ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவளிக்கும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வழங்கியுள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நோன்புப் பெருநாள் தினத்தன்று சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கும் என்ற உறுதிமொழியை அமைச்சர்…
-
- 7 replies
- 868 views
-
-
சப்ரகமுவ பல்கலைக் கழகத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு தமிழ் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் தமிழ் மாணவன் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் விடுதியின் கழிவறையில் இனவாத ரீதியான வாசகங்கள் சிலவற்றை எழுதிவைத்து விட்டுச் சென்றுள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதுடன் அதில் மொழிப்பிழைகளும் காணப்படுகின்றன. இது எங்கள் நாடு, நீங்கள் போய்விடுங்கள், நீங்கள் புலிகள் போன்ற வார்த்தைகள் அவற்றில் எழுதப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் முகமா லையைச் சேர்ந்த சந்திர குமார் சுதர்சன் (வயது 21) என்ற புதுமுக மாணவனே நெஞ்சுப் பகுதி, முதுகுப் பகுதி ஆகியவற்றில் பட…
-
- 12 replies
- 1.3k views
-
-
பிரதம செயலாளரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பொதுச்சேவை ஆணைக் குழுவுக்கே உண்டு; உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட பொதுச் சேவைகள் ஆணைக் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று இலங்கை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தனது அடிப்படை உரிமையில் தலையிடுகிறார் என்று தெரிவித்து வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தாக்கல் செய்த மனு தீர்ப்புக்காக இன்று உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே.ஸ்ரீபவன் மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் வழக்கை விசாரித்தனர். இதன்போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட…
-
- 8 replies
- 794 views
-
-
வட - கிழக்கு இலங்கையில் காணமல் போனோரின் குடும்பங்களின் குறைகளை கேட்பதற்கும், அதற்கான நீதியை பெற்றுகொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் போது அனுமதியில்லாமல் நுழைந்த அரச அனுசரணை பெற்ற பிக்குகள் உட்பட கும்பல் ஒன்று பாதுகாப்பு தரப்பினர் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே நடை பெற்றுக்கொண்டு இருந்த கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்தினர். எனினும் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வுக்கு அத்துமீறி நுழைந்த கும்பலை வெளியேற்ற பாதுகாப்பு தரப்பினர் எந்த முயற்ற்சியும் எடுக்காமல் இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. எவ்வாரெனினும் இந்த கலந்துரையாடலை காணமல் போனோரின் பெற்றோர்களின் சங்கம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய அமைப்புகளும் இனைந்து ஏற்ற்…
-
- 2 replies
- 751 views
-
-
அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு தொடர்பில் புதிய சட்ட மூலம் தயாரிப்பு! அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்வது தொடர்பான புதிய சட்ட மூலம் ஒன்று தயாரிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதிகளை கண்காணிக்கும் வகையில் சட்ட மூலம் ஒன்றை தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சட்ட மூலம்தற்போது சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்குகின்ற நிதிகளை அரசாங்கம் நேரடியாக கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://…
-
- 0 replies
- 444 views
-
-
-நவரத்தினம் கபில்நாத் வவுனியா மாவட்டத்தில் புதிய குடியேற்றங்கள் எங்கிருந்து வந்தன என எமக்கு உடன் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (4), வவுனியா மாவட்ட செயலக கேட்பொர் கூட்டத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்ட கேள்வியை எழுப்பினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, வவுனியா மாவட்டத்தில் பல சிங்கள குடியேற்றங்கள் புதிது புதிதாக வருகின்றன. இவை எங்குள்ள மக்களை குடியேற்றம் செய்யப்படுகின்றது என்பது எமக்கு தெரிந்தாக வேண்டும். அதற்கு அரசாங்க அதிபர் பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்ப…
-
- 0 replies
- 347 views
-
-
அமைச்சர் பசீர் சேகுதாவூத் எழுதிய சோர்விலாச் சொல் நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதி, பலஸ்தீன் காஸாவிலுள்ள குழந்கைளுக்கு பால்மா வாங்குவதற்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். இந்த நூலின் மூலம் கிடைக்கும் ஒரு ரூபாயைக் கூட தான் எடுக்கப்போவிதல்லை எனவும் இதன் மூலம் கிடைக்கும் நிதி பலஸ்தீன் காஸாவிலுள்ள குழந்கைளுக்கு பால்மா வாங்குவதற்கு காஸாவுக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சர் பசீர் சேகதாவூத் 1991ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக சோர்விலாச் சொல் எனும் நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை(3) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக…
-
- 0 replies
- 326 views
-
-
இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்ட சிறுவன், அவரது பெற்றோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்தார். இன்றைய சந்திப்பில் ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் பொலிஸ்மா அதிபர் இலங்ககோன் ஆகியோர் உடனிருந்தனர். சிறுவனின் நலன் குறித்து அவரது பெற்றோரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார். மீகலெவ - குணுபொலகம பிரதேச வியாபாரியின் 4 வயது மகனான டனிது யசீன் என்ற சிறுவன் கடந்த 28ஆம் திகதி கடத்தப்பட்டார். இந்தச் சிறுவன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார் http://malarum.com/article/tam/2014/08/03/4174/%E0%AE%95…
-
- 7 replies
- 712 views
-
-
நாயாறில் விரிவாக்கப்படும் இராணுவக் கட்டமைப்புகள்! - அனுமதிக்க முடியாது என்கிறார் வடமாகாணசபை உறுப்பினர் சிவமோகன். [Tuesday 2014-08-05 09:00] நாயாறு பிரதேசத்தில் சில நாட்களாக பெருந்தொகையில் இராணுவ விஸ்தரிப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர் என, வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். நாயாறு பாலத்துடன் அண்டிய பிரதேசத்தில் ஒரு மேலதிக இராணுவ முகாம் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்கள் சமாதானத்தையும் இன நல்லிணக்கத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கும் போதும் மேலதிக இராணுவ முகாம் அமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. மேற்படி காணிகள் ஏற்கனவே இப்பிரதேசத்தில் வசித்த பெருமளவு தமிழ்மக்களுக்கும் ஒரு சில சிங்கள குடும்பங்களுக்கும் ஆட்சிக்கான அனுமத…
-
- 0 replies
- 461 views
-
-
ஊவா தேர்தலில் இருந்து ஒதுங்கியது ஜனநாயக மக்கள் முன்னணி! - தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முடிவு. [Tuesday 2014-08-05 09:00] ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி நேரடியாக போட்டியிடப் போவதில்லை என்றும், ஆனால் மனோ கணேசன் தலைமையில் பதுளை மாவட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு, தமிழ் மக்களின் வாக்குகளை அரசுக்கு எதிராக சேகரிக்கும் பணியில் ஈடுபடும் என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஊவா மாகாணத்தில் நமது கட்சி, போட்டியிடுவது தொடர்பாக ஆராய்ந்து வந்த வேளையில், பதுளை மாவட்டத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 21இல் இருந்து 18க்கு குறைக்கப்பட்டது…
-
- 0 replies
- 450 views
-
-
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஸ்கைப் மூலம் 30 பேர் சாட்சியம் news ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக இலங்கையைச் சேர்ந்த 30 பேர் சாட்சியமளித்துள்ளனர். யுத்தக்குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினரிடமே இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மாநாட்டில் இது தொடர்பாக வாய்மொழி மூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 05 ஆகஸ்ட்டு 2014, செவ்வாய் 9:35 மு.ப - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=274183292405486557#…
-
- 0 replies
- 316 views
-
-
வணக்கஸ்தலங்கள், சமய அடையாளங்கள் நிறுவுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014 08:40 கெலும் பண்டார சகல சமயங்களினது வணக்கஸ்தலங்களையும் சமய அடையாளங்களையும் நிறுவுவதை ஒழுங்கு படுத்துவதற்கென, புத்த சாசன மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சினால் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. வணக்கஸ்தலங்கள் நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் சில பிரதேசங்களில் எழுந்த அமைதியற்ற சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புதிய சமய வழிபாட்டு ஸ்தலங்களை நிர்மாணிப்பது தொடர்பில், சமய விவகார அதிகார சபையிடமிருந்து முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கும் ஒரு சுற்றறிக்கையை புத்த சாசன மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சு, கடந்த 2008ஆம் ஆண்டில் வெளியிட்டது. மேலும், …
-
- 1 reply
- 268 views
-
-
சீன நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கத் தயார் – ஜனாதிபதி 05 ஆகஸ்ட் 2014 சீனாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அண்மையில் சீனாவின் தென் மேற்கு பகுதியான யுனான் மாகாணத்தில் இடம்பெற்ற நில அதிர்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நில அதிர்வினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து சேதங்கள் தொடர்பில் கவலையடைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நில அதிர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கிற்கு இரங்கல் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்…
-
- 0 replies
- 357 views
-
-
இலங்கையின் யுத்தக்குற்றங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்க விரும்புவோர் மின்னஞ்சல் மூலம் அதனைபகிரலாம் 05 ஆகஸ்ட் 2014 இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பாக தகவல்களை சமர்ப்பிக்க விரும்புவோர் மின்னஞ்சல் ஊடாக அதனை பகிர்ந்து கொள்ளலாம் என ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. oisl_submissions@ohchr.org. என்ற மின்னஞ்சல் முகவரியையே பயனபடுத்துமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வழிமுறை ஊடாக தகவல்களை பெற்ற பின்னர், தாங்கள் அதன் நம்பகத்தன்மைய உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை அரசாங்க அதிகாரிகளையும் ஏனையவர்;களையும் சந்திப்பதற்காக அந்த நாட்டிறகு; செல்வதற்கான அனுமதியை இல…
-
- 0 replies
- 480 views
-
-
ஞானசார தேரருக்கு வீசா வழங்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்புக்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை:- பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கொலபொடத்தே ஞானசார தேரருக்கு வீசா வழங்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்புக்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்கள் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனிடம், ஞானசார தேரரை நாட்டு;க்குள் அனுமதிக்க வேண்டாமென கடிதம் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்களின் சூழ்ச்சித் திட்டமாக இதனைக் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு எதிராக இலங்கையில் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள…
-
- 5 replies
- 679 views
-
-
தமிழக மீனவர்களிடம் இலங்கைக் கடற்படை நடந்துகொள்ளும் அணுகுமுறை உலகில் வேறு எந்த இரு நாடுகளுக்கு இடையிலும் காண முடியாதது. நெருக்கமான கடல் எல்லையைக் கொண்ட இரு நாடுகளிடையே கடலோடிகள் எல்லை தாண்டிச் செல்வது எங்கும் நடக்கக் கூடியது. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், இந்தப் பக்கம் எப்படி மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்கிறார்களோ, அதேபோல, அந்தப் பக்கம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், இலங்கை அரசைப் போல பாகிஸ்தான் அரசு கொடூரமாக நடந்துகொள்ளவில்லை. அதேபோல், இந்திய எல்லைக்குள் தவறி வரும் எந்நாட்டு மீனவர்களையும் நாம் கண்ணியமாகவே கையாள்கிறோம். இலங்கை அரசின் அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகரித்திருக் கின்றன. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவத…
-
- 1 reply
- 935 views
-
-
அமைச்சர் மேர்வின் சில்வா யாழிற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு நல்லூர் கந்தனை இன்று வழிபாடு செய்துள்ளார். யாழ். மாவட்டத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா நல்லூர் ஆலயத்திற்கு வருகைதந்து வழிபாட்டினையும் மேற்கொண்டிருந்தார். மேலும் மேர்வின் சில்வா நயினாதீவு மற்றும் யாழில் உள்ள பிரசித்திபெற்ற தலங்களுக்கும் இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.onlineuthayan.com/News_More.php?id=485383287803670946
-
- 14 replies
- 3.3k views
-
-
ஐ.நா விசாரணைக் குழு அடுத்தவாரம் லண்டனில் கூடுகிறது! [Monday 2014-08-04 09:00] இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் நோக்கில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அடுத்த வாரம் லண்டனில் கூடவுள்ளது. விசாரணைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து இந்தக் குழு ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், காணாமல் போனவர்களது உறவினர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுடன் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக தொடர்பு கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குழுவினர் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=114303&catego…
-
- 5 replies
- 530 views
-
-
கூட்டமைப்பின் நிலைப்பாட்டை கைவிடும்படி இந்தியா கோரவில்லை – கூட்டமைப்பு ‘இலங்கையில் தமிழ் மக்களின் தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள ஸ்திரத் தன்மையை கைவிடும்படி இந்திய அரசாங்கம் தம்மைக் கோரவில்லை’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்; நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். ‘இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டும்’ என இந்தியா வலியுறுத்தியுள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இன்னமும் உறுதிப்படுத்தப்பட்ட திகதியை இந்திய அரசு அறிவிக்காததால், புதுடெல்லி செல்வது தொடர்…
-
- 0 replies
- 316 views
-
-
வடக்கில் இருந்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள குடும்பத்தினரினது பாதுகாப்பை, கொழும்பிலும் மீண்டும் வீடு திரும்பியதன் பின்னரும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது பிக்குகள் உட்பட சிலர் அத்துமீறி நுழைந்து இடையூறு விளைவித்தமை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி கூறப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன, அமெரிக்க தூதரக அதிகாரிகள் உள்ளடங்கியதாக இன்று (04) நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது பிக்குகள் உள்ளடங்கிய, கோபம் கொண்ட கும்பல் ஒன்றினால் தடங்கல் விளைவிக…
-
- 0 replies
- 388 views
-
-
இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவனத்தின் முதலாவது கிளை மன்னாரில் இன்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களால் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. வன்னி தொகுதியில் முதற்கட்டமாக 72 ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களை தெரிவுசெய்து அவர்களுக்கான பயிற்சிகள் இதன் மூலம் வழங்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் 30 பேரும், வவுனியா மாவட்டத்தில் 27 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்தின் 20 பேருக்கு இன்று நியமனங்களை வழங்கிவைக்கப்பட்டது. கொரிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இந்தப் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கென 2.6 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. பயிற்சிகளை முடித்துக்கொள்ளு…
-
- 0 replies
- 443 views
-
-
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இணைத் தலைவராக தலைமை தாங்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களால் அவரின் 18.11.2013ஆம் திகதி கொண்ட கடிதத்தில் நான் கேட்கப்பட்டிருந்தேன். அக்கடிதத்தின் படி, வருங்காலம் சம்பந்தமான மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்தவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறி என்னை அதனை நடைமுறைப்படுத்த உதவும் வகையில், இணைத் தலைவராக வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தேன். ஆனால் மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு எதுவும் எமக்கில்லை. - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இணைத்தலைமைகளில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…
-
- 0 replies
- 276 views
-
-
குப்பிளானில் மரவெள்ளி தோட்டம் ஒன்றை வைத்து பிழைப்பு நடத்தி வரும் குடும்பஸ்தர் ஒருவர், வேலைக்காரியோடு பல காலமாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மரவெள்ளி தோட்டத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்று, அங்கே வேலை பார்க்கும் வேலைக்காரியோடு சல்லாபமாக இருப்பது இவர் வழக்கம். இச்செய்தி மனைவியின் காதுகளுக்கு எட்டியதே இல்லை. சம்பவ தினமான நேற்று முன் தினம் மனைவி திடீரென குறித்த மரவெள்ளி தோட்டத்திற்கு சென்றுள்ளார். கணவர் வேலைக்காரியோடு சல்லாபாக இருந்ததை கண்டே தாக்கியுள்ளார். இத் தாக்குதலை கணவர் சற்றும் எதிர்பாக்கவில்லையாம். மரவெள்ளி தோட்டத்தில் புல் பிடுங்க, நீர் பாச்சவென் இவர் இளம்பெண்ணொருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் பகல் வேளையில் தோட்டப்பக்கம் எதே…
-
- 14 replies
- 1.5k views
-
-
-எஸ்.ஜெகநாதன் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால், வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்துக்கு குடிநீர் பவுசர் ஒன்று நேற்று புதன்கிழமை (30) வழங்கப்பட்டது. வட இலங்கை சர்வோதய அறங்காவலர் பொ.ஜமுனாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மேற்படி சர்வோதயத்துக்கு சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பொருளாளர் ச.ரமணதாஸ் இந்த குடிநீர் பவுசரை வழங்கிவைத்தார். புங்குடுதீவின் சில பிரதேசங்களுக்கு வெள்ளோட்டமாக குடிநீர் இந்த பவுசர் மூலம் விநியோகிக்கப்பட்டது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/120170-2014-07-31-05-48-53.html
-
- 15 replies
- 928 views
-
-
தமிழ்நாட்டில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறிலங்காவின் 15வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட அணி சென்னையில் இருந்து இன்று கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவையும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் கேவலப்படுத்தும் வகையில், வெளியிடப்பட்ட கட்டுரையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் சிறிலங்கா எதிர்ப்புணர்வு தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே, தமிழ்நாட்டில் ஜேஎம். ஹரூன் துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் பங்கேற்க வந்த 15 வயதுக்குட்பட்ட சிறிலங்கா அணியின் 16 வீரர்களையும் சென்னையில் இருந்து வெளியேறப் பணிக்கப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தமிழ்நாடு காவல்துற…
-
- 2 replies
- 520 views
-