ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் "கத்தி" படத்தின் தயாரிப்பாளர் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.கத்தி படம் வெற்றிபெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா சென்று பின்னர், அதனைக் கொண்டாட மாலைதீவுகள் சென்று தங்கியுள்ளார்கள். பின்னர் மாலை தீவில் இருந்து இன்று காலை(29) லண்டன் திரும்ப திட்டமிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அவர்களது விமானம் கொழும்பு கட்டநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்துள்ளது. இந்நிலையில் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களின் பாஸ்போர்ட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசி…
-
- 32 replies
- 3k views
-
-
தாயத்தை எடுத்துக்கொடுத்ததன் மூலம் ஜனாதிபதிக்கு பாப்பரசர் ஆசிர்வாதம் : அற்புத நிகழ்வு என்கிறார் அமைச்சர் பீலிக்ஸ் பரிசுத்த பாப்பரசரை ஜனாதிபதி அண்மையில் சந்திப்பதற்கு வத்திக்கானுக்கு சென்றிருந்தபோது ஜனாதிபதியின் கைகளில் இருக்கும் தாயத்து தவறுதலாக கீழேவிழுந்துவிட்டது. உடனே பாப்பரசர் அதனை எடுத்து ஜனாதிபதியிடம் கொடுத்தார். இதுவொரு அற்புதமான நிகழ்வாகும். இதன்மூலம் எமது ஜனாதிபதி ஆசிர்வதிக்கப்பட்டுள்ளார் என்று சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடு…
-
- 2 replies
- 563 views
-
-
மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவுவதற்க்கு ஐ.நாவின் அமைப்புகள் தயார் : 30 அக்டோபர் 2014 கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவுவதற்க்கு ஐ.நாவின் அமைப்புகள் தயாராகயிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் துஜாரிக் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவால் 6பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 300 ற்க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனவும், 150 வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாகவும் தேசிய இடர்முகாமைத்துவ அமைப்பு தெரிவித்தது, ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் இலங்ககை;குதவ தயாராகவுள்ளதுடன்- அந்த நாட்டு அரசாங்கத்துடன் தொடர்புகொண்டுள்ளது எனவும் அவர் தெரி…
-
- 2 replies
- 434 views
-
-
வடமாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சில் நடந்ததாக கூறப்படும் பாரிய ஒப்பந்த மோசடியினில் சுமார் நூறு மில்லியன் வரையில் சுருட்டப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் அம்பலப்படுத்தியுள்ளார்.பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.ஜெகூ, யாழ்.மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல் ஆகியோரே அம்மோசடியில் பிரதான பங்கு வகித்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையினில் உலக வங்கியினால் யுத்த பாதிப்பிற்குள்ளான எமது மக்களிற்கென உட்கட்டுமான வேலைகளை மேற்கொள்ளவென 2010ம் ஆண்ட…
-
- 0 replies
- 371 views
-
-
பதுளை ஹல்துமுல்ல மீரியாபெத்தயில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மீரியாபெத்த மண் சரிவில் சிக்குண்டவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம். மண் சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் நோக்கில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் போதியளவு வெளிச்சம் இன்மையினால் மீட்புப் பணிகள் நேற்றுமாலை இடைநிறுத்தப்பட்டன. இன்று மீண்டும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுமார் ஐந்து கிலோ மீற்றர் வரையிலான பகுதி முழுவதுமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 120 வீடுகள் மண்ணில் புதை…
-
- 1 reply
- 1.3k views
-
-
வடகிழக்கு மாகாண மக்கள் சுமார் 30 வருட காலத்தின் போது இப்பேர்ப்பட்ட சித்த அழகைத் தொலைத்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள்.ஆனால் இப்போது மேலெழுந்த வாரியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதாக தெரிந்தாலும் எமது உண்மையான ஆரம்ப அழகிய சித்த நிலைக்கு நாம் யாவருந் திரும்பி விட்டோமா என்று கேட்டால் இல்லை என்றே பதில் கூற வேண்டிய அவசியம் எம்மைச் சார்ந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இன்று காலை 10 மணியளவில் மருத்துவ பீட கூவர் மண்டபத்தில் வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு வழங்கும் சித்தம் அழகியார் உலக உளநல தினத்தையொட்டி சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தா…
-
- 0 replies
- 344 views
-
-
நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணம், இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் இலங்கைக்கு வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் வந்து போவது வழமை என்று கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வணிக சூரிய தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை கடற்படை தளபதியின் இந்திய விஜயம் மற்றும் சீன நீர்மூழ்கி கப்பல் இலங்கை வந்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவர் இதனை தெரிவித்தார். இலங்கை இந்து சமுத்திரத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது. பூகோள ரீதியிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பல்வேறு நாடுகளின் கடற்படை கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் நல்லெண்ண அடிப்படையில் வந்து செல்கின்றன. இது பொதுவான ஒரு விடயமாகும். குறித்த ந…
-
- 0 replies
- 383 views
-
-
பிரபாகரனுக்கு தேவையானதையே இந்த அரசாங்கம் செய்கின்றது – சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தேவையானதையே இந்த அரசாங்கம் செய்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்கள் வடக்கிற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கினை ஏன் வெளிநாடு ஒன்றாக அரசாங்கம் கருதுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் இரண்டு வீசா பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும், ஒன்று நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும் எனவும் மற்றை…
-
- 8 replies
- 931 views
-
-
சுபாஷ்கரனும் ராஜபக்சேவும் சேர்ந்து நடத்திய ... கைது நாடகம் -அம்பலம் OCT 30, 2014 நேற்று இரவு முதல் இணையதளங்களில் சுபாஷ்கரனும் ராஜபக்சேவும் நடத்திய ,சுபாஷ்கரன் கைது என்னும் கபட நாடகத்தின் அரங்கேற்றத்தை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நாடகத்தின் காட்சிகள் : லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் "கத்தி" படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் உபதலைவர் பிரேம் சிவசாமியும் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. கத்தி படம் வெற்றிபெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா வந்த பின்னர், அதனைக் கொண்டாட மாலைத்தீவுகள் சென்று தங்க…
-
- 2 replies
- 2.3k views
-
-
-ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தின் சின்ன உப்போடைக் கிராமத்தில் 'பறங்கியர் கலாசார மண்டபம்' நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) திறந்துவைக்கப்பட்டது. ஒக்டோபர் 26ஆம் திகதி பறங்கியர் தினமாகும். இதை முன்னிட்டு இந்த மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. போர்த்துக்கல் நாட்டிலிருந்து வருகைதந்த பறங்கியர் சமூகப் பிரதிநிதிகளான ஜொஸ் லூயிஸ் நொப்ரே, கலாநிதி பெர்னாண்டோ டி லா வியேற்றர் நொப்ரே ஆகியோர் உட்பட பறங்கிய சமூகத்தைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/130978-2014-10-27-03-30-55.html
-
- 17 replies
- 2.3k views
-
-
பாப்பரசர் வருகைக்கு முன் ஜனாதிபதித் தேர்தல்! – அனைத்து ஏற்பாடுகளும் தயார். [Thursday 2014-10-30 07:00] ஜனாதிபதித் தேர்தலை பாப்பரசரின் வருகைக்கு முன்னதாக நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று ஒருசிலர் வலியுறுத்துகின்றனர். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை சட்டப்படி நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். ஜனாதிபதித் தேர்தலில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக யாரும் கருதினால், அதனை அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று தீர்த்துக் கொள்ளட்டும். அதற்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எதுவித தொடர்பும் இல்…
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கை குறித்த அறிக்கையை இன்று வெளியிடுகிறது ஐ.நா மனித உரிமைகள் குழு! [Thursday 2014-10-30 07:00] இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கண்காணிப்பட்ட விடயங்கள் மற்றும் மீளாய்வு தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் குழுவின் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 112 ஆவது அமர்வில் போது, கண்காணிப்பின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்கள், முன்னைய பரிந்துரைகளின் முன்னேற்றங்கள் குறித்து, இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடத்தவுள்ளது. இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அரசாங்கமும், அரசாங்கம் அல்லாத தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கொலைகள், காணாமல் போன சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் சித்திரவதைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அவதானத்தை செல…
-
- 0 replies
- 322 views
-
-
வடக்கு மக்களின் அன்றாட செயற்பாடுகளில் இராணுவத்தினரின் தலையீட்டை படிப்படியாக விலக்க வேண்டும் என பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ஐந்து நாள் விஜயமாக இலங்கை வந்த கமலேஷ் சர்மா, வடபகுதிக்கான ஒருநாள் பயணத்தை முன்னெடுத்திருந்தார். அங்கு வடமாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து உரையாடியிருந்தார். இந்நிலையில், தனது விஜயம் குறித்து இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெளிவுபடுத்துகையிலேயே கமலேஷ் சர்மா இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கு பகுதிக்கான விஜயத்தின் போது, மக்களின் அன்றாட செயற்பாடுகளில், இராணுவம் தொடர்பு கொண்டுள்ளமையை அவதானிக்க கூடியதாகவிருந்தது. வடபகுதி மக்களைச் சந்திக்க …
-
- 0 replies
- 510 views
-
-
நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும், போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் மனித மலம் கலந்துள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டமையால், இரு வகையான நாமங்களை கொண்ட குடிநீPர் போத்தல்களுக்கு, நீதிமன்றம்; தடைவிதித்துள்ளது. மாளிகாகந்த மேலதிக நீதவான் ரஷந்த கொடவெலவே, நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு தடைவிதித்துள்ளார். கிரிஸ்டல் (cristal) மற்றும் கே சொய்ஸ் (K Choice) ஆகிய வர்த்தக நாமங்களை கொண்ட குடிநீர் போத்தல்களுக்கே இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த நாமங்களை கொண்ட போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரில், மனித மலத்திலுள்ள பற்றீரியா கலந்துள்ளமை வைத்திய பரிசோதனை நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவற்றை தடைசெய்யுமாறு நுகர்வோர் அதிகார சபை நீதிமன்றத்தில் கேட்டிருந்தது. இத…
-
- 2 replies
- 690 views
-
-
தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் யார் என்பதை ஜனாதிபதி இப்போது உணர்ந்திருக்கினறார். தனது உரையில் எமக்கு அழைப்பு விடுத்த அவர், தான் கூறியவற்றை செயலில் காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது- மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் தாம் எத்தகைய நியாயத்தையும் காண்பதாக இல்லை என்று ஜனாதிபதி கூறினார். இருந்த போதிலும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் 13 இற்கும் அப்பாலும் செல்வதாக இந்தியப் பிரதமர், ஐ.நா. செயலாளர் ந…
-
- 2 replies
- 470 views
-
-
-ஜோசப் அன்டன் ஜோர்ஜ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது பதவிகாலத்தில் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதுடன் இரண்டாவது பதவி காலத்தில் நாட்டில் பாரிய அபிவிருத்தித திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை(28) நடைபெற்ற, கடந்த 2013ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தில் 5 ஏ சித்திகளுக்கு மேல் பெற்ற, கொழும்பு பிரதேசத்திற்குட்பட்ட, வறிய குடும்பங்களை சேர்ந்த 42 மாணவர்களுக்கான புலமை பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவ…
-
- 2 replies
- 431 views
-
-
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் கடந்த சில தினங்களாக கடல் மீன்பிடி அமோகமாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக கரைவலை, மாயவலை, தோணி வலை கடல் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடி அமோகமாக இடம்பெற்றுவருவதால் கடற்றொழிலாளர்கள் புதிய ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் கீரி இன மீன் அதிகம் பிடிபடுவதால், கடுவாடு போடப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை நிந்தவூர் பிரதேசத்தில் கரைவலை மீன்பிடியாளர்களுக்கு பல லட்சம் ரூபா பெறுமதியான கீரிமீன்கள் பிடிபட்டன. இந்த மீன்கள் உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன் கருவாடாகவும் பதப்படுத்தப்பட்டன - http://malarum.com/article/tam/2014/10/28/6527…
-
- 13 replies
- 2.1k views
-
-
யுத்தம் முடிவடைந்த பின்னரும் அதிலிருந்து தமிழ் மக்கள் இன்னும் மீளவில்லை என யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பாரிச வாதத்தினால் ஏற்படும் இறப்புக்களையும், பாதிப்புக்களையும் தடுத்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். எமது பிரதேசத்தில் உளப்பிரச்சினையாலே அதிகமான நோய்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் தமிழ் சமூகம் பல்வேறு வகையில் உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்த போதும் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் தீர்வு இன்னமும் கிடைக்கவில்லையே என்ற ஏக்க…
-
- 0 replies
- 367 views
-
-
-எஸ்.கார்த்திகேசு முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்களை கண்டு ஏமாறாது, எமது கலை, கலாசார பொருளாதாரம் இன ரீதியாக, அடையாளங்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, மீள்குடியேற்ற கிராமங்களான தங்கவேலாயுதபுரம், கஞ்சிக்குடியாறு கிராம மக்களுக்கு, குடி நீரினை சேமித்து வைக்கும் நோக்கில், செவ்வாய்க்கிழமை (28) நீர்தாங்கிகள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இங்கு தற்போது மீள் குடியேற்றப்பட்டிர…
-
- 0 replies
- 331 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி பொதுச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட 16 ஆயிரம் ரூபாய் பெறுமதியுள்ள பழுதடைந்த மீன்கள் கரைச்சி பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகரால் புதன்கிழமை (29) கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வாறு மீன்களை கைப்பற்றி அவற்றை அழித்ததாக பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். எனினும், பழுதடைந்த மீன்களுடன் சேர்த்து நல்ல மீன்களையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றி சென்றுள்ளதாக மீன் வியாபாரிகள் குற்றம் சுமத்தியதுடன், மீன் வியாபாரத்தை கைவிட்டு மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்களை பாதுகாப்பதற்குரிய வசதிகள் எதுவும் சந்தையில் இல்லாத நிலையில் தாங்கள் எவ்வாறு மீன்களை பாதுகாத்து விற்ப…
-
- 0 replies
- 332 views
-
-
- இரண்டு மாடுகளின் வெட்டப்பட்ட தலைகளுக்கருகில் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட பதாதைகள் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவையடி சந்தியில் புதன்கிழமை(29) காலை மீட்கப்பட்டுள்ளன. 'எங்கள் காணிக்குள் இருந்து மாடுகளை வெளியேற்றாவிட்டால் அதற்கு ஏற்படும் நிலைமைதான் உங்களுக்கும் நடக்கும்' என அப்பதாதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அம்பாறை, வட்டைமடு காணிப்பிரச்சிணை தொடர்பான விசாரணை பொத்துவில் நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/131256-2014-10-29-05-21-49.html
-
- 0 replies
- 325 views
-
-
திருக்கேதீஸ்வரம் புதைகுழியை அண்மித்த கிணற்றையும் தோண்ட உத்தரவு மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டிருந்த மனித புதைகுழியை அண்மித்துள்ள கிணற்றையும் தோண்டி, அது பற்றிய அறிக்கையை வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் வன்னிப்பிராந்திய காவல்துறை பிரதி பொலிஸ் மா அதிபருக்கு திங்களன்று உத்தரவிட்டிருக்கின்றது. கடந்த வருட இறுதிப்பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைப்பதற்காக வீதியோரத்தைத் தோண்டியபோது மனித எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து. அந்தப் பகுதி தோண்டப்பட்டு 80க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகளும் வேறு தடயப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இவைபற்றிய தடயவியல் ஆய்வறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படா…
-
- 0 replies
- 296 views
-
-
"தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் யார் என்பதை தற்போது ஜனாதிபதி உணர்ந்திருக்கின்றார். எமக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி தனது உரையில் கூறியவற்றை செயலில் காட்டவேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். "வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் இலங்கை வரும் ஒருவர் வடக்கிற்கு செல்வதற்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது குறித்து அரசிடமிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் இல்லை. இவ்வாறு வடக்கு செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் அரசு வட பகுதியை பிறிதொரு நாடாகப் பார்க்கிகின்றதா?" நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே …
-
- 1 reply
- 304 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளது. இலங்கை மற்றும் ஒரு சில நாடுகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மீளாய்வு அறிக்கையே இவ்வாறு நாளைய தினம் வெளியிடப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிட்டியின் 112ம் அமர்வுகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் நடத்தப்பட உள்ளது. ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இதன் போது பதலளிக்கப்பட உள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படல், குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை, பலவந்தமான கடத்தல்கள், சட்டவிரோத படுகொலைகள், காணாமல் போதல்கள், பாலியல் வன்முறைகள், பால்நிலை சமத்துவமற்ற ரீதியிலான அழுத்தங்கள், இடம்பெயர் மக்களின் நிலைமைகள் உள்ளிட…
-
- 0 replies
- 293 views
-
-
முல்லை. மாவட்டத்தில் கரைவலைப்பாடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பிலும் அரசு இன அழிப்பையே செய்துள்ளது என்று வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு மாகாண சபை அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் ரவிகரனின் பிரேரணை தொடர்பில் வழிமொழிந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1984ஆம் ஆண்டு யுத்தம் என்று கூறி தமிழ் மக்களை வெளியேற்றி விட்டு பின்னர் குறித்த பகுதியை சூனியப்பிரதேசம் என அடையாளப்படுத்தியவர்கள் அந்தக் காலப்பகுதியில் சிங்கள மீனவர்களுக்கு கரைவலைப்பாட்டு அனுமதியை வழங்கி விட்டனர். ஒரு கரைவலைப்பாடானது பரம்பரை பரம்பரையாக வருவதே ஆகும். எனினும் சட்ட உரிமைகளை …
-
- 0 replies
- 331 views
-