Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவப் பின்னணியைக் கொண்ட ஜி.ஏ.சந்திரசிறியையே வடமாகாண ஆளுநராக ஜனாதிபதி மீண்டும் நியமித்திருப்பது பாரிய திட்டம் ஒன்றின் ஒரு பகுதியாக உள்ளது என்றே தான் கருதுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். இதனால் தமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டியவர்களாக தாம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையைப் புறக்கணித்து, வழங்கிய வாக்குறுதியை மீறும் வகையில் சந்திரசிறி மீண்டும் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என கேட்டபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது …

    • 0 replies
    • 244 views
  2. (நீர்கொழும்பு நிருபர் எம்.இஸட். ஷாஜஹான்) நீர்கொழும்பு நகரில் தற்காலிகமாக தங்கியள்ள பாகிஸ்தான் பிரஜைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வைத்திய முகாம் நேற்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு தளுபத்தை, கடற்கரைத் தெரு, குடாபாடு ஆகிய பிரதேசங்களில் உள்ள தாய், சேய் மருத்துவ நிலையங்களில் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பின் பேரில் நீர்கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் ஊடாக இலங்கையில் தங்கியிருந்தபடி தஞசம் கோரியுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் 1400 இற்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு நகரின் பல்வேறு பிரதேசங…

    • 0 replies
    • 221 views
  3. "இலங்கை அரசாங்கம் பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்தத் தவறினால், இஸ்லாமிய தீவிரவாதம் உருவாகுவது தவிர்க்க முடியாததாகிவிடும்" - இவ்வாறு எச்சரித்துள்ளார் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம். வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் கடந்த மாதம் இடம்பெற்ற மத வன்முறைகளை தடுத்து நிறுத்தத் தவறியதைத் தொடர்ந்து தன்னைப் பதவி விலகுமாறு தனது ஆதரவாளர்கள் கடும் அழுத்தம் கொடுத்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பௌத்தர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இஸ்லாமியர்கள் குறித்த அச்சம் அதிகரித்து வருவதாகவும், மேற்குலகில் காணப்பட்ட இந்த மனோ நிலையைத் தற்போது தங்கள் தங்கள் அரசியலுக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்…

  4. கொழும்பில் இந்தியத் தூதரகத்துக்கு புதிய கட்டடம்! - இந்திய வெளிவிகார அமைச்சு முடிவு [sunday 2014-07-13 07:00] இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு புதிய கட்டிடம் ஒன்று கட்டப்படவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும், கொழும்பில் எந்த இடத்தில் புதிய இந்தியத் தூதரகத்துக்கான புதிய கட்டிடம் அமைக்கப்படவுள்ளது என்று விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் மலேசியாவின் கோலாலம்பூரிலும், இந்தியத் தூதரகத்திற்காக புதிய கட்டிடத்தை இந்திய வெளிவிவகார அமைச்சு அமைக்கவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=113050&category=TamilNews&language=tamil

  5. இலங்கை வருகிறார் நெதர்லாந்து அமைச்சர் news நெதர்லாந்தின் வர்த்தக துணை அமைச்சர் சைமன் ஸ்மிட்ஸ் நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நெதர்லாந்தின் அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவை என கொழும்பில் அமைந்துள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நாளை விஜயம் செய்யும் அவர் எதிர்வரும் 17 ம் திகதி வரை தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களையும் தனியார் துறை அதிகாரிகளையும் ஸ்மிட்ஜ் தனது விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார். 13 ஜுலை 2014, ஞாயிறு 11:05 மு.ப - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=617823220413424733#sthash.iMM3grmy.dpuf

  6. சந்திரிகா குமாரதுங்க 10 அம்ச கொள்கைத் திட்டத்துடன் அரசியலில் மீண்டும் நுழைய உள்ளார் : 13 ஜூலை 2014 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 10 அம்சங்களை உள்ளடக்கிய கொள்கைத்திட்டத்துடன் அரசியலில் மீண்டும் நுழைய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.தேசிய செய்தித்தாள் இதனை தெரிவித்துள்ளதுடன் சந்திரிக்கா இது குறித்து விரைவில் அறிவிப்பினை வெளியிடுவார் எனவும் குறிப்பிட்டுள்ளது. அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகிறாரா என்பது தெரியாது, ஆனால் அவர் இரு பிரதான கட்சிகளினது பிரமுகர்களுடனும் இது குறித்து ஆராய்ந்துள்ளார், தற்போதைய அரசாங்கம் குறித்து அதிருப்தியிலிருக்கும் பல மூத்த அமைச்சர்களுடனும் அவர் இது குறித்து பேசியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.http://www.globaltamilnews.net…

  7. அவுஸ்ரேலியா ஒப்படைத்த தமிழர்களை கடற்படையினர் தாக்கினர்! - சிங்களப் பெண் வெளியிட்ட தகவல் [sunday 2014-07-13 07:00] அவுஸ்திரேலிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட நான்கு தமிழர்களையும் இலங்கை கடற்படையினர் தாக்கியதாக சிங்களப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த நான்கு தமிழர்களுடன் சென்ற மேலும் 37 பேர் சார்பில் அவுஸ்ரேலிய கடற்படையினருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்படடுள்ளது. இந்தக் கடிதத்தை எழுதியுள்ள சுஜீவா சப்ரமாது என்ற பெண், தனது கடிதத்தில், நியூஸிலாந்துக்கு செல்லும் வழியில் படகு பழுதடைந்தமையால் நியூஸிலாந்திடம் அவசர உதவி கோரப்பட்டது. இதன்போது அவுஸ்திரேலியாவின் எஸ்ஓஎஸ் மெரைன் 157 என்ற கப்பல் வந்து எம்மை காப்…

  8. மன்னார் ஊடகவியலாளரை மீண்டும் நாலாம் மாடிக்கு அழைக்கிறது குற்றப்புலனாய்வுப் பிரிவு! [sunday 2014-07-13 07:00] மன்னாரில் உள்ள பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லம்பேர்ட் மீண்டும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக எஸ்.ஆர். லம்பேர்ட் தெரிவிக்கையில், மன்னார் மூர் வீதியில் அமைந்துள்ள எனது வீட்டிற்கு மன்னார் பொலிஸாரினூடாக நேற்றுமுன்தினம் அழைப்பாணைக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், வாக்குமூலம் பெறுவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு காரியாலயத்திற்கு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10மணிக்கு வருகை தருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ஏன்? எதற்காக விசாரணைகளுக்காக அழைக்கப்படுகின்றேன் என்ற விடயம் இதுவரை தெரியவில்லை. …

  9. ஒரே சந்திப்புக் குறித்து, இந்தியாவும் இலங்கையும் வெளியிட்ட இருவேறு தகவல்கள்! - அம்பலப்படுத்துகிறது இந்திய ஊடகம் [sunday 2014-07-13 08:00] நல்லிணக்கம் மற்றும் 13வது திருத்தச்சட்டம், தென்னாபிரிக்காவின் அண்மைய முயற்சிகள் உள்ளிட்ட முக்கியமான எல்லா விவகாரங்கள் குறித்தும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இடையிலான சந்திப்பின் போது, பேசப்பட்டதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்ட எல்லா முக்கியமான விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டன. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கு, தமது அரசாங்கம் மேற்கொள்ளும் சொந்த முயற்சிகள் குறித்…

  10. ஐ.நா சிறப்பு பிரதிநிதி இலங்கை வர அனுமதி கோருகிறார்! [sunday 2014-07-13 08:00] நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் தன்னிச்சையான மரணதண்டனைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் இலங்கைக்கு வர அனுமதி கோரியுள்ளார். கடந்த ஆண்டும் அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள முயன்ற போதிலும், அந்த முயற்சி பயனளிக்கவில்லை. நிலுவையில் உள்ள தமது பயணத்துக்கான கோரிக்கையை, இலங்கைவயும் மற்றும் சில நாடுகளின் அரசாங்கங்கள் ஏற்றுக் கொள்ள ஊக்குவிப்பதாக, ஐ.நா சிறப்புப் அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் அளுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்திடம் விடுத்திருந்த அவசர கோரிக்கை ஒன்றில், குற்றவாளிகளை நீதிக்கு ம…

  11. கல்லூரி மாணவன் ஒருவனின் அட்டகாசத்தினால் ஒரு குடும்பத்தின் வீடு எரித்து நாசமாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸில் பாதிக்கப்பட்டவர்களினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முறையிடப்பட்டுள்ளது. உடுவில் புதுமடம் பகுதியில் இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறிப்பிட்ட மாணவனின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவர் காதல் பிரச்சினை காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளாராம். இதனைத் தொடர்ந்து அந்த நபர் தற்கொலை செய்து கொண்ட அடுத்தநாள் குறிப்பிட்ட வீட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த அந்த மாணவன் வீட்டை அடித்து சேதப்படுத்தியதுடன் வீட்டில் உள்ளவர்களையும் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்ற போதிலும் பின்னர் நிலமையை…

    • 0 replies
    • 451 views
  12. இலங்கையுடன் அனுபவங்களைப் பகிர முடியும், அழுத்தம் கொடுக்க முடியாது! - தென்னாபிரிக்க அமைச்சர் தெரிவிப்பு. [Friday 2014-07-11 10:00] இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காகத் தேவையான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமே தவிர, இவ்வாறு தான் செயற்பட வேண்டும். அல்லது முடிவுகளை எடுக்க வேண்டும் என எம்மால் ஒருபோதும் அழுத்தம் கொடுக்க முடியாது என தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதியமைச்சர் நொமன்டியா பெக்கிற்டோ தெரிவித்தார். தென்னாபிரிக்காவில் இனவன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நேற்று கொழும்பில், லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்…

    • 3 replies
    • 618 views
  13. பக்தர் வெள்ளத்தில் மிதந்து வந்த நயினை நாகபூசணி அம்மனின் தேர்! [Friday 2014-07-11 18:00] வரலாற்றுப் பிரசித்திபெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை மணியளவில் இடம்பெற்றது. கடந்த ஜுன் மாதம் 28 ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆலய மஹோற்சவத்தில் 14 ஆம் நாளாகிய இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. நாட்டின் பலபாகங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் இந்தத் தேர்த்திருவிழாவிற்காக வருகை தந்திருந்தனர். தேர் உற்சவத்தின் போது, காவடிகள், கற்பூரச்சட்டி, அங்கப்பிரதட்சணை ஆகியவற்றினை மேற்கொண்டு அடியவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர். …

  14. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி கடல் வழிப் பயணம் மேற்கொண்ட நூற்றுக் கணக்கானவர்கள் மாயம் 12 ஜூலை 2014 அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி கடல் வழியாக பயணங்களை மேற்கொண்ட நூற்றுக் கணக்கானவர்கள் மாயமாகியுள்ளனர். இலங்கைத் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.இவ்வாறு வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் கடல் வழியாக புகலிடம் கோர முயற்சித்து காணாமல் போன இலங்கையர்களின் எண்ணிக்கை 800க்கும் மேல் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் உண்மை …

  15. வடக்கு மாகாண ஆளுனராக மீண்டும் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளதானது, சிறிலங்கா அதிபரின் மற்றொரு வாக்குறுதி மீறல் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், இராணுவப் பின்னணியில்லாத ஒருவரை ஆளுனராக நியமிப்பதாக, சிறிலங்கா அதிபர் கடந்த ஜனவரி 2ம் நாள் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஒருவேளை தனது உத்தரவுகளைக் கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடிய- சிவில் அதிகாரிகள் எவரையும் அவரால் தனது அதிகாரிகள் மத்தியில், இருந்து தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம். அவுஸ்ரேலியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்க…

  16. வெல்லாவெளி நிருபர் போரதீவுப்பற்று பிரதேசத்தில் பல கிராமங்களில் கடும் வரட்சி நிலவுகின்றமையால் பொது மக்கள் தமது அன்றாட தேவைக்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் சீ.குபேரன் தெரிவித்தார். தும்பங்கேணி, தும்பங்கேணி விவசாயத்திட்டம், சுரவனையடியூற்று, களுமுந்தன்வெளி, பிலாளிவேம்பு, காந்திபுரம், விவேகானந்தபுரம், வீரச்சேனை, மாவேற்குடா போன்ற கிராமங்கள் வரட்சியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் போரதீவுப்பற்று பிரதேச சபையினால் பவுசர்கள் மூலம் தினமும் 48000 லீற்றர் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. - http://thinakkural.lk/article.php?local/qouiijpmem6972566f0ea4f618101ksvnvc2e947f36795c8f58ba901vr6zg#s…

    • 0 replies
    • 380 views
  17. சந்திரசிறியின் மீள்நியமனத்தை சர்வதேசத்திடம் கொண்டு செல்வோம்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [saturday 2014-07-12 09:00] வடமாகாண ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலத்தை அரசாங்கம் நீடித்துள்ளதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா,. கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுக்களின் போது, இராணுவத் தொடர்பில்லாத சிவில் அதிகாரி ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்திருந்தார். வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையையும் மக்களின் ஆணையையும் மதிக்காத அரசாங்கத்தின் நட…

  18. சர்வதேச இராணுவச் சுட்டியின் படி பிராந்தியத்தில் இராணுவ மயமாக்கலில் இலங்கை முதலிடம்:- தமிழில் குளுாபல் தமிழ்ச் செய்திகள்- யுத்தத்திற்கு பிந்திய இலங்கை மிக வேகமாக இராணுவ மற்றும் ஏதேச்சதிகார சமூகமாக மாறி வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின்; மேற்பார்வையின் கீழ் இயங்கும் அரசசார்பற்ற அமைப்புகளுக்கான செயலகம், விடுத்துள்ள செய்திக்குறிப்பு, அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், இந்த சுற்று நிருபத்தை உடனடியாக அதிகாரிகள் இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது. குறிப்பிட்டஉத்தரவு இலங்கையின் சுதந்திர மற்றும் ஜனநாயக சமூகம் மீது கடும் பாதிப்புகளை ஏற…

    • 2 replies
    • 421 views
  19. இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவின் நான்கு விசாரணையாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவும், 15 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விசாரணையாளர்களுக்கு மேலதிகமாக இரண்டு விசேட நிபுணர்கள் இலங்கைக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு விசாரணையில் பங்கெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கும் பட்சத்தில் இலங்கை வரவுள்ள நான்கு விசாரணையாளர்களும் 15 நாட்கள் இலங்கையில் கள நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களிடம் நேர்காணல்களையும் செய்யவுள்ளனர். அந்த…

  20. ஆணைக்குழு முன் ஈபிடிபியை குற்றம்சாட்டிய பெண்ணை குறுக்கு விசாரணை செய்யப் போகிறாராம் டக்ளஸ்! [saturday 2014-07-12 09:00] கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணையின் போது தமது கட்சியைக் குறிப்பிட்டு பெண்ணொருவர் கூறிய குற்றச்சாட்டுகள் வேதனையளிப்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு அரியாலை பிரதேசத்தில் அப்பெண்மணி வசித்து வந்ததாகவும், அப்போது வெள்ளைவேனில் வந்த இனந்தெரியாதோர் தனது கணவரை கடத்திச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார். அப்போது ஆணைக்குழுவினர் அந்தப் பெண்மணியிடம் உங்கள் கணவர் கடத்தப்பட்ட பகுதியை அந்தக் காலப்பகுதியில் நிர்வாகம் செய…

  21. ஐ.நா. விசாரணைகுழுவின் விவகாரத்திலும் சிறீலங்காவிற்கு ஆதரவாக இந்தியா! ஜூலை 12, 2014 சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐ.நா விசாரணை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், சையட் அக்பருதீனிடம், இதுதொடர்பாக வினவப்பட்டது.அதற்கு அவர், இந்த விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. இது ஒரு நாட்டின் குறிப்பிட்ட விவகாரம் அல்ல. கொள்கை ரீதியான விவகாரம். அனைத்துலக அமைப்புகள், மனித உரிமை விவகாரங்களுக்கு ஒத்துழைப்பு வழி…

  22. இலங்கைக்கு அவுஸ்திரேலியா திருப்பியனுப்பிய புகலிடக்கோரிக்கையாளர்கள் 41 பேரும் சட்டவிரோத பயணத்தை மேற்கொள்வதற்கு உதவியவர்களில், விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஓருவரும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் சட்ட விரோத குடியேற்ற வாசிகளை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயமாக அமைந்துள்ளது. எனினும் அவர் .இரண்டாவது சந்தேக நபர்தான், முக்கிய குற்றவாளி படகு உரிமையாளர் ஒருவர், அவர் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிருக்க வேண்டும் என அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணி எபா அருண சாந்த தெரிவித்துள்ளாh. இதேவேளை சுஜீவ சப்ரமாது என்ற பெண்மணி தனது கணவரே இந்த ஆட்கடத்தலில் முக்கிய கு…

  23. ஐ.நா விசாரணையில் சாட்சியமளிப்போரைத் தண்டிக்க முடியாது! - சட்டத்தில் இடமில்லை என்கிறார் சுமந்திரன் [saturday 2014-07-12 10:00] ஐ.நா மனிதஉரிமைப் பேரவையின் விசாரணைகளில் சாட்சியமளிப்போரை கைது செய்ய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் விசாரணை நடத்தப்படுகின்றது. இந்த விசாரணைகளில் சாட்சியமளிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் நடத்தப்படும் விசாரணைகளில் சாட்சியளிக்கும் நபர்களை கை…

  24. இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களை இலங்கை முஸ்லிம்கள் ஆதரிக்கமாட்டார்கள்! - ஐந்து முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக அறிக்கை [saturday 2014-07-12 09:00] இலங்கை முஸ்லீம்கள் இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுக்கு எதிராகவோ, அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு எதிராகவோ பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதை ஒருநாளும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ மாட்டார்கள் என்று இலங்கையைச் சேர்ந்த ஐந்து முஸ்லீம் அமைச்சர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், ஏ எச் எம் ஃபௌசி, ரிஷாத்பதியுதீன், பஷீர் ஷேகு தாவூத், ஏ எல் எம் அதாவுல்லா இணைந்து கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், இலங்கை முஸ்லீம்கள் மத்தில் பயங்கரவாதிக…

  25. வெளிநாட்டு நிறுவனத்துக்கு அறிக்கைகளை அளிக்கும் முன்னாள் படை அதிகாரி! - கண்டுபிடித்ததாம் புலனாய்வுப் பிரிவு [saturday 2014-07-12 09:00] வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு நான்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பான தகவல்களை வழங்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வாராந்தம் இவ்வாறு குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டுக்கு எதிராக தகவல்களை வெளிநாட்டு தூதரகங்களுக்கு வழங்கி வருகின்றன. முன்னாள் படையதிகாரி ஒருவரும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து வருகின்றார். அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கனேடிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தகவல்களை வழங்கி வருகின்றன. இதனை அந்நாட்டு வெளிவிவகார …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.