ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143552 topics in this forum
-
சீனா வழங்கியது கடன் தான், ஆனால் கடனல்ல! – விந்தை விளக்கம் கொடுக்கிறார் அமைச்சர் பந்துல [Thursday 2014-09-18 17:00] சீனா இலங்கைக்கு வழங்கியது கடன் தான். ஆனால் அந்தக் கடன் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டதால் அதனை நிதியுதவி என்றே அழைக்க வேண்டும் என்று கடனுக்கு புதியதொரு விளக்கத்தை கொடுத்துள்ளார் அமைச்சர் பந்துல குணவர்த்தன. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை இப்போது வறுமைக் கோட்டிலுள்ள நாடல்ல. மத்திய தர வருமானம் கொண்ட நாடாகும். எனவே, எமக்கு கடன் வழங்கப்படுவதில்லை. நிதியுதவிகளே வழங்கப்படுகின்றன. சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு அபிவிருத்திகளுக்காக குறைந்த வட்டியில் நீண்டகால திருப்பிக்கொடுக்கும் வி…
-
- 0 replies
- 275 views
-
-
தமிழ் மக்கள் தூங்கிவிடாமல் இலக்கை நோக்கி நகர வேண்டும்! - மாவை சேனாதிராசா [Thursday 2014-09-18 17:00] தமிழ் மக்களாகிய நாம் தூங்கிவிடாமல்,எமது இலக்கை நோக்கி நகர வேண்டியது அவசியம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராசா தெரிவு செய்யப்பட்டமையை பாராட்டி, காங்கேசன்துறை தமிழரசு கட்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழீழ விடுதலைப் புலகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எமது பிரதேசங்களில் எந்தவொரு வெற்றியையும் பெற முடியாமல் போனது. …
-
- 0 replies
- 325 views
-
-
ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றப் பாடுபடுவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! – ஐ.நாவில் நிமல்கா வேண்டுகோள். [Thursday 2014-09-18 17:00] இலங்கையில், ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்தை நிறைவேற்ற பணியாற்றும் மனித உரிமை பணியாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு அவசியம் என இலங்கை மனித உரிமை ஆர்வலர் நிமால்கா பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 27 வது அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் அங்கு தெரிவித்துள்ளதாவது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம், உலகம் முழுவதிலு…
-
- 0 replies
- 227 views
-
-
ஸ்கொட்லாந்து பொதுவாக்கெடுப்பு ஈழத்தமிழருக்கு உந்துசக்தியாக அமைகிறது! - வி.உருத்திரகுமாரன் [Thursday 2014-09-18 17:00] ஸ்கொட்லாந்தில் நடைபெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுவாக்கெடுப்பு ஈழத் தமிழருக்கு உந்துசக்தியாக அமைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெறுகின்ற ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பு குறித்து பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்- ஸ்கொட்லாந்தில் நடைபெறுகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு தொடர்பாக, ஸ்கொட்லாந்து மக்களுக்கும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மாண்புமிகு டேவிட் கமரூன் அவர்களுக்கும், ஸ்கொட்லாந்து மு…
-
- 0 replies
- 329 views
-
-
இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் குடும்பத்தினருடன் ஒட்டி உறவாடும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் "கத்தி" இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் "லீலா பெலஸ்" மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. லீலா பெலசின் நான்கு பக்கங்களும் தடைகள் போடப்பட்டு, யாரும் உள்நுழைய விடாது பெரும் பாதுகாப்புடன் கத்தி இசைத் தட்டு வெளியீட்டு நடைபெறுகிறது. அங்கு வைக்கப்பட்ட விளம்பரம் பதாதைகள் அனைத்தும் அடித்துடைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டுள்ளன. முற்றுகைப் போராட்டத்தில் ஈபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். "கத்தி" இசைத்தட்…
-
- 3 replies
- 611 views
-
-
இந்திய மீனவர்களது படகுகள் இரும்பு வியாபாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்படாத 62 படகுகள் யாழ்ப்பாணத்தின் காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை கடற்பகுதியில் வைக்கப்பட்டிருந்தன. அரச உடமையாக்கப்பட்டிருந்த குறித்த படகுகள் நீதிமன்ற உத்தரவினையடுத்து அன்றைய காலத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தவரின் அனுமதியுடன் படகுகள் சில கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. எனினும் கடந்த கால யுத்தத்தினால் கடற்பகுதியில் விடப்பட்டிருந்த படகுகள் பல நீரில் மூழ்கியதுடன் பழுதடைந்தும் போயின. இதனை…
-
- 0 replies
- 340 views
-
-
ஊவா மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் இலக்கத்தகடற்ற மற்றும் போலியான இலக்கத்தகடுகள் பொறுத்தப்பட்ட வாகானங்களின் நடமாட்டத்தை அதிகளவில் காணமுடிவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன. 17 ம் திகதி நள்ளிரவு வரை தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 424 தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மொனராகல மாவட்டத்திலேயே அதிகளவாக 305 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பதுளையில் 100 முறைப்பாடுகள் வரை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 17ம் திகதி மாத்திரம் 24 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, பொதுச்சொத்துக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன, தேர்தல் கூட்டங்களை நடத்துவதற்க்கு அரசாங்க கட்டங்கள் பயன்படுத்தப்படுவ…
-
- 0 replies
- 349 views
-
-
அரசாங்கத்தினதும் ஆளுநர் சந்திரசிறியினதும் எதாட்சாதிகாரத்தினால் கிடப்பில் கிடந்த வடக்கு மாகாண சபபையின் நிதி நியதிச் சட்டம் மற்றும் முத்திரை வரி கைமாற்றுச் சட்டம் ஆகியன இன்று வியாழக்கிழமை வடமாகாண ஆளுநரின் அங்கீகாரத்துடன் வடமாகாண சபையில் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் நிதிநியதிச் சட்டம் (இல1. 2014) முத்திரைவரி கைமாற்றுச் சட்டம் (இல.2 2014) ஆகியன ஆளுநரின் அங்கீகாரத்துடன் ஆளுநரின் செயலாளர் இளங்கோவனால் கைடிதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் அதன் தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்திடம் இன்று கையளிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. வடமாகாணசபை தெரிவாகி ஒருவருடத்தை அண்மிக்கும் நிலையில் அதனால் சமர்ப்பித்த இரு நியதிச்சட்டங்களும் இப்போதே அங்கீகரிக்கப்பட்டு உள்ளமை குறிப்…
-
- 0 replies
- 223 views
-
-
20 ம் திகதி அனைத்துகட்சிகளும் இணைந்து வாக்கு பெட்டிகளை பாதுகாக்க வேண்டும்:- ஹரின் பெர்ணாண்டோ - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊவா:- ஊவா மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக ஜே.வி.பியுடன் இணைந்து செயற்பட தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான வேட்பாளர் ஹரின்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் முதலமைச்சர் பதவியை கூட எதிர்;க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக துறக்க தயார், ஆளும்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சசீந்திர ராஜபக்ச ஊவாமக்களின் தேவைகளை ப+ர்த்தி செய்ய தவறிவிட்டார், சிறிய விடயங்களை கூட சரிசெய்ய தவறிவிட்டார். அவர் சிறிய விடயங்களில் ஆரம்பித்திருக்கவேண்டும்- உதாரணத்திற்க்கு சிறுவர்களுக்கு சிறியளவு பாலை வழங்குவது- அதனால் மக்க…
-
- 0 replies
- 296 views
-
-
கிளிநொச்சி பாடசாலைகளின் அவலநிலை! - படங்களில் [Thursday 2014-09-18 07:00] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயம், மலையாளபுரம் அன்னை சாரதா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள், எந்த அடிப்படை வசதிகளுமின்றி இயங்கி வருகின்றன. மழைகாலம் நெருங்கியுள்ள நிலையில், மேற்கூரையற்ற வகுப்பறைகளிலும், மரநிழலிலும் மாணவர்கள் கல்வி கற்கும் அவலம் தொடர்கிறது. seithy.com
-
- 3 replies
- 548 views
-
-
நான் தேர்தலுக்காக செயற்படும் தலைவன் அல்ல! - என்கிறார் ஜனாதிபதி மகிந்த [Thursday 2014-09-18 07:00] நாட்டு மக்களின் பெரும்பான்மை வாக்குகளில் ஆட்சிக்கு வந்த நான் தேர்தலுக்காக செயற்படும் தலைவன் அல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஊவா மாகாணசபைத் தேர்தலின் இறுதி தேர்தல் பிரசார நாளான நேற்று மஹியங்கனை நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மக்களுக்கு சேவை செய்யவே நான் நியமிக்கப்பட்டுள்ளேன். கடந்த காலங்களில் அதை உச்ச அளவில் முழுமையாக நிறை வேற்றியுள்ளேன். வெற்றிலைக்கு அமோக வெற்றியை பெற்றுக்கொடுக்க ஊவா மக்கள் இப்போதே உறுதியான தீர்மானம் எடுத்துள்ளனர். இதற்கிணங்க பெரும்பாலான வாக்குகளால் இம்முறை ஊவா வெற்றிபெறுவது உறுதி. நாட்டின்…
-
- 2 replies
- 410 views
-
-
இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்களபௌத்தர்கள் என பெருமையுடன் சொல்ல முடியும்:- துட்டகெமுனு குறித்து பெருமையுடன் பேச முடியும் - மகிந்த - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்களபௌத்தர்கள் என பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு அல்லது துட்டகெமுனு குறித்து பெருமையுடன் பேசகூடிய நிலைக்கு நாட்டை தனது அரசாங்கம் மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாகந்தவில் அனாகரிக தர்மபாலாவின் 150 பிறந்ததினத்தை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்னர் மக்கள் தாங்கள் சிங்களபௌத்தர்கள் என சொல்வதற்கே தயங்கினர்.…
-
- 5 replies
- 630 views
-
-
மூதூர் படுகொலை:விசாரணைகளை உன்னிப்பாக அவதானிப்போம்! – என்கிறது பிரான்ஸ் தூதரகம். [Thursday 2014-09-18 07:00] மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள் விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதற்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் பிரான்ஸ் தூதரகம் உன்னிப்பாக அவதானிக்கும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது- குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான சகல சாத்தியமான வழிமுறைகைளும் பின்பற்றப்படவேண்டும் என நாம் கருதும் அதேவேளை பிரான்சிலோ அல்லது இலங்கையிலோ வாழும் சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பெறுவது தொடர்பாக பிரான்ஸ் தூதரகம் எந்த யோசனையையும் முன்வைக்கவில்லை என்பதையும் தெளிவபடுத்த விரும்புகி…
-
- 0 replies
- 402 views
-
-
இன்று நடை பெரும் லைகா நிறுவனத்தின் கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த விடமாட்டோம்... கடும் எதிர்ப்பு காட்டியே தீருவோம் என தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள், முற்போக்கு மாணவர் முன்னணி ஆகியவை அறிவித்துள்ளன. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு கூறுகையில், "ராஜபக்சேவின் ஆதரவு பெற்ற நிறுவனம்தான் லைக்கா நிறுவனம். இது நூறு சதவீத உண்மை. இந்த உண்மையை மூடி மறைக்க முயல்கிறார்கள். ஆதரவு இல்லை என்றால், எதற்காக இலங்கை அரசுடன் வியாபாரம் செய்து வருகிறார்கள்? நாங்கள் முன்வைப்பது ஒன்றுதான். இலங்கை அரசுடன் தொழில் செய்துவரும் லைக்கா நிறுவனம் தமிழ் திரையுலகில் கால் ஊன்றக் கூடாது. "இது தொடர்பாக சென்னை காவல் துறை ஆணையாளர் …
-
- 0 replies
- 418 views
-
-
-சுப்பிரமணிம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் வரட்சியான சூழ்நிலை நிலவுவதனால் காலபோக நெற்செய்கைக்கான தீர்மானங்கள் எதனையும் எடுக்க முடியாதிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், வியாழக்கிழமை (18) தெரிவித்தார். காலபோக செய்கை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தலில், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில், காலபோக செய்கை தொடர்பான கூட்டம் இதுவரையில் நடத்தப்படவில்லை எனவும் இதனால் பயிர்ச்செய்கை மேற்கொள்வதில் சிக்கல் நிலைகள் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைப்புக்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள். இது தொடர்பில் மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது பாரிய வரட்சியை எதிர்கொண்;டிருக்கின்றோம். பருவமழையை அடு…
-
- 0 replies
- 337 views
-
-
'பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவை பேணி வாழ்ந்த நாம், இன்று பூமி தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து எல்லாவற்றையுமே உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மாறியுள்ளோம். இதுவே இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம்' என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நூறு மாணவர்களுக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 'ஆரோக்கிய வாழ்வு' என்னும் கருப்பொருளில் கடந்த 15 ஆம் திகதி முதல் மூன்று நாள் வதிவட கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கின் இறுதி நாளான புதன்கிழமை (17) 'சுற்றுச்சூழலும் ஆரோக்கியமும்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கருத்துரை வழங்குகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் அங்…
-
- 0 replies
- 714 views
-
-
இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம் என்ன? – பொ.ஐங்கரநேசன் மாணவர்களுக்கு விளக்கம்! பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து எல்லாவற்றையுமே உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மாறிவிட்டிருக்கிறோம். இதுவே இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம் என்று வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர்; பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட நூறு மாணவர்களுக்குக் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ‘ஆரோக்கிய வாழ்வு’ என்னும் கருப்பொருளில் மூன்று நாள் வதிவடக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில…
-
- 1 reply
- 377 views
-
-
வட மாகாண முதல்வர் அரசுடன் ஒத்துழைப்பதில்லை! - குற்றம்சாட்டுகிறார் கோத்தபாய வடக்கு மாகாண முதலமைச்சர் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்படுவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற “நகர மீளெழுச்சி” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மேலும் கூறுகையில், இந்த யுகத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச நகரம் பாரிய எழுச்சியைக் கண்டுள்ளது. மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதிலிருந்து தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம். பொருளாதாரம் போன்றவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட…
-
- 1 reply
- 436 views
-
-
ஐஸ்கிறீம்களில் மலத் தொற்று; உதயன் தலைப்புச் செய்தியால் குடாநாட்டில் பரபரப்பு!? யாழ்.மாவட்டத்தில் முன்னணியில் உள்ள மூன்று பிரபல ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புக்களில் மலத்தொற்று காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து உதயன் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி குடாநாட்டில் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. இது குறித்து உதயன் பத்திரிகையின் இன்றைய பிரதான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நெருப்புக்காய்ச்சாலை ஏற்படுத்தக்கூடிய கோலி போர்ம் என்ற பக்ரீறியா ஐஸ்கிறீம் வகைகளில் மிக அளவுக்கு அதிகமாகவே இருப்பது ஆய்வுகூடச் சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் நெருப்புக்காய்ச்சல் நோய்க்கு இது ஒரு…
-
- 1 reply
- 334 views
-
-
கடனுக்கு புதியதொரு விளக்கத்தை கொடுத்த அமைச்சர் சீனா இலங்கைக்கு வழங்கியது கடன் தான். ஆனால் அக் கடன் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டதால் அதனை நிதியுதவி என்றே அழைக்க வேண்டும் என கடனுக்கு புதியதொரு விளக்கத்தை அமைச்சர் பந்துல குணவர்த்தன வெளியிட்டார். வல்லரசான அமெரிக்காவே 7 ரில்லியன் டொலர் கடனாளி நாடாகும். அதற்காக அந்நாடு பொருளாதாரத்தில் பின்னடைவைத் கண்டுள்ளதாக கூற முடியுமா? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; இலங்கை இப்போது வறுமைக் கோட்டிலுள்ள நாடல்ல. மத்திய தர வ…
-
- 0 replies
- 285 views
-
-
தேர்தலை இலக்கு வைத்து எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை – அரசாங்கம்:- தேர்தலை இலக்கு வைத்து எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணசபைத் தேர்தல்களை இலக்கு வைத்து அரசாங்கம் எரிபொருளுக்கான விலைகளை குறைக்கவில்லை பெற்றோலிய வள அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை குறைப்பு குறித்து கடந்த மூன்று மாதங்களாக ஆராயப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலைகளை குறைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறைந்த விலைகளில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நலன்களை வழங்கும் நோக்கில…
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கையில் இன முரண்பாடுகளை தூண்டும் நோக்கம் நோர்வேக்கு கிடையாது – கிரிட்டி லோஸன்- இலங்கையில் இன முரண்பாடுகளை தூண்டும் நோக்கம் நோர்வே அரசாங்கத்திற்கு கிடையாது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரிட்டி லோஸன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன ரீதியான பதற்றங்களை உருவாக்கும் எவ்வித நோக்கமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயகௌரவம், பல்வகைத் தன்மை போன்றவற்றை நோர்வே அரசாங்கம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நோர்வே அரசாங்கம் கடும்போக்குடைய அமைப்புக்களை ஊக்குவிப்பதாகவும், இன முரண்பாடுகளை தூண்டுவதாகவும் இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இலங்கையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் எவ…
-
- 0 replies
- 352 views
-
-
யாழ்ப்பாணம் மண்கும்பான் சாட்டி கடற்கரையில் நேற்று காலை மீட்கப்பட்ட சடலம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவருடையது என இனங் காணப்பட்டுள்ளது. சாட்டி கடற்கரையில் நேற்று அதிகாலை பெண்ணொருவருடைய சடலம் கரையொதுங்கியிருந்தது. அதனை அவதானித்த பிரதேச வாசிகள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சடலம் மீட்கப்பட்டது. தகவல் அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை அடையாளம் காட்டினர். அதன்படி பண்டத்தரிப்பை சேர்ந்த 35 வயதுடைய மரியதாஸ் அன்ரனி மேரிரொரேற்றா என அடையாளம் காணப்பட்டது. இதேவேளை, சடலத்திற்கு அருகில் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை (14) முதல் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 614 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில், உலகிற்கு அகிம்சையைப் போதித்த தியாக தீபம் திலீபன் அவர்களது 27 ம் ஆண்டு நினைவு நாளிலே உலகப் பரப்பெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள் தியாக தீபம் திலீபனுடைய இறுதி வேண்டுகோளான 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்' என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்தவுள்ளார்கள். தமிழகத்தில் எதிர்வருகின்ற 15 ம் திகதி தொடக்கம் 26 ம் திகதி வரை உண்ணா நோன்பும், மாலை மாபெரும் எழுச்சி நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது. அந்த எழுச்சி நிகழ்விலே பழ நெடுமாறன் ஐயா, வை.கோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், மே 17 திருமுருகன் சீமான், மாணவர் அமைப்பின் தலைவர் செம்பியன், புகழேந்தி தங்கராஜா, ஓவியர் புகழேந்தி, புலமைப்பித்தன், கௌத்தூர் மணி, கோவை ராமகிர…
-
- 0 replies
- 315 views
-
-
கனடாவில் வசிக்கும் குமாரச்சந்திரன் சுதாகரன் அவர்களது அன்புத் தாயார் அமரர் நாகேஸ்வரி குமாரச்சந்திரன் அவர்களின் நினைவாக தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு ஒருலட்சத்து இருபதினாயிரம் ரூபா சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டது. கனடாவில் உள்ள உறங்கா விழிகள் அமைப்பின் தலைவர் சோமசுந்தரம் அவர்களுடாக மேற்படி குடும்பத்தினரால் அனுப்பி வைக்கப்பட்ட உதவி தாயகத்தில் இருந்து இயங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் மேற்படி உதவி கடந்த 13-09-2014 அன்று உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது. பயனாளிகளில் ஒருவர் கடந்த கால யுத்தம் காரணமாக கணவனை இழந்து ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றார…
-
- 0 replies
- 268 views
-