னர் தனது முக்கிய ஆதரவாளர்களை மட்டும் தனிப்பட்டதாக கொக்குவில் பகுதியில் சந்தித்து மஹிந்தவிற்கு வாக்களிக்க நான் சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தில் எதிர்வருங் காலங்களிலேனும் நான் போட்டியிடும் சூழல் உருவாக வேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே மஹிந்த…

  12. தேர்தலில் தோல்வியுற்றாலும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பிற்கு தலை வணங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி பாராட்டுவதாகவும் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 13 மாவட்டங்களில் கட்சி வெற்றியீட்டியுள்ளதாகவும், 2010ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கொழும்பு பொலனறுவை மற்றும் கண்டி மாவட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதிக சனத்தொகையைக் கொண்ட மாவட்டங்கள் மாகாணங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஒரு விதமான வ…

  13. "தாம் வெற்றிபெற்றால் தேசிய அரசு அமைக்கப்படுமென ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மைத்திரிகால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளபோதிலும் அது குறித்து எத்தகைய கருத்தும் எமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் அது போன்ற எத்தகைய அழைப்புக்கள் வந்தாலும் அவை குறித்தெல்லாம் நாம் பரிசீலிப்போம்" - இவ்வாறு 'மலரும்' இணையத்துக்குத் தகவல் வெளியிட்டார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முழு அளவு ஆதரித்துள்ள நிலையில், அவரே இத்தேர்தலில் வெற்றிபெறும் நிலையை எட்டியுள்ளார். இந்தத் தேர்தல் வெற்றிகுறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் 'மலரும்' இணையம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறின…

    • 4 replies
    • 898 views
  14. மிகநெருக்கமான போட்டி நிலையில் நடந்தேறிய இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேனவுக்கு கனேடிய தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது. சிறிசேனவின் இந்தத் தேர்தல் வெற்றி, மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் சர்வாதிகார வம்ச ஆட்சிக்கு முடிவு கட்டி, புதிய ஜனநாயக சகாப்தத்துக்கான வாய்ப்புக்குரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள கனேடிய தமிழர் பேரவை இந்தத் தேர்தல் குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கைத் தமிழ்மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டலில், புதிய ஆரம்பத்துக்கான எதிர்பார்ப்போடு திரண்டு வாக்களித்துள்ளனர். தற்போதைய அரசினால் பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்த துன்பங்களுக்கு இடையிலும், பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்…

  15. புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, இன்று மாலை பதவியேற்கும் கையோடு, புதிய பாதுகாப்பு செயலாளர் ஒருவரும் பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலுடன் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு செயலாளர் பதவியும் செயலிழக்கிறது. இந்நிலையிலேயே, புதிய பாதுகாப்பு செயலாளராக சிறீலங்காவின் முன்னால் இராணுவத் தளபதியும் தமிழின அழிப்பாளர்களில் ஒருவருமான சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலையே பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/news/36783/57//d,article_full.aspx

  16. இலங்கையில் இடம்பெற்ற 7வது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரபால சிறிசேனவை தொலைபேசியில் அழைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ´நான் மைத்திரிபாலவை தொலைபேசியில் மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தேன். இலங்கையில் அமைதியான ஜனநாயக தேர்தலை நடத்தி முடித்த இலங்கை மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். ஒரு நெருங்கிய நண்பன், அயல்நாடு என்ற வகையில் இலங்கையின் சமாதானம், ஒற்றுமை, அபிவிருத்தி, செழிப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும்´ என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/36781/57//d,article_full.aspx

    • 0 replies
    • 368 views
  17. மகிந்த தன் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாக பிபிசி அறிவித்துள்ளது Sri Lanka's Rajapaksa 'admits defeat' in election Sri Lanka's long-time leader Mahinda Rajapaksa has admitted defeat in the presidential election, his office says. President Rajapaksa has dominated politics for a decade, but faced an unexpected challenge from his health minister Maithripala Sirisena. The statement said Mr Rajapaksa would "ensure a smooth transition of power bowing to the wishes of the people". Mr Rajapaksa, who was seeking a third term in office, is credited by many with ending the civil war in 2009. Troops routed the Tamil Tigers after more than two decades of fighting. But righ…

    • 26 replies
    • 2.6k views
  18. ஜோசியர் பேச்சைக் கேட்டு, மண்ணைக் கவ்விய ராஜபக்ச! இலங்கை: எதற்கெடுத்தாலும் நாள் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் கொண்ட ராஜபக்சேவுக்கு எதை எப்படிச் செய்ய வேண்டும், என்று செய்ய வேண்டும் என்பது முதல் கொண்டு அனைத்திலும் ஆலோசனை கூறி வந்த ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தி புதைகுழியில் விழுந்து புதைந்து போய் விட்டார் ராஜபக்சே. நம்ம ஊர் அரசியல் தலைவர்கள் பலர் ஜோசியக்காரர்களை நம்பித்தான் நாட்களைக் கடத்தி வருகிறார்கள். அதேபோலத்தான் ராஜபக்சேவும். அவரும் ஜோசியம், நாள் நட்சத்திரம், அதிர்ஷ்டம், நல்ல நேரம் என அனைத்திலும் நம்பிக்கை கொண்டவர். அவரது ஆஸ்தான அதிர்ஷ்டக் கணிப்பாளராக பல காலமாக திகழ்ந்து வருபவர் சுமனதாச அபயகுணவர்த்தனா என்பவர். பார…

  19. ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு வெளியான இரண்டு நாட்களுக்குள் தன்னுடைய அந்தரங்க உறுப்பின் ஒருபகுதியை அறுத்துவீசப்போவதாக பெண்ணொருவர் தன்னை அச்சுறுத்தியதாக தலாவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தம்புத்தேகம பொலிஸில் நேற்று முறையிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/137271

  20. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் தமிழர் பிரச்சினைக்கு முதலில் தீர்வைக் காணமுன் வரவேண்டும் என்று இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் விஜய் ஜொலி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் முதலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை காண வேண்டும் என்று கூறியிருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஜொலி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையின் ஜனநாயகத்துக்காக சமாதானமான நீதியான தேர்தல் அவசியம் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் …

    • 3 replies
    • 750 views
  21. நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்றுக்காலை 7 மணியளவில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமானது . யாழ்ப்பணத்தில் கற்கோவளம் பாடசாலையில் திரு மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் அவர்கள் வாக்களித்தார். வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்சீவன் ஆகியோரும் இன்று குடத்தனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் வாக்களித்தார். http://www.pathivu.com/news/36726/57//d,article_full.aspx

    • 189 replies
    • 8.7k views
  22. அதிகாலையில் அலரி மாளிகையைச் சுற்றி சிறிலங்கா இராணுவம் குவிப்பு JAN 08, 2015 | 22:03 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகளில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பின்னடைவை கண்டுள்ள நிலையில், அலரி மாளிகைப் பகுதியில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வியாழன் மாலையில் இருந்தே சுமார் 800 வரையான காவல்துறையினர் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய பின்னர், பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கொழும்பு நகரின் வேறு சில பகுதிகளிலும், சிறில…

  23. "கடமையை செய்; பலனை பாராதே" என்று உழைக்கிறேன். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிரான எனது போராட்டம், நடந்து முடிந்த தேர்தலுடன் ஆரம்பித்தது அல்ல. அது என் நண்பன் ரவிராஜுடன் நான் ஆரம்பித்த போராட்டம். பல்லாண்டுகளாக மனந்தளராமல் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து, கொலைக்கார மகிந்தவை வீழ்த்த முதல் நபராக பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்று உழைத்தேன். இன்று நான் இந்த கட்டத்தில் வெற்றிக்கண்டுள்ளேன் என நம்புகின்றேன். ஆனால், மைத்திரிபால ஆட்சி என்பது ஒரு விடுதலை என்றோ, ஒரு மீட்சி என்றோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இதை தாய் நாட்டிலும், புலம் பெயர்ந்தும் வாழும் என் உடன் பிறப்புகள் புரிந்துகொள்ள வேண்டும். வேண்டுகிறேன் ! <மனோ கணேசன்>

    • 0 replies
    • 988 views
  24. எதிர்வரும் சனவரி 8, 2015 அன்று இலங்கையில் நடைபெறவிருக்கும் சனாதிபதி தேர்தல் தொடர்பாக கடந்த 31.12.2014 அன்று வெளியான Indian Express நாளிதழில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்கள் வழங்கியிருக்கும் நேர்காணலில் "குறிப்பாக பிரபாகரனின் சர்வாதிகாரமோ அல்லது மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரமோ தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்காது" என சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். தமிழினத்துக்கு அடையாளம் தந்த தேசியத் தலைவரையும், தமிழின அழிப்பில் முதன்மையானவரான மகிந்த ராஜபக்சவையும் சம்பந்தன் அவர்கள் சமப்படுத்தியமை உலகத்தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது . தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் வாக்குகள் பெறுவதற்கு தேசியத் தலைவரை புகழ்வதும், சில சந்தர்ப்பங்களில் தேசியத…

  25. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில், விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலரும் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. (மலரும்) http://www.tamilmirror.lk/137270

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.