ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற பயங்கரமான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிறிலங்காவைக் கண்டிக்கும் தீர்மானம் மீது, இன்னும் சில வாரங்களில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை வாக்களிக்கவுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடனான இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் அண்மைய சந்திப்பு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் மென்போக்கை வெளிப்படுத்துவதாக சிலர் விளக்கமளித்துள்ளனர். அப்படியல்ல, இந்தியா எப்போதும் அண்டை நாடுகளுடன் இருதரப்பு பேச்சுக்களில் நம்பிக்கை கொண்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங்கும் அதையே செய்தார். யாழ்.குடாநாட்டில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கையை கொழும்பு குறைக்க வேண்டும் என்று…
-
- 0 replies
- 216 views
-
-
0 COMMENTS -வடிவேல்-சக்திவேல் 'மண்முனைப் பாலம் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் இதனை வைத்துக் கொண்டு எம்மக்களின் உரிமைகள் உள்ளிட்ட அனைத்தும் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும். மண்முனை பாலத்திற்கூடாக பாதிப்புக்கள் பெரிதாக வரக் காத்திருக்கின்றது' என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் திங்கட்கிழமை (11) தெரிவித்தார். மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு விஜயம்செய்து அக்கிராம மக்களின் குறைநிறைகளைக் கேட்டறியும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'மிகவிரைவில் பாரியதொரு அச்சறுத்தல் எமக்கு வர இருக்கின்றது. எதிர்வரும் ஏப்பரல் மாதம் திறக்கபட இருக்கின்ற படுவ…
-
- 3 replies
- 513 views
-
-
ஒரு நாளில் மட்டும் ஏழு தற்கொலைகள் கிளிநொச்சியில் நடந்துள்ளது. மொத்தமாக இந்த வாரத்தில் யாழ் மற்றும் கிளினொச்சியில் 18 பேர் தற்கொலை செய்துள்ளனர். நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் பின்னர் வடபகுதி மக்களுக்கு உரிய உளவளத்துறை ஆலோசனைகள் வழங்கப்படாமையே இம் மாவட்டங்களில் தற்கொலைகள் அதிகரிப்பதற்கான காரணமாகிறது. தற்போது அதிகளவில் இடம்பெறும் அகால மரணங்களைத் தடுப்பதற்கு பாடசாலைகளில் விபத்துக்கள் தொடர்பான கல்வியை ஆரம்பிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நேற்றைய தினத்தில் மட்டும் 07 அகால மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இதுதான் சிங்கள அரசாங்கத்தின் த…
-
- 6 replies
- 1k views
-
-
சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற ஆதாரம் ஐ.நாவுக்குத் தெரியாதாம். [Tuesday, 2014-03-11 17:32:31] சனல்-4 வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படத்தை தாம் பார்க்கவில்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் புதிய பேச்சாளர் ஸ்டிபன் டுஜாரீக் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் சனல்4 ஊடகம் புதிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உயிரிழந்த பெண் போராளிகளின் சடலங்களை படையினர், பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்வது தொடர்பான காட்சிகள் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணப்படத்தை பார்க்கவில்லை எனவும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் பான் பான் கீ மூனின் முன்னாள் பேச்சாளர் மார்டின் நெகர்கீ இலங்கை விவகாரம் குறித்து அதிகளவில் பேசியிருப்பதாகவும் புதிய…
-
- 1 reply
- 330 views
-
-
அனைத்துலக விசாரணை என்ற பதம், அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான விரைவில் இல்லை என்பதற்காக அதனை பொறுப்பற்ற முறையில் எதிர்க்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான முன்வரைவில் அடங்கியுள்ள விசாரணை கோரிக்கைகள் தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதை நோக்காகக் கொண்டது. அந்த நோக்கத்தை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்துலக சமூகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. அதேவேளை, தமிழ் மக்களுக்குத் தேவையான அரசியல்தீர்வு, வடக்கு,கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்டல் போன்ற விடயங்களை எட்டக்கூடிய விதத்தில் இந்தத் தீர்மானத்தில் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டு…
-
- 2 replies
- 451 views
-
-
-நவரத்தினம் கபில்நாத் 'யுத்தமும் அதன் பின்னரான இலங்கையின் நிலைமையும்' என்ற தொனிப்பொருளில் புகைப்படக் காண்காட்சி வவுனியா நகரசபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமாகியுள்ளது. இக்கண்காட்சியின்போது வடபகுதியில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், வெடிப்புச் சம்பவங்கள், விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்கள், மக்களின் அவலநிலை மற்றும் தற்போதைய அபிவிருத்தி பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமைவரை (12) நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, மும்மதத் தலைவர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர்…
-
- 0 replies
- 535 views
-
-
அரசாங்கத்தில் அமைச்சர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை மின்சார கதிரைக்கு கொண்டு செல்லப் போவதாக மக்களை அச்சுறுத்துகிறார்கள். இருப்பினும் இந்நாட்டின் தலைவர்கள் மின்சார கதிரைக்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. வுடன் ஒப்பந்த மொன்றை கைச்சாத்திட்டுள்ளார். எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எவ்வகையிலும் மின்சார கதிரையில் அமர்த்த முடியாது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார். மேல் மாகாண சபைக்கு கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க. வில் போட்டியிடும் கே. பழனியாண்டியின் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் 29 ஆம் திகதி நடத்தப்படவுள்ள மாகாண சபை தேர்தலுக்கான வாக்குகளை சேகரிக்கவ…
-
- 1 reply
- 223 views
-
-
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனகோரி ஐ.நா. முன்றில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/?q=node/362062
-
- 3 replies
- 470 views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி கவிழும் என அக்கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக யார் வர வேண்டும். அடுத்த அரசாங்கத்தை யார் அமைப்பது, என்பதை தமது கட்சியே தீர்மானிக்கும். முன்னைய காலங்களில் பிரேமதாஸ, சந்திரிகா போன்றவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதி பதவிக்கு வந்தனர். எனவே மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வர வேண்டுமா? இல்லையா என்பதை தீர்மானித்ததும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கூறுவதை கண்டிக்கின்றோம். …
-
- 3 replies
- 565 views
-
-
அமெரிக்காவுக்கு அதிசூரர் ஒருவரை தூதுவராக நியமிக்க வேண்டும்! – ஜேவிபி தலைவர் கூறுகிறார். [Tuesday, 2014-03-11 07:32:33] முக்கியமான நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களின் பணிகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான சவால்களை எதிர்நோக்க வலுவான ஓர் ராஜதந்திர குழுவொன்றை நியமிக்க வேண்டும். தகுதியும் திறமையும் உடைய நபர்களை அரசாங்கம் ராஜதந்திரிகளாக நியமிக்கவில்லை. மாறாக ஜனாதிபதியின் உறவினர்களும் ஆதரவாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். நாடு பாரியளவில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில் அமெரிக்காவிற்கான தூதுவராக சிறந்த திறமையுடைய ஓர் அதிசூரர் ஒருவர் அவசியம…
-
- 3 replies
- 352 views
-
-
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிந்து போரில் மறைக்கப்பட்ட இன்னொரு உண்மை அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தாக்குதல் ஒன்றில் 500 படையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மறைக்கப்பட்ட உண்மை பற்றிய விபரத்தை கடந்த வாரம் பார்த்திருந்தோம். அந்த உண்மையை வெளிச்சத்துக் கொண்டு வந்திருந்தவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. இது விமானப்படையால் மறைக்கப்பட்ட உண்மை பற்றிய இரகசியம். இதனை வெளிக்கொண்டு வந்துள்ளவர் விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான குறூப் கப்டன் சஜீவ ஹெந்தவிதாரண. இவர் இலங்கை விமானப்படையில் முக்கியமானதொரு அதிகாரியாக இருந்தவர். விமானப்படையின் நான்கு வெவ்வேறு ஸ்குவாட்ரன்களுக்கு ( மேலதிக பறக்கும் பயிற்சி ஸ்குவாட்ரன், பறக்கு…
-
- 1 reply
- 613 views
-
-
இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண சபையினர் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனமாகிய ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியிருக்கின்றனர். இரணைமடு குளத்தைப் புனரமைத்தல், அந்தக் குளத்தில் இரந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்தல், யாழ்ப்பாணத்தில் கழிவகற்றும் திட்டத்தைச் செயற்படுத்துதல் ஆகிய மூன்று விடயங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த இரணைமடு திட்டமானது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இந்தக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதை இந்தக் குளத்து நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளின் அமைப்ப…
-
- 0 replies
- 424 views
-
-
மீண்டும் பொலிசாருக்குத் துப்பாக்கிகள்! – இன்று முதல் விசேட அதிகாரம். [Tuesday, 2014-03-11 08:02:20] கடமைக்குச் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைத்துப்பாக்கியை கொண்டு செல்வது இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய உடனடியாக அமுலுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன், சகல பொலிஸ் பொறுப்பதிகாரிகளையும் அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், அண்மைய காலங்களில் கடம…
-
- 1 reply
- 416 views
-
-
ராஜபக்ச அரசாங்கத்தைப் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்ற, அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். வொசிங்டனில் இந்திய இராஜதந்திரி தேவ்யானி கோப்ரகடே, கைது செய்யப்பட்ட விவகாரத்தால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து, கடந்த 4ம் நாள் தொடக்கம் 6ம் நாள் வரை நிஷா பிஸ்வால் இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்தார். தேவ்யானி விவகாரத்துக்குப் பின்னர், இந்தியா சென்று முதல் அமெரிக்க உயர் மட்டப் பிரதிநி…
-
- 4 replies
- 882 views
-
-
நாடாளுமன்றத்தில் நான்கு போதைப் பொருள் வியாபாரிகள் இருப்பதாக ஜே.வி.பியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளனர். நாட்டு மக்களே இவர்களை தெரிவு செய்கின்றனர். பணம் சம்பாதிப்பதற்காகவே இன்று அரசியலை தெரிவு செய்கின்றனர். பணத்தை உழைக்க அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரம் பணத்தை உழைப்பதற்கான அனுமதிப்பத்திரமாக மாறியுள்ளது. நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு மாதம் 7 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த 7 ஆயிரம் ரூபா சம்பளத்தில் எப்படி நான்கு வருடங்களில் 7 கோடி ரூபா பெறுமதியான மாளிகையை நிர்மாணிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் இப்படியான இழிநிலைக்கு சென்றுள்ளது. டி…
-
- 0 replies
- 225 views
-
-
இந்திய மத்திய அரசின் பலவீனத்தினால் தான், இந்தியாவை சிறிலங்கா ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றும், நரேந்திர மோடி பிரதமரானதும் இந்தநிலை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று இந்தியாவின் முன்னாள் வெளிவகார அமைச்சரும், பாஜக மூத்த தலவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில், நேற்றுமாலை மதிமுக சார்பில் நடத்தப்பட்ட மனிதஉரிமைகள் கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “இந்திய அரசியலமைப்பில், மனிதஉரிமைகள் அடிப்படை உரிமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, திபெத்தில் சீனா நடத்திய மனிதஉரிமை மீறல்கள் முதல் சிறிலங்காவில் இன்றுவரை நடந்து வரும் மனிதஉரிமைமீறல்கள் வரை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொ…
-
- 1 reply
- 913 views
-
-
உரிமைகளை பெற தமிழர்கள் போராட வேண்டும்: - ஜனநாயக மக்கள் முன்னணி [Tuesday, 2014-03-11 09:48:33] தமிழர்கள் தனது விடுதலை உரிமைகளைப்பெற போராட வேண்டிய அவசியத்தை தெளிவாக மீண்டும் ஜெனிவா தீர்மானம் மூலம் உலகநாடுகள் எமக்கு உணர்தியுள்ளன.இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச்செயலரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில். பள்ளிவாசல்.தேவாலயம்.கோயில் ஆகியன உடைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் மூலமே அந்தப் பிரச்சனைகளும் ஜெனிவாவில் ஒலித்தது.இதேபோல் தமிழ் அரசியல் தலைவர்களால் நடாத்தப்பட்ட போராட்டங்களால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உலகுக்கு வெளிக்கொண்டுவரப்படுகிறது.அதற்காக உரிமை…
-
- 0 replies
- 174 views
-
-
-சுமித்தி தங்கராசா வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவினால் தனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். 'கமலேந்திரன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என சுசில் பிரேம ஜயந்தவினால் கடந்த 6ஆம் திகதி எனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கமலேந்திரனின் எதிர்க்கட்சித் தலை…
-
- 2 replies
- 293 views
-
-
பிரபாகரனுக்கு மலர்வளையம் வைக்க முனைகிறார் நவநீதம்பிள்ளை! – ஆளும்கட்சி அமைச்சர்கள் குற்றச்சாட்டு. [Tuesday, 2014-03-11 07:57:33] ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை முழுக்க முழுக்க ஒருதலைப்பட்சமானது. இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக நிராகரிக்கிறது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோர் நேற்று சுதந்திரக்கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். நவநீதம்பிள்ளை சொல்வது இதுதான் முதற்தடவையும் அல்ல. நவநீதம்ப…
-
- 0 replies
- 146 views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுவாக்க வேண்டும்! - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை. [Tuesday, 2014-03-11 07:39:58] சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் வகையில், இலங்கைக்கு எதிரான இம்முறை யோசனையை வலுவாக்கிக் கொள்ள அங்கத்துவ நாடுகள் முன்வரவேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழ மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதாபிமானத்திற்கான போர் என்ற பெயரில் மானுடத்திற்கு எதிராக இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட போர் முடிவுக்கு வந்து எதிர்வரும் மே மாதத்தோடு ஐந்து ஆண்டுகளை எட்டுகின்றது. ஆனாலும் அப்போரின் பின்னதான சம்பந்தப்பட்ட மனிதாபிமானப் பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அப்பாவிப் பொதுமக்களிற்க…
-
- 0 replies
- 215 views
-
-
மேற்கத்தேய நாடுகள் எமது மக்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியிருக்காது விடின் கடந்த காலங்களில் இடம் பெற்ற போரின் போது உயிரிழப்பு வீதம் பன்மடங்காக அதிகரித்திருக்கும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார். இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் போல் மொன்ஞ்சு நேற்று வடமாகாண சபையின் அவைத்தலைவரைச் சந்தித்து கலந்துரையாடினார். அதன்போது குறித்த விடயம் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம் என்றும் தூதுவரிடம் கூறியதாக அவைத்தலைவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் எற்பட்ட போர் காரணமாக எமது உறவுகள் மேற்கத்தேய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். அந…
-
- 0 replies
- 375 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையம் எத்தகைய விசாரணைப் பொறிமுறையையை உருவாக்கலாம் என்பது தொடர்பாக நேற்று ஜெனிவாவில் ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக நடைபெற்ற, முறைசாரா கலந்துரையாடலின் போதே இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்த அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளும் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இந்த விவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது, சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும்,பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், சிறிலங்கா தொடர்பாக விசாரணை நடத்…
-
- 0 replies
- 593 views
-
-
சிறிலங்கா நிலை தொடர்பாக, தாம் கவலை கொண்டுள்ளதாக கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் தெரிவித்துள்ளார். நேற்று கொண்டாடப்பட்ட, கொமன்வெல்த் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “கொமன்வெல்த் அமைப்பின் கொள்கைகள், பெறுமானங்களுக்கேற்ப- குறிப்பாக, மனிதஉரிமைகள், மத சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை, மதித்து நடக்குமாறும், எந்தவொரு பாகுபாட்டுக்கும் எதிராகவும் செயற்படுமாறும் உறுப்பு நாடுகளை நாம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இது 21வது நூற்றாண்டில் கொமன்வெல்த் ஒரு மதிப்புமிக்க அமைப்பாக நம்பகத்தன்மை கொண்டதாக இருப்பதற்கு முக்கியமானது. குறிப்பாக, சிறிலங்காவின் நிலைமைகள் தொடர்பாக எனது கவலைகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது கொமன்வெல்த் அமை…
-
- 0 replies
- 273 views
-
-
பாராளுமன்றத்தையும் அம்பாந்தோட்டைக்கு மாற்றச் சொல்கிறார் மகிந்தவின் மந்திரி! [Monday, 2014-03-10 15:47:04] பாராளுமன்றத்தை அம்பாந்தோட்டைக்கு மாற்ற வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். அம்பாந்தோட்டையில் எல்லாவிதமான உட்கட்டுமான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம் ஒன்று மட்டுமே குறையாக இருக்கின்றது.. துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையம் என பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன. பண்டைய மன்னர்களும் ஆட்சி மையத்தை மாற்றி ஆட்சி செய்துள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, கண்டி போன்றன இதற்கு உதாரணமாக குறிப்பிட முடியும். ஆட்சி நடத்தும் நகரங்களில் மாற்றம் செய்வதன் மூலம் அந்தப் பிரதேசங்கள் …
-
- 2 replies
- 431 views
-
-
இலங்கை இனப்படுகொலை குறித்து இந்தியாவே தீர்மானம் கொண்டு வரவேண்டும்! - இந்திய மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை. [Monday, 2014-03-10 16:23:52] இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து பன்னாட்டு சுதந்திர புலனாய்வு நடத்த ஐ.நா. மனிதஉரிமை கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று அனைத்திந்திய மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அனைத்திந்திய மனித உரிமை அமைப்புகள் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டம் சென்னையில் நடந்தது. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலர் சுரேஷ், தமிழக மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் பேராசிரியர் சரஸ்வதி, ராஜஸ்தான் மாநில மக்கள் சிவில் உரிமைக் கழக நிர்வாகி கவிதா ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்ப…
-
- 1 reply
- 539 views
-