Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை ஐ.தே.கவில் இணைந்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை அவரது அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார். சட்டத்தரணியான பி.ராஜதுரை கடந்த பொதுத் தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்றிற்குத் தெரிவானார். அதன்பின்னர் இ.தொ.கவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அவர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து கொண்டார். தற்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமையுடனும் முரண்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். …

    • 2 replies
    • 599 views
  2. அரச புலனாய்வு அதிகாரிகளை முட்டாளாக்கியே கட்சித் தாவ நேரிட்டதாக முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஏழு ஆளும் கட்சி உறுப்பினர்களும் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பிக்க வேண்டி ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மிகவும் இரகசியமான முறையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தற்போது உள்ளுராட்சி மன்ற அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட…

  3. யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு இடையில், குறுந்தூர ரயில் சேவையொன்று இன்று புதன்கிழமை (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். அரச மற்றும் தனியார் பணியாளர்களின் நலன்கருதி, இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு இடைப்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் தரித்து நின்று பயணிகளை ஏற்றி செல்லும். யாழ்ப்பாணத்திலிருந்து – கிளிநொச்சிக்கு பயணிப்பதற்கான ரயில் கட்டணமாக 90 ரூபாய் அறவிடப்படும் அதேவேளை, இருக்கைகள் மூன்றாம் தர இருக்கைகளாக இருக்கும் என அவர் கூறினார். யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கிளிநொச்சியை காலை 7.35 மணிக்கு சென்றடையும். தொடர்ந்து கிளிநொச…

  4. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு மறைமுக அடிப்படையில்ழ ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகப் பற்றற்ற ரீதியில் இதனைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுயாதீனமான தேர்தல்களுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் பொதுவான அடிப்படையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான தமிழ் வாக்குகள் எதி…

  5. "தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. "தமிழர் பிரச்சினையை உலக அரங்கிற்கு கொண்டுசென்றவர்கள் மாவீரர்கள். எனவே, எத்தடைவரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து இந்தத் தியாகிகளை நாம் நவம்பர் 27ஆம் திகதி அமைதியான வழியில் நினைவுகூர்ந்து - விளக்கேற்றி அஞ்சலிப்போம்'' என்றும் கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது. மண் மீட்புப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மறவர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் நாளை 27ஆம் திகதி வியாழக்கிழமை உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள…

  6. இலங்கையில் இந்துக்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக, புதுடெல்லியில் நடைபெறும், அனைத்துலக இந்து மாநாட்டில் தெரிவித்துள்ளார். உலக இந்து காங்கிரசின், மூன்று நாள் அனைத்துலக இந்து மாநாடு நேற்றுமுன்தினம் புதுடெல்லியில் ஆரம்பமானது. இந்த மாநாட்டை திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத்,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து, மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மீது செல்வாக்குச் செலுத்தும், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்குபற்றும் இந்த மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.…

    • 28 replies
    • 1.8k views
  7. 'வௌியேறியவர்களின் தகவல்கள் அடங்கிய கோப்புகள் உள்ளன, பழிவாங்கப் போவதில்லை' இலங்கையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய நபர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தன் வசம் இருப்பதாக கூறிய ஜனாதிபதி ராஜபக்ஷ, அவற்றைப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகைகளில் ஈடுபட தான் தயாரில்லை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தரப்பினர் அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள சூழ்நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் கூட்டமொன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, தனது அரசாங்கத்தை விட்டு வெளியேறவோ இணையவோ எந்தவொரு நபருக்கும் சுதந்திரம் உள்ளதாகவும் தான் அதனை தடுக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்த…

  8. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார சுவரொட்டி ஒன்றில் பரிசுத்த பாப்பரசரின் படம் பயன்படுத்தப்பட்டமைக்கு , தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அந்த சுவரொட்டியை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜனாதிபதி ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பரிசுத்த பாப்பரசரின் படத்தை பயன்படுத்தியுள்ளார், கொழும்பின் பல இடங்களில் அவ்வாறான சுவரொட்டிகளை காணமுடிகின்றது என பவ்ரல்தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரோகண ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் கண்காணிப்பு அமைப்பு என்ற வகையில் நாங்கள் இந்த சுவரொட்டிகளை அகற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவளை அந்த சுவரொட்டிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எந்தவிதn …

  9. ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று திங்கட்கிழமை அவசரமாகக் கூடுகின்றது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் முற்பகல் 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவும், அரச தரப்பு சார்பில் மஹிந்த ராஜபக்‌ஷவும் போட்டியிடவுள்ள நிலையில் இவர்களில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடும். இதில் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கவேண்டும் என்பது தொடர்பில் தமது கரு…

  10. http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2014/11/8ca6b0df_profileofmaithripalasirisena_141121_maithripala_profile_au_bb.mp3 பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். உள்ளூர் பள்ளிக்கூடமொன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன, 1973ம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார். அதன் பின்னர் கிராம சேவை உத்தியோகத்தராகவும் சிறிதுகாலம் அவர் பணியாற்றியிருந்தார். 1971-ம் ஆண்டில் ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் மைத்திரிபால சிறிசேனவும் இருந்துள…

  11. கட்சி தாவுவதற்கு அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பிக்கு 50 மில்லியன் ரூபா பேரம்! [Tuesday 2014-11-25 09:00] நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கட்சி மாறுவதற்காக 50 மில்லியன் ரூபா வழங்க உறுதியளிக்கப்பட்டதாகவும், அவர் அதனை நிராகரித்து விட்டதாகவும், ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்ள தயாராகவுள்ளனர். இந்தநிலையில் அவர்களின் மனங்களை மாற்ற பெருந்தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கட்சி மாறுவதற்காக 50 மில்லியன் ரூபா வழங்க உறுதியளிக்கப்பட்டதாகவும், அவர் அதனை நிராகரித்து விட்டதாகவும், ஜே.வி.பி. யின் பிர…

  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சேருவில பிரதேச சபை உறுப்பினர் கே. சிவலோகேஸ்வரன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டார். மாதாந்த சபைக் கூட்டம் இன்று காலை கூடியபோது பிரதேச சபையில் விசேட உரையொன்றை ஆற்றிய பின்னர் அவர் ஆளும் கட்சியில் அமர்ந்துகொண்டார். இதனையடுத்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மகிந்த ராஜபக்‌ஷவை ஆதரிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து எதிரணி அரசியல்வாதி ஒருவரிடம் கேட்டபோது, சுறாக்களுக்கும், திமிங்கிலங்களுக்கும் வலை வீசி, நெத்தலி மீனை அரசாங்கம் பிடித்துள்ளதாக தெரிவித்தார். http://www.tamil.srilankamirror.com/news/2804-2014-11-25-14-02-34 http://www.tamil.srilankamirror.com/

    • 0 replies
    • 723 views
  13. சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு அரசாங்க தலைவர்கள் கொண்டு செல்லப்படுவதை ஐக்கிய தேசியக் கட்சி அனுமதிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்தாரை. நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பயமின்றி பொதுமக்களிடம் இதனை கூறமுடியும். அல் ஜசீரா தொலைக்காட்சியில் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனுடன் இடம்பெற்ற விவாதம் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டு என்மீது முன்வைக்கப்பட்டுள்ளது. போர்க்குற்றம் தொடர்பில் அரசாங்கம் உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பது போதுமானது என்றே நான் கூறினேன். எனினும் சர்வதேச விசாரணை என்ற விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை நான் ஏற்றுக் கொண்டதாக தம்மீது அரசாங்கத் தரப்பினர் குற்றம்சுமத்தியுள்ளனர். நான் ஒரு சிங்களவன்…

  14. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையை சேர்ந்த 92 மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி. சியாமளா கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் 192 புள்ளிகளைப் பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்ற இக்கல்லூரி மாணவி பாலகிருஸ்ணன் வனோஜாவுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது. http://onlineuthayan.com/News_More.php?id=138163674625474403

  15. காச நோய் தொற்றுள்ளவர்களில் மூவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பாலியல் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி தாரணி குருபரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் எச்.ஐ.வி தொற்று தற்போது அதிகரித்துள்ளது. அந்த நிலையில் காச நோய் சிகிச்சைக்கு என வரும் நோயாளிகளின் அனுமதியுடன் அவர்களது உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் எச்.ஐ.வி பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் எச்.ஐ.வி தொற்று என இனங்கண்டவர்களுக்கும் காசாநோய்ச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது கட்டாயமானது. அதன்படி இவ்வாண்டு காசநோய் தொற்றுக்குள்ளாகியவர்கள் என இனம் காணப்பட்டவர்களில் மூவர் எச…

  16. எல்லாரைப் பற்றியும் பைல்கள் என்னட்ட இருக்குது என்டு மகிந்த சொல்லுறார். கட்சி மாறினால் என்ன நடக்கும் எண்டு தெரியுமே எண்டுற ரேஞ்சில வெருட்டுறார்... ஓம்... இது ஏதோ திருட்டுக் கூட்ட தலைவன் பேசுற மாதிரித்தான் கிடக்குது பாருங்கோ... ஆனால் ஒண்டு மகிந்தவின்ட காலை இன்னும் சுத்திக் கொண்டிருக்கிற ஆக்களப் பற்றி மகிந்தவக் குறிச்சு இன்னும் மூச்சு விடாத ஆக்களப் பற்றி மகிந்தவ காப்பாற்ற வேண்டும் எண்டு குடுத்த காசுக்கு மேலால கூவுற ஆக்களப் பற்றி நினைவு வருமே? இப்ப கொஞ்ச நாளாய் நாங்கள் மகிந்தவுக்கு எதிரான ஆக்கள் இல்லை எண்டு கொஞ்சப் பேர் கடுமையாக கூவுறினம். நாங்கள் மகிந்தவ விட்டு போக மாட்டம் எண்டு கற்பூரம் கொழுத்தி சத்தியம் செய்யாத குறையாய் பேசுறினம்... அவையளுக்கும் பேசினல் பைல் இர…

  17. சோதிடரின் ஆலோசனையின் பிரகாரம் தேர்தல் திகதியை தீர்மானிக்கவில்லை என்றும் அந்த குற்றச்சாட்டுடன் வெளியாகிய அறிக்கையை மறுப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/134664-2014-11-25-05-03-55.html

  18. போக்குவரத்து வீதிகளை புகையிரதம் கடக்கும் போது ஏற்படுத்தப்படும் சமிஞ்ஞையினையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் வீதியை கடந்து செல்வதைக் காண முடிகின்றது. யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களது பாவனையில் உள்ள போக்குவரத்து வீதிகளை புகையிரதம் கடக்கும் போது எச்சரிக்கை சமிஞ்ஞை ஒலி 5 நிமிடங்களுக்கு முன்னரே எழுப்பப்படுகின்றது. எனினும் குறித்த போக்குவரத்து பாதையினைக் கடந்து செல்வோர் அதனைப் பெருட்படுத்தாது புகையிரதம் இன்னமும் வரவில்லை என்றும் புகையிரதம் வருவதற்கு முன்னர் பாதையைக் கடந்து விடலாம் என்றும் தங்களுடைய சிந்தனையில் சமிஞ்ஞை ஒலியினையும் பொருட்படுத்தாது வீதியைக் கடந்து செல்கின்றனர். இவ்வாறான செயற்பாட்டினை பொதுமக்கள் அனைவரும் செய்வதில்லை. ம…

  19. கிறிஸ்தவ மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே தமது கட்சி உதயமாகியது என கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இன்று கிறிஸ்தவ மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களது பிரச்சனை தொடர்பில் கிறிஸ்தவ சமய மக்கள் பிரதிநிதிகள் கூட கவனம் செலுத்துவதில்லை. சுதந்திரமாக மதப் போதனைகளை செய்ய முடியவில்லை. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்கள், சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவர்கள் என இரு பகுதியினர் உள்ளனர். அவர்கள் அனைவ…

  20. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையோ எமது படைவீரர்களையோ சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்கமாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே சஜித் இதனை தெரிவித்தார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி உட்பட படைவீரர்களை விசாரணைக்கு உட்படுத்தலாம் என டயஸ்போரா உள்ளிட்ட மேற்குலக சக்திகளோ அல்லது வேறு சக்திகளோ கனவு கண்டுகொண்டிருந்தால் அந்த கனவு ஒருபோதும் பலிக்காது. எமது நாட்டு மக்களை எக்காரணம் கொண்டும் நாங்கள் காட்டிக்கொடுக்க மாட்டோம். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித …

  21. ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்றுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.. ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில், "அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்த இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் நா…

  22. -எஸ்.ஜெகநாதன், நா.நவரத்தினராசா யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு (சங்கானை) பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ்.சிவரஞ்சனுடைய உருவப்பொம்மை, இந்த பிரதேச சபைக்குட்பட்ட பிரான்பற்று, பல்லசுட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்களால் சங்கானை பிரதேச சபைக்கு முன்பாக வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை எரிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ், யாழ். மாவட்ட இராணுவத்தினரால் பல்லசுட்டி கிராமத்தில் 52 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இராணுவத்தினரால் வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பதற்;கு உபதவிசாளர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் வீடுகள் கட்டுவதற்கான மணல், கற்கள் கொண்டு செல்வதற்கு வீதித்தடைகள் ஏற்படுத்தி தடை செய்யப்போவதாக கூறியிருந்தார். இந்நிலையில், தங்…

  23. சர்வாதிகாரத்தை உடைப்பதற்கு அரசாங்க ஊழியர்கள் டிசெம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/134689--2324-.html 23, 24 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசெம்பர் மாதம் 23ஆம், 24ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/134683-23-24-.html

  24. அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதா? அதில் இருந்து விலகுவதா? என்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 18ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தமை குறித்து தற்போது வருத்தமடைவதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார் 18ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு கைகளை உயர்த்தியமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்த தவறு தற்போது அது குறித்து வருத்தமடைகிறது. இந்த நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டத்தின் போது, 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய உதவுவதா? இல்லையா? என்பது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது…

    • 4 replies
    • 478 views
  25. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வரலாறு காணாத தோல்வியடையப்போகிறார் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார். மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திவி நெகும பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்கான 2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் வைபவம் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் சனிக்கிழமை (22) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆசியாவின் ஆச்சிரியம் மிக்க நாயகனாக திகழ்கின்றார். அவருடன் எத்…

    • 4 replies
    • 641 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.