ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனின் ஆலோசகர்களாக எதிர்க் கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதன், தர்மபால செனவிரட்ட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நான்கு அமைச்சுக்குக்களுக்கும் இரண்டு ஆலோசகர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர் என வடமாகாணசபையின் அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=883332753418703662
-
- 3 replies
- 563 views
-
-
முல்லைத்தீவில் இளம் தாயும், குழந்தையும் கடத்தப்பட்டுள்ளனா்! [Wednesday, 2014-03-19 21:13:30] முல்லைத்தீவு செல்வபுரத்தில் வசித்து வந்தவரான இளம் தாயான ராதிகா நிஷாந்தன் (19) என்பவர் தனது மூன்று வயது குழந்தையான நிரோசனுக்கு வைத்திய சிகிச்சை பெறுவதற்காக நேற்று 18.03.2014 அன்று காலை 8 மணியளவில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு சென்ற வேளையில் காணமல் போயுள்ளனர். மதியமாகியும் வீடு திரும்பாத ராதிகவின் கைபேசிக்கு அவரது உறவினர் அழைப்பு எடுத்தபோது மறுமுனையில் யாரும் பேசாமல் அமைதியாக இருந்ததனால் பதற்றமடைந்த உறவினர்கள் வைத்தியசாலை சென்று விசாரித்த போது, வைத்தியசாலை பதிவேட்டில் ராதிகா வந்ததற்கான எந்தவிதமான பதிவுகளும் இல்லை! இதனால் பயந்து போன உறவினர்கள் திரும்பத…
-
- 1 reply
- 522 views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எதிராக திருகோணமலையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகள் தொடர்பிலேயே சர்வதேச ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுவருவதாகவும் அதனை அனைத்து தமிழ் மக்களும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கையினை முறியடிப்போம் என்ற தலைமையில் திருகோணமலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றியம…
-
- 1 reply
- 775 views
-
-
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்தே அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவர் தாக்கல் செய்த மனுவொன்றை இன்று விசாரித்த நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதேச சபையின் 2014 வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால் தான் பதவி விலக்கப்படுவதை எதிர்த்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், உள்ளூராட்சி சபை ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட 7 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 662 views
-
-
அமெரிக்கத் தீர்மானத்தால் அரசாங்கத்துக்கே பாதிப்பு ஏற்படும் என்கிறார் சரத் பொன்சேகா! [Wednesday, 2014-03-19 10:03:22] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம், நிறைவேற்றப்பட்டால், இலங்கையில் எந்த ஒரு பொதுமகனுக்கும் பாதிப்பு ஏற்படாது என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அமெரிக்காவும், ஏனைய நாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவே யோசனையை முன்வைக்கின்றன. எனவே அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இலங்கைப் படையினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை.ஆட்சியாளர்கள் சட்டம் ஒழுங்கை மீறும் போது அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். அதில் இருந்து அவர்கள் தப்பிக்…
-
- 0 replies
- 403 views
-
-
அவுஸ்திரேலிய தலைநகரம் கன்பராவில் 19.03.2014 செவ்வாய்க் கிழமை அன்று மதியம் 12.00 தொடக்கம் 2.00 மணிவரை பாராளுமன்றத்திற்கு முன்பாக சிட்னி, மெல்பேன், கன்பெரா மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடி ஐ.நா வில் மனித உரிமை சபையில் எடுக்கப்போகின்ற தீர்மானத்தில் போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனஅழிப்பு ஆகியவற்றுக்கு சுயாதீன விசாரணைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அவுஸ்திரேலியா அரசாங்கம் இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை தாங்கியவாறு மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார்கள். இதேநேரத்தில் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 26 நாடுகளின் தூதரகங்களுக்கு சென்று மேற்கூறிய கோரிக்கைகளை கையளித்து…
-
- 1 reply
- 355 views
-
-
போருக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்து வருகிறார்கள் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தெரிவித்துள்ளது. கே.பி. செல்வநாயகம் எனப்படும் கோபி என்பவரின் தலைமையிலேயே இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைந்து வருவதாக அரசாங்கப் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் நோக்கில் கோபி தலைமையிலான புலிகள் வேலையில்லாத இளைஞர்களை அணி திரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். போருக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீள எடுப்பதற்கு ம் முயற்சிக்கப்பட்டு வருவதாக அரச தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். கோபியை கைத…
-
- 2 replies
- 2.9k views
-
-
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக பிரதம செயலாளர் விஜயலக்சுமி உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு பதிவுசெய்துள்ளார். இந்த தகவலை வட மாகாணத்திலுள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது முதலமைச்சர் தெரிவித்தார். தன்னுடைய அதிகாரங்களை வட மாகாண முதலமைச்சர் குறைத்து விட்டதாகவும் தனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டதால் மாகாண சபையில் உண்மையான தனது உரிமைகளை இழந்துள்ளதாகவும் பிரதம செயலாளர் வழக்கு பதிவுசெய்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் அவ்வாறு அவர் வழக்கு பதிவு செய்துள்ளதும் தனக்கு ஒரு வகையில் நன்மைதான் என தெரிவித்தார். இவ்வாறு பிரதம செயலாளரைப் போன்று தனக்கு (முதலமைச்சர்) எதிராக செயற்படுபவர்களால் 13 ஆவது…
-
- 2 replies
- 661 views
-
-
இலவச கல்வியை அழித்தல், மாணவர்களை ஒடுக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய களனி பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர். இதனால் கொழும்பு - கோட்டை பகுதியில் பதற்றம் நிலவுவதுடன் பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இலவச கல்வியை அழித்தல், மாணவர்களை ஒடுக்குதல் உள்ளிட்ட அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=882832758019528914
-
- 1 reply
- 327 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி:- வடமராட்சியின் வல்லிபுரக்குறிச்சிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றிரவு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அதே இடத்தினை சேர்ந்தவரான 41 வயதுடைய தில்லையம்பலம் விமலநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கை நேரம் இன்றிரவு 9 மணியளவினில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்த பின்னர் தப்பித்து சென்றுள்ளனர். இவரது சடலம் பருத்தித்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104443/language/ta-I…
-
- 3 replies
- 755 views
-
-
கிளிநொச்சியில் இன்று உதயநகர்,கனகபுரம் பகுதிகளில் சுற்றிவளைப்பும் - சோதனைகளும். 19 மார்ச் 2014 கிளிநொச்சியில் இன்று(19) நகரை அண்டிய கிராமங்களான கனகபுரம்,மற்றும் உதயநகர் பிரதேசங்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்களும்,சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று இரவு முதல் மேற்படி கிராமங்களில் படையினர் ரோந்து நடவடிக்;கைகளில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை கிராம அலுவலருடன் வீடு வீடாக சென்று குடும்ப பதிவு அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை பரிசீலித்து ஆட்களை குடும்ப அங்கத்தவர்களை உறுதிப்படுத்திக்கொள்ளவதோடு வீடுகளுக்குள்ளும் புகுந்து அறைகளையும் சோதனை செய்து வருகின்றனர். அத்தோடு வெளியிடங்களிலிருந்து புதிதாக எவரும் …
-
- 1 reply
- 611 views
-
-
“தான் விதைத்ததையே சிறீலங்கா அரசு இன்று அறுவடை செய்கிறது!” அங்கஜனின் பேச்சுக்கு வைத்தியகலாநிதி சி.சிவமோகன் மறுப்பு பேச்சு: [Tuesday, 2014-03-18 20:00:41] வடமாகாணசபையின் இன்றைய அமர்வு கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சற்று முன்னர் இவ்வமர்வில் சிறப்பு உரையாற்ற அனுமதி கோரி அவ்வனுமதியை பெற்றுக்கொண்ட இராமநாதன் அங்கஜன், “நாடு இன்று இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. நாட்டை காப்பாற்ற இச்சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றுபட முன்வர வேண்டும். எமது பிரச்சினைகளை சர்வதேசத்திடம் சொல்வதால், அவர்களே கதி என்று தங்கி நிற்பதால் இங்கு எதுவும் நடந்து விடப்போவதில்லை. எமது பிரச்சினைகளை நாம் நமக்குள் கூடிப்பேசி கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளலாம்.” என்று க…
-
- 1 reply
- 810 views
-
-
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும், டென்மார்க்கும் கேள்வி 19 மார்ச் 2014 இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும் டென்மார்க்கும் கேள்வி எழுப்பியுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜெர்மனியும், டென்மார்க்கும் தெரிவித்துள்ளன.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாமை குறித்து கவலையடைவதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. யுத்த நிறைவின் பின்னர் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களினால் பணிகளை முன்னெடுப்பதில் …
-
- 0 replies
- 429 views
-
-
வடக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வடமாகாண சபையில் கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. ஜெயக்குமாரியின் விடுதலை, வடக்கில் இராணுவ வெளியேற்றம், சிறைகளில் உள்ள உடன்பிறப்புக்களை விடுதலை செய், சினிமா பாணியில் சிறைப்பிடிப்பதை உடனே நிறுத்து, மகனை கேட்டால் பூசாவா? அண்ணனை கேட்டால் அநாதை இல்லமா? ,சிறுமியை சிறைப்பிடித்து எம் இனத்தை சீண்டாதே, இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களின் விடுதலை, போன்ற பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்டனப் போராட்டத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http…
-
- 2 replies
- 443 views
-
-
-சொர்ணகுமார் சொரூபன் வடமாகாண சபைக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றை செவ்வாய்க்கிழமை (18) மாலை முன்னெடுத்தனர். ஜனநாயக படுகொலை, நீதிக்குப் புறம்பான சகல ஆட்கடத்தல்கள், கொலைகள் மற்றும் கைதுகளுக்கு எதிராகவே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'சிறுமியினைச் சிறைப்பிடித்து எம் இனத்தினைச் சீண்டாதே', 'அரசே காணாமற்போன உறவுகளின் கண்ணீருக்கு பதில் சொல்', 'மகனைக் கேட்டால் பூஸாவா?, அண்ணனைக் கேட்டால் அநாதையில்லாமா?', 'சிறைகளிலுள்ள எமது உடன்பிறப்புக்களை விடுதலை செய்', காவியுடை கலகக்காரர்களுக்கு காவற்துறை பாதுகாப்பு, மனித உரிமை பாதுகாவலர்க்கு 4 ஆம் மாடியா?', 'காவற்துறையே எம் இளைஞர்களை …
-
- 1 reply
- 405 views
-
-
-சொர்ணகுமார் சொரூபன் வடமாகாண சபையின் நியதிச் சட்டங்களில் புதிதாக நிதிநியதிச் சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டம் என்பன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் செவ்வாய்க்கிழமை (18) சபையில் முன்வைக்கப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது. இதன்போதே முதலமைச்சர் மேற்படி இரண்டு நியதிச் சட்டங்களையும் சபையில் முன்வைத்தார். அத்துடன் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட நியதிச் சட்டங்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்காத நிலையில் குறித்த நியதிச் சட்டங்கள் அங்கீகரிக்கப்படுவதாக தவிசாளர் அறிவித்தார். அத்துடன், முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நியதிச் சட்டங்கள் ஒவ்வொரு உற…
-
- 0 replies
- 465 views
-
-
இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஸவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னணி மனித உரமைச் செயர்பாட்டாளர்கள் ருக்கி பெனான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் இலங்கை நேரம் சற்று முன் விடுவிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டதாக அவர்களின் நண்பர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104445/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 430 views
-
-
அநந்தி சசிதரன் ஐநா மனித உரிமைச் சபையில் உரை:- ஜெனீவாவில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பெரு மதிப்புக்குரிய இந்தப் பேரவையானது பெருங்குற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம். இலங்கைத்தீவின் வட மாகாண சபையில் தேர்தலூடாகாத் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவும் இன்று நான் இங்கு நிற்கிறேன். போரின் முடிவில் எனது கணவர் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைவதை நேரடியாக பார்த்த சாட்சியமாக காணாமற்போரைத் தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருள் ஒருத்தியாக அவர்களையும் நான் இங்கு பிரதிதிநிதுவப்படுத்துகிறேன். இன அழிப்புப் போரின் பின்னராக இன்னமும் 146,000 இற்கும் அதிகமானவர்களின் கதி தெளிவு படாத நிலையில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். …
-
- 0 replies
- 642 views
-
-
தகவல் சேகரிப்பது பயங்கரவாத குற்றமா? – கேள்வி எழுப்புகிறார் மன்னார் ஆயர். [Tuesday, 2014-03-18 18:04:32] பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணாண்டோவும், அருட் தந்தை பிரவீனும் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் இல்லை என்றும் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி, விபூசிகா ஆகியோர் தொடர்பாக தகவல்களை திரட்டச்…
-
- 0 replies
- 298 views
-
-
பொன்னணிகளின் போர்; ஒருவர் அடித்துக் கொலை பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவன் மைதானத்ததில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=670072743215659485#sthash.NubTFNVs.dpuf
-
- 51 replies
- 4.9k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. எனினும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே எம்முடன் இணைந்து செயற்பட முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் தமிழ் மக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளனர். ஆயினும் ஹக்கீம் காலம்கனிந்து வரும்வரையில் காத்திருப்பது அர்த்தமற்றது எனவும் அவர் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கருத்து தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாற…
-
- 2 replies
- 508 views
-
-
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீளத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வடமாகாண சபையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (18) கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறறது. வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனினால் கொண்டுவரப்பட்ட மேற்படி பிரேரணையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழிமொழிய சபை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மேற்படி பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதன்போது உரையாற்றிய விவசாய அமைச்சர், 'காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை 90 வருடகாலத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கும், அதனை அண்டியுள்ள 700 ஏக்கர் நிலப்பரப்பில் சுண்ணக்கல் அகழ்வதற…
-
- 0 replies
- 456 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது தொடர்பான புதிய ஆதாரங்களை, இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில், இரசாயனக் குண்டு வீச்சினால், உடலில் எரிகாயங்களுக்கு உள்ளான ஒரு குழந்தை மற்றும் ஆண் ஒருவர் தொடர்பான ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சீருடையணிந்த சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர், போரின் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை விபரிக்கும், காணொளிப்பதிவும் வெளியிடப்பட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில், கடற்கரையோரத்தில் சிக்கியிருந்த விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், அந்தக் குண்டுகள் சுமார் 1 கி.மீ சுற்றளவு கொண்ட பிரத…
-
- 16 replies
- 2.4k views
-
-
இந்தக் கடிதத்தை வாசிக்க உனக்கு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. அப்படிக் கிடைத்தாலும் இதனை வாசிக்கும் மனநிலையில் நீ இருக்க மாட்டாய் என்பதும் எனக்குத்தெரியும். ஆனால் உன் பற்றிய இக்கடிதம் உனக்கல்ல மகளே! தமது இரும்புக் கரம் கொண்டு மனித உயிர்களை நரித்த இந்த அரசாங்கத்திற்கு உன்னைப்போன்ற பாலகர்கள் ஒரு பொருட்டல்ல என்று உனக்கும் எனக்கும் இன்னும் மனித உணர்வுள்ள அனைவருக்கும் தெரியும். மனித நேயமற்ற மகிந்த ,கோத்தாபய அரசாங்கத்திற்கு உன்னையும் உன் அம்மா போன்ற அப்பாவிகளையும் மோசமான சதிவலைக்குள் விழுத்தி காட்டுமிராண்டித்தனமான சட்டங்களின் பிடியில் சிக்க வைத்து அலைக்களித்து அழிப்பது இன்பம் தரும் விளையாட்டு மகளே! கேட்பாரில்லாக்காலத்தில் நிற்கிறோம் விபூசிகா பெண்ணே! அன்று யாழ்ப்பாண…
-
- 1 reply
- 719 views
-
-
இலங்கை அரசாங்கம் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் அவர்களது பேச்சுரிமைக்கும் கட்டாயம் மதிப்பளிக்க வேண்டுமென பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியா வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர், இரண்டு மனித உரிமை செய்ற்பாட்டாளர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்தமைக்கு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரினதும் குடும்பங்களும் வழக்கறிஞர்களும் அவர்களை சந்திக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, தற்போது ஐ.நா மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறான கைதுகள் இலங்கை மீது தவறான அபிப்பிராயத்தை உலுவாக்குகிறது. இதேவேளை இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் …
-
- 1 reply
- 1.1k views
-