Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அரசினுடைய தொடர்ச்சியான நடவடிக் கைகளும், போக்குகளும் தமிழ் மக்களைப் பிரிந்து தனித்து வாழவே தூண்டுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அரசினுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழர்கள் தனித்து வாழ்வதையே ஊக்குவிக்கின்றது. வடக்கு மாகாணத்துக்குப் பிரத்தியேக பாஸ் நடைமுறை, வடக்கு மாகாணசபைக்கான அதிகாரங்களை மறுத்தல், வடக்கில் பொருளாதார நடவடிக்கைகளைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தாமை, இராணுவ ஆக்கிரமிப்புகள், படையினரின் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இவை யாவும் தமிழ் மக்களைத் தனித்து வாழத் தூண்டும் அரசின் அடக்கு முறைகளை வெளிப்படுத்துகின்றன என்று சுரேஷ் பிரேமச் சந்திரன் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் …

  2. முல்லைத்தீவு வவுனிக்குளம் புனரமைக்கப்பட்டமையால் இம்முறை காலபோகத்தில் அதன் கீழ் 6 ஆயிரத்து 60 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் திங்கட்கிழமை (03) தெரிவித்தார். வவுனிக்குளம் புனரமைக்கப்படாமல் இருந்தமையால் குளத்தின் நீர்ப்பாசன வாய்க்கால்களும் சேதமடைந்து காணப்பட்டன.இதனால், 4 ஆயிரம் ஏக்கரில் மாத்திரம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. நெற்செய்கை மேற்கொள்ளக்கூடிய 2 ஆயிரம் ஏக்கர்வரை நெற்செய்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்நிலையில், முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 600 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் 2013ஆம் ஆண்டு வவுனிக்குளம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்…

  3. அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதற்காக கடல் தோண்டப்பட்டமைதான் கொஸ்லாந்த, மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படக் காரணம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப செயலாளரும் மேல்மாகாண சபையின் கொழும்பு மாவட்ட உறுப்பினருமான சன் குகவரதன் தெரிவித்தார். இதனால் மண்சரிவுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வேறு இடங்களில் காணிகளை உடனடியாக வழங்கி அங்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சன்குகவரதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது. அரசாங்கத்தின் திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களினால்தான் மண் சரிவு அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை துறை முகத்த…

  4. இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஜ.நா விசாரணைக்கு சாட்சியமளிக்கும் படிவங்களைத் தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சி. கிருஸ்ணராசா சட்ட உதவிகனைப் பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இச்சம்பவமானது அடிப்படை மனித உரிமை மீறல் என்றும், கைது செய்யப்படடவருக்கான சட்ட உதவிகளை வழங்குவதற்கான வேலைத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜ.நா விசாரணைக்காக மக்கள் சாட்சியங்களை வழங்குவதற்கு கடந்த 31 ஆம் திகதி மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சாட்சியங்கள் வழங்குவதற்கான படிவங்களை தம்வசம் வைத்திருந்தார் என்ற …

  5. விடுதலைப் புலிகளிடமிருந்து மகனை பாதுகாப்பதற்காக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றேன்.ஆனால், விசாரணைக்கென்று பிடித்துச் சென்ற எனது மகனை இராணுவம் இன்னமும் விடுதலை செய்யவில்லை என முல்லைத்தீவு, உப்புமாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த கருப்பன் செல்லத்துரை என்ற குடும்பஸ்தர், இன்று காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இன்றும் முல்லைத்தீவில் இடம்பெற்ற போது அவர் முலம் சாட்சியமளிக்கையில்- எனது மகனுக்கு அப்போது 26 வயது. படிக்கின்ற காலத்திலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் எனது மகனை வீட்டிலிருந்து பலவந்தமாக அழைத்துச் சென்றார்கள். எனது மகனுக்கு அடிக்கடி சுகமில்லாமல் வர…

  6. பிரித்தானிய பிரஜைகள் மீது மாலக சில்வா தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து உயர்ஸ்தானிகராலயம் கவனம் பிரித்தானிய பிரஜைகள் மீது அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு டுப்ளிகேசன் வீதியில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் மாலக சில்வாவும் அவரது நண்பர்களும் பிரித்தானிய தம்பதியினரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் பிரித்தானிய பிரஜைகளின் தலை மற்றும் முகப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதலுக்கு இலக்கானவர்களை இன்னமும் சந்திக்கவில்லை எனவும் அவர்களை சந்தித்ததன் பின்னரே கருத்து வெளியிட முடியும் எனவும்…

  7. மீறியபெத்தை மண்சரிவில் 31 பேர் மாத்திரமே காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீறியபெத்தை அவலத்தின் போது அரசாங்கம் வெளிநாட்டு நிவாரணம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கவில்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்க நிதியில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீறியபெத்தை மண்சரிவில் 63 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 31 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பெற்றோரை இழந்த குழந்தைகள் மூன்றும் தாயை மட்டும் இழந்த குழந்தைகள் நான்குமே இருக்கின்றது. விபத்தின்பின் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்களை உயர்தர கல்விவரை அழைத்துச் செல்ல அரசாங்கம் பொறுப்பெடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சீரற்ற காலநிலையால் நாடு ம…

  8. வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். வட மாகாணத்துக்குச் செல்லும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும். வெளிநாட்டவர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடானது, ஆபத்தான நிலைமைக்கு இட்டுச் செல்லும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையானது, யுத்த காலத்தில் வடக்கில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை விட அதிகமாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஆயர், இதனால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகி…

  9. தற்கொலைக்கு முயன்ற மயில்வாகனம் பசியின் கொடுமை காரணமாக சில நாட்களுக்கு முன்பு கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் 80 வயது வயோதிபரொருவர் பிளேடினால் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக கூறப்படும் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மயில்வாகனம் தாமோதிரம் என்ற இந்நபர் அரச மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். உலக உணவு தினமாகிய ஒக்டோபர் 16 வியாழனன்று பிபிசி தமிழோசையுடன் பேசிய அவரது மனைவி யோகேஸ்வரி, சம்பவ தினம் தனது கணவன் மதிய உணவு கேட்டபோது வீட்டில் சோறு சமைக்க அரிசி இருக்கவில்லை என்றார். பசியின் கொடுமை காரணமாகவே தனது கணவன் இப்படி நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஏற்கனவே 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை உலக உணவு திட…

    • 18 replies
    • 1.4k views
  10. வெளிநாட்டுப் பிரஜையொருவருடனான மோதலின் போது காயமடைந்த தனது மகன் மாலக்க சில்வாவை, மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தனது மகனை குணப்படுத்த முடியாவிடின், அவரை மலர்ச்சாலைக்கு கொண்டுசெல்லவும் தான் தயார் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். மாலக்க சில்வாவை, பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/131704-2014-11-02-07-16-32.html

  11. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிறிலங்காவின் அரசாங்கம் மீண்டும் தங்களின் அரசியல் தேவைக்காக உருவாக்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சிறிலங்காவில் 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்த பின்னர், விடுதலைப் புலிகள் இனி இல்லை என்று மகிந்தராஜப்ஷவும், அவரின் அரசாங்கமும் அறிவித்திருந்தது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மீதான அச்சத்தை பரப்பியும், விடுதலைப் புலிகளை தங்களாலேயே கட்டுப்படுத்த முடியும் என்று தோற்றப்பட்டை உருவாக்கியும், மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நிலைபெற்றுள்ளது. இந்த தோற்றப்பாடு இல்லாத பட்சத்தில், மகிந்த அரசாங்கத்தினால் நிலைத்திருக்க முடியாது என்று அந்த ஊடகம் தெர…

    • 5 replies
    • 540 views
  12. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடும் விவகாரம் நாட்டை இரத்தக் களரிக்குள் தள்ளும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க எச்சரித்துள்ளார். நாடு அரசியல் ரீதியாக ஆபத்தான நிலைக்குள் தள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் இது நாட்டை பலவீனப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை மதிப்பிடுவதே பொதுமக்கள் என்ற அடிப்படையில் எமது கடமை. ஆனால் ஆளும்கட்சி இந்த நாட்டின் அரசியல் அமைப்பை மதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் அவர்கள் நினைத்தவாறு அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளலாம். ஆனால் அரசு அவ்வாறு செய்ய தயங்குகின்றது. ஆளும் …

  13. அரசாங்கம் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வருவதாக ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் தரித்து நிற்க அனுமதிப்பளிப்பது குறித்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சீன நீர் மூழ்கிக் கப்பல்களை அனுமதிக்க வேண்டாம் என இந்தியா இலங்கையிடம் நேரடியாக கோரியிருந்தது. அரசாங்கம் இந்தியாவுடன் பகைமையை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் இந்தப் பிரச்சினைக்கு சீனாவை குற்றம் சுமத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை வலுவான கட்டமைப்பைக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான அரசாங்கத்தின் அணுகுமுறைகள் பிழையானது என அவர்…

  14. கொஸ்­லந்­தையில் மண் சரிவு அனர்த்­தத்தில் எமது மலை­யக உற­வுகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். தொடர்ந்தும் 10ஆயி­ரத்­திற்கும் அதி­க­மானோர் அபா­யத்­தினை எதிர்­நோக்­கிய வண்­ண­முள்­ளனர். இவ்­வா­றான நிலையில் அம்­மக்­க­ளுக்கு பாது­காப்­பான இடங்­களில் வீடு­களை அமைத்­துக்­கொள்­வ­தற்­காக அர­சாங்கம் காணி­களை வழங்க மறுத்தால் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காணி­களை வழங்க நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம் என்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. மீரி­ய­பெத்­த­வுக்கு நேற்று விஜயம் செய்­தி­ருந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் மண்ச­ரிவு அனர்த்தம் இடம்­பெற்ற பிர­தே­சத்தின் நிலை­மை­களை நேர­டி­யாகப் பார்­வை­யிட்­ட­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்­ப…

  15. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறும் என்று தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைமைகள், இரு கட்சிகளும் எதிர்காலத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இணைந்து பணியாற்றுவது போன்ற விடயங்கள் குறித்து பேசுவதற்காகவே இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தாலும் மு.கா. தலைவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறிப்பிட்ட திகதியில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் நாளை பேச்சு நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ச்சியான பேச்சுக்கள் ஊடாக இரு கட்சிகளுக்குமிடையில் நல்லுறவைப் பேணி …

  16. புலிகளின் முன்னாள் உறுப்பினர் கட்டுநாயக்கவில் கைது! [Monday 2014-11-03 07:00] News Service விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கட்டாரில் தொழில் செய்து விட்டு நாடு திரும்பிய திருகோணமலையைச் சேர்ந்த சோமசுந்தரம் வசந்தகுமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அவர் கட்டார் நாட்டுக்குத் தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்யும் முயற்சியில் தேவியன், கோபி ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாகவும் பொலிசார் குற்றம்சா…

  17. தொடரும் மண்சரிவு அபாயம் news 7 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயம் தொடர்வதாக தேசிய கட்டுமாண ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. பதுளை, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகள் தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மண்சரிவு ஏற்பட்ட கொஸ்லாந்தை - மீறியபெத்தை பகுதியிலும் ஆய்வு செய்யப்பட இருப்பதாகவும் ஆனால் அங்கு நிலவும் சீரற்ற காலநிலையால் ஆய்வு நடவடிக்கை தாமதமாவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 03 நவெம்பர் 2014, திங்கள் 10:55 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=237503603003350256#sthash.4mB…

  18. யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யாா் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது. மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தாா் என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினாா்கள் என்பது பற்றியும் பொலிசாா் விசா…

  19. தெல்தெனிய - மொரகோல்ல பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பாகிஸ்தானியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மோட்டார் வாகனம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்வது போல் வந்த இவர்கள், வர்த்தக நிலையத்தில் இருந்த, 40,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர். இது குறித்து தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இவர்களுல் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களை தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=827963600802313337

  20. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாமல் ராஜபக்ஷ, யாழ்ப்பாணத் தமிழ் யுவதியொருவரை மணமுடிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறார் ஐதேக எம்.பி விஜயகலா மகேஸ்வரன். நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷவை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ என்றாலே வடக்கில், யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகள் அதீத அபிமானம் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் எங்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் யுவதியை மணமுடித்தால் இந்த இனப்பிரச்சினை விவகாரமும் முடிந்து விடும். தேசிய நல்லிணக்கமும் உறுதிப்படுத்தப்படும். அவ்வாறு எண்ணம் இருந்தால் சொல்லுங்கள், நான் நல்ல மணப்பெண் பார்த்துத் தருகிறேன் என்று விஜயகலா தெரிவித்துள்ளார்.அதற்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, நான் இப்போதைக்கு திருமணம்…

  21. -பொ.சோபிகா இலங்கையைச் சேர்ந்த 3 மீனவர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனையை குறைக்குமாறு, மீனவர்களின் உறவினர்கள் மகஜர் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (02) யாழ். ஆயர் இல்லத்தில் வழங்கினார்கள். யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம், ஆயர் இல்லத்தில் இல்லாத காரணத்தால், குரு முதல்வர் யஸ்ரீன் ஞானப்பிரகாசம் மகஜரை பெற்றுக்கொண்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில், இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் 8 பேருக்கு கடந்த மாதம் 30ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை குறைக்கும்படியே 3 மீனவர்களின் உறவினர்கள் மகஜர் கையளித்துள்ளனர். குறித்த மகஜரில், 'யாழ் மாவட்டத்தை சேர்ந்த குருநகர், மண்டைதீவு பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் க…

  22. வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்தியா வழங்கும் வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிக்க இலங்கை மறுத்துள்ளது. இதனால் இந்த மாத இறுதிக்குள் 7 வாகனங்களை வடக்குக்குக் கொண்டுவரத் தாம் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு மாகாண சபை கடந்த வருடம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியமைக்கப்பட்டது. இதில் தெரிவான 38 உறுப்பினர்களுக்கும் அன்பளிப்பாக வாகனங்களை வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்தது. இந்த வாகனங்களுக்கான இறக்குமதி தீர்வையை நீக்குமாறு இலங்கை அரசை இந்திய அரசு கேட்டது. ஆனால் இலங்கை அரசு அதனைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இறக்குமதி தீர்வையை தாமே செலுத்தி முதல் கட்டமாக 7 வாகனங்களை வடக்குக்கு கொண்டுவ…

  23. ஊழல் மோசடிகள் மலிந்து கிடக்கின்ற இந்நாட்டில் பொருளாதார மற்றும் கடன் சுமைகள் மக்களின் மீதே ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் காங்கேசன் துறையிலும் எம்பிலிப்பிட்டியவிலும் ஜனாதிபதிக்கென மாளிகைகள் அவசியமா என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பியும் ஜே.வி.பி. தலைவருமான அனுர குமார திசா நாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டதின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறுகையில், புதியதோர் பரம்பரையை இலக்காகக் கொண்டு அதாவது ராஜபக் ஷ என்ற அதிகாரம் நிரம்பப் பெற்ற ஒரு பரம்பரையை மையமாகக் கொண்டே 2015 ஆம் ஆண்டுக்கான வரவ…

    • 0 replies
    • 1.8k views
  24. குளோபல்தமிழ்ச்செய்தியாளா் கொழும்பு பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் உத்தியோக பூர்வமாக நிபந்தனைகளையோ ஏனைய விடயங்களையோ கூட்டமைப்பு முன்வைக்க வில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பேச்சுவார்த்தைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமாயின் அது குறித்து அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவும் வர முடியும்…

  25. நகைப்பிற்கிடமான இலங்கையின் நீதித்துறை பற்றி வெளிக்கொண்டு வருவது கட்டாய பணியாக இதுவரை வெளியாகிய ஏழு பாகங்களிலும் தொடர்ச்சியாக பட்டவர்த்தனமாக சொல்லி வந்தோம். இந்த வாரம்,அரசியற்கைதிகள் விவகாரமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் என்ற சாரத்தில் விடையங்களை உற்று நோக்குவோம். அரசியற்கைதிகள் விவகாரமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும்:- 2011ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மகசின் சிறைச்சாலைக்கு சென்று எமது அரசியற்கைதிகளை பார்வையிட்டு அவர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார்கள். அப்போது அரசியற்கைதிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பினிடம் சில விடயங்களை நிறைவேற்றுமாறு அதிக சிரத்தையுடன் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவையாவன ; · வழக்குகளிற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.