ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
14 நாடாளுமன்ற, 50 ற்கும் மேற்பட்ட மாகாணசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மைத்திரி பக்கம் சாய்ந்தனர்:- சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுடனான பேச்சுவார்த்தைகள் வெளிநாடுகளில் நடைபெறவில்லை, பாராளுமன்றத்திலும், அலரிமாளிகைக்கு அருகாமையிலும் இடம்பெற்றன என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக நாங்கள் சிங்கப்பூரிற்கு செல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை, இரகசிய சந்திப்புகளிற்காக நாங்கள் இலங்கையைவிட்டு வெளியே செல்லவில்லை, அனேகமான பேச்சுவார்த்தைகள் நாடாளுமன்றத்திலேயே இடம்பெற்றன, ஏனையவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திற்கு அருகில் இடம்பெற்றன. என அவர் குறிப்…
-
- 0 replies
- 535 views
-
-
ஊழலை ஒளித்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதே மக்களின் நோக்கம் என CPA கருத்துக் கணிப்பு கூறுகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தேர்தல் நாளை நடைபெற்றால் மைத்திரிபாலசிறிசேனா வெற்றிபெறுவார் என மாற்றுக்கொள்கை நிலையம் நடத்திய ஆய்வில் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாற்றுக்கொள்கை நிலையம் இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது... ஜனாதிபதி தேர்தல் குறித்து மாற்றுக்கொள்கை நிலையம் இணையம் மூலமாக ஆய்வொன்றினை மேற்கொண்டது,தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை எதிர்வு கூறுவது இதன் நோக்கமல்ல மாறாக தேர்தல் தொடர்பாக மக்களின் கருத்தை பெற்று அரசியல் விவாதங்களுக்கு பயன்படுத்துவதே இதன் நோக்கம். குறிப்பிட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் நாட்டை பாதிக்கின்…
-
- 0 replies
- 654 views
-
-
காலி வந்துரம்ப நகரில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசார கூட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சிலர் தீ வைத்துள்ளனர். மேடை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிற்கும் அவர்கள் தீ வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று காலை ஆறு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/36130/57//d,article_full.aspx
-
- 4 replies
- 865 views
-
-
நாம் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் இல்லாதொழித்தபோதும் இன்று அதன் நிழல்கள் சர்வதேசங்களில் செயற்படுகின்றன என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பாராளுமன்றத்தை அமைத்து அமைச்சரவையை நியமித்து பிரதமர் ஒருவரை தேர்ந்தெடுத்து தனியான அரசாங்கமொன்றை நடத்தி வருன்றனர். “அரசாங்கத்தைத் தோற்கடித்து அவரை எம்மிடம் அனுப்புங்கள்” என்று அவர்கள் கூறி வருகின்றனர். என்னை சர்வதேச இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தி மின்சாரக் கதிரையில் தண்டனை பெற்றுக் கொடுப்பதே அவர்களின் நோக்கம். இன்னொரு பக்கம் இங்குள்ளவர்கள் விமான நிலையத்தை மூடும் கதைகளைக் கூறுகின்றனர். 8ம் திகதி இரவு 12.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடப் போகின்றார்களாம். நான் இந்த நாட்டைக் கைவிட்ட…
-
- 6 replies
- 814 views
-
-
நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள மாயானம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கிளைமோர் குண்டுகள், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து மறைத்து வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எதிரணி அரசியல் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது வேட்பாளரின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று கம்பஹா நகரசபை மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்படவிருந்தது. அவரது மாமியாரின் இறுதிக் கிரியைகள் நேற்று வெலிவேரிய பிரதேசத்தில் நடைபெறவிருந்த காரணத்தினால், கூட்டம் பிற்போடப்பட்டது. நிட்டம்புவ, தெபஹெர மாயானத்தில் மாலை நேரத்தில் மாடுகளை கட்ட சென்ற ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே அங்கிருந்த கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டன. கு…
-
- 2 replies
- 493 views
-
-
75 வீதமான யுத்தத்தை நானே முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்கிறார் சந்திரிக்கா 16 டிசம்பர் 2014 75 வீதமான யுத்தத்தை தாமே முடிவுக்குக் கொண்டு வந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமது ஆட்சிக் காலப்பகுதியிலேயே 75 வீதமான புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். சந்திரிக்காவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தாம் ஆட்சியை ஏற்றுக் கொண்ட போது, ஐந்து ஆறு இராணுவ முகாம்களைத் தவிர்ந்த ஏனைய ஒட்டுமொத்த வடக்கினையும் புலிகளே கட்டுப்படுத்தி வந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஒரு ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத…
-
- 5 replies
- 742 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மாத்திரம் தான், மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன என அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பொன்று கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை தொழிற் பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பெருந்தோட்டபுறங்களிலுள்ள படித்த இளைஞர் யுவதிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கு…
-
- 1 reply
- 485 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ள போதும், விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 10 ஈழத் தமிழர்களுக்கு ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று சிறை தண்டனை விதித்துள்ளது. எட்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 12ம் திகதி ஜேர்மனி – பேர்ளினில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தண்டிக்க முடியாது என்று வாதாடினர். எனினும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம் அவர்களுக்கு 6 முதல் எட்டு மாத…
-
- 12 replies
- 1.2k views
-
-
ஜனநாயகமும் சமாதானமும் இல்லாத எமது நாட்டில் அரசாங்கம் நல்லாட்சி தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றது. நல்லாட்சியின் அர்த்தம் புரியாத அரசாங்கத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும். நல்லாட்சி என்றால் என்ன என்பதை அறிந்து புரிந்து கொள்வதற்கு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வரவேண்டுமென்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார். பலப்பிட்டியவில் நேற்று மாலை பொது எதிரணியின் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மைத்திரிபால சிறிசேனா இவ்வாறு சவால் விடுத்திருந்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தினையும் பறித்து விட்ட…
-
- 2 replies
- 287 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக வீடு செல்ல வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்தவின் இரண்டாம் தவணைக்கான ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள போதிலும் வேறும் ஓர் வேட்பாளர் வெற்றியீட்டினால், உடனடியாக பதவியை விட்டு விலக நேரிடும் என அவர் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத்தின் 31(4) சரத்தின் அடிப்படையில் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டு 14 நாட்களில் பதவிப் பிரமாணம் செய்த…
-
- 1 reply
- 352 views
-
-
பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரத்திலிருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றிருந்தது. 65 வருடமாக இலங்கைத் தீவில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டியும், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு தனது விசாரணையை முழுமைபெற வன்னிசென்று தமிழினப் படுகொலை செய்யப்பட்ட இடங்களை பார்வையிடுவதுடன,; அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியான சாட்சியங்களைப் பெற்று, தமிழின அழிப்பில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலுpயுறுத்தியும், எமது விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை விடுதலை அமைப்பாக ஏற்று தமிழர்களுக்கு நிரந்தர தீர்வான தமிழீழத்தைப் பெற்றுத் தரக் கோரியும், கடும் மழை, குளிர் காற்றென்றும் பாராது 100க…
-
- 2 replies
- 398 views
-
-
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும் உடனடியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வென்றால், மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை 2015ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி செய்துகொள்வார். சல குழுவினர் கூறுவது போல இரண்டாவது பதவிக்காலத்துக்கான 6 வருடங்கள் முடிந்த பின்னர் அல்ல என அரசாங்கம் நேற்று புதன்கிழமை கூறியது. ஜனாதிபதி ராஜபக்ஷ வெற்றி பெற்றதும் பதவியேற்கக்கூடாது. அவர், ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்ற தினமான நவம்பர் 19இலே தான் பதவியேற்பார் என அமைச்சர் டிலான் பெரேரா, ஸ்ரீ லங…
-
- 1 reply
- 541 views
-
-
தமிழ் மக்களை அரசியல் ரீதியாக எம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை என வன வள பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்தோம் அவர்களை வெற்றி கொண்டோம். ஆனாலும் எம்மால் தமிழ் மக்களின் அரசியலை வெற்றிகொள்ள முடியவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடக்கில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அது சம்பந்தமாக எமக்கு எந்தவித பயமும் இல்லை. பிரச்சனையும் இல்லை. இந்த நிலையில் சர்வதேச ரீதியில் புலிகளின் நிதி கொடுக்கல் வாங்கலை நாங்கள் நிறுத்தினோம். கே.பி யை எமது பக்கம் எடுத்த…
-
- 0 replies
- 481 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நிச்சயம் வெற்றியீட்டுவார். ஜனாதிபதி ஒருபோதும் தோல்வியடையமாட்டார். ஆனால் மக்களின் தீர்ப்புக்கு எமது ஜனாதிபதி எப்போதும் தலைசாய்ப்பார் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துவிட்டது. அந்த முடிவை அவர் கள் எடுத்துவிட்டனர். கூட்டமைப்பின் தீர்மானம் எப்போது அறிவிக்கப்பட்டாலும் இந்த முடிவுதான் வரும். ஆனால் தற்போது கூட்டமைப்பு தனது முடிவை அறிவித்தால் தெற்கில் எதிரணிக்கு வாக்குகள் கிடைக்காது என்பதால் கூறாமல் இருக்கின்றனர் என்றும் …
-
- 1 reply
- 536 views
-
-
இராணுவத்தால் பிடிக்கப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் தகவல் எதுவும் இல்லை : ஆணைக்குழு முன் சாட்சியம் ராணுவத்தால் முகமாலைப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகிய எனது கணவரை இதுவரை காணவில்லை என அவரது மனைவியான பி. பாலேஸ்வரி சாட்சியமளித்தார். வவுனியா மாவட்டத்திற்கான காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்றையதினம் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு சாட்சியமளிக்கையில், நாங்கள் வவுனியாஇ ஈச்சங்குளத்தில் வசித்து வந்தோம். பின்னர் இடம்பெயர்ந்து கிளிநொச்சி, முரசுமோட்டைப் பகுதியில் குடியேறிய போது எனது கணவர் தொழிலுக்காக வேறு பலருட…
-
- 2 replies
- 776 views
-
-
போர் வெற்றிக்கு யார் காரணம் என்பது படையினருக்குத் தெரியும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யாபகூவவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி, இராணுவத்தை விட்டு தப்பிச் சென்ற தம்பி, போரை வெற்றி கொண்டதாக சொல்லப்படுகிறது. யார் உண்மையில் போரை செய்தார்கள் என்பது படையினருக்குத்தான் தெரியும். 5000 படையினர் உயிரிழந்தனர். 7000 படையினர் ஊனமுற்றுள்ளதுடன் 27000 படையினர் காயமடைந்தனர். இன்று சொல்கின்றார்கள் மீண்டும் இந்த நாடு புலிகளிடம் செல்லுமாம். அனைத்து புலிகளும் ஆட்சியாளரின் ஆடைக்குள்ளே பதுங்கியிருக்கின்றனர். போர்க் குற்றச் செயல் குறித்த மின்சார நாற்காலியில் தண்டனை விதிக்கப்பட்டால் எங்களுக்கே தண்டனை வி…
-
- 3 replies
- 633 views
-
-
தான் புளொட் இயக்கத்தில் இருந்தபோது கடத்தப்பட்ட எனது கணவர் சிவாவும் இருந்தாக பெண்ணொருவர் இன்று சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் இன்று (17.12) சாட்சியம் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் அங்கு சாட்சியமளித்த அவர், மகாறம்பைக்குளத்தில் இருந்து 2008.5.19 அன்று 30 வயதுடைய சிவலிங்கம் சிவானந்தன் என்ற எனது கணவர் வவுனியா நகருக்கு வந்தபோது ஆட்டோ ஒன்றில் கடத்தப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. கடத்தப்பட்டு மூன்றாம் நாள் வவுனியாவின் இரு நிலையான தொலைபேசிகளில் இருந்து கணவர் காணாமல் போன விடயம் தொடர்பில் ஒருவருக்கும் தெரியப்படுத்தக்கூடாது எனவும் யாராவது கேட்டால் அவர் கொழும்புக்கு வேலைக்கு போய் விட்ட…
-
- 4 replies
- 1.1k views
-
-
காலி மாவட்டத்தில் நடத்தப்படும் பல பிரத்தியேக வகுப்புகளில் (ரியூசன் கிளாஸ்) காட்டப்பட்டு வந்த உள்நாட்டு யுத்த வெற்றி சம்பந்தமான வீடியோக்களை தற்காலிகமாக இடைநிறுத்த காலி பிராந்திய தேர்தல்கள் பிரதி ஆணையாளர் நடவடிக்கை எடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பல ரிடியூசன் வகுப்புகளில் யுத்த வெற்றி சம்பந்தமான ஒளிநாடாக்கள் (விடியோ) காண்பிக்கப்பட்டு வந்தன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவை இந்த ஒளிபரப்புகள் மறைமுகமாகத் திரட்டுவதாகத் தேர்தல்கள் செயலகத்துக்குக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து அந்த ஒளிபரப்புகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காலி மாவட்டப் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார். நாட்டின் எதி…
-
- 0 replies
- 432 views
-
-
அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள அதேவேளை, தேர்தல் நடைமுறைகளை மீறுகின்ற செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கெபே தேர்தல் கண்காணிப்பு குழு கூறியுள்ளது. குறிப்பாக இராணுவத்தினர் மத்தியில் அரசியல்வாதிகள் அரசியல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது தொடர்பாகத் தமக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாக இந்த கண்காணிப்பு குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இத்தகைய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக அவர் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார் ‘வவுனியாவில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்குச் சென்றிருந்த இரண்டு முக்கிய அமைச்சர்கள் பிரதேச அரசியல்வாதிகளுடன் கலந…
-
- 1 reply
- 353 views
-
-
கடல்வழிப் பட்டுப்பாதை என்ற கோட்பாட்டின் கீழ், சிறிலங்காவின் கடற்படைத் தளத்தை அமைப்பதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் தன்னை வலுப்படுத்தும் திட்டத்தைச் செயற்படுத்த சீனக் கடற்படை தயாராகியுள்ளதாக, மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் அவுஸ்ரேலிய இந்திய நிறுவகத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் பிரூஸ்டர் தெரிவித்துள்ளார். ரோக்கியோவைத் தளமாக கொண்ட டிப்ளோமற் இதழில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “கடல்வழிப்பட்டுப் பாதை மூலம், தெற்காசியாவில் இருந்து ஐரோப்பா வரை பீஜிங் தனது தரைவழி பட்டுப்பாதையை விரிவாக்க முனைகிறது. துறைமுகங்கள், உட்கட்டமைப்பு திட்டங்கள், சிறப்பு பொருளாதார வலயங்களை இணைக்கும் வகையில், தெற்காசியாவில் இருந்து வட இந்திய பெருங்கடல் வரை இந்த கடல்வழிப் பட்டுப…
-
- 1 reply
- 506 views
-
-
கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதக் குழுக்கள் இயங்குவதாக எச்சரித்திருக்கும் பொதுபலசேனா, அவற்றின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கிழக்கிலுள்ள இந்தக் குழுக்கள் தொடர்பான புலனாய்வு அறிக்கைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தியிருப்பதாக நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார். இந்தக் குழுக்கள் தொடர்பாகப் பரிசீலிக்காமல் இருந்தால் இந்த வாரம் அவுஸ்திரேலியாவிலும் பாகிஸ்தானிலும் இடம்பெற்ற சம்பவங்கள் போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். கிழக்கைத் தளமாகக் கொண்டுள்ள பயங்கரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல் தொடர்பாக சர்வதேச முகவரமைப்புகள் எச்சரித்…
-
- 1 reply
- 602 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பை புதன்கிழமை (17) பிற்பகல் சந்தித்தார். மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை. மரியாதை நிமித்தம் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக தெரியவருகின்றது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/136117-2014-12-17-14-45-21.html
-
- 1 reply
- 448 views
-
-
- யோ.வித்தியா, பொ.சோபிகா யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பமாகியது. வடமாகாண சபைக்கான நிதியை செலவு செய்வது தொடர்பில் வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் …
-
- 26 replies
- 2.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவர் என நாட்டின் புதிய சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க ஆரூடம் கூறியுள்ளார். மைத்திரி ஜனாதிபதியாகினால் சந்திரிக்கா பண்டாரநாயக்கவே பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபாலவின் அரசாங்கத்தின் பிரதமராக சந்திரிக்காவை நியமிக்க இரகசிய உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சந்திரிக்காவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் இரகசிய நோக்கத்தை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கள் மூலம் திஸ்ஸ அத்தநாயக்க மறைமுகமாக மைத்திரிபால ஜனாதிபதியாவர் என்பதனை ஒப்புக் கொண்டுள்…
-
- 1 reply
- 667 views
-
-
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னால் இருவர் இன்று இரகசிய சாட்சியமளித்தனர். காணாமல்போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குழுவின் வவுனியா மாவட்டத்திற்கான பதிவுகள் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகின்றது. இன்றைய அமர்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இருவர் தங்களுடைய கணவன்மாரைக் காணவில்லை என்பது குறித்தும் அது சார்ந்த சாட்சியங்களை இரகசியமான முறையில் வழங்கினர். எனினும் இவர்கள் இருவரது கணவர்மாரும் தமிழீழ விடுதலைப்புலிகளது முக்கிய தளபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பான மூன்றாம் நாள் சாட்சியப்பதிவில் வவுனியா பிரதேச செயலகத்தை சேர்ந்த 5கிராமசேவையாளர் பிரிவில் உள்ள 61 பேர் ஆணைக்குழு…
-
- 0 replies
- 983 views
-