Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவின் கலியோன் குறூப் நிறுவனத்தின் ஸ்தாபகரான ராஜ் ராஜரட்ணத்தின் இளைய சகோதரர் ரங்கன் ராஜரட்ணம் (வயது-43) மீது சுமத்தப்பட்ட சதி மற்றும் பத்திர மோசடி வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று தெரிவித்து நியூயோர்க் சமஷ்டி நீதிமன்றம் ஒன்றின் பெரும் ஜுரிமார்சபை அவரை விடுதலை செய்திருக்கின்றது. இவரது மூத்த சகோதரரான ராஜ் ராஜரட்ணம் உள்வர்த்தகக் குற்றச்சாட்டின் பேரில் 2011 இல் குற்றவாளியாகக் காணப்பட்டு நியூயோர்க் சமஷ்டி நீதிமன்றத்தினால் 11 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றமை தெரிந்ததே. இவர்களது தந்தையாரான ராஜரட்ணம் இலங்கையில் சிங்கர் நிறுவனத்தில் பணியாற்றிப் பின்னர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவராக விளங்கி…

    • 0 replies
    • 405 views
  2. புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதில்லை என அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்ட எவரும் துன்புறுத்தப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் இதுவரையில் கிடைக்கவில்லை என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்டவர்கள் துன்புறுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா என்பதனை ஆராய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்ட போதிலும் உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடு கடத்தப்பட…

  3. காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள இந்த அமர்வில் சாட்சியமளிக்கவென 60 பேருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில், தமது பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தோம். ஆனால் இன்றுவரை அவர்கள் குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று பலர் சாட்சியமளித்துள்ளனர் . வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் கொடுத்த மகன் எங்கே! பெற்றோர் சாட்சியம் http://www.pathivu.com/news/32184/57//d,article_full.aspx

    • 2 replies
    • 896 views
  4. அவுஸ்திரேலியா நடுக் கடலில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் லிபரல் பிரதமர் மெல்கம் பிராசர் ( Malcolm Fraser) தெரிவித்துள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் இந்தக் கத்தை வெளியிட்டுள்ளார். சிட்னியில் அமைந்துள்ள பொனி சர்வதேச கொள்கை நிறுவகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நடுக் கடலில் 150 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்தமை ஓர் கடற் கொள்ளை முயற்சியாகவே நோக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச கடற்பரப்பில் பயணித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய கப்பலில் ஏற்றியமை சர்வதேச சட்ட மீறலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய…

    • 7 replies
    • 512 views
  5. அளுத்கமை அரசமர கூட்டுத்தாபன காணியில் அமைக்கப்பட்டுள்ளது தற்காலிக இராணுவ முகாம் என்று இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்; அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் உணவு …

  6. போப்பாண்டவரை அழைத்து அவரை அவமானப்படுத்த அரசு திட்டம் - மனோ கடந்த தேர்தலின் போது தமிழர்களுக்கு எதிராக இனவாத தீயை தூண்டி விட்டு வளர்த்து யுத்தத்திலும், தேர்தலிலும் வெற்றி பெற்ற இந்த அரசாங்கம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மதவாத தீயை தூண்டி விட்டு வெற்றி பெற முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு பொதுபல சேனை பொதுசெயலாளர் ஞானசார தேரர் பயன்படுத்தபடுகிறார். இந்நோக்கில் இஸ்லாமிய மதத்தவர்களுக்கு எதிராக கலவரம் செய்தார்கள். நரேந்திர மோடியை உடனடியாக ஆத்திரபடுத்த விரும்பாததால், உடனடியாக இந்து மதத்தவர்களை எதிர்க்கும் திட்டம் பின்போடப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களது அடுத்த குறி, இப்போது கத்தோலிக்க மதத்தவர்களின் பக்கம் திரும்பியுள்ளது. இந்நோக்கில் இன்று ஞானசாரர் கத்தோலிக்கர்களுக்…

    • 0 replies
    • 307 views
  7. பாரிய நெருக்கடியை நோக்கி சிங்கள இனவாத அரசு! பாதுகாப்பு சபையின் பிரதிநிதியாகிறார் மிச்செல்! இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் சிசனை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அமரிக்காவின் உதவி பிரதிநிதியாக நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளத. அதில் சிசனை பாதுகாப்பு சபைக்கு நியமிக்க ஒபாமா எண்ணங்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிச்செய்ல் சிசன் தற்போது அமெரிக்காவின் வெளியுறவு சேவை உறுப்பினராகவும் இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமான தூதுவராகவும் 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார. இந்தநிலையில் புதிய பதவியின் நிமித்தம் அவர் இலங்கை தூதுவர் பதவியை விட்டு செல்வாரா? அல்லது அந்த பதவிக்க…

  8. அவுஸ்ரேலியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயலும் எவருக்குமான வழிமுறைகள் மூடப்பட்டு விட்டன : அவுஸ்ரேலியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயலும் எவருக்கும் அந்த வழிமுறைகள் அவுஸ்ரேலியா மற்றும் இலங்கையால் மூடப்பட்டு விட்டன என்ற செய்தியை தான் தெரிவிக்க விரும்புவதாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா புகலிட கோரிக்கையாளர்களை அந்த நாடு கையாளும் விதம் குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்து இரு படகுகளை இலங்கையிடம் கையளித்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள மொரிசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/109189/Default.as…

    • 0 replies
    • 382 views
  9. யாழ். சென்ற தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் வரவேற்பு! யாழ்ப்பாணத்திற்கு சென்ற தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோச அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர். விஷேட உலங்கு வானூர்தியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு இன்றைய தினம் காலை தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் வருகை தந்தபோது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வருகைதந்த சமயம் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாவட்ட அர…

    • 0 replies
    • 251 views
  10. (எஸ்.கே) 200 ஆபாச படங்­களைத் தயா­ரிப்­ப­தற்கு பிரான்­ஸ் நாட்­ட­வரொ­ரு­வ­ருக்கு சிறுவர்­களை வழங்கி இலட்சக் கணக்கில் பணம் பெற்­ற­தாகக் கூறப்­படும் வெளிநாட்­ட­வ­ருக்கு வழி காட்­­டி­யாக தொழில் புரியும் நபரொ­ரு­வரை நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்தில் வைத்து சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யின் விசேட பொலிஸ் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்ட இந்த நபரின் வீட்டை வாட­கைக்குப் பெற்று பிரான்ஸ் நாட்­டவர் அந்த வீட்டில் சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­யுள்­ள­தாகவும் சிறு­வர்­களைப் பயன்­ப­டுத்தி ஆபாச திரைப்­ப­டங்­களைத் தயா­ரித்து வந்­துள்­ள­தா­கவும் சிறு­வர் பாது­காப்பு அதி­கா­ர­சபை அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். இந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு…

  11. இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் உக்கிரமாக போர் இடம்பெற்ற பகுதி முல்லைத்தீவு மாவட்டம் என்ற அடிப்படையிலேயே தற்போது இராணுவம் இருப்பதனால் இங்கு வாழும் மக்கள் மன அமைதியுடன் வாழ்கின்றனரா என்று அறிந்து கொள்ளும் நோக்குடனேயே இராணுவம் நிலைகொண்டிருப்பது தொடர்பில் மக்களிடம் கேள்விகளை எழுப்பி இருந்தோமே தவிர வேறு எந்த விசேட நோக்கமும் அல்ல என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்ரம பரணகம தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக காணாமற் போனவர்கள் தொடர்பில் சாட்சியப் பதிவுகள் இடம்பெற்று நேற்றுடன் முடிவடைந்துள்ளன. அதனையடுத்து 4நாள் அமர்வு குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ முகாம் உள்ளதா? …

  12. "இலங்கை அரசின் அழைப்புக்கிணங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்துக்கு அமையவும்தான் நாம் இலங்கை வந்தோம். ஆனால், எமது பயணத்தை இலங்கை அரசின் பங்காளிக் கட்சிகள் கண்டபடி விமர்சிக்கின்றன என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதனைப் பார்த்து நாம் மன வருத்தமடைகிறோம். இதனை இலங்கை அரச தரப்பிடம் நேற்று நடத்திய சந்திப்பின்போது கூறியுள்ளோம்.'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளனர் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்கு அனுசரணை வழங்கும் வகையில் தென்னாபிரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சிறில் ரமபோ­ஷ தலைமையிலான குழுவினர். நேற்றுக் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அந்…

  13. நீதியரசராக இருந்த நீங்கள் ஏன் நீதிமன்றை நாடவில்ல? – விக்கியிடம் தென்னாபிரிக்கக்குழு (படங்கள்) மேற்குலகும் இந்தியாவும் முன்னெடுக்கும் தமிழ் மக்களுக்கு சார்பான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான வகையில் செயற்படமாட்டோம் என்று தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ரமபோஷ தம்மிடம் வாக்குறுதி அளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் தென்னாபிரிக்கக் குழுவினரை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இலங்கையில் இடம்பெற்றுவரும…

  14. அண்மைக்காலமாக ஈழப்பகுதிகளில் நிகழ்ந்து வரும் வாள்வெட்டுக்கள் கவனத்துக்குரியதும் கவலைக்கு உரியதுமான விடையங்களாக மாறியுள்ளன. கூகிள் தேடற் தளத்தில் “வாள்வெட்டு” எனச் தட்டச்சுச் செய்து தேடிப்பாருங்கள். கிடைக்கும் தகவல்களில் அனேகமானவை ஈழப்பகுதியை அல்லது ஈழத் தமிழர் சம்பந்தமானவையாகவே இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது. இவ் வாள் வெட்டுக்கள் வீட்டுக்குள் நிகழ்கின்றன; வீதியில் நிகழ்கின்றன வைத்திய சாலையினுள்ளும் நிகழ்கின்றன. காதற்பிரச்சனை காணிப்பிரச்சனை கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனை குடும்ப உறவுகளுக்கிடையிலான பிரச்சனை போன்றவற்றிற் தொடங்கி குழுக்களுக்கிடையிலான அதிகாரப்பிரச்சனை வரை இந்த வாள்வெட்டு வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. பாடச…

    • 0 replies
    • 450 views
  15. சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று மீண்டும் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 41 புகலிடக் கோரிக்கையாளர்களும் காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார். கடற்படையினரின் ரோந்துக் கப்பல் 'சமுத்ரா' அவர்களை காலித்துறைமுகத்துக்கு அழைத்து வந்தது. மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் குற்றவிசாரணை பிரிவினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்படவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையின் தென் கடற்பரப்பில் வைத்து 41 புகலிடக் கோரிக்கையளார்களும் ஆஸ்ரேலிய கடற்படையினரால் இலங்கை கடற்படையினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர். - http://malarum.com/article/tam/2014/07/07/3468/41-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%A…

    • 3 replies
    • 466 views
  16. இந்தியாவுக்குள் நுழைவிசைவின்றி சட்டவிரோதமாக நுழையும் அனைத்து அந்நியர்களும் இந்தியாவின் 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டம் மற்றும் 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்படுவர். இவ்வாறு அவுஸ்திரேலியாவை தளமாகக்கொண்ட Eureka Street இணையத்தில் Paul White எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு கிறிஸ்மஸ் தீவில் இரண்டு படகுகள் கரையொதுங்கின. தற்போது இப்படகில் பயணித்த இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் எவ்வித பாதுகாப்பும் வழங்காது இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படகுகளில் ஒன்றில் இலங்கையைச் சொந்த இடமாகக் கொண்ட 153 தமிழர்கள் பயணித்துள்ளனர். இவர்களுள் 37 சிறார்களும் அட…

    • 0 replies
    • 266 views
  17. 153 பேருடன் படகு தடுத்துவைக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரேலியா முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளது (கோப்பு படம்) ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் 153 பேரையும் இலங்கைக்கு நாடுகடத்துவதாக இருந்தால் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு 72 மணிநேரத்துக்கு முன்னர் எழுத்துமூலம் அறிவிப்பதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் உடன்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்தும் நடத்துவது தொடர்பான நீதிமன்ற ஆலோசனை வரும் வெள்ளியன்று நடக்கவுள்ளது. 153 இலங்கையருடன் ஆஸ்திரேலியா நோக்கி வந்த படகினை இடைநடுவில் கடலில் தடுத்து வைத்திருக்கின்ற தகவலை ஆஸ்திரேலிய அதிகாரிகள் முதற்தடவையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, இன்னொரு இலங்கைப் படகில…

    • 0 replies
    • 414 views
  18. ஞானசார தேரர் குர்ஆனை அவமதித்தமை நீதிமன்றத்தில் நிரூபணம்! - தண்டனை அளிக்குமா நீதிமன்றம்? [Wednesday 2014-07-09 07:00] பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குர்ஆனை அவமரியாதை செய்தார் என முஸ்லிம் சமய விவகார ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டே நீதிமன்றில் நேற்று அவர் இதனை அறிவித்துள்ளார். ஞானசார தேரர் அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து முஸ்லிம் மக்களின் புனித நூலான குர்ஆனை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்திருந்தது என தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகேயினல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய முஸ்லிம் சமய விவகார ஆணையாளர் நாயகம், கலபொடத்தே ஞானசார தேரரின் கருத்துக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். …

    • 1 reply
    • 231 views
  19. காணாமல் போனோர் தொடர்பான விசாரணை அறிக்கையுடன் முடியப்போகிறதா? – வீரகேசரி! விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியது தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கு உள்ளுர் பொறிமுறையை இலங்கை அரசு வலிந்து மேற்கொண்டிருந்தது. சர்வதேச விசாரணைகளை அனுமதிக்க முடியாது என்று மறுத்துரைத்து, அதற்குப் பதிலாக உள்ளுர் பொறிமுறையின் மூலம் பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சர்வதேசத்திற்கு அரசாங்கம் தெரிவித்திருந்தது. சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது என்று பிடிவாதமாக இருந்ததனால் இலங்கை அரசாங்கத்தின் உள்ளுர் பொறிமுறை யோசனைக்கு சர்வதேசமும் இணக்கம் தெரிவித்திருந்தது. இந்தப் பின்னணியில்த…

    • 0 replies
    • 246 views
  20. அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசன் ஐ.நா பாதுகாப்புச்சபைக்கு செல்கிறார்! [Wednesday 2014-07-09 09:00] இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசன் ஐ.நா பாதுகாப்பு சபைக்கான அமெரிக்காவின் உதவி பிரதிநிதியாக நியமிக்கப்படவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இந்த முடிவு தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிசனை பாதுகாப்பு சபைக்கு நியமிக்க ஒபாமா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிச்சேல் சிசன் தற்போது அமெரிக்காவின் வெளியுறவு சேவை உறுப்பினராகவும் இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமான தூதுவராகவும் 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.http://www.seithy.com/breifNews.php?newsID=112821&category=TamilNews&language=ta…

  21. இலங்கை அகதிகளை நாடு கடத்தும் திட்டத்தில் மாற்றமில்லை - ஆஸி. பிரதமர் அறிவிப்பு! [Tuesday 2014-07-08 19:00] ஆஸ்திரேலிய நீதிமன்றம் 153 அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக இடைக்கால தடையை விதித்தபோதும், அகதிகளை நாடு கடத்தும் தமது திட்டத்தில் மாற்றம் இல்லை என்று அந்நாட்டு பிரதமர் டோனி அபோட் கூறியுள்ளார். தமது அரசாங்கம் சர்வதேச சட்டத்தின்கீழ் தமது கடற்பிரதேசத்திலேயே நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும், தம்மை பொறுத்தவரையில் நீண்டகாலமாக நாட்டுக்கு வந்துக்கொண்டிருக்கும் அகதிப் படகுகளை நிறுத்த வேண்டும் என்பதே நோக்கு என்றும் தெரிவித்துள்ளார். 153 பேருடன் சென்றுள்ள படகில் தமது 3 வயது குழந்தையான பாப்ரினா இருப்பதாகவும், அவரை காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவருடை…

  22. அவுஸ்ரேலியா தப்பிச் செல்ல முயன்ற விசேட அதிரடிப்படை வீரர்! - திருப்பி அனுப்பியதால் மாட்டினார். [Wednesday 2014-07-09 07:00] அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத பயணத்தை மேற்கொள்ள முயன்றவர்களில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஓருவரும் உள்ளதாக தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியா இலங்கைக்கு திருப்பியனுப்பிய புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரும் சட்டவிரோத பயணத்தை மேற்கொள்வதற்கு விசேட அதிரடிப்படையை சேர்ந்த இவரும் முக்கியமானவராக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிரடிப் படையைச் சேர்ந்த இந்த நபர் சட்ட விரோதமாக, நாட்டை விட்டு வெளியேறும் குடியேற்ற வாசிகளை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர் இரண்டாவது சந்தேக நபராக பட்டியலிடப்பட்டுள்ளார். முக்கிய…

  23. பாப்பரசர் இலங்கை பௌத்தர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். காலனித்துவ காலங்களில் இலங்கையில் கிறிஸ்தவ ஆட்சியாளர்ளினால் பௌத்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இந்த அநீதிகளுக்கு பாப்பரசர் மன்னிப்பு கோர வேண்டும். இதற்கு முன்னர் பதவி வகித்த சில பாப்பரசர்கள் இவ்வாறு சில நாடுகளிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். காலனித்துவ ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவர்கள் பௌத்த விஹாரைகளை உடைத்து, பௌத்த பிக்குகளை கொலை செய்திருந்தனர். பாப்பரசர் பொது மன்னிப்பு கோருவதனை விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=710393206008604521#sthash.R3pdI60J.dpuf

  24. அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் அகதிகளைத் இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கித் திருப்பியனுப்பும் நடவடிக்கைக்கு எதிராக லண்டனில் அமைந்துள்ள அவுஸ்திரேலியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது(07.07.2014). அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு ஒழுங்கு செய்த இப் போராட்டத்தின் இடையில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையத்தின் (UNHCR) பிரித்தானியப் பிரதிநிதியிடமும், அவுஸ்திரேலியத் தூதரகத்தின் ஊடகப் பிரதிநிதியிடமும் அறிகைகள் கையளிக்கப்பட்டன. தொன்மையான தமிழர் வாத்தியமான பறை ஒலியுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் திரு.சத்தியசீலனின் உரையுடன் மாலை 6 மணியளவில் நிறைவுற்றது. UNHCR இன் லண்டன் பிரதிநிதியான ரொனால்ட் ஷில்லிங் உடன் நடைபெற்ற உரையாடலில், தமிழ் அகதிகளைத் திருப்பி அ…

  25. இந்திய மீனவர்கள் வெள்ளைக்கொடியுடன் மீன்பிடி நடவடிக்கையில் இறங்கினால் அவர்களை பாதுகாப்பு படை ஊடாக கைது செய்வோம் என மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளனர். இந்திய மீனவர்கள் வெள்ளைக் கொடியுடன் எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும் அதிகாரம் பாதுகாப்பு படையினருக்கு உள்ளதாக இலங்கை மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்திய மீனவ சங்கங்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு இல்லையேல் எதிர்வரும் 21ம் திகதி இந்திய அரசினால் தமக்கு வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதி அட்டையினை திரும்ப கையளித்துவிட்டு 26ம் திகதியளவில் வெள்ளைக்கொடிகளுடன் படகுகளில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க போவதாக தெரிவித்துள்ள நிலையிலேயே இலங்கை மீனவ சங்கங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.