Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனிவாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான திலிப் சின்ஹா, ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரது இடத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையிட் அக்பருதீன் நியமிக்கப்படலாம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர விதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய திலிப் சின்ஹா, கடந்த 31ம் நாளுடன் ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து, ஜெனிவாவில் அவர் வகித்து வந்த பதவி வெற்றிடமாகியுள்ளது. இதுவரை அந்தப் பதவிக்கு இந்திய அரசாங்கத்தினால் புதியவர் எவரும் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய பி.என்.. ரெட்டி, பதில் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். திலிப் சின்ஹா ஜெனிவாவில் பணியாற்றிய…

  2. சுய நிர்ணய கோரிக்கையை கோரிப் போட்டியிடுகிறார் சிறிதுங்க. மகிந்தவுக்கும் மயித்திரிக்கும் இடையில் நடக்கும் அடுத்த மன்னர் யார் என்ற போட்டியில் மக்களின் கோரிக்கைகள் நசுங்கிச் செத்துக்கொண்டிருக்கிறது. நிறைவேற்று அதிகாரத்தை வழங்கிய கையோடு மக்கள் மீட்சி பெற்றுவிடுவார்கள் என்ற போலி நம்பிக்கையில் எதிர்கட்சி பக்கம் திரண்டவர்களும்கூட இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். மயித்திரியின் சிந்தனையும் மகிந்த சிந்தனையாகவே இருக்கிறது. தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை யாராவது கதைத்தால் அது மகிந்தவைப் பலப்படுத்திவிடும் என்ற பயக்காட்டுதலை செய்து உரிமைக் கோரிக்கைகள் நசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதையும் மீறி ஒருவர் தனித்து நிற்கிறார். மயித்திரி மகிந்த என்று பல பெயர்களில் …

  3. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சோதிடராக பணியாற்றிய காலி சுமனதாஸ அபேகுணவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் நிலைமை மோசமானதாக இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.tamilmirror.lk/136925

  4. ராஜபக்ஸக்களாகும் தொண்டமான்கள்... தபால்காரர் மீது செந்தில் தொண்டமான் தாக்குதல் - 03 ஜனவரி 2015 தேர்தல் வன்முறைகளை கண் காணிக்கும் மத்திய நிலையம் தெரிவிப்பு:- இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானால் தாக்கப்பட்டதாக கூறப்படும் தபால்காரர் ஞானசேகரன், பதுளை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115103/language/ta-IN/article.aspx

  5. ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மடுதேவாலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஜனாதிபதியை வரவேற்றார். அங்கு இடம்பெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஜனாதிபதி மடு அன்னையை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு அருட்தந்தையர்களுடனும் கலந்துரையாடினார். http://seithy.com/breifNews.php?newsID=123857&category=TamilNews&language=tamil

  6. வடக்கு கிழக்கு மக்களை தோல்வியடையச் செய்து அவையின்ட போராட்டத்தை தோல்வியடை செய்யிறதில மகிந்தவுக்கு இருக்கிற சிங்களப் பேரினவாத வெறியை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. அதே மகிந்த வடக்கிலயே தோல்வி வடிய வடிய பேசுற ஒரு காலம் வந்துட்டுது பாருங்கோ. மனுசன் பயப்பிடுது… சுதந்திரக் கட்சி தேர்தல் பிரசாரம் ஒண்டு கொழும்பில நடந்தது. அதில சுசந்திகா பேசும்போது தங்கட சனாதிபதியில சில சில குறைபாடுகள் இருக்கலாம் எண்டா… பிறகு அவரின்ட நடவடிக்கையால எங்களுக்கு சில சில பாதிப்ப வந்திருக்கலாம் எண்டா… அப்பிடி இப்பிடி மகிந்தவ சொந்தக் கட்சியே கூட்டத்திலே போட்டு உடைச்சிட்டே? சரி அதுவும் கொழும்போட போகட்டும்… நேற்று யாழ்ப்பாணத்தில நடந்த நீங்கள் பாத்தியள் எண்டால் வாய் விட்டு சிரிச்சு நோய்விட்டு வாழ…

  7. யுத்த காலத்தில் பனை மரங்கள் அழிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து தற்போது பல்வேறு தேவைகளுக்காக அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் யாழ். குடாநாட்டுப் பகுதியில் பலகிப் பெருகி காணப்பட்ட பனை உற்பத்திப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதாக பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரட்ணம், வெள்ளிக்கிழமை (02) தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் பனை மரங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டுவருவதால் யாழ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பனம் விதை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் பனம் பொருள் உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பனை அபிவிருத்தி சபையின் கொள்வனவு விற்பனையை விட தனியார் துறையின் விற்பனையும் கொள்வனவுமே அதிகரித்து காணப்படுகின்றது. தொடர்ந்து பனை மரங்கள் …

  8. யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரக் கூட்டத்தில், சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் அணியினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் அடிவாங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஈ.பி.டி.பி அணியினரும், அங்கஜன் அணியினரும் ஜனாதிபதிக்கு அதிகம் விசுவாசம் உள்ளவர்கள் யார் என்பதை காண்பிப்பதற்காக தேர்தல் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். இதன்போது அங்கஜன் அணியினரில் சில இளைஞர்களை, ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் தள்ளிவிட்டுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த மேடைக்கு அருகிலிருந்த அங்கஜனின் சாரதி…

  9. கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு புதிய அரசியல் மாற்றத்திற்கு வழிசமைக்கும் நல்லாட்சியை நோக்கிய ஆட்சி முறை மாற்றத்திற்காக பொது வேட்பாளரை நிபந்தனை எதுவுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வந்துள்ளமையை வரவேற்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அமைப்பு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இருப்பையும், அபிலாஷைகளையும் பலப்படுத்தும் அரசியல் வியூகத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை கூட்டமைப்பின் இந்த அரசியல் தீர்மானம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. 2013ல் இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தலின்போது, நல்லாட்சிக்கான…

    • 0 replies
    • 377 views
  10. யாழ்.நாவாந்துறையில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம்:- 02 ஜனவரி 2015 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு: இணைப்பு - 2:- யாழ்.நாவாந்துறை பகுதியில் இன்று இரவு இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம். யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இலங்கை இராணுவம் இன்றிரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஓருவர் படுகாயமடைந்துள்ளார். நாவாந்துறையில் உள்ளுர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடையேயான தொடர் மோதலை கட்டுப்படுத்தவென கூறி படையினர் துப்;பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர். இத்துப்பாக்கி சூட்டில் அதே இடத்தை சேர்ந்தவரான 30 வயதுடைய சந்திரகுமார் சண்சிவன் என்பவரே காயமடைந்துள்ளார். வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த இவ…

  11. உட்கட்சி ஜனநாயகம் தமிழ்த் தேசியத்தில் வேண்டும் என கட்சிக்குள் சிலர் போராடி வந்துள்ளோம். அதனை மத்திய குழுவிடமும் பலமுறை பேசியிருக்கிறோம் என இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் சிவகரன் அவர்கள் கூறியுள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் வழங்கிய கருத்துக்களையும் ஊடகவியலாளர் கேள்விகளுக்க வழங்கும் பதில்களையும் இங்கே கேட்கலாம். https://soundcloud.com/pathivucom/mrnsivaharan-press-meet-03012015mp3 http://www.pathivu.com/news/36571/57//d,article_full.aspx

    • 0 replies
    • 338 views
  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு வழிகாட்டக்கூடிய தீர்மானத்தை எடுக்கவில்லை எனக் கருதுகிறேன் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறியுள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் அனந்தி சசிதரன் நடத்திய ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கும் அவர் பதில் வழங்கியுள்ளார். http://www.pathivu.com/news/36569/57//d,article_full.aspx https://soundcloud.com/pathivucom/mrssanaththi-press-meet-03012015mp3

    • 0 replies
    • 221 views
  13. வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எதிரணியினர் வெற்றி பெற்றால், சிறிலங்கா மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டு எதிரணியின் தேவை மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாகவே உள்ளது. எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மத்தியில் தெளிவான கொள்கை வேறுபாடுகள் உள்ளன. இதனால், இன அடிப்படையில் நாடு பிளவுபடும் ஆபத்து உள்ளது. இது சிறிலங்காவில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார். http://www.pathivu.com/news/36554/57//d,article_full.aspx

  14. தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த பாக்கியராஜ் டாருகீசனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாழத்துக்களையும் பாராட்டுக்கனையும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்த மாணவனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தினால் வடக்கு மாகாண மாணவர்களின் கல்வி சீரழிந்து போயிருந்தது. எனினும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்று கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இம்முறை க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதப் பிரிவில் வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஒருவனே தேசிய ரீதியில் முத…

    • 1 reply
    • 412 views
  15. காத்தான்குடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வீடு உட்பட நான்கு பேரின் வீடுகளுக்கு இன்று சனிக்கிழமை (03) அதிகாலை கைக்குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சேறிசேனாவை ஆதரித்து வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான, பொறியியலாளர் சிப்லி பாறூகின் வீட்டின் மீதும் அவரது ஆதரவாளரான புதிய காத்தான்குடி 02ஆம் குறுக்குத்தெருவிலுள்ள எம்.ஐ.எம்.முஜீப் என்பவரின் வீட்டின் மீதும் காத்தான்குடி 06ஆம் குறிச்சி தாறுஸ்ஸலாம் வீதியிலுள்ள ஏ.எல்.இஸ்ஹாக் என்பவரின் வீட்டின் மீதும் காத்தான்குடி அல் அமீன் வீதியில்அமைந்துள்ள எம். பஷீர் என்வரின் வீட்டின் மீதும்இக் கை…

  16. “வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் பேசும் கொள்கையுடையவன் நானல்ல” யாழ். ஐ.ம.சு.மு பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி வடக்கின் அபிவிருத்திக்காக பல மில்லியன் ரூபாய்களை வடமாகாண சபைக்கு ஒதுக்கியுள்ளபோதும் அவற்றில் 50 வீதம் மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகள் வடமாகாண சபையால் மேற்கொள்ளப்படவில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். வடக்கில் ஒன்றை பேசுவது, தெற்கில் ஒன்றைப் பேசுவது என்ற வேறுபட்ட கொள்கை தம்மிடம் கிடையாது எனச் சுட்டிக்காட்டிய அவர், வடமாகாணத்திற்கு வீதி, புகையிரதப் பாதை உள்ளிட்ட உட்கட்டுமான வசதிகள் மாத்திரமன்றி கல்வித்துறையிலும் பாரிய வளர்ச்சியைப் பெற்றுக் கொடுத்திருப்பதாகக் கூறினார். ஐக்கி…

    • 0 replies
    • 324 views
  17. சரத் பொன்சேகாவை சாடுவதற்கு முற்பட்ட வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மகிந்தவின் பெயரைத் தடுமாறி உச்சரித்து விட்டு மன்னிப்புக் கோரினார். இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, சங்கிலியன் பூங்காவை கிட்டு பூங்கா என்று முதலில் தடுமாறினார். போரில் ஒரு மக்களும் இறக்கவில்லையென கிட்டு...... சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் இராணுவத் தளபதி பொன்சேகா துணிகரமாக சொல்லியிருக்கிறார். என சரத் பொன்சேகாவை சாடிக் கொண்டிருந்த தவராசா வாய் தடுமாறி மகிந்தவை பேசியுள்ளார். "தமிழர்கள் சிங்களவர்களை அண்டித்தான் வாழ வேண்டுமென்று கனடாவிற்குச் சென்று உரையாற்றி இரு…

  18. தமிழர் ஒரே நாடு என்று சொன்னால், மகிந்த அரசு இல்லை நீங்கள் வேறு நாட்டவர் என சொல்கிறது : மனோ எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள தேர்தல், நம் நாட்டு ஜனாதிபதி தேர்தல், நாம் இந்த நாட்டு குடிமக்கள், நாம் இந்த நாட்டு தேர்தல் ஆணையாளரின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்கள், தேர்தலில் பங்குபற்றி, வாக்களித்து நமது தேசிய கடமையை நாம் செய்வோம் என வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் முன் வந்தால் அதை இந்த மகிந்த அரசு கொச்சை படுத்துகிறது. அதாவது, நாம் இந்நாட்டவர், இது ஒரே நாடு என்று தமிழர் சொன்னால், இல்லை நீங்கள் வேறு நாட்டவர் என்று மகிந்த அரசு சொல்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஆணையை பெற்ற ஒரு கட்சி. நடைபெற…

    • 0 replies
    • 277 views
  19. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கமான பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். புதுடெல்லியில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, இந்திய – சிறிலங்கா உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்தப் பயணம் தொடர்பாகவே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் அவர் பேச்சு நடத்தியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான சுப்பிரமணியன் சுவாமி, சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அஜித…

    • 0 replies
    • 445 views
  20. ஹாலிஎல மண்சரிவில் 11 பேர் நிலத்தில் புதையுண்டனர்! – மலையகத்தில் தொடரும் சோகம். [saturday 2015-01-03 10:00] ஹாலிஎல, வேவல்ஹின்ன, மெதகம பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில், 5 வீடுகள் புதையுண்டுள்ளதாகவும் அவ்வீடுகளில் இருந்த 11பேர் தொடர்பாக இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவம், பொலிஸார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாலிஎல, வேவல்ஹின்ன, மெதகம பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில், 5 வீடுகள் புதையுண்டுள்ளதாகவும் அவ்வீடுகளில் இருந்த 11பேர் தொடர்பாக இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவம், பொலிஸார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின…

  21. சிறீலங்காவில் 2005 ஆண்டு நடைபெற்ற சனாதிபதித்தேர்தல் 10 ஆண்டுகள் கழித்தும் இன்றும் ஏற்படுத்தும் அதிர்வலைகள் பல. விடுதலைப்புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு தான் மகிந்த ராஐபக்ச வெல்லக் காரணம் என்றும் அதை வைத்ததே தாம் விரும்பிய ரணில் ஆட்சிக்கு வரவில்லை எனப் புலிகள் மேல் தடைகளை விதித்த மேற்கத்திய உலகம் ஒரு புறம், அது புலிகளின் உச்ச தவறு என இன்றும் சப்பை கட்டும் தமிழர் ஒரு புறம் என விவாதங்கள் தொடர்கின்றன. ஆனால் உண்மையில் நடந்தது என்ன? இவர்களின் வாதங்கள் சரியானவையா? புள்ளி விபரங்களுடன் ஒரு அலசல் செய்வோம். முதலில் 2005 இல் போட்டியிட்ட ரணில் மற்றும் மகிந்த ஆகியோருக்கு தமிழர் தாயகத்தில் கிடைத்த வாக்குகளை மாவட்ட ரீதியாக நோக்குவோம் 2005 சிறீலங்கா சனாதிபதித் தேர்தல் மாவட்டம் …

    • 7 replies
    • 961 views
  22. தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால், அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்து, அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பொதுத் துறை முதன்மைச் செயலர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்தது. அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் அகண்ட தமிழகம், தமிழர்கள் வாழும் பகுதிய…

    • 0 replies
    • 436 views
  23. சிறிலங்கா அதிபர் தேர்தல் அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை குறித்து சிறிலங்கா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகைய அறிக்கை உள்நாட்டு விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டுக்கான நோக்கம் மற்றும் பக்கச்சார்பு குறித்த கேள்வியை உருவாக்கியுள்ளது. 1931ம் ஆண்டு தொடக்கம் சிறிலங்காவில் குறித்த கால இடைவெளிக்குள் அமைதியாகவும், இயல்பாகவும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் சுதந்திரமாக தமது வாக்குகளை அளித்து வருகின்றனர். உள்நாட்டு தேர்தல் குறித்து, தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக வெளிநாடுகள் அறிவ…

    • 0 replies
    • 428 views
  24. பெல்மடுல்லவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் மீது சரமாரியான கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மைத்திரிபால சிறிசேன மீது கற்கள் வீசப்பட்ட போதும், காயங்களேதுமின்றித் தப்பினார். தாம் உரையாற்றிக் கொண்டிருந்த போது மேடையை நோக்கி, கூட்டத்தில் இருந்து கற்கள் வீசப்பட்டதாகவும், உடனடியாக தன்னைச் சூழ்ந்து கொண்ட பாதுகாவலர்கள், காப்பாற்றியதாகவும், மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தாம் காயமடையாத போதிலும், மேடைக்கு அருகாக அமர்ந்திருந்த சிலர் காயமடைந்ததாகவும், அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த குறைந்தது 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.http://www.pathivu.com/…

    • 4 replies
    • 970 views
  25. இதைப் பார்க்கும் போது 1980க்களில் போல மக்கள் காட்சியளிக்கின்றனர்.மொத்தத்தில் தமிழர் போராட்டத்தை ஐந்து வருட காலத்தில் 34 வருடத்துக்கு பின்னோக்கிதள்ளிவிட்டார்கள் எனலாமா?

    • 10 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.