ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துமாறு அமெரிக்காவும் இந்தியாவும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலுக்கான சூழலை இல்லாமல் செய்யாது அதனை பாதுகாக்க உரிய முனைப்புகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் இந்த ராஜதந்திர வேண்டுகோளை விடுத்துள்ளனர். புதுடெல்லியில் இருந்து கிடைத்த செய்தியை இந்திய உயர்ஸ்தானிகர் அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கு அறிய தந்துள்ளார். அமெரிக்க அரசின் செய்தியை அந்த நாட்டு தூதுவர் அரசாங்கத்தின் உயர் செயலாளர் ஒருவரிடம் வழங்கியுள்ளார். குறிப்பாக வடக்கு மக்களி…
-
- 2 replies
- 445 views
-
-
வரும் மார்ச் 25 இல் சமர்ப்பிக்கப்படுகிறது ஐ.நா விசாரணை அறிக்கை DEC 21, 2014 | 12:32by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் சிறிலங்கா குறித்த விசாரணைகளின் அறிக்கை வரும் மார்ச் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர், ஜெனிவாவில் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் நாள் தொடக்கம் 27ம் நாள் வரை இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் குறித்த உத்தேச நிகழ்ச்சி நிரலை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ளது. இந்த உத்தேச நிகழ்ச்சி நிரலிலேயே மார்ச் 25ம் நாள் சிறிலங்கா குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படடுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேர…
-
- 0 replies
- 482 views
-
-
நன்றி - யுரூப்
-
- 1 reply
- 677 views
-
-
ஹப்புத்தளையில் ஐதேக கூட்டம் மீது ஆளும்கட்சி குண்டர்கள் தாக்குதல் – 5 பேர் காயம். DEC 20, 2014by மலையகச் செய்தியாளர்in செய்திகள் பதுளை மாவட்டத்தில் உள்ள ஹப்புத்தளையில், இன்று மாலை எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஐதேக நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் மீது ஆளும்கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர். பரப்புரைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும், ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னான்டோ ஆகியோர் வருகை தருவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்து ஆலய மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில், வைக்கப்பட்டிருந்த பதாதைகள் மற்றும் அலங்காரங்கள் ஆளும்கட்சியின் …
-
- 2 replies
- 378 views
-
-
தமக்குள்ள பாதுகாப்பை அகற்றி விட்டு அரசு என்னை கொலை செய்யவே முயற்சிக்கிறது என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலகமுவையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் தனக்கான பாதுகாப்பிற்கு 7 பாதுகாப்பாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக் ஷவிற்கு எந்தளவு பாதுகாப்பு உள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளனர். எனினும் மக்களின் ஆதரவு பாதுகாப்பும் எனக்கிருப்பதால் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை. மக்கள் பாதுகாப்பே எனக்குள்ளது என்ற மன நிறைவோடு நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக தேர்தலில் இறங்கியுள்ளேன் பயத்துடனும் அச்சத்துடனும் வாழ்வதை வ…
-
- 0 replies
- 457 views
-
-
மைத்திரியின் தேர்தல் அறிக்கை – கூட்டமைப்பு அதிருப்தி DEC 21, 2014 | 0:12by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், “வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினை குறித்தும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் தீர்க்கத் தவறிய, வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் எதிர்நோக்கும், முக்கியமான பல பிரச்சினைகள் க…
-
- 3 replies
- 545 views
-
-
அம்பாந்தோட்டையில் மீண்டும் சீனா DEC 21, 2014 | 0:09by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சீனா தளம் அமைக்கப் போவதாக அனைத்துலக ஊடகங்களால் ஊகம் வெளியிடப்படும், அம்பாந்தோட்டையில், 16 மில்லியன் டொலர் பெறுமதியான மற்றொரு அபிவிருத்தித் திட்டத்தை சீனாவிடம் கையளித்துள்ளது சிறிலங்கா அரசாங்கம். ஒருங்கிணைந்த பேருந்து-தொடருந்து முனையத்தை அமைக்கும் திட்டமே தற்போது சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனமே, சிறிலங்கா நாணயப் பெறுமதியில் சுமார் 2 பில்லியன் ரூபா பெறுமதியான இந்த திட்டத்தை நிறைவேற்றவுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கப்படும் இந்த திட்டம், ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் என்று திட்டத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.காமினி தெரிவித்து…
-
- 1 reply
- 394 views
-
-
சீனாவின் திட்டத்துக்கு சிறிலங்காவில் வலுக்கிறது எதிர்ப்பு DEC 20, 2014 | 0:24by கார்வண்ணன்in செய்திகள் சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு சிறிலங்காவில் அரசியல் மட்டத்தில் மட்டுமன்றி, சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்தும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது. தாம் ஆட்சிக்கு வந்தால், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை கைவிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்த திட்டத்தினால், சிறிலங்காவின் மென்மையான கடற்சூழல் பாதிக்கப்படும் என்று, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. பெரும் எண்ணிக்க…
-
- 1 reply
- 466 views
-
-
மலேசியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை பெண்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மலேசியாவில் ஜொஹோர் பொலிஸார் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வரையிலும் 10ஆயிரத்து 300 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர். அவற்றின் போது மலேசியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெண்கள் 2,986 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அறுவர் இலங்கையர் ஆவர். மலேசிய பெண்கள் 102 பேரும் சீனப்பெண்கள் 627 பேரும் வியட்னாம் பெண்கள் 1,341 பேரும் தாய்லாந்து பெண்கள் 555 பேரும் இந்தோனேசிய பெண்கள் 229 பேரும் கம்போடியா, சிங்கபூர் மற்றும் வெனிசுலா நாடுகளைச்சேர்ந்த தலா ஒவ்வொரு பெண்கள் மற்றும் …
-
- 0 replies
- 683 views
-
-
இரணைமடுக் குளத்துக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது என்றும், தற்போது குளத்தின் நீர்மட்டம் 30 அடியை எட்டியுள்தால் எவ்வேளையிலும் வான் கதவுகள் திறக்கப்படலாம் எனவும் கிளிநொச்சி நீர்ப்பசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக குளத்தின் கீழ் உள்ள தாழ்நிலப்பகுதிகளிலுள்ள மக்களை அவதானத்துடன் இருக்கும்படி கேட்டக்கட்டுள்ளது. இதேவேளை, வீதிப்புனரமைப்பு பணிகளின்போது அமைக்கப்பட்ட தற்காலிக பாலங்கள், வீதிகளை அழிக்கும் நடவஎக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. - http://www.malarum.com/article/tam/2014/12/20/7569/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%…
-
- 1 reply
- 2.3k views
-
-
மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (21) 8.30 மணிவரையான 48 மணிநேர காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களிக் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாவற்குடா, தாளங்குடா, காத்தான்குடி, ஆரையம்பதி, சித்தாண்டி, ஏறாவூர் உள்ளிட்ட பல பகுதிகளும் மற்றும் மட்டக்களப்பு நகரின் மாமாங்கம், சின்ன ஊறணி, சின்ன உப்போடை, திசவீரசிங்கம் சதுக்கம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதோட…
-
- 0 replies
- 392 views
-
-
யாழ்ப்பாணம், திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள வீடுகளின் மீது சனிக்கிழமை (20) இரவு கற்களை எறிந்தும் கதவுகளை காலால் உதைத்தும் இளைஞர் குழுவொன்று அட்டகாசம் செய்ததாக அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அயலவர்கள் ஒன்றுகூடிய போது, அட்டகாசம் செய்த இளைஞர்கள் அவ்விடத்தில் இருந்த ஓடிவிட்டனர். 119 இலக்கத்துக்கும் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கும் அப்பகுதி மக்கள் அறிவித்ததை அடுத்து, அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், பாதிக்கப்பட்டவர்களை ஞாயிற்றுக்கிழமை (21) காலை பொலிஸ் நிலையத்தில் புகார்செய்யுமாறு பணித்தனர். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2…
-
- 0 replies
- 522 views
-
-
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வடக்கிற்கு செல்ல கட்டுப்பாடு DEC 21, 2014 | 0:36by கார்வண்ணன்in செய்திகள் அதிபர் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை, வடக்கிற்கு சுதந்திரமாக சென்று வருவதற்கு அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்துலக கண்காணிப்பாளர்கள், வடக்கிற்குச் செல்ல வேண்டுமானால், தேர்தல் ஆணையாளரின் பரிந்துரையுடன், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் சிறப்பு அனுமதியை பெற வேண்டும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். “ வடக்கிற்கான பயணக் கட்டுப்பாடுகளை நாம் நீக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி, வடக்கிற்கு வ…
-
- 0 replies
- 312 views
-
-
சிறிலங்காவுக்கு இரு போர்க்கப்பல்களை விற்கிறது இந்தியா DEC 20, 2014 | 13:19by அ.எழிலரசன்in செய்திகள் சிறிலங்காவுக்கு இரண்டு போர்க்கப்பல்களை இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளதாக, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவினால், ஏற்றுமதி செய்யப்படும் முதலாவது போர்க்கப்பலை, கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் ஒன்று முதல் முறையாக மொறிசியசுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்று இந்த போர்க்கப்பலை கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர். ராவ் இந்திரஜித் சிங், இரண்டு ஆழ்கடல்ரோந்துக் கப்பல்களுக்கு சிறிலங்காவிடம் இருந்து கொள்வனவுக்கட்டளை வந்துள்ளது. இவை தற்போது கோவா கப்பல் கட்…
-
- 0 replies
- 372 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்! – அமைச்சர் ஐங்கரநேசன் தகவல். [saturday 2014-12-20 08:00] கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்துக்கு சுமார் 5200 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படும் இந்த நீர் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட சுன்னாகம் பிரதேசத்துக்கும் வழங்கப்படும் என்று வடக்கின் விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் வரவு செலவுத் திட்டத்தில் நேற்று விவசாய அமைச்சுக்காக முன்மொழியப்பட்ட செலவீனங்களை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு விவசாய அமைச்சுக்கு 101 கோடியே 42 இலட்சத்து 24 ஆயிரம் ரூபா ஆனால்…
-
- 4 replies
- 491 views
-
-
http://youtube.com/watch?v=2XoA7O4gwCg
-
- 1 reply
- 556 views
-
-
-ரஞ்சித் ராஜபக்ஷ மலையகத்தில் 50,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், டயகமை பிரதேசத்தில் அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை(19) டயகமவில் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்தோடு டயகம வௌர்லி தோட்ட பகுதியில் வீடுகள் அற்ற நிலையில் உள்ளவர்களுக்கான 75 வீடுகள் அமைக்கப்படவுள்ளதோடு மொத்தமாக இப்பிரதேசத்தில் 100 வீடுகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வீடுகளை நிர்மாணிப்ப…
-
- 1 reply
- 302 views
-
-
வடமாகாண முதலமைச்சரின் பேரில் ஒரு உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கைத் திறக்கக் கூட ஆளுநர் அனுமதிக்கின்றார் இல்லை. ஆனால் தம் பெயரில் ஆளுநர் நம்பிக்கை பொறுப்பு வங்கிக் கணக்கு என்று ஒன்றை வைத்திருந்து அதைச் செயல்படுத்தி வருகின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முழங்காவிலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இன்று எமது வடமாகாண அபிவிருத்தியானது ஏன் கிழக்கு மாகாண அபிவிருத்தி கூட எமது உறவுகளின் ஊக்குவித்தலிலும் உற்சாகத்திலும் தான் தங்கியுள்ளது. எம்மை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தி, பல வித தடங்கல்களைத் தந்து, தடைகளைப் போட்டு தகுந்தவாறு அபிவிருத்தியடைய அ…
-
- 0 replies
- 335 views
-
-
தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை முதன்மைப்படுத்தி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். இதில் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்தோ, தீர்வுத் திட்டம் குறித்தோ எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை. மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் '100 நாட்களுக்குள் புதிய தேசம்' என்ற மகுட வாக்கியத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:- பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன். 1994இலிருந்து நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக மக்களுக்கு உறுதியளித்து வந்துள்…
-
- 8 replies
- 825 views
-
-
யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதலை தடுக்கும் விதத்தில் மனிதக்கழிவகற்றல் திட்டம் ஒன்று 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமூக அணிதிரட்டல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதல் பிரச்சனைக்குத் தீர்வு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு இன்று காலை 10 மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். யாழ்ப்பாணத் தரைக்கீழ் நீர் மாசடைதலுக்கு முக்கிய காரணமாக வன்னீர் பிரச்சனையே காணப்படுகின்றது. அதாவது தண்ணீர் ஏனைய இடங்களை விட வன்னீராக இருக்கின்றது. காரணம் சுண்ணாம்புப் படிவுகள் நீரில் காணப்படுதல்,மலசலகூடங்கள் மூலம் நீரில் ஈகோலி அ…
-
- 6 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களிக் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ன. நாவற்குடா, தாளங்குடா, காத்தான்குடி, ஆரையம்பதி, சித்தாண்டி, ஏறாவூர் உள்ளிட்ட பல பகுதிகளும் மற்றும் மட்டக்களப்பு நகரின் மாமாங்கம், சின்ன ஊறணி, சின்ன உப்போடை, திசவீரசிங்கம் சதுக்கம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம புகுந்துள்ளதோடு வீதிகளும் வெளளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று (19) காலை 8.30 மணி முதல் இன்றுகாலை (20) 8.30 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதியில் மட்டக்களப்பில் 147.8, மயிலம்பாவெளியில் 98.7, பாசிக்குடாவில் 126.5 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார் http://thinakkural.lk/arti…
-
- 2 replies
- 373 views
-
-
-ஏ.எம்.அப்துல் பரீத் மூதூர், கிண்ணியா பிரதேசங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நில பிரதேசங்களிலுள்ள குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூதூர் பிரதேசத்தில் ஜாயா நகர், ஆலிம் நகர், ஹைரியா நகர், ஷாபி நகர் மற்றும் கிண்ணியா பிரதேசத்தில் காக்கா முனை, தம்பலகாமம் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள தாழ்நில பிரதேசங்களிலுள்ள குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேவேளை, கொட்டியாரக்குடா கடல் சீற்றம் கொண்டுள்ளதனால் ஹபீப் நகர், தக்வா நகர் கரையோரக் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/--main/136240-2014-12-20-06-05-21.html
-
- 2 replies
- 438 views
-
-
தலாவ தம்புத்தேகமைக்கு இடையிலுள்ள தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியமையினால், வடக்குக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/136233-2014-12-20-05-31-01.html
-
- 1 reply
- 287 views
-
-
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கினால் பாதீக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ள மக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் இன்று சனிக்கிழமை காலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதோடு அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ளுமாறு உரிய பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த வகையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்னார் தீவுப்பகுதியைச் சேர்ந்த எமிழ் நகர்,சௌத்பார்,சாந்திபுரம் , ஜீவபுரம் ஆகிய கிராமங்கள் மற்றும் தலைமன்னார் ஸ்ரேசன் கட்டுக்காரன் குடியிறுப்பு,துள்ளுக்குடியிறுப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதீப்படைந்து இடம் பெயர்ந்துள்ளனர். இக்கிராம மக்கள் தற்போது இடம…
-
- 0 replies
- 302 views
-
-
அப்புத்தளையில் எதிர்கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்க உரையாற்றவிருந்த பொதுக்கூட்டத்தின் மீது அவர் அங்கு வருவதற்கு சற்று முன்னர் காடையர் கும்பலொன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஊவா மாகாணசபை எதிர்கட்சி தலைவர் ஹரிண்பெர்ணாண்டோ ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்புத்தளை நகரசபை தலைவரின் சகோதரரும் அவரது ஆதரவாளர்களுமே இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ள ஹரீண்பெர்ணாண்டோ, அவர்கள் மேடையை சேதப்படுத்தி உள்ளதுடன், கொடிகளை பிடுங்கி எறிந்துள்ளதாகவும், கூட்டத்தை நிறுத்துமாறு அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் முன்னிலையில் அரசதரப்பு அரசியல்வாதியொருவர் இந்த தாக்குதல்களை மேற்கொண்டனர்,பொலிஸார் வெறுமனே வேடிக்கை பார்த்தவண்…
-
- 0 replies
- 226 views
-