Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒற்றுமையின்மையால் எமது மக்களையும் மண்ணையும் நாம் இழந்துவிடக்கூடாது தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது. எமது ஒற்றுமை இன்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்துவிடக்கூடாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ கட்சியின் தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னாள் போராளி ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் 41வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (27) மாலை 6 மணியளவில் மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் அலுவலகத்தில் இடம…

  2. யாழ். சிறையில் 74 தமிழக மீனவர்கள்! 28 JUL, 2024 | 11:17 AM இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 74 தமிழக கடற்றொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு காலகட்டங்களில் கைதாகி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 64 பேரின் வழக்குகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (30) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஜூலை முதலாம் திகதி 25 கடற்தொழிலாளர்களும், ஜூலை 16ஆம் திகதி 04 கடற்றொழிலாளர்களும…

  3. 27 JUL, 2024 | 06:00 PM கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பிரதேச கமக்கார அமைப்பு போன்ற பொது அமைப்புக்கள், நீர்ப்பாசன பொறியியலாளர் போன்ற அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளன. இருப்பினும், இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கனகாம்பிகை குளத்தின் ஏ9 வீதியோடு உள்ள பகுதி மண் நிரப்பப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளது. 10 கொள்ளளவு கொண்ட இக்குளத்தினை நம்பி சுமார் 300 வரையான சிறுதானிய பயிர்ச்செய்கையாளர்கள் வாழ்கின்றனர். எனவே குளம் ஆக்கிரமிக்கப…

  4. 27 JUL, 2024 | 08:35 PM (நா.தனுஜா) தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசுவதற்குத் தாமும் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நிறைவேற்றதிகாரமுடைய 9 ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் எனவும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ்மக்கள் ச…

  5. 27 JUL, 2024 | 10:12 AM யாழில் வர்த்தகர்களைக் குறி வைத்து இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்களின் தொலைபேசிக்கு இலங்கை தொலைத்தொடர்பு நிறுவகத்தில் (ரெலிக்கொம்) இருந்து கதைப்பதாகவும், நீங்கள் உங்களது தொலைபேசி கட்டணங்களை சிறந்த முறையில் செலுத்துவதன் காரணத்தால் உங்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாகவும் அதற்கு உங்கள் அடையாள அட்டை இல, வங்கிக் கணக்கு இலக்கம் என்பனவற்றினை தருமாறும் கோரியுள்ளனர். இத்தரவுகள் வர்த்தகர்களினால் வ…

  6. மண்ணெண்ணை மற்றும் டீசல்களில் ஓடும் வாகனங்கள் குறித்து விசாரணை பொது போக்குவரத்தில் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் லொறிகளில் 30 சதவீதம் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணை பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்ணெண்ணை மற்றும் டீசல்களில் ஓடும் வாகனங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புகைப்பரிசோதனையின் போது மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காண முடியாது எனவும், வாசனையை வைத்தே வாகனங்களை அடையாளம் காண முடியும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பயணிகள் போக்குவரத்து குறிப்பாக பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் உரிமையாளர்கள் மண்ணெண்ணெய் மற்றும் டீசலுக்கு இரண்டு எண்ணெய் தாங்கிகள…

  7. Published By: RAJEEBAN 27 JUL, 2024 | 05:52 PM கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி அவரது இல்லத்தில் சந்தித்த இருவரும் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ht…

  8. உலக வரலாற்றில் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தலில் AI தொழில்நுட்பம் – AKD இணையதளம் AKD இணையதளம் (akd.lk), தேசிய மக்கள் சக்தியின் கொள்கை நிலையம் மற்றும் தேர்தல் அவதானிப்பு நிலையம் ஆகியன மெய்நிகர் உண்மை அனுபவத்தின் (virtual reality experience) ஊடாக உத்தியோகபூர்வமாக இன்று (27) பிற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. உலகில் ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளரொருவர் தனது கொள்கையை மக்கள் மயப்படுத்துவதற்காக AI ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன், ஆசியாவில் அரசியல் தலைவரொருவர் தனது கொள்கையை முன்வைப்பதற்காக AI தொழினுட்பத்தை பயன்படுத்திய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். நாட்டின் பிரஜைகளுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் AKD…

  9. Published By: DIGITAL DESK 3 26 JUL, 2024 | 10:06 AM முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அ.சேகுவாரா நேற்று வியாழக்கிழமை (16) காலமானார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் நண்பருடன் தங்கியிருந்த வேளை காலை நெஞ்சு வலிப்பதாக நண்பரிடம் கூறி சில நிமிடங்களில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராக…

  10. நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே கடைப்பிடிக்க மறுக்கும் அரசாங்கம்- சட்டத்தரணிகள் ஒன்றிணைவு சீற்றம் Published By: RAJEEBAN 27 JUL, 2024 | 08:07 AM உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமரின் நாடாளுமன்ற உரையின் மூலம் வலுவற்றதாக்க முடியாது- பொலிஸ்மா அதிபர் தேசபந்துதென்னக்கோன் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமரின் நாடாளுமன்ற உரையின் மூலம் வலுவற்றதாக்க முடியாது என சட்டத்தரணிகள் அமைப்பான சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது. தேசபந்துதென்னக்கோனின் பதவி தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பிலும் அதன் பின்னர் ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்துகொண்ட விதம் தொடர்பிலும் பொதுமக்களிற்கு தெளி…

  11. Published By: VISHNU 26 JUL, 2024 | 11:54 PM வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று இருந்தார். அங்கு கடும் விசாரணைகள் இடம் பெற்றதோடு வெடுக்குநாறி ஆலயம் தொடர்பான பல்வேறு விடயங்களும் அவரிடம் வினாவப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜ…

  12. Published By: VISHNU 26 JUL, 2024 | 09:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ள நிலையில், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியுமா? முடியாதா? என்பது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கடும் தர்க்கத்தினால் சபையில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக அமளி துமளி ஏற்பட்டது. பொலிஸ்மா அதிபர் பதவி விலக்கப்படவோ, பதவி விலகவோ இல்லையென்றும் இதனால் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாது என்று ஆளும் கட்சியினர் கூறியதுடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க நடவடிக்கை எடு…

  13. Published By: VISHNU 26 JUL, 2024 | 11:59 PM கைப்பேசியை திருடிய ஒருவரும் அதனை வாங்கிய ஒருவரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார அவர்களுக்கு கீழ் இயங்கும், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலில் அடிப்படையில் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தொலைபேசியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னாதிட்டி பகுதியில் 14/07/2024 அன்று சமுர்த்தி அலுவலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தரது தொலைபேசியானது வீதியில் தவறுதலாக விழுந்த நிலையில் அந்த இடத்தில் நின்றவர் அதனை எடுத்து சென்றுவிட்டார். குறித்த உத்தியோகத்தர் சிறிது…

  14. நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி சற்றுமுன்னர் வெளியாகியது. நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி சற்றுமுன்னர் வெளியாகியது மேலதிக தகவலுக்கு எம்முடன் இணைந்திருங்கள்…. https://athavannews.com/2024/1393623

  15. 26 JUL, 2024 | 07:04 PM (நா.தனுஜா) கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் முன்வைக்கப்பட்ட 'இனப்படுகொலை' குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு, கனடாவில் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் உதவாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட 'கறுப்பு ஜுலை' கலவரங்கள் அரங்கேறி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஒரு வாரத்துக்கும் மேல் நீடித்த இக்கலவரங்களின் மிக மோசமான …

    • 2 replies
    • 379 views
  16. யாழ்.கொள்ளைக்காரி கைது எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனலைதீவை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று, கனடாவில் குடியுரிமை பெற்று வந்து அங்கு வசித்து வந்த நிலையில், விடுமுறையை கழிக்க அனலைதீவுக்கு கடந்த வருடம் வந்து தங்கியிருந்துள்ளது. அந்நிலையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , அவர்களிடம் இருந்த வெளிநாட்டு பணம் , நகைகள் , பொருட்கள் , கடவுசீட்டு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தது. சம்பவம…

      • Thanks
      • Like
      • Haha
    • 10 replies
    • 1k views
  17. யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு! புனித காசி தீர்த்தமானது இன்றையதினம் வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது. கலாநிதி சிதம்பரமோகனால் காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம், சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமாரது தலைமையில், இந்து, பௌத்த மதகுருக்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது. இதன்போது வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் மற்றும் இராணுவத்தினரால் குளத்தை சூழவுள்ள பகுதி சிரமதானமும் செய்யப்பட்டது. (ப) புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கல…

  18. 26 JUL, 2024 | 06:13 PM கிளிநொச்சி செல்வா நகர் விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள கந்தன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று (25) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி கலந்துகொண்டு அறுவடையை ஆரம்பித்துவைத்தார். இதில் பரந்தன் விவசாய கல்லூரியின் விரிவுரையாளர் ம.ரஜீதன் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர். கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா | Virakesari.lk

    • 1 reply
    • 209 views
  19. ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார்-முபாறக் அப்துல் மஜித் பாறுக் ஷிஹான் ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரிகின்றது.நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டி இருந்தோம்.எந்த கடிதத்திற்கும் அவர் பதில் தரவில்லை என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர் முபாறக் அப்துல் மஜித் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது முன்னாள் ஜனாதிபதி அவர்கள் தான் ஜனாதிபதியாக இருந்து ஏன் விரட்டி அடிக்கப்பட்டேன் என்பதை புத்தகம் ஒன்றினை எழுதி வ…

      • Haha
    • 5 replies
    • 341 views
  20. 26 JUL, 2024 | 05:25 PM இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசின் கீழ் இந்தி மொழி கற்பதற்கு 36 இலங்கை மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சன்தோஷ் ஜா நேற்று (25) வியாழக்கிழமை மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட இருந்த நிலையில் இறுதியாக இலங்கை மாணவர்களுடன் உரையாடியுள்ளார். இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சாரம், மொழி, இலக்கியம் மற்றும் மத உறவுகளை மேம்படுத்துவதில் இந்தி மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பை எடுத்துக்காட்டியுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆறு மாணவர்களும், சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்திலிருந்து ந…

  21. Published By: DIGITAL DESK 3 26 JUL, 2024 | 03:04 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது. குச்சவெளி - இலந்தைக்குளம் 5 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவில் இருந்து பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் பௌத்த விகாரை அமைப்பதற்காக மக்களுடைய காணி துப்பரவு செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வயலுக்கு சென்ற மக்களால் குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை அவதானிக்கப்பட்டு மக்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை (26)…

  22. கனடாவின் நிதி நிறுவனம் ஒன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடம் பாரிய அளவிலான நிதி மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி ஊடகம் ஒன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடமிருந்து மோசடியாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்டவர்ஸ் பொரிங் எக்சேன்ஜ் மீட்டவர்ஸ் பொரிங் எக்சேன்ஜ் குரூப் (Metaverse Foreign Exchange Group Inc) என்ற MTFE நிறுவனத்தின் தலைமையகம் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கனடாவின் நிதிச் சலவை கண்காணிப்பு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளையும் சரியான முறையில் ம…

  23. கந்தர்மட பிரஜைகள் @தமிழ் சிறி

  24. விடுதலைப் புலிகளை ரணிலே பிளவுப்படுத்தினார்: நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பிரதான தேசிய அரசியல் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் பிளவுப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகச் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியையும் பிளவுப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகவும், எனினும் அதற்கு இடம்கொடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எவ்வித இடையூறும் இன்றி அரசாங்கப் பணிகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி செயற்ப…

      • Haha
    • 2 replies
    • 472 views
  25. Published By: VISHNU 26 JUL, 2024 | 01:51 AM (நா.தனுஜா) வி.எப்.எஸ் குளோபல் விசா விநியோக விவகாரம் அண்மையில் கடும் சர்ச்சைக்குரிய பேசுபொருளாகியிருந்த நிலையில், இந்த விசா வெளிவள உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள், குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள அதிகாரி உள்ளடங்கலாக 31 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இம்மனுக்களில் வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.