Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு புளொட் அமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களிலொருவருமான த.சித்தார்த்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எமது மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் அவதானித்து வந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாறு காணாதவொரு வெற்றியை பெற்றிருப்பது குறித்து, எங்களது மக்கள் சார்பில் எனது வாழ்த்தையும் மகிழ்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவரும் எதிர்ப்பார்த்தவாறே இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதிவியேற்கவுள்ளார். அவருக்கு எனது மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நான் பெரும் மகிழ்சியடைகின்றேன். இலங்கையில் இனமுரண்பாடு உருவெடு…

    • 0 replies
    • 631 views
  2. -எஸ். பாக்கியநாதன் இறுதி யுத்தத்தின்போது முள்ளி வாய்க்காலில் உயிரிழந்தவர்களின் 5ஆவது ஆண்டை நினைவு கூரும் நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விளக்குகள் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நினைவுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், இரா துரைரத்தினம், மா.நடராச…

    • 0 replies
    • 580 views
  3. முள்ளிவாய்க்கால் பெருந்துயரம்: இறந்த பின்னும் பழிவாங்கப்படுகையில் எப்படி இணைந்து வாழ முடியும்? 18 மே 2014 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை இலங்கை அரசுதான் ஈழ மக்களுக்கு முதலில் நினைவுபடுத்துகிறது. இலங்கை அரசு மே மாத்தை யுத்த வெற்றி நாட்களாக கொண்டாடுகிற வரையில் அவை இனப்படுகொலை நாட்கள் என்பதை ஈழ தமிழினம் மறக்காது. அதைத்தவிரவும் எந்த ஒரு மனித சமூகத்தாலும் மறக்க முடியாத ஒரு கொடூரமே முள்ளிவாய்க்கால் படுகொலை. என்றுமே ஆறாத காயமாகவும் மாறாத வடுவாகவும் பெரும் துயரக் காலமாகவும் வரலாற்றில் இந்த நாள் இருக்கும். உலகத்தை நோக்கி எங்களை காப்பாற்றுங்கள் என்று இரத்தமும் சதையுமாக அவலக் குரல் எழப்பிய எங்கள் மக்களை மிக மிக கொடிய யுத்த வழிமுறைகளில் இலங்கை அரசு படுகொலை செய்தது. அந்த …

  4. நல்லூர் ஆலய வளாகத்திலும் படை குவிப்பு ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2014 08:21 யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய வளாகத்திலும் படைத்தரப்பின் கனரக வாகனங்களுடன் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியார்கள் தெரிவிக்கின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/110850-2014-05-18-02-51-41.html

    • 1 reply
    • 670 views
  5. யாழ்ப்பாணம் இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் - தமிழரசுக் கட்சி– TNPF கட்சிகளின் அலுவலகங்கள் முற்றுகை: 18 மே 2014 கீரிமலை இராணுவ முற்றுகைக்குள் - மகிந்த கோத்தாபய இராணுவ சர்வாதிகாரம் மீண்டும் ஒருமுறை மக்களை பழிவாங்குகிறது:- 18 மே 2014 யாழ்.குடாநாட்டின் கட்டுப்பாடு மீண்டும் இன்று படைதரப்பின் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காணுமிடமெங்கும் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மூலம் உண்மையில் யாழ்ப்பாணத்தினிலுள்ள படையினரது எண்ணிக்கை அப்பட்டமாக தெரிவதை காணக் கூடியதாகவுள்ளதாக வடக்கின் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்கள் கூறுகின்றனர். நல்லூர் முதல் குடாநாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆலய மணிகளை ஒலிக்க முற்றாக தடை விதிக்கப்பட்ட…

    • 2 replies
    • 658 views
  6. கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை அரச படைகளின் கடுமையாண கண்காணிப்புக்களின் மத்தியில் இன்றைய தினம் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது போரில் அநியாயமாக கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிககழ்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்ததது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107051/language/ta-IN/article.aspx

    • 0 replies
    • 396 views
  7. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை சுற்றி நிலைகொண்டிருந்த இராணுவ வீரர்களில் சிலர் திடீரென தமது மேலாடைகளைக் களைந்து அர்ச்சனைத் தட்டுக்களுடன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நல்லூர் ஆலயத்தில் நடைபெறுவதை தடுக்கும் நோக்குடன் நல்லூர் ஆலயத்தை சூழவும் பெருமளவு இராணுவத்தினர் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை முதல் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆலயத்தின் பூஜைகள் நடைபெற்ற வேளை உள்ளே சென்ற இராணுவத்தினர் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட நிலையில் உள்ளே நடப்பவற்றை அவதானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/110896-2014-05-18-07-08-56.html

    • 0 replies
    • 439 views
  8. கைலை மலையின் தெய்வத்திருமணம்! பரமசிவனுக்கும் உமாதேவிக்கும் நடக்கும் திருமண வைபத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவகணங்களும், அசுரர்களுமெனப் பல கோடி ஜீவன்கள் கைலையங்கிரியை நிறைத்துவிட்டன. பூமாதேவி பாரம் தாங்க முடியாத நிலையில் வடக்கு தாழ ஆரம்பித்துவிட்டது. தெற்கு உயர ஆரம்பித்துவிட்டது. தன் சம நிலை குலைவதை உணர்ந்த பூமித்தாய் அலறியடித்துக் கொண்டு ஓடிச்சென்று ஆதிசிவனிடம் முறையிட்டாள். அவர் ஒரு புன்னகையுடன் அகத்தியரை அழைத்து தெற்கே போகும்படி கட்டளையிடுகிறார். அவரும் ஆண்டவன் கட்டளைக்கமைய பொதிகையை அடைகிறார். பூமி சமநிலையடைகிறது! கோடிக்கணக்கான தேவர்கள், அசுரர்கள், கணங்கள் எல்லாவற்றின் நிறைக்கும் சமமாக பூமியைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறான் குறு முனிவன் அகத்தியன். எல்…

  9. நல்லிணக்கம் கிலோ என்னவிலை? ஐந்தாவது யுத்த வெற்றி விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நாளை மாத்தறை கடற்கரையில் நடைபெறவுள்ள நிலையில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவுகளில் தமிழர் தேசம் மூழ்கியுள்ளது. இலங்கை அரசின் வெற்றிக் கொண்டாட்டங்களின் இறுதி ஒத்திகை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் நிறைவடைந்தன. இறுதி ஒத்திகை நடவடிக்கைகளை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆரம்பித்து வைத்தார். யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக முப்படைகளையும் சேர்ந்த ஏழு ஆயிரம் உறுப்பினர்கள் அணிவகுப்பில் ஈடுபடவுள்ளனர். நாளை நடைபெறவுள்ள யுத்த வெற்றி விழா அணிவகுப்பில் பாதுகாப்புத் தரப்பின் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாக இராண…

    • 1 reply
    • 449 views
  10. http://pagetamil.com/?p=2427 தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராயிருந்த இசைப்பிரியா உயிருடன் இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இசைப்பிரியாவின் இறந்த உடல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின அதனைத் தொடர்ந்து அவரை உயிருடன் பிடித்துச் செல்லும் வீடியோக்காட்சிகளும் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஆளும் தரப்பினர் யுத்த வெற்றியின் நினைவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மே 18 அன்று இப்புதிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத் தக்கது. Share.

    • 1 reply
    • 1.6k views
  11. -வடிவேல்-சக்திவேல் தனிநபர் வருமானத்தை மேம்படுத்தும் பொருட்டு வேள்ட்விஷன் பட்டிப்பளை பிரதேச அபிவிருத்தித் திடத்தின் கீழ் (ADP) அனுசரணையுடன் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி, குளுவினமடு, கற்சேனை, தாந்தாமலை, கச்சக்கொடிசுவாமிமலை போன்ற கிராமங்களில் உள்ள 108 குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் வெள்ளிக்கிழமை (16) வழங்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் அக்குடும்பங்களை சேர்ந்த 455அங்கத்தவர்கள் பயனடைய உள்ளனர். இதற்குரிய தொடர்ச்சியான கண்காணிப்புக்களில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச கால்நடை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் ஈடுபடுகின்றனர். இவ் செயற்பாடானது பட்டிப்பளை பிராந்திய அரச நிறுவனங்களின் சேவைகளின் நிலைபேறு தன…

  12. ருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட வெசாக் பந்தல் அலங்காரப் போட்டியில் திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலகம் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இந்த அலங்காரப்போட்டிகள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையால் நடத்தப்பட்டது. இம் மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் எட்டு பிரதேச செயலகங்கள் பங்கு பற்றிய இப் போட்டியில் இரண்டாம் இடத்தை மூதூர் பிரதேச செயலகமும் மூன்றாம் இடத்தை தாம்பலாகமம் பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டது. போட்டியில் பங்கு பற்றிய அனைத்து அலங்காரப் பந்தல்களும் திருகோணமலை 4ஆம் மைல்கல்லில் உள்ள மாவட்ட செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. tamilmirror

    • 2 replies
    • 567 views
  13. பூஜா பூமி திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 3069 ஏக்கர் காணி அரசினால் சுவிகரிப்பதற்கான தொடர் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனவா என திருகோணமலை நகர சபை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் நந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் . திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய் கிராமத்தில் தமிழ் மக்களிற்கு சொந்தமான வயல் பிரதேசங்கள், காடுகள், மலைகள் குளங்கள் உட்பட 3069 ஏக்கர் காணி இங்குள்ள பௌத்த ஆலயத்திற்கு வழங்கும் நோக்கோடு அரசினால் நில அளவை செய்யப்பட்டுள்ளது. அரசினால் சுவீகரிப்பதற்கான தொடர் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. கட்டுக்குளம் கட்டு, திரியாய் குளக்கட்டு, ந…

    • 0 replies
    • 442 views
  14. -நவரத்தினம் கபில்நாத் வவுனியா பிரதேசம் அதிகளவான குளங்களை கொண்டமைந்து இயற்கை எழிலோடு நீர்வளத்தையும் காத்து வருகின்றது.இவ்வாறான குளங்கள் அண்மைக்காலமாக மனிதர்களின் இயற்கைக்கு முரணான செயற்பாடுகளால் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக குளங்களுக்குள் அத்துமீறிய குடியிருப்புகளை நிர்மாணித்தல், குளங்களினுள் குப்பைகளை கொட்டுதல் என மனிதனால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயல்களால் குளங்களின் அழகு குறைவதுடன் குளங்களில் வாழும் மீன் வளமும் குறைவடைகிறது. வவுனியா நகர்ப்புறத்திலுள்ள வைரவபுளியங்குளம். வவுனியாகுளம், பண்டாரிகுளம் ஆகியவற்றில் பொதுமக்கள் குப்;பைகளை கொட்டிவருவதனால் குளங்கள் வேகமாக மாசடைந்து வருகின்றன. இதன் காரணமாக நன்னீர் மீன் பிடியாளர்கள் பாதிப்படைவதுடன் விவசாய ந…

    • 0 replies
    • 439 views
  15. முழு உலகுமே கண்வெட்டாமல் பார்த்திருக்க, எண்ணற்ற மனித ஆன்மாக்கள் காவு கொள்ளப்பட்ட சிவப்புக்கறை படிந்த மே மாதம் என்பது தமிழ் மக்களினைப் பொறுத்தவரை உயிரோடு ஒன்றித்த துயரம்மிக்க நாளாகும். விதியென்ற சூறைக்காற்று சுழன்றடிக்கும்போது பூவென்றும் பிஞ்சென்றும் காயென்றும் கனியென்றும் கருதுவதில்லை. ஆனால் விதிமீறி மதிகெட்டு நிகழ்ந்த இறுதிப் போரிலே குழந்தைகள் பெரியவர் என்ற பேதங்களேதுமின்றி ஆயிரமாயிரமாய் மனிதம் வீழ்ந்தது மண்ணில் பிணமாய். பிறப்பிலே தோன்ற மனிதன் இறப்பிலே மறைவது தத்துவமாயினும் உறவினர்களால் நினைவுகூரப்படுவதன் மூலம் மறைந்தும் மறையாதவனாய் வாழ்கின்றான். இதை உலகத்து மறைகள் அனைத்துமே கூறியுள்ளன. மறைந்த மானுடன் நினைவுகூரப்படுவது சக மானுடனின் மனிதப்பண்பாகும். இந…

    • 0 replies
    • 381 views
  16. மே 17 எமது இனத்தின் தலையில் இடிவிழுந்து இன்றோடு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன...காலம் காயங்களை ஆற்றுப்படுத்தும் என்கிற உளவியல் இந்த விடயத்தில் பொய்த்துப் போய்விட்டது. காலம் கடந்துகொண்டு செல்ல செல்ல காயங்களின் வலியும் அந்த வலியின் விளைவாக ஏற்படும் மன உறுதியும் அதிகரித்தே செல்கின்றன. தமிழ்மக்களின் இனவிடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே 30 ஆண்டுகள் நடைபெற்ற ஆயுதப்போராட்டம் மட்டுமல்ல. 1956இல் பட்டிப்பளையில் தமிழர்களின் முதல் இரத்தத்துளி தெறித்து விழுந்தபோது கருக்கொண்டது அது. தொடர்ந்து பல தடவைகள் குருதி பீறிட, தலைகள் தொங்க, தசைகள் கிழிய தெற்குத் தெருக்களில் தமிழர்களின் வாழ்வு பரிதாபமாகியது. கேட்பாரற்று, கவனிப்பாரற்று காயங்களுடனும் வலியுடனும் வாழ்ந்த தமிழர்கள், இரு கரங்களையும் நீட்ட…

  17. ஆட்சியைக் கவிழ்ப்பது எப்படி? - இந்தியாவிடம் பாடம் கற்கலாம் என்கிறார் சரத் பொன்சேகா. [saturday, 2014-05-17 09:14:33] மோசமான அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்பதை இந்தியாவிடமிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டுமென ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் மோசடியில் ஈடுபட்ட அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்பதனை இந்திய மக்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ஊழல் மோசடி மிக்க இந்த அரசாங்கத்தை கவிழ்த்து நாட்டை காப்பாற்ற இலங்கை மக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் மோசடிகளிலும், வினைத்திறனற்ற ஆட்சியையும் மேற்கொண்ட இந்திய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்ததன் மூலம் இந்திய மக்களின் பொறுப்புணர்ச்சி வெளிப்பட்டுள்ளது. நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்டவும், சட்டம் ஒழு…

    • 6 replies
    • 600 views
  18. மாத்தறையில் நாளை பிரமாண்ட போர் வெற்றிவிழா அணிவகுப்பு! - ஜனாதிபதி தலைமையில் நடக்கிறது. [saturday, 2014-05-17 18:16:05] போர் வெற்றியின் ஐந்தாவது ஆண்டு நிறைவு வெற்றிவிழா அணிவகுப்பு நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. போர் வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் நாளை காலை 8.00 மணிக்கு மாத்தறை நகரில் நடைபெறவுள்ளது. அணிவகுப்பு வைபவத்தில் இம்முறையும் இராணுவம், கடற்படை. விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் என்ற அடிப்படையில் 7832 படையினர் கலந்து கொள்ளவுள்ளனர். அவற்றில் 588 அதிகாரிகளும் 7244 வீரர்களும் அடங்குவர். கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த வெற்றி அணிவகுப்பு நி…

  19. கஜேந்திரன் வீட்டிலிருந்து 50மீற்றா் தூரத்திலுள்ள சனசமூக நிலையத்தில் திடீரென நிலைகொண்டது இராணுவம்: [saturday, 2014-05-17 20:59:20] தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரனின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள சிவசக்தி சனசமூக நிலையத்தில் இன்று மாலை 5.00 மணி தொடக்கம் இராணுவம் நிலைகொண்டுள்ளது. குறித்த சனசமூக நிலையம் கந்தா்மடத்திலுள்ள சிவன் -அம்மன் கோவிலின் தெற்குப்புற வீதியில் அமைந்துள்ளது. இன்று பிற்பகல் 4.00மணியளவில் அப்பகுதிக்கு இராணுவத்தினா் வந்துள்ளனா். அருகில் உள்ள வீடுகளில் குறித்த சனசமூக நிலையத்தின் தலைவா் யார் என்று விசாரித்துள்ளனா். நிர்வாக உறுப்பினர் ஒருவரை கண்டுபிடித்து அவாிடம் குறித்த சனசமூக நிலையத்தின் திறப்பினை பெற்றுக் கொண்ட பின்னர் தாம…

  20. சங்கானையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே பலி: [saturday, 2014-05-17 20:06:27] யாழ் - சங்கானை கூடத்து மனோன்மணி ஆலயத்திற்கு அருகில் டிப்பர் ஒன்று மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனை மோதியதால் இளைஞன் ஸ்தலத்திலேயே பலியானார். யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வீதியின் எதிர்புறத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் மரணமடைந்தவர் யாரென இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். பல்சர் ரக மோட்டார் சைக்கிள் இல WP MO 3562 மரணமடைந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. திருமண நிகழ்வொன்றிக்கு சென்று திரும்பியபோதே இவ்விபத்து இடம்பெற்றதாக அறிய முடிகிறது. மரணமானவர் காரைநகரைச் சேர்ந்தவர் என உறுத…

  21. நெடியவணை நாடு கடத்துமாறு கோரி ஜாதிக ஹெல உறுமய நோர்வே தூதரகத்திற்கு எதிரில் போராட்டம்:- 17 மே 2014 நெடியவணை நாடு கடத்துமாறு கோரி ஜாதிக ஹெல உறுமய நோர்வே தூதரகத்திற்கு எதிரில் போராட்டம்:- தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களில் ஒருவராக கருதப்படும் பேரின்பநாயகம் எனப்படும் நெடிவணை கைது செய்யுமாறு கோரி ஜாதிக ஹெல உறுமய கட்சி நாளை, நோர்வே தூதரகத்திற்கு எதிரில் போராட்டமொன்றை நடாத்த உள்ளது. நெடியவணை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி சுதந்திர சதுக்கத்திலிருந்து, நோர்வே தூதரகம் வரையில் ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர்கள் நாளை பேரணியாக செல்லவுள்ளனர். நெடியவணை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரி நோர்வே தூதரகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளதாக ஜா…

  22. நீண்ட நெடிய தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றையும் பல தியாகங்களையும் தாங்கிய வண்ணம் புதிய ஒரு அரசியல் வழியை தேடி நிற்கிறது தமிழ் தேசம். மனித குலத்தின் பண்புகள் பெரும்பாலும் ஒத்தவையாக இருக்க; வேறு மொழி, வேறு இனம், வேறு பிரதேசம், வேறு கலாச்சாரம் என்கின்ற காரணங்களுக்காக தமிழ் தேசத்தவர் எத்தனை முறை விரட்டப்படுகின்றனர், ஒடுக்கப்படுகின்றனர், அழிக்கப்படுகின்றனர். இத்தருணத்தில் மக்களின் ஒடுக்குமுறைக்கெதிராக, தேசிய உரிமைக்காக போராடி மடிந்த அனைத்து போராளிகளுக்கும் எமது மரியாதையை செலுத்துவோம். இந்தக் கொடிய யுத்தத்தில் மடிந்த அனைத்து தமிழ், முஸ்லீம், மலையக, சிங்கள மக்களை நினைவு கூர்வோம். தமிழ் தேசம் என்பது தமிழர்கள், முஸ்லீம்கள் என்னும் தேசிய இன மக்களையும் மலையகத்தமிழர்கள், சிங்களவ…

  23. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று (மே17 )அகவணக்கம் செய்தார் ரவிகரன். வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வின் ஆரம்பத்தில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கும் தமிழர் இறையாண்மையை காக்கவென களமாடிய மாவீரர்களுக்குமென மக்களுடன் சேர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. 20 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் தடைகளுக்கு மத்தியில் மேற்படி நிகழ்வு நடைபெற்றதுடன் நிகழ்வு அனைத்தும் இராணுவபுலனாய்வாளர்களாலும் இராணுவத்தினராலும் காணொளி பதிவாக்கமும் செய்யப்பட்டது. இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, யுத்தத்தால் தமது தாய் அல்லது தந்தையர் அல்லது இருவரையும் இழந்த கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை சீருடைகள…

    • 0 replies
    • 673 views
  24. இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதிகிட்ட உங்கள் தலைமையிலான அரசாங்கம் ஆரோக்கியமான கொள்கை அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்" என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வெற்றியைப் பெற்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றார். ''உங்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி கண்டிருக்கும் இந்த மகத்தான தேர்தல் வெற்றி, இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனை எனலாம். பலம்பொருந்திய ஒரு அரசாங்கத்தை அமைக்கப்போகும் நீங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றினைக் காண்பதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடிய பயனுறுதியுடைய பங்களிப்…

    • 15 replies
    • 1.1k views
  25. தென்பகுதியில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தொழில் செய்துவந்த யாழ்ப்பாணம் ஆயித்தமலையைச்சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. அவர்கள், உன்னெல்லையில் வீடொன்றை வாடகைக்கு எடுத்தே தங்கியிருந்து தொழிலுக்கு சென்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்ற யுத்தவெற்றி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில், ஏழுபேர் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும் அவர்கள் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தப்பியோடியவர்கள் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் அத்திண…

    • 0 replies
    • 514 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.