Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் டில்லி உச்சநீதிமன்றத்திலும் வாதாடியவர் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தவறி விழுந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் த…

  2. புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் திகதி விசேட பிரமுகரின் தலைமையில் நடைபெறவிருக்கின்ற வைபவத்தில் வெடிக்குண்டை வெடிக்கவைக்கபோவதாக மாணவர் ஒருவரின் பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாணவனை சிக்கல் மாட்டிவிடுவதற்கு எடுக்கப்பட்ட சூழ்ச்சி என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அந்த மாணவனை பிரதான மாணவ தலைவனாக நியமிப்பதற்கு பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கடிதத்தை அனுப்பிய நபரை தேடி பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ப…

  3. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவை கண்டித்து ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த 15 தமிழர்களுக்கும் நீதி கேட்டும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடத்தப்படுகின்றது. அண்ணாசாலை மின்சார வாரியம் பின்புறம் உள்ள சாலையில் உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரத பந்தலை சுற்றியும் ராஜீவ்காந்தி மார்பில் சிறுபிள்ளையாக ராகுல்காந்தி சாய்ந்து இருக்கும் காட்சி, ஸ்ரீPபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்த காட்சிகள் பதாகைகளாக வைக்கப்பட்டுள்ளன. உண்ணாவிரதத்துக்கு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாசே ராஜேஷ் ஏற்பாடு செய்து தலைமை தாங்கிகொண்டிருக்கின்றார். http://tamil.d…

  4. பலாலி மற்றும் திருகோணமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும் என வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்படடுள்ளது. வடமாகாண சபையின் 6 ஆவது அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போதே இந்த பிரேரணை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை மற்றொரு உறுப்பினரான கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிய தீர்மானம் ஏகமனதாக சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 'வடக்கிலுள்ள பலாலி கிழக்கிலுள்ள திருமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும். காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தகத்துறைமுகமாக மாற்றப்படவேண்டும். அத்துடன், தலைமன்னார் வரையில் ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்ட…

  5. ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை எதிர்த்து இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றம் நோக்கி நகர்வுகள் மேற்கொள்ளும். தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கும் இம் முடிவை எதிர்த்து; இந்திய மத்திய அரசு கோரி இருக்கும் விசாரணையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்பு கொண்டுள்ளது. கொலை குற்றம் சாட்டப்பட்ட இவர்களின் விசாரணைகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் இவர்களை விடுதலை செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு கோரியுள்ளது. மன்மோகன் வெளியிட்ட அறிக்கை: மறைந்த ஸ்ரீ ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் எழும் சட்ட அடிப்படை பிரச்சினைகளை ஆராய மத்திய அரசு;உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை அனுப்ப உள்ளது. குற்றவாளிகளை விடுதலை செய்யும் முடிவு பற்றிய அறிக்கையான…

  6. ஐ.நா வில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டுவரப்படவுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்காக மகிந்த ராஜபக்ச அமைத்த உள்நாட்டு சக்கர வியூகத்தை தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் உடைத்தெறிந்துவிட்டனர். இதனால் மகிந்த குடும்பம் செய்வதறியாத நிலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. எதிர்பார்க்காத வகையில் மகிந்த ராஜபக்ச அரசு தமிழர் தாயகத்தில் மண் கௌவியிருக்கின்றது. இந்த வேதனையால் மகிந்த மனமுடைந்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப் பொறிமுறை தோல்வி கண்டதால் சர்வதேச பொறிமுறையன்றை ஏற்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச கடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார். இந்தச் சர்வதேச சக்கர வியூகத்தையும் உடைத்தெறிய வேண்டும். அதற்கான பெரும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள…

  7. மர்மமான மரணம் ராஜீவ் மரணம். யார் கொலை செய்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது.: - சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் [Friday, 2014-02-21 11:47:25] என்னைப் பொறுத்தவரை துப்பே இல்லாத ஒரு வழக்கில் துப்பு துலக்கி ஏராளமான ஆதாரங்களை சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்ததோடு என் கடமை முடிந்துவிட்டது என்கிறார் சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன். கோயமுத்தூர் நரசீபுரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தவர். இவர் தற்போது அமைதி, நல்லாட்சி, மத ஒருமைப்பாடு இயக்கம் (foundation for good governance) என்ற அமைப்பை நடத்தி நாட்…

    • 4 replies
    • 694 views
  8. இலங்கைக்கு எதிராக 23 நாடுகள் வாக்களிக்கும் என GTF எதிர்வு கூறியுள்ளது. [Friday, 2014-02-21 12:13:49] இலங்கைக்கு எதிராக 23 நாடுகள் வாக்களிக்கும் என குளோபல் தமிழ் போராம் என்ற பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அமைப்பு எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளன. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கையின் அடிப்படையில் அமெரி;க்கா தீர்மானம் முன்வைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது. bஇந்தியாவும் இலங்கை…

  9. பிரித்தானியாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்த காலநிலை அனர்த்தத்தால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கான நிவாரண உதவிகளை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று வழங்கினர். http://www.sankathi24.com/news/38694/64//d,fullart.aspx

  10. கிளிநொச்சி கரைச்சி பொதுச்சந்தையில் ஆறு பொதுமக்களை பூனை கடித்துள்ளது என சந்தை வர்த்தகர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி பொதுச் சந்தையில் கடந்த ஒரு சில தினங்களில் மட்டும் சந்தையில் உள்ள பூனை ஒன்று பொருட்களை கொள்வனவு செய்ய வருகின்ற பொது மக்களை தீடிரென பாய்ந்து கடித்து காயத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றுவிடுகின்றது அந்த வகையில் ஒரு சில தினங்களில் மட்டும் குறித்த பூனை ஆறு பொதுமக்களை கடித்துள்ளது. இதில் சிலர் இரத்தம் சிந்துமளவுக்கு காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிசை பெற்று சென்றுள்ளனர். குறித்த பூனையை பிடிப்பதற்கோ அல்லது கொலைசெய்வதற்கோ வர்த்தகர்கள் முயன்ற போது தப்பித்து சென்றுவிடுவதாகவும் சில மணி…

  11. திருகோணமலையில் பண்டைய துறைமுகம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 8ம் நூற்றாண்டு காலத்தில் இந்த துறைமுகம் அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் குறித்த துறைமுகத்தை கண்டு பிடித்துள்ளனர். சேருவில பிரதேசத்தில் சர்வதேச துறைமுகம் ஒன்று இயங்கி வந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என களனி பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சி பீட பொறுப்பாளர் டொக்டர் அனுர தந்திலகே இதனைத் தெரிவித்துள்ளார். சீன பீங்கான் பொருட்கள், வெளிநாட்டுக் கண்ணாடிகள், செப்பு தகடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த இடம் தொடர்பிலான ஆய்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டு…

  12. யாழ்ப்பாண மக்கள் உயர் பாதுகாப்பு வலயம், பாலியல் ரீதியான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனப் பிரிட்டன் தூதுவர் ஜோன் ரங்கின் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை, இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜோன் ரங்கின் குழுவினர் வருகை தந்திருந்தனர். இந்தக் குழுவினர் யாழ். பொது நூலகத்துக்குச் சென்று நூல்களை அன்பளிப்புச் செய்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு முதலமைச்சர் ஆகியோரையும் இவர்கள் சந்தித்தனர். இதனைவிட வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று …

  13. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உண்மையான உன்னதமான பிரதிநிதிகள்: - இயக்குனர் கௌதம் [Friday, 2014-02-21 11:51:06] ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் எதிர்வரும் மார்ச் 10 திகதி ஐநா முன்றலில் ஈகைப் பேரொளி முருகதாஸ் திடலில் சென்றடைய உள்ளது . இப் பேரணியில் உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியது காலத்தின் வரலாற்றுக் கடமை . நடைப்பயண போராட்டத்தின் ஐந்து கோரிக்கைகளில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உண்மையான உன்னதமான பிரதிநிதிகள், அவர்களை அனைத்துலகம் ஓர் விடுதலை இயக்கமாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை உலகத் தமிழ் மக்கள் அனைவரும் வலியுறுத்தி நிற்கவேண்டும் என அவர் கெட்டுக் கொண்டுள்ளார் . http://ww…

  14. மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை நெஞ்சார வாழ்த்துகின்றோம்: - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை [Friday, 2014-02-21 11:48:43] ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தொடர்பில் தமிழக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு விரைந்து வரலாற்று முக்கியம் வாய்ந்த முடிவினை எடுத்து, நீதியினை நிலைநாட்டியுள்ள செய்தியினை அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். எங்களது இதயத்து நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம். உலகத்தமிழர்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் நெஞ்சத்தில் சுமந்திருந்த துயரைத்துடைத்த ஓர் உறுதியான நடவட…

  15. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானம், ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், "நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில விடயங்களை அடிப்படையாக கொண்டே அமெரிக்கத் தீர்மானம் அமைந்திருக்கும். ஆனால், முழுமையாக அதை அடிப்படையாக கொண்டதாக இருக்காது.” என்று தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான இன்னொரு தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடர…

  16. யாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவமுகாம்களுக்கான காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. நுணாவிலில் இவ்வாறு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் 7 பேரும் அவற்றை இராணுவத்தினருக்கு வழங்குவதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது. யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு மாத காலத்தினுள், இராணுவம் மற்றும் கடற்படைக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டிருந்தன.  தாமதமடைந்த திட்டம் இதன் பின்னர் குறித்த காணி சுவீகரிப்பு அலுவலர்கள் தமது பதவியில் இருந்து விலகி வெளியேறியிருந்தனர். இதனால் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தாமதம…

  17. லிந்துலை - ஹென்போல்ட் தோட்ட பழைய முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 14ஆம் திகதி தொடக்கம் 18அம் திகதி வரை வெகு விமர்சையாக இடம்பெற்றது. 14ஆம் திகதி நள்ளிரவு கரகம் பாலித்தலுடன் திருவிழா ஆரம்பமாகி மறுநாள் 15அம் திகதி சங்காபிஷேகம், குதிரை வாகனம் வெளிவீதி உலா இடம்பெற்றது. 16ஆம் திகதி வேல்பூட்டல், பறவைக் காவடி, அன்னதானம் வழங்கல், வேட்டைத் திருவிழா இடம்பெற்றது. 17அம் திகதி வசந்த மண்டபப் பூஜையின் பின் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்தேர்களில் விநாயகம், முருகன், மாரி அம்மன் ஆகிய தெய்வங்கள் மெராயா நகருக்கு வெளிவீதி உலா சென்று 18ஆம் திகதி காலை மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. 18ம் திகதி மாலை மஞ்சள் நீர் இடம்பெற்று குடிவிடுதலுடன் திருவிழா இனிதே நிறைவு ப…

  18. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஐ.நா மனித உரிமை ஆணையத்திடம் இந்தியா தனி தீர்மானம் அளித்திட வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். இதன்போது இலங்கையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற போரின்போது போர்க் குற்றம் இடம்பெற்றமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் தலைமையிலான தன்னிச்சையான மற்றும் சர்வதேச விசாரணை நடத்த ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், 2008 டிசம்பர் மாதம் முதல் 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. வின் கீழ் இயங்கும் த…

  19. விடுதலைக்கு பின் லண்டனில் மகளுடன் வசிக்க விரும்பும் நளினி! [Wednesday, 2014-02-19 20:44:25] ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடம் சிறையில் இருக்கும் நளினி, இன்னும் சில தினங்களில் விடுதலை ஆகிறார். தற்போது வேலூர் சிறையில் இருக்கும் அவர், இந்த விடுதலை ஆகப்போகும் செய்தியை கேள்விப்பட்டதும், இனிப்புகள் வாங்கி, சக சிறைக்கைதிகளும் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார். விடுதலைக்கு பின் நளினி லண்டன் சென்று, தனது மகளுடன் தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இத்தகவலை நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=103997&category=TamilNews&language=tamil

  20. இலங்கை வருமாறு பான் கீ மூனுக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது: [Thursday, 2014-02-20 11:49:13] எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும அண்மையில் பான் கீ மூனை சந்தித்த போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் பேரவை அமர்வுகளில் பங்கேற்குமாறு அமைச்சர் அழப்பெரும, பான் கீ மூனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமர்வுகளில் பான் கீ மூன் பங்கேற்பாரா அல்லது தனது பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பாரா என்பது இன்னமும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. இளைஞர…

  21. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் - கியூபா 20 பெப்ரவரி 2014 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் என கியூபா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை முறியடிக்கும் நோக்கில் இலங்கை அமைச்சர்களும் ராஜதந்திரிகளும் நட்பு நாடுகள் நோக்கி படையெடுத்துள்ளனர். அந்த வகையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தற்போது கியூபாவிற்கு விஜயம் செய்துள்ளார். கியூபா விஜயம் செய்துள்ள அமைச்சர் சுசிலிடம், அந்நாட்டு துணை ஜனாதிபதி மிகியுல் டயாஸ் கானெல் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம்…

  22. ஏழுபேரையும் விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை: நீதியரசர் சந்துரு [Thursday, 2014-02-20 22:46:20] குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432 மற்றும் 433 ஆகியவை கைதி ஒருவருக்குத் தண்டனைக் குறைப்பு செய்து முன்னரே விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 435 இன் படி ஒருசில குற்றங்களில் தண்டனை பெற்றோருக்கு தண்டனைக் குறைப்பு செய்யும்போது மத்திய அரசோடு கலந்துபேசி செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் உட்பிரிவு 2 “(2) No order of suspension, remission or commutation of sentences passed by the State Government in relation to a person, who has been convicted of offences, some of which relate to matters to which the executive powe…

  23. மாடு வெட்டுவதை நாட்டில் தடை செய்யவேண்டும் என்ற தமது கோரிக்கைக்கு இன்று 18 ஆம் திகதிக்குள் பதில் கிடைக்காவிட்டால் தாம் எடுக்கப் போகும் நடவடிக்கைக்கு நாட்டின் ஜனாதிபதியும் அரசாங்கமும் தான் முழு பொறுப்பு என்று கடும்போக்கு சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது . மாடு வெட்டும் பிரச்சினைக்கு இன்று தீர்வு வழங்கப்பட வேண்டுமென சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தெரிவித்துள்ளார். மாடு வெட்டுக்கு எதிராக பௌத்த பிக்கு தீக்குளித்தால் அதன் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.மாடு வெட்டு சர்ச்சைக்கு தீர்வு காண எட்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உணர்வுகளை புரிந்து கொள்ளும் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி. கொழும்பு நோக்கிய…

  24. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்பட 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து அளிக்கப்பட்டத் தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்ததன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதாக நீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன், மூவரும் 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுவி…

  25. சேனல் 4 ன் புதிய காணொளி வரும் பிப் 22 சனிக்கிழமை அன்று சென்னையில் வெளியீடு: [Thursday, 2014-02-20 11:42:50] சேனல் 4 ன் சிறீலங்காவின் இனபடுகொலை ஆதாரங்கள் அடங்கிய புதிய காணொளி வரும் பிப் 22 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் வெளியிட இருக்கிறோம். இந்த நிகழ்வில் கல்லம் மெக்ரே அவர்கள் 45 நிமிடங்கள் இணையம் மூலம் நேரடியாக நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. முதலில் பதிவு செய்யும் 250 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உங்கள் இருக்குயை பதிவு செய்ய tamilyouthsandstuden­ts@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். http://www.seithy.com/brei…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.