Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகிந்தவுக்கு ஆதரவு திரட்டும் மோடியின் ஆலோசகருக்கு 100 மில்லியன் ரூபா கட்டணம் DEC 29, 2014 | 3:51by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திப் பரப்புரை மேற்கொள்வதற்காக, வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் அரவிந்த் குப்தாவுக்கு 100 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரும், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைத்தளப் பரப்புரைகளுக்குப் பொறுப்பாக இருந்தவருமான அரவிந்த் குப்தா, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு உதவுவதாக, தி ஹிந்து நாளிதழ் கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தநிலையில், சிற…

  2. மைத்திரியுடன் தொடர்பு வைத்திருந்த றோ அதிகாரியின் பதவி பறிபோனது? DEC 29, 2014 | 5:11by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே, கொழும்பில் இருந்த இந்தியப் புலனாய்வு அதிகாரி புதுடெல்லிக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோவின் கொழும்பு நிலையத் தலைவர் கே.இளங்கோ, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் கொண்டிருந்த தொடர்பினாலேயே, தனது கொழும்பு பதவியை இழக்க நேர்ந்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. றோ அதிகாரி கே.இளங்கோவின் சேவைக்காலம் நீடிக்கப்பட்ட போதும், அவரைத் திருப்பி அழைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் புதுடெல்லியிடம் வி…

  3. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடம் கோரியமை போன்று மீண்டும் செயற்படவேண்டாம் என துணைவேந்தருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன், திங்கட்கிழமை (29) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தரால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தொடர்பில், கடந்த 24 ஆம் திகதி, யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரிடம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முறைப்பாடு பதிவு செய்திருந்தது. யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளருக்கு, ஆசிரியர…

  4. ஆளும் கட்சியின் பிரதி அமைச்சரான பைஸர் முஸ்தபா பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ககடந்த 26 ஆம் திகதி சிங்கபூருக்கு பயணமாகியிருந்த பைஸர் முஸ்தபா நாடு திரும்பியதும் விசேட அறிவிப்பு ஒன்றினை விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சிங்கபூரிலிருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை நாடுதிரும்பியதும், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதில் ஆளும் கூட்டணியிலிருந்து விலகி நடைபெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. http://onlineuthayan.com/News_More…

  5. ஆளுந்தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகி பிரபல நடிகை சமணலி பொன்சேக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குருணாகலை, கும்புகெட்ட பிரதேசத்தில் வைத்து இன்று காலை 11.30 மணியளவில் ஆளுந்தரப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உட்பட்ட குண்டர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத் தாக்குதலில் பிரபல இசையமைப்பாளர் லக்‌ஷ்மன் விஜேவர்தனவும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். புதிய தலைமுறை அமைப்பின் கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து கொண்டிருந்தபோதே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=814113…

  6. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்கூட்டம் நேற்று (28) இரவு கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது. இந்தியாவில் சிகிச்சைப் பெற்றுவந்த கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியுள்ள நிலையில் அவரது தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது இரு வேட்பாளர்கள் தொடர்பிலும் இருக்கக்கூடிய தமிழ் மக்களுக்குப் பாதகமான விடயங்கள் தொடர்பாக இதில் பங்கேற்றிருந்தவர்கள் எடுத்துக் கூறினார்கள். அத்துடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் குறித்தும், எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் சம்பந்தமாக எதுவுமே சொல்லப்படாத குறைபாடுகள் பற்றியும், தமிழ் மக்களது பிரச்ச…

  7. பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானம்:- 28 டிசம்பர் 2014 பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானித்துள்ள அதேவேளை அதன் தலைவர் ரவூவ் ஹக்கீம், தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். ஹக்கீம் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்;துள்ளார். பிரதான வேட்பாளர்கள் இருவருடனும் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் பின்னரே கட்சி இந்த தீhமானத்தை எடுத்துள்ளது. நேற்;று மாலை இது தொடர்பான இறுதிதீர்மானத்தை எடுப்பதற்காக கட்சியின் முக்கிய அவசர கூட்டமொன்று நேற்று மாலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவளிப்பதை வரவேற்றுள்ள அதேவளை சில…

  8. பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின், மஹியங்கனை காரியாலயம் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மஹியங்களை நிதஹாங்கல சோரபொர எனுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை காரியாலயத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வானில் நேற்றிரவு வந்த 15பேர் கொண்ட குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டு துப்பாக்கிப்பிரயோகத்தையும் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த தாக்குதலினால் மூவர் காயமடைந்துள்ளனர் என்று மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. காரியாலயத்தில் இருந்த அங்கவீனமான முன்னாள் இராணுவ கேர்ணல் மற்றும் இன்னும் இருவரே காயமடைந்துள்ளனர்.…

  9. வெள்ளம் காரணமாக வலையிறவு பாலத்தினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச மக்களுக்காக இயந்திர படகுச் சேவையை மட்டக்களப்பு மாநகரசபை ஞாயிற்றுக்கிழமையும் (28) ஆரம்பித்துள்ளதாக மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார். தேவைகள் கருதி வவுணதீவுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நகருக்கு மக்களுக்காக வேண்டி இரண்டு இயந்திரப் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். http://www.tamilmirror.lk/136594#sthash.kEuuvYNy.dpuf

  10. சிறிலங்கா அதிபர் தேர்தல் பிற்போடப்படாது – தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு DEC 29, 2014 | 2:42by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் நிலவும் மோசமான காலநிலையால், வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைப் பிற்போடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலைப் பிற்போடுமாறு எந்தவொரு வேட்பாளரிடம் இருந்தோ, அவர்களின் முகவர் அல்லது சட்டவாளரிடம் இருந்தோ வேண்டுகோள்கள் ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால், தேர்தல் பிற்போடப்படலாம் என்று நேற்று ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் இந்த அறிவிப்பை …

  11. "ஆயுதபலம், ஆட்சிப்பலம், பணப்பலம் மூலமன்றி மக்கள் பலத்தின் மூலம் மஹிந்த ராஜபக்‌ஷன் சர்வாதிகார - பயங்கர ஆட்சியைத் தூக்கிவீசுவேன்; நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை ஜனவரி 9ஆம் திகதி முதல் உருவாக்குவேன். இதற்கான போராட்டத்தில் சகல இனங்களும் பல்வேறு கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன." - இவ்வாறு தெரிவித்தள்ளார் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. பேருவளையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "வரலாற்றுப் புகழ்மிக்க பேருவளை நகரில் அணிதிரண்டுள்ள மக்கள் கூட்டம் எனது பெரு வெற்றியை உறுதிசெய்கிறது. நாட்டில் தற்போதுள்ள தனிமனித அதிகாரத்திற்கு முடிவு கட்டவே நான் களமிறங்கியுள்ளேன்'' "ஜனவரி 8ஆம் திகதி எனது வெற்றி உறுதி. என…

  12. அரசாங்கமே புலிகளுடன் இணைந்து செயற்படுகின்றது – NBC: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 29 டிசம்பர் 2014 அரசாங்கமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் அசராங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு மக்கள் தேர்தலை புறக்கணிக்கச் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் சிரில் ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்த போது இந்த திட்டம் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டது என சுட்டிக…

  13. முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரி பக்கம் தாவியது ஏன்? – அமைச்சர் சுசில் விளக்கம் DEC 28, 2014 | 15:20by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்துக்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாவியதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று சிறிலங்கா அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரிவினைவாத நிகழ்ச்சிநிரலைக் கொண்டிருந்தது. கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை தொகுதிகளை இணைத்து புதிய தனியான முஸ்லிம் நிர்வாக மாவட்டத்தை அமைக்குமாறு, முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிராகரித்து விட்டார். அதனால் தான் முஸ்லிம் கா…

  14. பிரதியமைச்சர் முத்துஹெட்டிகம விமானநிலையத்தில் கைது 28 டிசம்பர் 2014 இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவிருந்த கூட்டமொன்றுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையொன்றுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். நிஷாந்த முத்துஹெட்டிகம எதிரணியின் பிரசார மேடையை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகின்றதுநீர்கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பிரதியமைச்சரை எதிர்வரும் 30-ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார். பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது…

  15. வட பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் நேர்ந்தால் தேர்தல் இரத்தாகும்?! வடபகுதி மக்களில் எவரேயேனும் அச்சுறுத்தி வாக்களிக்காமல் செய்யும் பட்சத்தில் தேர்தல் முழுமையாக இரத்துச் செய்யப்படும். இவ்வாறு எச்சரித்திருக்கிறார் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு:- இராணுவத்தினரின் அராஜக நடவடிக்கைகளால் வட பகுதி மக்கள் தேர்தலை பகிஷ்கரிக்கத் தயாராகின்றனர் என வட மாகாணத்தின் உதவி தேர்தல் ஆணையாளர்கள் எவரும் இதுவரை எனக்கு தெரியப்படுத்தவில்லை. இராணுவம் மக்கள் வாக்களிப்பை தடுக்கும் எனவும் நான் கருதவில்லை. எனினும் வடக்கின் நிலைமை தென்பகுதியை விட வித்தி…

  16. கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மையை இழந்தது மகிந்தவின் கூட்டணி DEC 29, 2014 | 3:16by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. 37 ஆசனங்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், 14 ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களைப் பெற்றிருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து, கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைத்திருந்தது. விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு உறுப்பினரும், ஆளும்கட்சிக்கு ஆதரவளித்து வந்தார். இந்தநிலையில், அண்மைய அரசியல் மாற்றங்களை அடுத்து, சிறிலங…

  17. தாய்வான் கண்காணிப்பாளர்களுக்கு சிறிலங்கா தடை DEC 28, 2014 | 19:44by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில், தாய்வான் நாட்டவர்களை ஈடுபடுத்துவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தடை விதித்துள்ளது. வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, தாய்வானில் இருந்து 15 கண்காணிப்பாளர்களை அழைக்க, தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று அனுமதி கோரியிருந்தது. தேர்தல் ஆணையாளர் மூலம் விடுக்கப்பட்ட இந்த அனுமதியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. தாய்வான் நாட்டு கண்காணிப்பாளர்களுக்கு, நுழைவிசைவு வழங்க முடியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறிவிட்டதால், தம்மால் அவர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று சிறிலங்கா…

  18. ராஜபக்ச குடும்பம் தப்பிச் செல்வதற்காக 350 தொன் தங்கத்தை விற்றது: லங்கா ஈ நியூஸ் Japuga இடமிருந்து கார்தீபனுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் ராஜபக்ச குடும்பம் பெரிய தொகையிலான தங்கத்தை ஜப்பானிய வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தேர்தலில் தோல்வியைத் தழுவினால் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதற்காக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் லங்கா ஈ நியூஸ் இணையம் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளது. மைத்திரிபால சிரிசேனவின் வெற்றிக்காக நிபந்தனையற்ற பிரச்சாரம் மேற்கொள்ளும் இணையங்களில் லங்கா ஈ நியூஸ் உம் ஒன்று. தங்க விற்பனை தொடர்பான செய்தி வருமாறு: நாட்டிலிருந்து ராஜபக்ச குடும்பம் திருடியுள்ள 350 தொன் தங்கத்தை ஜப்பானிய மில்லியேனேரான Keiji Matsumura என்பவருகு விற்ப…

  19. தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக பணமும் அமைச்சுப் பதவியுமா..? – இரவி கட்டுரைகள் | DECEMBER 27, 2014 5:53 AM மைத்திரிபால – தமிழரசுக் கட்சி இரகசிய உடன்பாடு பற்றி கசிகின்ற உண்மைகள் தமிழ் தேசியக் சுட்டமைப்பினருக்கும், 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குழுவினருக்கிடையிலான இரகசியச் சந்திப்பு ஒன்று கொழும்பில் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றுள்ளது. பொது எதிரணி தரப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்கா, சந்திரிகா பண்டாரநாயகா குமாரணதுங்க, மைத்திரிபால சிறிசேன, மங்கள சமரவீர, ஜெயம்பதி விக்ரமரட்ன முதலானோர் பங்கேற்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பிலிருந்து தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் ச…

  20. மலையக வீட்டு, காணி பிரச்சினைகள் தொடர்பாக தூங்கி கொண்டிருந்த என் நண்பர் ஆறுமுகன் தொண்டமானை, தூங்காதே தம்பி, தூங்காதே என்று நாம் இன்று தட்டி எழுப்பியுள்ளோம், இன்று அவர் மலையகத்தின் எந்த பகுதிக்கும் சென்று சந்திரனை தருகிறோம், இந்திரனை தருகிறோம், வீடு கட்டி தருகிறோம், கடை கட்டி தருகிறோம் என்றெல்லாம் சொல்லி, எங்கெல்லாம் அடிக்கல் நாட்டினாலும் அவற்றிற்கான அனைத்து பெருமைகளும் எங்களையே சாரும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், எட்டியாந்தோட்டை கலுபான, உருளைவள்ளி, எதிராபொல, கிரிபோருவ, களனி, பனாவத்தை, டெக்லாஸ், தெனடின் தோட்டங்களில் நடைபெற்ற தொடர் கூட்டங்களில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 50,00…

  21. அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாடில் இன்று சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை என்ற தலைப்பில் மக்கள் சந்திப்பும் கலந்துரையாடல் ஒன்றும் இன்று 3 .30 மணியளவில் சுழிபுரம் பண்ணாகம் அம்பாள் கலைமன்றத்தில் இடம்பெற்றது சி.கிரிகுமார் தலைமையில் நடை பெற்றது. இவ் மக்கள் சந்திப்பில் புவிதரன் சட்டத்தரணி, காண்டீபன் சட்டத்தரணி, சி.ஆ .யோதிலிங்கம் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளரும் நிலாந்தன் அரசியல் ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் சிற்றம்பலம் இன்னும் பல விரிவுரையாளர்கள் சட்டத்தரணிகள் கலந்துகொண்டு ஒரு அரசியல் தெளிவினை மக்களுக்கு ஏற்படுத்தியதுடன் அவர்களின் அரசியல் அபிலாசைகளையும் கருத்துக்களையும் கேட்டுத்தெரிந்துகொண்டனர் இவர்களுடன் யாழ் சிவில் சமூகமும் கலந்துகொண்டது.…

  22. இலங்கையில் நிகழும் ஜனாதிபதி தேர்தல் இரு சிங்கள பேரினவாத ஆற்றல்களுக்கிடையே நிகழும் தேர்தல். தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தமிழினப்படுகொலைக்கான நீதி, குற்றவாளிகளுக்கான தண்டனை என தமிழர்களின் எந்த ஒரு அடிப்படை அரசியல் கோரிக்கைகளுக்கும் விவாதத்தினை நேர்மையாக நிகழ்த்தாத சிங்களப் பேரினவாதத்திடம் தமிழர்கள் எந்தவகையான அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்பதை சிந்திக்க வேண்டிய தருணமாக மே17 இதை பார்க்கிறது. அதே தருணத்தில் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலில் இருதரப்பு விசாரணை என்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் நல்லிணக்கம் வேண்டி முன்னெடுக்கப்படும் விசாரணை எந்தவித நலனையும் தமிழர்களுக்கு வழங்கிடப் போவதில்லை. ஆட்சி மாற்றமே இலங்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வு என பேசும் மேற்குலகம், ராஜபக்சேவை தனது கை…

  23. முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகிய முத்தையன்கட்டுக் குளத்தின் வான்கதவுகள் திங்கட்கிழமை (29) காலை 7 மணிக்கு திறந்துவிடப்படவுள்ளதாக முத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தார். முத்தையன்கட்டு நீர்ப்பாசனக் குளத்தின் கீழுள்ள 6 குளங்களில் ஏற்கனவே வான் பாய்ந்து வரும் நிலையில், முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டம் தற்போது 20 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு நாட்களாக சராசரியாக 57 மில்லிமீற்றர் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் குளத்தின் நீர்மட்டம் திங்கட்கிழமை (29) காலைக்குள் 21 அடியாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் முத்தையன்கட்டு குளத்தின் 2 வான் கதவுகளையும் திறந்து விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது…

  24. தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசு தயாராகவே இருக்கிறது. இப்படித் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்‌ஷ. மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் பஸில். மஹிந்தவுக்கு ஆதரவாக ஊடகங்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு:- "தெற்கு மக்களுக்கு நல்லிணக்க சமிக்ஞையைக் காட்ட வடக்கு மக்களுக்கு இந்த ஜனாதிபதித் தேர்தல் அருமையானதொரு வாய்ப்பாகும். இதனை தமி…

    • 2 replies
    • 558 views
  25. தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா யாழ்ப்பாணத்துக்கு இன்று சனிக்கிழமை வருகைதந்தார். இவருக்கான வரவேற்பு நிகழ்வு யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரக பிரதித் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி, இலங்கை தமிழரசுக்கு கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர். - http://www.malarum.com/article/tam/2014/12/20/7564/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE…

    • 30 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.