Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -எம்.எஸ்.எம்.நூர்தீன் புதிய காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தையின் கடற்கரைப் பகுதியில நிர்மாணிக்கப்பட்டு வந்த புதிய பள்ளிவாயல் திங்கட்கிழமை(23) திறந்துவைக்கப்பட்டது. எஸ்.எப்.ஆர்.டி எனும் நிறுவனத்தினால் குவைத் நாட்டின் தனவந்தர் ஒருவரின் உதவியுடன்; நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய பள்ளிவாயலை காத்தான்குடி ஜாமித்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் மௌலானா மௌலவி எம்ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி ஹசரத் திறந்து வைத்தார். இந்த வைபவத்தில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவரும் காததான்குடி காதிநீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் எம்.ஐ.சுபைர், உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது அஸர் தொழுகை நடத்தப்பட்டு பள்ளிவாயலில் தொழுகைகள்…

  2. சீனாவின் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த படை அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. மக்கள் விடுதலை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக உதவித் தலைவர் லெப்.ஜெனரல் வாங் யொங்செங் தலைமையிலான இராணுவ, கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் 33 மூத்த படை அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் நேற்று சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இதன்போது, அனைத்துலக மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.puthinappalakai.com/…

    • 2 replies
    • 372 views
  3. (சிறு­பான்மை இனத்­தவர் மீதான அடக்கு முறைகள் சர்­வ­தேச விசா­ர­ணை­களை வலுப்­ப­டுத்திவிட்­டது.) அர­சாங்­கத்தின் ஆத­ர­வு­ட­னேயே முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. தம் இனத்தின் மீதான அடக்கு முறை­களை முஸ்லிம் அமைச்­சர்கள் வேடிக்கை பார்ப்­பது வெட்கித் தலை­கு­னிய வேண்­டிய விட­ய­மாகும் என்று ஜே.வி.பி. தெரி­வித்­தது. சிறு­பான்மை இனத்­தவர் மீதான அடக்கு முறைகள் சர்­வ­தேச விசா­ர­ணை­களை வலுப்­ப­டுத்திவிட்­டது. அர­சாங்­கமே அனைத்­திற்கும் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அக்கட்சி குறிப்­பிட்­டது. இது தொடர்பில் ஜே.வி.பி. யின் ஊடகப் பேச்­சாளர் விஜித ஹேரத் தெரி­விக்­கையில்,நாட்டில் தற்­போது இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்கும் இன முரண்­பா­டு­க­ளுக்கும் முஸ்லிம் இனத்­த…

  4. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஜப்பானிய அனைத்துலக ஒத்துழைப்பு முகவரகத்தின், அழைப்பின் பேரில், கோத்தாபய ராஜபக்ச நான்கு நாள் பயணமாக கடந்த வாரம் ஜப்பான் சென்றிருந்தார். இதன்போது, பல்வேறு ஜப்பானிய அதிகாரிகள், அமைச்சர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். அத்துடன், சிறிலங்காவுக்கான ஜப்பானின் முன்னாள் விசேட தூதுவர் யசூசி அகாசியையும் சந்தித்துப் பேசினார். மீளிணக்கம், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, அமைதியைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் சிறிலங்கா அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து அகாசி மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. …

  5. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று பிற்பகலில் சந்தித்துப் பேசவிருக்கின்றார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் குறித்து அமைச்சர் ஹக்கீம் விசனம் அடைந்துள்ள நிலையிலும் - அது பற்றிய விவகாரத்தை ஐ.நா. மற்றும் மேற்குலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு போனமை மூலம் அரசுக்கும் நாட்டுக்கும் நீதி அமைச்சர் ஹக்கீம் துரோகமிழைத்து விட்டார் என்ற விசனம் அரசுத் தலைமையிடம் நிலவும் இவ்வேளையிலும் - இந்தச் சந்திப்பு நிகழ்வது குறிப்பிடத்தக்கதாகும். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108539/language/ta-IN/article.aspx

  6. 2014-06-23 21:16:42 (மயூரன்) வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழில் பட்டம் விடும் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெற்ற இந்த போட்டியில் பலர் கலந்து கொண்டு வித விதமான பட்டங்களை விட்டனர். இப்போட்டியில் வடமராட்சி வல்வெட்டித்துறையை சேர்ந்த 55 போட்டியாளர்களும் அரியாலையை சேர்ந்த 5 போட்டியாளர்க்களுமாக 60 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ .ஏ சந்திரசிறி ,மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குனராஜா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களை வழங்கினர். …

  7. புதுடெல்லியில் நேற்று நடந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டக் கூட்டத்தில் சிறிலங்கா உள்ளிட்ட அயல் நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், சுஸ்மா சுவராஜ் ஆறு மணிநேரத்துக்கும் மேலாக பங்கேற்று, அயல் நாடுகளுடனான உறவுகளை கையாள்வது குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதுவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்றுக் காலை தொடக்கம் மாலை வரை நடந்த இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா உள்ளிட்ட ஏழு சார்க் நாடுகளுக்கான தூதுவர்கள், ஈரான், சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுக…

  8. -எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் வைத்து கடந்த 1990ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் இடத்தினை எதிர்வரும் முதலாம் திகதி தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றம் திங்கட்கிழமை(23) களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றியாழ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். கல்முனையிலிருந்து கடந்த 1990ஆம் ஆண்டு காத்தான்குடி நோக்கிச் சென்ற 165 பேர் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்திச்செல்லப்பட்டதுடன் இவர்கள் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ்வாறு புதைக்கப்பட்டவர்களின் சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி நல்லடக்…

  9. வாகனங்களில் பாடல்களை சத்தமாக ஒலி எழுப்ப பொலிஸார் தடை விதித்துள்ளனர். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இவ்வாறான குற்றங்களை மேற்கொள்பவர்களிடமிருந்து தண்டப் பணம் அறவிடப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதன்படி வாகனமொன்று பயணிக்கும் போதோ அல்லது அது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போதோ பாடல்களைப் போட வேண்டுமாயின்இ அதில் பயணிப்பவர்கள் மாத்திரமே கேட்கக்கூடிய வகையில் அவை ஒலிபரப்பப்பட வேண்டும். இதனை மீறிச் செயற்படுபவர்களுக்கு 3000 ரூபா முதல் 5000 ரூபா வரையில் தண்டம் அறவிடப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=429203156324183336#sthash.Zh7PDP1V.dpuf

  10. பொதுபல சேனா இயக்கத்தினால் இன்றைய தினம் நடத்தப்பட உள்ள நிகழ்வு தடை செய்யப்பட மாட்டாது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கம் இன்றைய தினம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் சமய வழிபாட்டு நிகழ்வு ஒன்றை நடாத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. எவ்வாறெனினும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவோ அல்லது இன வன்முறைகளைத் தூண்டவோ இந்த சமய நிகழ்வு பயன்படுத்திக்கொள்ளப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனாய இக்கம் அதிஷ்டான பூஜையொன்றை நடாத்த உள்ளதாகவும் அதனை நடாத்த தலதா மாளிகை நிர்வாகத்தினர் இதுவரையில் அனுமதி வழங்கியிருக்கவில்லை எனவும் இதனால் இந்த நிகழ்வு நடைபெ…

  11. வடகொரியா, சிரியா, ஈரான் வரிசையில் இணைய விரும்புகிறதா இலங்கை? - அமெரிக்க அதிகாரி கேள்வி [Tuesday, 2014-06-24 09:51:30] ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை நிராகரிப்பதாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக. ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் துணை பிரதி ராஜாங்கச் செயலாளர் அடுல் காசியப் தெரிவித்துள்ளார். ஈரான், வடகொரியா, சிரியா போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளை திட்டவட்டமாக நிராகரித்திருந்தன. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். நீண்ட கால ஜனநாயக வரலாற்றைக் கொண்ட இலங்கை, பாரிய மனித …

    • 6 replies
    • 1.3k views
  12. சென்னை: போலி பாஸ்போர்ட் தயாரித்து, விடுதலை புலிகள் உள்ளிட்ட இலங்கை தமிழர்களை, பல நாடுகளுக்கு தப்ப வைத்து, பல கோடி ரூபாய் சம்பாதித்த கும்பலை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இலங்கையை சேர்ந்தவர்கள், சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்து, மோசடியில் ஈடுபடுவதாக, போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுபற்றி விசாரிக்குமாறு, மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். துணை போலீஸ் கமிஷனர் ஜெயகுமார் தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணையை துவக்கினர். போலி பாஸ்போர்ட் கும்பலை சேர்ந்த ராஜன், 42, என்பவர், சென்னை, ஆலப்பாக்கம், பாக்யலட்சுமி நகரில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. ராஜனை, வாடிக்கையாளர் போர்வையில், போலீசார் அணுகினர். போலீசாரி…

  13. தற்போது நிலவுகின்ற கடும் வறட்சியால் ஆனையிறவுக் கடல் நீரேரியில் நீர் வற்றி வறண்டு போகின்றது. இக்கடல்நீரேரியை நம்பி 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் வாழ்வாதாரத் தொழிலாக இக்கடல்நீரேரியில் இறால் பிடிப்பதை மேற்கொண்டுவருகின்றனர். வறட்சி காரணமாக இறால் உற்பத்தி பாதிக்கப்படுவதால் இவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் நிலை உள்ளது. தற்போதுள்ள குறைந்தளவான நீரில் நாள் முழுவதும் தொழில் செய்தும் ½ கிலோவுக்கும் குறைவான இறால்களையே பிடிக்க முடிவதாக இம்மக்கள் தெரிவித்தனர். (படங்கள்: சொர்ணகுமார் சொரூபன்) http://tamil.dailymirror.lk/--main/115460-2014-06-24-06-47-55.html

    • 0 replies
    • 482 views
  14. பழமையான பள்ளிவாயில்கள் உடைக்கப்பட்டுவிட்டன: ஹிஸ்புல்லாஹ் -எம்.எஸ்.எம்.நூர்தீன் கிழக்கு மாகாணத்திலுள்ள மிகவும் பழமையான பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டுவிட்டதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள மிகவும் பழமைவாய்ந்த ஜாமியுழ் மஸ்ஜித் ஜும் ஆ பள்ளிவாயலின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் திங்கட்கிழமை(23) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணத்தில் 300 மற்றும் 400 வருடங்கள் பழமைவாய்ந்த பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டுவிட்டன. இதன் மூலம் பழைமையான வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த தொன்ம…

    • 0 replies
    • 262 views
  15. ஜெனிவாவில் கனடா முன்வைத்த குற்றச்சாட்டு - இலங்கை நிராகரிப்பு! [Tuesday, 2014-06-24 09:40:45] News Service வடக்கு பகுதிகளில் உள்ள பெண்களை இலக்கு வைத்து படையினரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக கனடா தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை நிராகரித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வசித்து வரும் தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் துன்புறுத்தல்களை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து கனடா குற்றச்சாட்டை முன்வைத்தது. பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு எதிராக இலங்கை படையினர் பாலியல் துன்புறுத்தல்களை ஆயுதங்களாக பயன்படுத்துவதாக கனடாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான பிரதிநிதி இதன்போது குறிப்பிட்டார். எனினும் இந்த குற்றச்ச…

  16. (காங்கேயனோடை நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் பெண்களுக்கான முதலாவது பள்ளிவாயல் திறந்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இப்பெண்கள் பள்ளிவாயலை திறந்து வைத்தார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் ஐக்கிய அரபு ராஜ்யத்திலுள்ள தனவந்தர் ஒருவரின் நிதியுதவியுடன் காங்கேயனோடை மஸ்ஜிதுர் ரசூல் பள்ளிவாயலுக்கு அருகில் நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த பெண்கள் பள்ளிவாயலில் பெண்கள் ஐந்து வேளை தொழுகைகளையும் நிறைவேற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாயல் திறந்து வைக்கப்பட்ட வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மௌலவி ஏ.சி.எம்.றிபாய் உட்பட முக்கியஸ்த்தர்கள் பிரமுகர்கள் கலந்து…

  17. கனேடிய அரசாங்கத்தை புலம்பெயர் தமிழர்கள் பிழையாக வழிநடத்தி வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த தடையாக அமையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. யுத்த வலயத்தில் இராணுவத்தின் பிரசன்னம் பிரதேசத்தில் வாழும் பெண்கள் சிறுமிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கனடா சுமத்தியுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கனடா இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் சொற்ப…

  18. ''சில அமெரிக்கத் தலைவர்கள் அவர்கள் இழைத்த அட்டூழியங்களுக்காக - குறிப்பாக மத்திய கிழக்கில் இழைத்தவற்றுக்காக - கொல்லப்படவேண்டும்" இவ்வாறு கூறியிருக்கின்றார் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க. கண்டியில் ஒரு பொது நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். ' 'ஈராக்கும் லிபியாவும் அந்த நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமித்து, அவற்றுக்குள் புகும்வரை நன்றாகத்தான் இருந்தன. ''ஈராக் தலைவர் சதாம் ஹுசைனிடம் சில பின்னடைவுகள் இருந்தாலும் அவர் ஈராக்கை நல்லதாக மாற்றியமைத்தார். ''சதாமிடம் சில குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆனால் அமெரிக்கத் தலைவர்கள் அதைவிட மோசமான குறைபாடுகளை உடையவர்களாக இருந்தனர். ''அது சீனியர் புஷ்ஷாகவோ அல்லது யூனியர் புஷ்ஷாகவோ இருக்கலாம். அவர்கள் தாக்கப்பட்…

  19. -ஏ.எச்.ஏ.ஹுஸைன் 'நாங்கள் மிக வெட்கத்துடனும் மனக்கஷ்டத்துடனும்தான் இந்த அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். இந்த பட்டம் பதவி, சொகுசு வாழ்க்கைக்காகத்தான் நாம் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம் என்று எவராவது நினைத்தால் அது அவரவர்களின் சிந்திக்கும் திறனைப் பொறுத்தது.' இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 'ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்தி உதவி பெறும் 330 வறிய குடும்பங்களுக்கும் 15 பள்ளிவாசல்களுக்கும் ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபையில் அங்கத்துவம் வகிக்கும் 30 பேருக்கும் இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அல் அஷ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.…

    • 8 replies
    • 911 views
  20. முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தததாகவும் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பிலிருந்து பரந்தனுக்கு தேங்காய்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியுடன் மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த விசுவமடு மேற்கினைச் சேர்ந்த புஸ்பராஜா சுமச்சந்திரன் (வயது 27) என்பவர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி சுமச்சந்திரன் மலர்வதி (வயது 26) படுகாயமடைந்துள்ளார். இவர்களுடன் பயணித்த இவர்களின் குழந்தை எவ்வித பாதிப்புகளுமின்றி உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர…

    • 0 replies
    • 541 views
  21. இலங்கையில் இன, மத வாதத்தைத் தூண்டி கலவரங்களை ஏற்படுத்தி, வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் பொது பலசேனா அமைப்பைத் தடைசெய்ய வேண்டும் என்று கோரியும், அந்த அமைப்பின் சூத்திரதாரியாகச் செயற்படும் அதன் செயலாளாரான வண.கலகொடவத்த ஞானசார தேரரைக் கைதுசெய்யும்படி கோரியும் பிரான்ஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இலங்கையில் இருந்து சென்று பிரான்ஸில் குடியேறியுள்ள முஸ்லிம்களின் ஏற்பாட்டில் பாரிஸில் ஈபிள் டவருக்கு அண்மையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுமார் இருநூறுக்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர். முஸ்லிம்களுடன் தமிழர்களும் சிங்களவர்களும் கூட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என்று கூறப்பட்டது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இட…

    • 0 replies
    • 505 views
  22. கச்சதீவை இந்தியா மீளப்பெறுவதைத் தடுக்கும் சர்வதேச சட்டங்கள் இல்லை! - கொழும்பு கருத்தரங்கில் தெரிவிப்பு [Monday, 2014-06-23 10:53:45] இந்தியா கச்சதீவை மீண்டும் கைப்பற்றினால் தென்சீனக் கடல் பிரச்சினையை ஒத்த பிரச்சினையாக அது மாறும் என்று கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாம்- இலங்கை சம்மேளனத்தின் அமர்வு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய பலரும் இந்தக் கருத்தை முன்வைத்தனர். கச்சதீவு விடயம் ஏற்கனவே முடிந்து விட்டது. எனினும் தற்போது அதனை திரும்பப்பெற தமிழ் நாடு கோரிக்கைகளை விடுத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் அங்கு, இலங்கைக்கு நிர்க்கதியான நிலை ஏற்படும். அதிகாரம் மிக்க தமிழகத…

  23. வட்டரக்க விஜித தேரர் நாடகமாடி வருகின்றார் என ஆரம்பத்திலிருந்தே பொது பல சேனா தெரிவித்து வருகின்றது. இவரைப் போன்ற மேலும் 40பேர் தொடர்பில் நாட்டு மக்கள் விரைவில் அறிந்துகொள்வர் என்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் வட்டரக்க விஜித தேரருக்கு பாதுகாப்பு வழங்கி, அரசாங்கம் தவறிழைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். வட்டரக்க விஜித தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டுள்ளார் என்றும் அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்ட சதி என்றும் ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/115272--40-.html

  24. யாழில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினர் மற்றும் காவல்துறையினரின் கெடுபிடிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தொிவிக்கப்பட்டுள்ளது. முழத்துக்கு முழம் படையினர் தெருக்களில் நின்றபடி சோதனைகளில் ஈடுபடுவதும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் என கூறிக்கொண்டு சோதனை செய்வதும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாரிப்படைந்துள்ளதுடன் மீண்டும் போர்க்கால சூழல் திரும்பியுள்ளதோ என மக்கள் அச்சம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தொிவிக்கின்றன. http://www.pathivu.com/news/31874/57//d,article_full.aspx

  25. இம் மாதம் 27ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் கண்டியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு நேர கார் பந்தய போட்டிகளை நிறுத்துமாறு, மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/115354-2014-06-23-11-43-16.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.