ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
-நவரத்தினம் கபில்நாத் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜ குகனேஸ்வரன் ஜக்கிய தேசியக்கட்சியில் இணைந்துகொண்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் டெலோ ஆகியவற்றில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவராக அண்மைக்காலமாக செயற்பட்டு வந்திருந்த நிலையிலேயே தற்போது ஐ.தே.கவுடன் இணைந்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி பிராந்தி தலைவராக செயற்பட்ட இவர் அண்மைக்காலமாக அக்கட்சியின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் வைத்து அவர், இணைந்துகொண்டுள்ளார். http://tamil.dailymirror.lk/…
-
- 1 reply
- 846 views
-
-
கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை; அரசு அறிவிப்பு news ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற வேண்டிய தேவை எமக்கில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எமக்கு தேவையில்லை. அங்குள்ள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே வாக்களிப்பர். வடக்கில் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே மக்களின் ஆதரவு நிச்சயம் எமக்கு கிடைக்கும். ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நடைபெறப்…
-
- 3 replies
- 852 views
-
-
வெளியேறத் தயாராகிறது முஸ்லிம் காங்கிரஸ்! – கிழக்கு மாகாணசபை கவிழும்? [saturday 2014-11-29 08:00] அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகி வருகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிங்கள பௌத்த கடும்போக்குடைய அமைப்பான பொதுபல சேனா அண்மையில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்திருந்தது. அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகி வருகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியிலிருந்து விலகிக…
-
- 1 reply
- 567 views
-
-
அன்பான உறவுகளே எம் மக்களின் விடுதலைக்காக எம்முடன் புறப்பட்டு தமது இன்னுயிரை ஈந்த மாவீரர் குடும்பங்களும், மாவீரர் ஆகாது உயிரைக் கையில் பிடித்து வாழும் எங்களுக்காகவும் சற்று சிந்தியுங்கள்... எங்கள் மாவீரருக்காக நீங்கள் ஏற்றும் தீபங்கள் அவர்களை மகிழ்விக்க வேண்டுமானால் அவர்களின் குடும்பங்களின் வாழ்வில் முதலில் ஒளியேற்ற வேண்டும்... சமூக வலைத்தலங்களில் எங்கள் உருவப்படங்கள் மிளிர்கின்றன... ஐரோப்பிய மண்டபங்களில் கண்ணை மின்னும் ஒளி தீபங்கள் மிளிர்கின்றன... ஆனால் எமது வீட்டின் அடுப்புகளில் விறகில்லை... எங்கள் குழந்தைகள் கற்பதற்கு விளக்கில்லை.... எம் அன்புக்குரியவர்களே புலம்பெயர் நாடுகளில் மாவீரர் வாரங்களில் மண்டபங்களிலும் – மிகையான கொண்டாட்டங்களிலும் கொட்டப்படும் பணம…
-
- 5 replies
- 2.2k views
-
-
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அடுத்தவாரமளவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக இந்திய செய்தி தெரிவிக்கின்றது. இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருகின்றார். கடலோர கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர், திங்களன்று இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். காலியில் நடைபெறும் 'காலி உரையாடல்-2014' எனும் மாநாட்டில் அவர் சிறப்புரையாற்றவுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/135032-2014-11-29-04-46-23.html
-
- 0 replies
- 319 views
-
-
மாவீரர்களை நினைவு கூர்ந்த ராதிகாவின் உரை – கனடிய அரசியலில் சர்ச்சை! [saturday 2014-11-29 08:00] கனடிய நாடாளுமன்றத்தில், கடந்த 27ம் திகதி மாவீரர்களை நினைவு கூர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் நிகழ்த்திய உரை கனடிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ மாவீரர்களுக்கு ஆதரவாக பேசியது அதிர்ச்சியளிப்பதாக, கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ப்ளானே கூறியுள்ளார். மேலும், இது ஒரு முக்கியமான நாள் மற்றும் நினைவு கூர வேண்டிய நாள் எனக் கூறியதற்காக அனைத்து கனடிய மக்களிடமும், முக்கிய பிரமுகர்களிடமும் ராதிகா சிற்சபைஈசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளார். கனடிய நாடாளுமன்றத்தில், கடந்த 27ம் திகதி மாவீரர்களை நினைவு கூர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற…
-
- 0 replies
- 514 views
-
-
என்னால் மட்டுமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை ரத்து செய்ய முடியும் - 29 நவம்பர் 2014 என்னால் மட்டுமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தம்மால் மட்டுமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யக் கூடிய ஆற்றல் உள்ளது என்பதனை தமக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்ய மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மை பலம் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பாராளுமன்ற பெரும்பான்மை பலம் தமது அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காமல் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்க…
-
- 0 replies
- 391 views
-
-
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அனைத்து நாடுகளிலும் மிக எழுச்சியாக நடை பெற்றது. அனைத்து நாடுகளிலும் நடை பெற்ற மாவீரர் நாள் தொகுப்பு யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்! கனேடியத் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு அவுஸ்ரேலியா மெல்பேணில் நடைபெற்ற மாவீரர் நாள் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு! சுவீடனில் நடைபெற்று முடிந்த மாவீரர் நாள் நெதர்லாந்தில் நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் தமிழீழ தேசிய மாவீரர்நாள் பிரான்சின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது நோர்வே ஸ்…
-
- 0 replies
- 484 views
-
-
சென்னை: இலங்கையில் 40 வீதமான தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவுக்கே தேர்தலில் வாக்களிப்பார்கள் என பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில் இவ்வாறு கூறியுள்ள அவர், கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே வெற்றி பெற்றால் இலங்கை தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கனவை நனவாக்க தான் உதவி புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேரையும் விடுவித்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவை வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://news.vikatan.com/article.php?module=news&aid=35452
-
- 11 replies
- 887 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரப்பகுதியிலும் புறநகர்ப் பகுதிகளிலும் மாவீரர் நாள் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட விடுலைப் புலிகளின் அரசியற் கட்சி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் ஈகச்சுடரேற்றும் படமும் இடம்பெற்றுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=121636&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 391 views
-
-
-ரொமேஸ் மதுசங்க வவுனியா மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, மாவட்டத்திலுள்ள அனைத்துக் குளங்களும் பெருக்கெடுத்துள்ளன. இதனால், இம்மாவட்டத்தைச் சேர்ந்த 703 குடும்பங்களைச் சேர்ந்த 2,440பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதித் தலைவர் டி.என்.சூரியராஜ் தெரிவித்தார். இதேவேளை, குளங்கள் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்து வீதிகளில் வெள்ள நீர் நிறைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/134967-----2440-.html
-
- 0 replies
- 310 views
-
-
ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நடைபெற்றமை குறித்து தங்களுக்கு எவ்வித தகவலும் இன்றுவரை தெரியாது என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் கேள்வியெழுப்பி இருந்தார் .அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அண்மையில் யாழ்.மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் தங்களை மீண்டும் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் உதயன் பத்திரிகை செய்தியை பிரசுரமாக்கியதால் தங்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது என்று கூறியும் திடீர் ம…
-
- 0 replies
- 529 views
-
-
மாவீரர்கள் புனிதமானவர்கள், அவர்கள் இந்த மக்களால் நேசிக்கப்படுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். தாயக மண்ணுக்காகவும் தனது மக்களுக்காகவும் விடுதலை என்ற உன்னத லட்சியத்துக்காகவும் உயிர் தியாகம் செய்த வீரர்களை தமிழர்கள் நினைவுகொள்ளும் புனித நாள் தான் மாவீரர் நாள். பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். http://tamil24news.com/news/?p=40479
-
- 2 replies
- 331 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பாதுகாக்கும் முயற்சியில் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிறீன் கட்சி பாராளுமன்ற உறுப்பினுர் லீ ரியன்னன் தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழ்ந்து வரும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அதனை மூடி மறைக்கும் வகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அபோட் செயற்பட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் குற்றச்செயல்கள் தொடர்பில் இறுதியில் உலகம் விழித்துக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பாதுகாக்கும் இறுதி நாடுகளில் ஒன்றாக அவுஸ்திரேலிய திகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய பாராளுமன்றில்…
-
- 3 replies
- 502 views
-
-
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர், அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவை அண்மித்த கடற்பரப்பில் இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்திருந்ததாகவும் அவர்கள் இலங்கை கடற்படையினரிடம் நேற்றிரவு ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துள்ளதாகவும் இதில் சிறுவர்கள் 6 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர் யாழ்ப்பாணம் , சிலாபம், கொழும்பு மற்றும் மாரவில பக…
-
- 0 replies
- 335 views
-
-
தொடர்ந்து பெய்த மழையினால் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 1,428 குடும்பங்கள் வரை இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி மன்னார் பிரதேச செயலக பிரிவில் 758 குடும்பங்களை சேர்ந்த 2903பேரும், நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் 12 குடும்பங்களை சேர்ந்த 41 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 658 குடும்பங்களை சேர்ந்த 2714 பேரும் இடம் பெயர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மன்னார் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கான சகல வெளிப் போக்குவரத்துக்களும் இன்று காலை 10 மணியுடன் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை புத்தளத்திலிருந்த…
-
- 0 replies
- 337 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஊடக சுதந்திரம் கிடையாது எனவும் அதன் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பம் பற்றி ஊடகங்களில் வெளிச்சப்படுத்தப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சகல தேர்தல் பிரச்சார பதாகைகளையும் அகற்ற காவல்துறை மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிவனொள…
-
- 0 replies
- 375 views
-
-
பொது எதிரணி கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் நடைபெறும். வண. சோபித தேரர், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உட்பட கையெழுத்திடும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, இந்நிகழ்வை நடத்த விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்ற நிலைமையில், தற்போது விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் இந்நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. சோபித தேரர் தலைமையிலான …
-
- 0 replies
- 281 views
-
-
சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (28.11.2014) வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், பா.கஜதீபன்,வலிதெற்குப் பிரதேசசபைத் தவிசாளர் தி.பிரகாஷ;, மத்திய சுற்றாடல் அதிகாரசபைப் பிரதிப் பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி அ.ஜெயகுமரன், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் மற்றும் வலிதெற்குப் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்ற இக்கலந்துரையாடலில், சுன்னாகம் ப…
-
- 0 replies
- 241 views
-
-
வாழ்க்கையை எதிர்மறையாக நினைக்காது நமக்கு முன் நமது நாடு என்று எண்ண வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாடசாலை மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அந்த கல்லூரியின் ஸ்தாபக அதிபர் ஆர்.ஐ.ரி. அலஸ்சின் உருவச்சிலையை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உட்பட அலஸ் குடும்பத்தினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, உங்கள் பாடசாலை மற்றும் பெற்றோரை நேசிப்பது போல் நாட்டையும் நேசியுங்கள். 1967 ஆம் ஆண்டு…
-
- 1 reply
- 294 views
-
-
இராணுவ சீருடைக்கு ஒப்பான சீருடையை தன் வசம் வைத்திருந்த ஒருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கொண்டு சென்ற குற்றத்திற்காக ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க வந்த மற்றொரு இளைஞன் இராணுவத்தின் சீருடைக்கு ஒப்பான அரைக்காற் சட்டை ஒன்றினை அணிந்து வந்ததை அவதானித்த பொலிஸார் அவரை கைது செய்ததுடன் நீதிமன்ற நடவடிக்கைக்கும் உட்படுத்தியுள்ளார். விசாரணையின் போது தான் விற்பனை நிலையம் ஒன்றில் வாங்கியதாக தெரிவித்துள்ளார். எனவே விற்பனை நிலையத்தின் பெயர், எங்கு உள்ளது என்றும் உரிமையாளர் விபரம் மற்றும் ச…
-
- 0 replies
- 337 views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 407 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். குடாநாட்டில் பாரிய குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த வாரங்களில் காங்கேசன்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட நடவடிக்கையில் 407 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 235 views
-
-
இலங்கை அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதி நடைபெற உள்ளது. இத் தேர்தலில் மூன்றாவது முறையாக அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ராஜபக்சேவின் சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிக மூத்த தலைவர் மைத்ரிபால சிறிசேன போட்டியிடுகிறார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் 13 ஆண்டுகாலம் பொதுச்செயலராக இருந்த மைத்ரிபால சிறிசேன, ராஜபக்சே அரசின் மூத்த அமைச்சராகவும் இருந்தவர். தற்போது ராஜபக்சேவுக்கு எதிராக முன்னாள் அதிபர் சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவுடன் பொதுவேட்பளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இப்படி ராஜபக்சேவுக்கு எதிராக ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த ஒருவரே போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது அதிபர் தேர்தலை பரபரப்பாக்கி இருக்கிற…
-
- 7 replies
- 1.8k views
-
-
இலங்கை சர்வதேச விசாரணையாளர்களை அனுமதிக்க மறுத்தால் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் பிரிட்டன் 27 நவம்பர் 2014 இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காத பட்சத்தில் அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனையை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். பிரிட்டனின் பொதுச்சபையின் வெளிவிவகார குழுவே இந்த யோசனைiயை முன்வைத்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளது. சர்வதேச விசாரணைகள் ஆரம்பமாகி சில மாதங்களாகிவிட்டதையும், அந்த விசாரணை மீது ஏற்படுத்தப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளையும் கருத்தில்கொள்ளும்போது, இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்கச் செய்வதற்காக, பொருளாதார தடைகள் உட்பட சகல சாத்தியப்பா…
-
- 4 replies
- 603 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் எ.எச்.எம். அஸ்வர் தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார். http://virakesari.lk/articles/2014/11/28/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D அஸ்வரின…
-
- 1 reply
- 349 views
-