Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தியாக தீபம் திலீபன் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்ச்சியும், தென் தமிழீழத்தில் 1990ம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நடாத்தப்பட்ட படுகொலைகளின் 24ஆம் ஆண்டு நினைவுகூரல் கவனயீர்ப்பு ஒன்று கூடலும் இம்மாதம் (செப்டம்பர்) 26ஆம் நாள் வெள்ளி காலை 10 மணியிலிருந்து மாலை 8 மணி வரை 10 Downing Street முன்பாக நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்துடன் தியாக தீபம் அவர்களின் நினைவு வணக்க ஒன்றுகூடல் ஆரம்பமாகும்.பின்னர் மாலை 5 மணியளவில் உண்ணா நிலைப் போராட்டம் நிறைவுக்கு வர அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களுக்கான வணக்க நிகழ்ச்சிகளும் கறுப்பு செப்டம்பர் படுகொலைகள் நாள்கள் நினைவு கூரலும் இடம்பெற உள்ளன. எமது தாயகத்தை இந்திய வல்லாதிக்கம் ஆக்…

  2. வன்னியின் சுதந்திர ஊடகவியலாளரான சின்னராசா சிவேந்திரன் நேற்றிரவு கொலை முயற்சி தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார். இலங்கை பாதுகாப்பு தரப்பினைச் சேர்ந்தவர்களென நம்பப்படும் தாக்குதலாளிகள் அவரை ஏ-9 வீதியினால் பயணித்த வாகனமொன்றுள் தள்ளி வீழ்த்தி கொலை செய்ய முற்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சின்னராசா சிவேந்திரன் (வயது 33) வழமை போலவே கிளிநொச்சியில் கரடிப்போக்கு சந்தியிலுள்ள தான் பணியாற்றும் ஊடக நிறுவனங்களுள் ஒன்றினது பிரதேச அலுவலகத்திற்கு செய்திகளை வழங்கிய பின்னர் வழமை போலவே பரந்தனிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அவ்வேளை அவரது துவிச்சக்கர வண்டியினை வழிமறித்து இரு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர். தம்மை முதலில் சி.ஜ.டி என …

  3. ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஏற்பட்ட கடும் பின்னடைவைத் தொடர்ந்து, உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. யுத்த வெற்றியை காரணம் காட்டி மேற்கொண்ட பிரசாரங்களின் அடிப்படையில் கடந்த காலங்களில் அரசாங்கம் தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தது. எனினும் தற்போது அரசாங்கத்துக்கான ஆதரவு சரிந்துவண்ணம் இருக்கின்றன. கடந்த தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் கண்ட பின்னடைவை விட, தற்போது இடம்பெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது. தனி சிங்களவர்கள் மட்டும் வாழ்கின்ற மொனராகலை மாவட்டத்தில் பணத்தை வழங்கி பெற்ற ஆசனங்களாலேயே இந்த தேர்தலில் அரசாங்கத்தினால் வெற்றி பெற முடிந்தது. அத்துடன் அரசாங்கத்தில் இருந…

  4. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சியின் வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்கவே நிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. அத்துடன் முன்னாள் பிரதம நீதியரசர் சிறானி பண்டாரநாயக்கவின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்பட்டது.http://www.pathivu.com/news/34012/57//d,article_full.aspx

  5. ராமேசுவரம் மீனவர்கள் நேற்று சுமார் 400–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்துள்ளனர். அவர்களை கண்டதும் ராமேசுவரம் மீனவர்கள் கடலில் விரித்திருந்த தங்களது வலைகளை அவசர அவசரமாக எடுத்தனர். ராமேசுவரம் மீனவர்களை இங்கு மீன்பிடிக்க கூடாது என எச்சரித்த இலங்கை கடற்படையினர் இங்கிருந்து உடனடியாக செல்லுங்கள் என விரட்டியடித்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து வலைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர் என தமிழக ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது.http://www.pathivu.com/news/34020/57//d,article_full.aspx

  6. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது ஏற்கனவே நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் போது இறுதி அரசியல் தீர்வு திட்டம் வரைவது மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பில் ஒவ்வொரு குழு அமைக்கப்பட்ட அதேவேளை வடக்கு, கிழக்கில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டது. இந் நிலையில் திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை மூன்று கட்சிகள் கேட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் கூறியதால் கட்சியை பதி…

  7. ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள இளவரசர் செயிட் அல் ஹுஸைனை, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சந்தித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான ஒன்றுகூடலின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில், வட மாகாணசபை உறுப்பினர் துரைராஜா ரவிகரனும் கலந்துகொண்டிருந்தார். நேற்று வியாழக்கிழமை (18.09.14) காலை இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய அனந்தி சசிதரன், இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தினார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/artic…

    • 16 replies
    • 1.4k views
  8. வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக மூன்று விதமான துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்துடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களால் ஒட்டப்பட்டுள்ளன. 'அன்றும் அவளே இன்றும் அவளே' என அனந்தி சசிதரனை கேலி செய்யும் விதத்தில் ஒரு துண்டுப்பிரசுரமும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் வாகனம் மற்றும் வீடு ஆகியவற்றின் கனவுகளுடன் வாழ்வதாக வரைபடங்கள் மூலம் சித்தரிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினத்துடன் ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையிலும் வடமாகாண சபை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ச…

  9. இரணைமடு குடிநீர்த்திட்டத்தை TNA தடுக்கின்றது. மக்கள் கண்டிக்க வேண்டும் - EPDP வேண்டுகோள்:- இரணைமடு - யாழ்ப்பாணம் குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தடையாக இருக்கின்றது. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்ட மக்களின் வாழ்வாதார திட்டமாகவே இரணைமடு குடிநீர்த் திட்டம் அமைந்துள்ளது. இதை அரசியல் சுய இலாபங்களுக்காக எதிர்க்கும் கூட்டமைப்பை மக்கள் கண்டிக்கவேண்டும். மேற்படி குடிநீர்த் திட்டத்தை ஈ.பி.டி.பியாகி நாம் வரவேற்கின்றோம். இரணைமடு குடிநீர்த் திட்டமானது, பலவீனமாக உள்ள தற்போதைய இரணைமடுக் குளத்தின் கட்டினை புனரமைப்புச் செய்து மேலும் தேவைக்கேற்ப உயர்த்துவதோடு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் நீர்த்தேவையை பூர்த்தி செய…

  10. புத்திசுவாதீனம் அற்றவர் போல் பேசுகிறார் அமைச்சர் ரம்புக்வெல்ல! - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சாடல். [sunday 2014-09-21 06:00] அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல புத்திசுவாதீனம் அற்றவர் போல் பேசுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார். செட்டிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை அரசியலில் இவ்வளவு அமர்களம் நடந்தும் இவ்வளவு ஆராவாரம் நடந்தும் இவ்வளவு இன சம்ஹாரம் நடந்தும் எதுவுமே நடவாதது போலவும், வேற்றுக்கிரகம் இருந்து நேற்று வந்தவர் போலவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல என்ன பிரச்சினை என்று வினவுவது அவரது புத்திசுவாதீனத…

    • 2 replies
    • 361 views
  11. யாழ்ப்பாணத்தில் பயிற்சி முடித்த தமிழ் இராணுவத்தினரின் அணிவகுப்பு! [saturday 2014-09-20 19:00] யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்த இளைஞர் யுவதிகளைக் கொண்ட படையணி ஒன்று, இன்று காங்கேசன்துறையில் அமைந்துள்ள படைத்தளத்தில் பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. சுமார் 500 வீர வீராங்கனைகளைக் கொண்ட இந்த படையணியில் நூறு பெண்கள் அடங்குகின்றனர். இவர்கள் முறையே பெண்கள் படையணி, பொறியியல் படையணி, பொதுப் படையணி என்பவற்றில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தமிழ் இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை கொழும்பு படைத்தலையைகத்தின் படை அதிகாரி மேஜர் ஜெனரல் அமங்கபொல மற்றும் யாழ் மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உதய பெரொ ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். இதனை…

  12. விரைவில் சீனாவின் காலனி நாடாக மாறிவிடும் இலங்கை! - திஸ்ஸ அத்தநாயக்க [sunday 2014-09-21 06:00] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக விரைவில் இலங்கை சீனாவின் காலனி நாடாக மாறிவிடும் என ஐதேக பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதான நிர்மாணிப்பு அபிவிருத்தித் திட்டங்களில் பல திட்டங்களை 99 வருடங்களுக்கு சீனாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்த பின்னர், அந்த நிலப்பரப்பில் அரைவாசிக்கும் மேற்பட்ட நிலப்பகுதித குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கப்பட உள்ளது. …

  13. இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ஜனாதிபதி மகிந்த! [sunday 2014-09-21 07:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் 69வது மாநாட்டில் பங்கேற்கவே ஜனாதிபதி மஹிந்த அமெரிக்கா செல்கிறார். ஐ.நா பொதுச்சபையின் 69வது கூட்டத்தொடர் நியுயோர்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி ரையாற்றவுள்ளார். இந்தப் பயணத்தின் போது முக்கிய அரசியல் சந்திப்புக்களில் ஜனாதிபதி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. seithy.com

  14. யாழ்ப்பாணத்தில் ராஜினி திராணகமவின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு இடையூறு! [sunday 2014-09-21 06:00] யாழ்ப்பாணத்தில் மனித உரிமை ஆர்வலர் கலாநிதி ராஜினி திராணகமவின் நினைவுதினத்தை அனுஷ்டிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட விரிவுரையாளராக கடமையாற்றிய கலாநிதி ராஜினி திராணகம, அசாதாரணமான சூழல் நிலவிய போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை உருவாக்குவதில் பங்களித்தவர்.தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பாக முறிந்த பனை நூலை எழுதியவர்.1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி ராஜினி திராணகம அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று அவரது 25 வது நினை…

  15. கடும் நெருக்கடியான வெற்றியை பெற்று தனித்து ஆட்சி அமைக்கிறது ஐ.ம.சு.மு ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நெருக்கடியான வெற்றியைப் பெற்று தனித்து ஆட்சி ஆட்சியமைக்கிறது. ஊவா மாகாண சபைக்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன் முடிவுகள் முழுமையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பதுளை மாவட்டத்தில் 9 ஆசனங்களும், மொனறாகல மாவட்டத்தில் 8 ஆசனங்களுமாக 17 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அத்துடன் 2 'போனஸ்' ஆசனங்களுடன் மொத்தமாக 19 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பதுளை மாவட்டத்தில் கடும் நெருக்கடியைக் கொடுத்து 8 ஆசனங்களையும், மொனறாகல மாவட்டத்தில் 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. இத…

  16. சீன ஜனாதிபதியின் விஜயத்துக்கு முன்னதாக இலங்கை துறைமுகத்துக்கு அந்நாட்டின் அதிநவீன நீர்மூழ்கியும், போர்க்கப்பல்களும் வந்துள்ள விடயம் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், அமெரிக்காவில் இந்தியப் பிரதமர் மோடி மஹிந்தவிடம் இந்த நடவடிக்கை குறித்து தனது ஆட்சேபத்தைத் தெரிவிப்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது:- ஐ.நா. கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இந்திய பிரதமருடன் பேச்சு நடத்துவது உறுதியாகிவிட்டது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து புதுடில்லி உறுதி செய்துவிட்டதாகவும் அவை தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பின்போது அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறை…

  17. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் மயிரிழையில் தப்பிப்பிழைத்து ஊவா மாகாண சபையைக் கைப்பற்றியிருக்கிறது. ஊவா மாகாண சபையில் மொத்தமுள்ள 34 ஆசனங்களில் 2 போனஸ் ஆசனங்கள் தவிர்ந்து, 32 ஆசனங்களுக்கு உறுப்பினர்களை நேரடியாகத் தேர்தெடுக்கும் தேர்தலில் 17 ஆசனங்களையே ஆளும் கட்சி கைப்பற்றியிருக்கிறது. இது, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் பெற்ற 23 ஆசனங்களைக் காட்டிலும், 6 ஆசனங்கள் குறைவாகும். சுமார் 75000 வாக்குகள் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு பெரும் நெருக்கடி கொடுத்து 13 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. 2009ஆம் ஆண்டுத் தேர்தலில் சுமார் 130000…

  18. சீனா ஜனாதிபதியின் விஜயத்திற்;கு முன்னதாக இலங்கை துறைமுகத்திற்க்கு அந்த நாட்டின் அதிநவீன நீர்மூழ்கியும்,போர்க்கப்பல்களும் வந்ததாக குளோபல் தமிழ் செய்திகள் தெரிவித்திருந்தது உறுதியாகியுள்ள அதேவேளை இந்தவிடயம் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளதாகவும் மோடி மகிந்த சந்திப்பின்போது இடம்பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன-.இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது ஐ.நா கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது உறுதியாகிவிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து புதுடில்லி உறுதி செய்துவிட்டதாகவும் அவை தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பின்போது அரசமைப்பின் 13 வது திர…

  19. இலங்­கையின் வறிய மீனவக் குடும்­பங்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்தத் தொழில் வாய்ப்­புக்­களை ஹேலீஸ்­அக்­ரி­கல்ச்சர் நிறு­வனம் வழங்கி வரு­கின்­றது. ஹேலீஸ் கூட்­டு­நி­று­வ­னங்­களின் வேளாண் ­வ­ணிக அங்­க­மான ஹேலீஸ் அக்­ரி­கல்ச்சர் நிறு­வனம் (Hayleys Agriculture Holdings Limited) அண்­மையில் மன்னார்க் கடற்­க­ளப்பில் கடற்­பாசி வளர்ப்பை தொடங்­கி­யுள்­ளது. இலங்­கையின் வட­மேற்குக் கரை­யோ­ரத்தில் தொடங்­கி­யுள்ள இச்­செற்­திட்­டத்­தினால் மீனவ குடும்­பங்­க­ளுக்கு நன்மை கிடைக்கும். ஏனெனில் உல­க­ளவில் கடற்­பா­சி­யி­லி­ருந்து உற்­பத்­தி­யாகும் உண­வுப்­பொ­ருள்­க­ளுக்கு விலை­ம­திப்பு ஏறு­மு­க­மாக உள்­ளது. குறிப்­பிட்­ட­வகைக் கடற்­பா­சியை இயற்­கை­யா­க­ வ­ளர்த்து அறு­வடை செய்­வத…

  20. ஐக்கிய தேசியக்கட்சியின் ஹல்துமுல்லை பிரதேச சபை உறுப்பினர் நிமல் கருணாரத்னவின் மீது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் வாளால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த அவர், ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள் வெட்டுமேற்கொண்ட குழுவில் ஹல்துமுல்லை பிரதேச சபையின் தலைவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/news/34006/57//d,article_full.aspx

  21. மட்டக்களப்பு - கிரான்குளம் பிரதேச மக்கள் நேற்று (20-09-2014) சனிக்கிழமை வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 திகதி திங்கட்கிழமை, இரவு 10-15க்கு கிரான்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 22வயதான ஆறுமுகம் ருத்திரநாதன் என்ற இளைஞன் உயிரிழந்தார். சந்தியில் பேசிக்கொண்டு நின்ற இளைஞர்கள் மீது, மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கிச் சென்ற வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணமாக இருந்த வேன் சாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கூறியே மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்…

  22. மொனராகலை மாவட்டம்- தபால் மூல வாக்கெடுப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- 5,632 ஐக்கிய தேசிய கட்சி - 2,800 மக்கள் விடுதலை முன்னணி - 1001 ஜனநாயகக் கட்சி- 395 ஏனைய கட்சிகள்- 208 பதுளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 8,810 ஐக்கிய தேசிய கட்சி - 7,274 மக்கள் விடுதலை முன்னணி - 2,087 ஜனநாயக கட்சி - 517 தேசிய சுதந்திர முன்னணி - 159 ஜனநாயக ஐக்கிய கூட்டணி - 62 http://www.virakesari.lk/articles/2014/09/21/மொனராகலை-மாவட்டம்-தபால்-மூல-வாக்கெடுப்பு-முடிவுகள்

  23. தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் பொறித்த கழுத்துப்பட்டியுடன் விளையாட்டு போட்டி ஒன்றில் கடமையாற்றிய விளையாட்டுத்துறை அதிகாரி ஒருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளார். வட மாகாண சபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் வட மாகாண விளையாட்டுப் போட்டிகள் முல்லைத்தீவில் நடைபெற்று வருகின்றன. அவ் விளையாட்டு போட்டிக்கு மத்தியஸ்தம் வகிக்க சென்ற கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட பயிற்றுனரான எஸ்.சதீஸ் (வயது 40) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கழுத்துப்பட்டியானது விடுதலை புலிகளின் விளையாட்டுத்துறையினால் வழங்கப்பட்ட கழுத்துப்பட்டியாகும். அவ் கழுத்துப்பட்டியை அணிந்து கடமையாற்றும் போதே அவரை பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்தனர்.http://…

  24. திருகோணமலையில் இரு பிள்ளைகள் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளனர். பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்த தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடலில் மூழ்கி மரணமடைந்தவர்கள் 9 வயதான மகனும் 12 வயது மதிக்கத்தக்க மகளும் உயிரிழந்துள்ளனர். அருகில் இருந்த கடற்படையினர் படகில் வந்து மூவரையும் காப்பாற்றிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தாய் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளார். http://www.pathivu.com/news/33993/57//d,article_full.aspx

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.