Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவிலுள்ள தமிழ் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடினார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.பிரித்தானிய தமிழ் போரம், குளோபல் தமிழ் போரம் உள்ளிட்ட பல தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதற்கு முன் கமரூன் இலங்கைத் தமிழர் பிரச்சினை, இறுதிக்கட்ட போர், மனித உரிமைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்கள் குறித்து தமிழ் அம…

  2. கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசாவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் முதல் வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான அமெரிக்க குழுவினர், காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர். இதன்போது, பூசா தடுப்பு முகாமுடன் இணைந்திருந்த சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றுக்குள் அவர்கள் திடீரென உள்நுழைந்து – தேடுதல் நடத்தும்…

    • 2 replies
    • 585 views
  3. -க.கிஷாந்தன் சிவனொளிபாதலையில் பொருத்தப்பட்டுள்ள காண்டாமணி மற்றும் தூண்டாவிளக்கு ஆகியன பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (07) திறந்து வைக்கப்பட்டன. காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது மலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்துகொண்டிருந்த ஜனாதிபதி, அதிலிருந்தவாரே சிவனொளிபாதமலைக்கு மலர்களைத் தூவி தனது வணக்கத்தைச் செலுத்தினார். சிவனொளிபாதமலையில் 8,613 கிலோ நிறையுள்ள துண்டாவிளக்கும் 9,000 கிலோ நிறையுள்ள காண்டாமணியும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைத் திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத நிலையில், சிவனொளிபாதமலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்தவாறு மலர்களைத் தூவி வணக்கம் …

  4. "ஈகைப்பேரொளி" முருகதாசனின் 5ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு: - பிரித்தானியா [saturday, 2014-02-08 20:34:14] சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி வீரமரணமடைந்த "ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக பிரித்தானியாவில் அவரின் வித்துடலை விதைத்த விதைகுழி அமைந்திருக்கும் பகுதியில் கல்லறைவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. "ஈகப்பேரொளி" முருகதாசன் வீரமரணமடைந்த நாளின் மூன்றாம் ஆண்டான எதிர்வரும் 12.02.2014 புதன்கிழமை மதியம் 12:00 மணி முதல் மதியம் 01:00 மணிவரை இந்த கல்லறை வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. லண்டன் Hendon Cemetery & Crematorium, London, NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள " ஈகைப்பேரொ…

  5. இறுதிப்போரில் தனியாகப் பிரிந்த மூன்று சிறுவர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பெற்றோருடன் இணைப்பு! [saturday, 2014-02-08 18:29:01] இறுதிப் போரில் பெற்றோரை பிரிந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வந்த மூன்று சிறுவர்கள் இன்று பெற்றோர்களுடன் மீளவும் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். இறுதிப் போரின் போது பெற்றோர்களைப் பிரிந்திருந்து நலன்புரி முகாம்களிலிருந்து சிறுவர் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டு உறவினர்களின் தொடர்புகளை இழந்திருந்த சிறுவர்கள் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளால் தரவுகள் பெறப்பட்டு அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று பெற்றோர்களிடம் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியினால் கையளிக்கப்பட்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=103…

  6. வடக்கில் பணப்­பு­ழக்­கம் அதி­க­ரித்­த­மையால் பண்­பாட்டு முறைகள் ஆட்டம் கண்­டுள்­ளன: - முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் [saturday, 2014-02-08 21:17:37] அர­சியல் பிரச்­சி­னை­களால் எமது மக்கள் பெரு­வா­ரி­யாக பிற­நா­டு­களில் தஞ்சம் புகுந்­துள்­ளனர். இதனால் இங்கு வசிக்­கின்­ற­வர்­க­ளிடம் திடீ­ரெனப் பணப்­பு­ழக்கம் அதி­க­ரித்­துள்­ளது. எமது மக்­க­ளிடம் புதிய கலா­சாரம் புகுந்­துள்­ளது. இதனால் எமது மக்­க­ளி­டையே இருந்து வந்த கடின உழைப்பு முறையும் சிக்­கன மற்றும் பண்­பாட்டு முறை­களும் ஆட்டம் கண்­டுள்­ளன என வடக்கு மாகாண சபையின் முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தி­லுள்ள வரணி மத்­திய கல்­லூ­ரியின் அறு­ப­தா­வ…

  7. சீனாவிடம் ஆதரவு கோரி பீரிசை அனுப்புகிறது அரசாங்கம்! [saturday, 2014-02-08 08:31:40] ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் சீனாவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதரவினை திரட்டி வருகின்றது. அந்த முயற்சியின் ஓர் கட்டமாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் 10ம் திகதி முதல் 13ம் திகதி வரையில் அமைச்சர் பீரிஸ் சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விச…

  8. பீரிசின் பதவிக்கு வருகிறது ஆபத்து! – போர்க்கொடி தூக்குகிறது ராவண பலய. [saturday, 2014-02-08 09:01:51] வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை பதவியிலிருந்து விலக்கி, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்குமாறு ராவண பலய அமைப்பு கோரியுள்ளது. இதுதொடர்பாக ராவண பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்ததிஸ்ஸ தேரர் கருத்து வெளியிடுகையில், வெளிவிவகார அமைச்சில் எந்தவொரு கொள்கையும், சரியான திட்டங்களும் இல்லை. ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகச் சாட்சியமளிப்பவர்கள், சூழ்ச்சியாளர்கள் இந்த நாட்டில் இருப்பதற்கு எவ்வாறு இடமளிக்க முடியும். சர்வதேச அழுத்தங்களுக்கு ஆதரவாக எங்கள் நாட்டுத் தூதுவர்கள் சிலர் இருப்பது பெரும் தலையிடியாக இருக்கிறது. பி…

  9. அரசியல் உரிமைகளை கொச்சைப்படுத்தும் கலாச்சார செயற்பாடுகள்? நவீன தகவல் தொழில்நுட்பங்களின் வருகைதான் இளைஞர்களின் தவறான செயற்பாடுகளுக்கு காரணம் என்று கூறமுடியாது. மேற்குலக நாடுகளில் அது அறிவு வளர்ச்சிக்கு பன்படுகின்றது. தூனீசியாவில் சா்வாதிகாரத்தை நீக்க சனநாயகத்தை நிலைநிறுத்த தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியே புரட்சி நடந்தது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக இடம்பெறும் சமூகச் சீரழிவுகள் மனவேதனை தருகின்றன. வாள்வெட்டு அடிதடி, காதல் தோல்வியால் தற்கொலை, சினீமா நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்தல் என்று முறைகேடான செயற்பாடுகளில் இளைஞர்கள், யுவதிகள் ஈடுபடுகின்றனர். கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்ற யாழ்ப்பாணத்தில் இப்படியும் சீரழிவா என்ற…

  10. மாந்தை மேற்குப் பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்தில் கொண்டு மன்னார் தனியார் போக்குவரத்துச்சங்கம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து சேவையினை மேற்கொண்டு வருகின்றது. மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் இடம் பெற்ற போர் நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பின்னர் 2010ஆம் ஆண்டு மீள் குடியேறியுள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு வருட காலங்களாக அப்பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெருளாதார நிலையினை கருத்திற்கொண்டு மன்னார் தனியார் போக்குவரத்து துறையினர் கட்டணங்கள் அறவிடாமல் மாணவர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்குகின்றனர். சேவா கிராமம், மூன்றாம்பிட்டி, தேவன் பிட்டி இலுப்பைக்கடவை ஆகிய கிராமங்கள் ஒவ்வொன்றும் மன்னார் ஏ32 பிரதான வீதியிலிர…

  11. தமிழ் மொழியை அமெரிக்கர்களுக்கும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் சார்ல்ஸ்டன் ‘பனை நிலம் தமிழ்ச் சங்கத்தினர்’ முயற்சி எடுத்து வருகிறார்கள். தமிழ் வரலாற்றில் மிக முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் உட்பட இந்தியர்களுக்குத் தாய் மொழியும், ஆங்கிலமும் தெரிந்திருக்கும். அதே போல் பெரும்பாலான இலத்தீன் இனத்தவர்கள் ஸ்பானிசும் ஆங்கிலமும் அறிந்திருப்பார்கள். சீனர்களுக்கு சீன மொழியும் ஆங்கிலமும் தெரியும். ஆனால் அமெரிக்கர்களை ஒற்றை மொழியினர் (uniligual) என்று பரவலாக அழைப்பதுண்டு. அதாவது அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். சமீப காலமாக பெரும்பாலான பாடசாலைகளில் இரட்டை மொழி என்ற அடிப்படையில் ஸ்பானிஷ் மொழியும் கற்றுத் தரப்படுகிறது. தவிர தனிப்பட்ட …

  12. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், மூன்றாவது தீர்மானம் கொண்டு வருவதற்குத் தயாராகி வரும் அமெரிக்கா, மற்றொரு மூத்த அதிகாரியை விரைவில் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக, கொழும்புத் தகவல் ஒன்று கூறுகிறது. ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னதாக, இந்த அமெரிக்க அதிகாரி கொழும்பு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க நீதித் திணைக்களத்தின் மூத்த அதிகாரியே, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கடந்த ஆறு வாரங்களுக்குள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ராப், மற்றும், தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் ஆகியோர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்தவாரம், கொழு…

  13. ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவிலேயே தொலைபேசியூடாக சிங்கள மொழியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் செயற்பட கூடாது என்றும் அவ்வாறு செயற்பட்டால் படுகொலை செய்யப்படுவதாகவும் மறுமுனையிலிருந்து சிங்கள மொழியில் பேசிய இனந்தெரியாத நபர் அச்சுறுத்தலும் மிரட்டலும் விடுக்கப்பட்டதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை கடுமையான கெட்டவார்த்தைகளிலும் திட்டிதீர்த்த மேற்படி நபர் உடனடியாக அழைப்பை துண்டித்ததாகவும் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முற…

  14. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்குப் பக்கபலமாக இருக்குமாறு சிறிலங்காவின் இரு பிரதான முதலீட்டாளர்களான ஜப்பான், மற்றும் தென்கொரியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராஜதந்திர வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஆசிய, பசுபிக் பிராந்திய குழுவில் சிறிலங்காவின் நிலையை மேலும் பலவீனப்படுத்துவதில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஜப்பான் நடுநிலை வகித்தது. தென்கொரியா ஆதரவு அளித்தது. மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு …

  15. தலையாளி ஞான வைரவர் ஆலய மடத்தில் இருந்து ஆயுதங்களுடன் கூடிய இளைஞர் குழுவினர் யாழ்ப்பாணம் பொலிசாரினால் நேற்று இரவு ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் . குறிப்பிட்ட குழுவினர் கொழும்பில் வாழும் ஒருவரினால் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரை பயமுறுத்தி இந்தக்குழுவினர் ஆலய மடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்கள் . இவர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக காணப்பட்ட போதிலும் குறிப்பிட்டவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக காட்டப்பட்ட நிலையில் இந்தப் பகுதயில் உள்ள மக்கள் பயம் கலந்த நிலையில் எதனையும் செய்ய முடியாத நிலையில் காணப்பட்டார்கள் . குறிப்பிட்ட ஆலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் இரு நூறு மீற்றர் தூரத்தி…

  16. சர்வாதிகாரிகளான முபாரக் , சதாம் , முஷரப் போன்றோருக்கு நடந்ததை மஹிந்தவும் உணர்ந்துகொள்ள வேண்டும் . அரசியல் பிரச்சினைகளால் எமது மக்கள் பெருவாரியாக பிறநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் . இதனால் இங்கு வசிக்கின்றவர்களிடம் திடீரெனப் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது . எமது மக்களிடம் புதிய கலாசாரம் புகுந்துள்ளது . இதனால் எமது மக்களிடையே இருந்து வந்த கடின உழைப்பு முறையும் சிக்கன மற்றும் பண்பாட்டு முறைகளும் ஆட்டம் கண்டுள்ளன என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார் . தென்மராட்சி பிரதேசத்திலுள்ள வரணி மத்திய கல்லூரியின் அறுபதாவது ஆண்டு விழா பூர்த்தி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இக் கல்லூரி மண்டபத்தில் நேற்றுக்காலை 9 மணிக்கு நடைபெற்றபொழுது நிகழ்வில் பிரதம…

  17. (ஜே.ஜி.ஸ்டீபன் - ப.பன்னீர்செல்வம்) 1971ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இளைஞர்கள் விரக்தியடைந்ததன் காரணமாக ஜே.வி.பி. கலவரம் உருவானது. 30 வருடங்களுக்கு முன்னர் வடக்கைச் சேர்ந்த இளைஞர்கள் விரக்தியடைந்ததையடுத்து ஆயுதக்கலவரம் தோற்றுவிக்கப்பட்டது. இதுபோன்ற விரக்திநிலை ஒன்று இன்று மலையக இளைஞர்களிடையே ஏற்பட்டு வருகின்றது. இதனை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்று நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் ஆற்றிய உரையின் முழு விபரம் வருமாறு, மூவின மக்களும் சேர்ந்து வாழ வேண்டும். தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற பிரிவினைவாதங்கள் தேவையில்லை. அநாவசியமான பிரிவினைவாதங்களை அகற்றி அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும…

  18. இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு எத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற அதிகாரத்தைத்தான் இலங்கையிலும் எதிர்பார்க்கிறோம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். சென்னை அடையாறிலுள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் இடம்பெற்ற சிறப்பு சொற்பொழிவு வைபவத்தில் கலந்துகொண்டு 'இலங்கையின் இன்றைய போக்கு" என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்றதும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். இதற்காக 16 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்தார். அந்தக் குழு சாத்தியமான தீர்வு திட்டங்களையும் உருவாக்கிய…

  19. சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர் என சர்வதேச ஊடகமான அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியாக 2009 மார்ச் மாதம் வடக்கில் தன்னார்வ தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கிய கஞ்சியைப் பெற்றுக் கொள்வதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர். (அந்ததொண்டு நிறுவனத்திற்கும் இராணுவத்திற்கும் மறைமுகத் தொடர்புள்ளதாக கருதப்படுகிறது) அந்த நேரத்தில் குண்டு வெடிப்புக்கள் மற்றும் செல் தாக்குதல்கள் இடம்பெற்றன. உணவுக்காக அப்பாவித் தமிழ்மக்கள் வரிசையில் நிற்கும்போது, செல் தாக்குதல் இடம்பெற்றது. அதன்போது, வரிசையில் நின்ற பொதுமக்கள் அநேகமானோர் உயிரிழந்தன…

  20. உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேசம் தலையிடக் காரணம் அரசாங்கமே! – ஐதேக குற்றச்சாட்டு. [saturday, 2014-02-08 08:23:42] நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஏன் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் மந்தகதியில் அமுல்படுத்தப்படுவது ஏன் என்று ஐதேகவின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையீடு செய்யக் கூடிய பின்னணியை அரசாங்கமே உருவாக்கியுள்ளது என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார். இலங்கை விவகாரத்தில் உலக நாடுகள் தலையீடு செய்வதனை தாம் விரும்பவில்லை எனவும் அவர் சு…

  21. 14 வயதில் கைதாகி - பிணையில் விடுதலையாகி - 24 வருடங்களின் பின் 38ஆவது வயதில் மரணதண்டனை:- 07 பெப்ரவரி 2014 புலிகளின் சிறுவர் போராளிக்கு இலங்கையின் நீதித் துறை விதித்த தண்டனை- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளியாக இருந்த வேளையில் கைதான நபரொருவருக்கு 24 வருடங்களின் பின்னதாக இன்று திருகோணமலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை தீர்;ப்பளித்துள்ளது. திருகோணமலை ஆலங்கேணி பகுதியை சேர்ந்தவரான தங்கராசா 38 வயதுடைய சிவகந்தராசா என்பவருக்;கே இன்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1990 ம் ஆண்டில் திருகோணமலை கடற்பரப்பில் ஆறு பொதுமக்களினை விடுதலைப் புலிகளுடன் இணைந்து வெட்டிக்கொலை செய்ததாக இவர் மீது நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. சீனன் குடா கடற்படை…

  22. பொறுப்புக்கூறும் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் அதிக அழுத்தங்களை கொடுத்தால், அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடந்த தென்னாபிரிக்கத் தூதுவருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அனைத்துலக சமூகம் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கும், அனைத்து இன மக்களினதும் மனிதஉரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகிறது. உள்ளக செயல்முறைகளின் மூலம் உண்மையைக் கண்டறிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆர்வமாக இருக்கிறார். பொறுப்புக்கூறல் விவகாரத்தில், சிறிலங்கா மீது கொடுக்கப்படும் மிகையான அழுத…

    • 11 replies
    • 772 views
  23. இலங்கையைப் காப்பாற்றுவதில் அவுஸ்ரேலியா உறுதி! – சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு. [Thursday, 2014-02-06 07:49:24] இலங்கையில் நடந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா முன்வைக்க உள்ள இந்த தீர்மானத்துக்கு பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கவுள்ளன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து மூன்றாது தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. …

  24. மகிந்தவின் வாக்குறுதிகளை உலகம் நம்பக்கூடாது! - சர்வதேச விசாரணையே ஒரேவழி!! - சுமந்திரன் கோரிக்கை!!! சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று இனிமேலும் நம்புவதை சர்வதேச சமூகம் உடன் கைவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவின் 66வது சுதந்திரதின உரையில், சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிப்படையாகக் கூறியுள்ளார். எனவே, சிறிலங்கா ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று இனியும் சர்வதேச சமூகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 'சர…

  25. இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வதால் விவசாயிகள் பாதிப்படைவது தொடர்பில், விரைவில் நல்லதொரு தீர்வை வழங்குவதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட விவசாய சம்மேளனங்களின் தலைவர்களை நேற்றுமுன்தினம் புதன்கிழமை யாழ்.இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, பலாலி கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது விவசாயிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெரிவித்தனர். இராணுவத்தினர் தமது விவசாய உற்பத்திப் பொருள்களைச் சந்தைகளில் கொண்டு வந்து விற்பனை செய்வதால், தமக்குப் பெரும் நட்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தளபதியிடம் சுட்டிக்காட்டினர். இதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, இராணுவத்துக்குத் தேவையான மரக்கறிகளில் 20 ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.