Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் புதைகுழியில் உடல்கள் நீண்ட காலத்திற்கு முன் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் : அஜித் ரோஹண மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கும் மனித உடல்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும், இதில் புதைக்கப்பட்டிருப்போர் கொடிய முறையில் இறந்திருக்க வேண்டும். எனினும், இவ் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இன்று மன்னார் புதைகுழி சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. எனினும், தனிப்பட்ட பலரின் கருத்துகளினால் இவை வேறு விதமான வகையி…

    • 4 replies
    • 748 views
  2. ஜே.வி.பி தொடர்ந்தும் வலுவான கட்சியாகவே திகழ்வதாகத் தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா. தென் மற்றும் மேல் மாகாணசபைகளில் போட்டியிடும் ஜேவிபி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வில் பேசிய அவர், அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்தும் ஜே.வி.பி வலுவான மாற்றுக்கட்சியாக காணப்படுகின்றது. எமது கட்சியை மூன்றாம் சக்தியாக நாம் கருதவில்லை, மாற்று அரசியல் சக்தியாகவே கருதுகிறோம். மாகாணசபைத் தேர்தலில் எமது கட்சி வெற்றியீட்டும். இதற்காக எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=102950&category=TamilNews&language=tamil

  3. வெளிநாட்டுக் கடற்படையினருக்கு இலங்கைக் கடற்படை திருகோணமலையில் பயிற்சிகளை வழங்கி வருகிறது. பாகிஸ்தான், சீனா, மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 16 கடற்படையினர் இந்தப் பயிற்சியைப் பெற்று வருகின்றனர். இந்த விசேட பயிற்சி மூன்று மாதங்களுக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விசேட பயிற்சியில் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த எட்டு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=102948&category=TamilNews&language=tamil

  4. செனல்4 ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் சில சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், செனல்4 ஊடகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமைகளின் போது வழக்குத் தொடர்வதனை விடவும் மிகவும் காத்திரமான சில தந்திரோபாயங்களின் மூலம், பதிலளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நா…

  5. ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தாம் பங்கேற்கப் போவதில்லை என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புமிக்க அதிகாரி ஒருவர், தன்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ள அனந்தி சசிதரன், இந்த நிலையில், தமது உயிருக்கோ பாதுகாப்புக்கோ உத்தரவாதம் இல்லை என்றும் கூறியுள்ளார். …

  6. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் சாட்டில், அவரைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இரா.சம்பந்தன் இன்று 81வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளார். சிறிலங்கா அதிபர் மகிநத ராஜபக்ச இன்று தொலைபேசி மூலம் இரா.சம்பந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அவசியம் சந்தித்துப் பேச வேண்டியுள்ளதாகவும் அழைப்பு விடுத்துள்ளார். சம்பந்தன் நாடு திரும்பியதும் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு இடம்பெறும் என்றும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம…

  7. ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகிறார். எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஹோலியங் சூ அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் அபிவிருத்தித் திட்டங்களின் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். குறிப்பாக 2013 தொடக்கம் 2017 ஐ.நா. அபிவிருத்தி உதவி கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் முதல் வருடத்தில் அடையப்பெற்றுள்ள முன்னேற்றம் தொடர்பாகவும் ஆராயவுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ, இலங்கை விஜயத்தின்போது வடமாகாணத்தின் மாவட்டங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் அங்கு அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து…

  8. கிளிநொச்சி முறிகண்டி அக்கராயன் வீதியில் அமைதிபுரம் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த வாரம் குறித்த காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொது மக்களால் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்த பின்னர் மேலதிக விசாரணைகளையும் மேற்கெண்டுவந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டாம் திகதி குறித்த சடலம் கேகாலை இக்கிரியகல இலக்கம் 111, பாடசாலை வீதியை சேர்ந்த டி.டபிள்யு.ஜி.ரஞ்சித் பண்டார மாரப்பன (வயது 31) எனும் ஒப்பந்தக்காரருடையது என அவரது மாமனார் அபேய சாந்தகுமார அடையாளம் காட்டியுள்…

  9. சிறீலங்காவின் 66ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய சுயதொழில் நிலையத்தின் உரிமையாளரான அராலி தெற்கை சேர்ந்த 56 வயதான தம்பிப்பிள்ளை மகேந்திரராசா மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் படுகாயமடைந்த உரிமையாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.சத்துருசிங்க தெரிவித்தார். குறித்த நபர் வீட்டில் இருந்தபோது வந்த இனந்தெரியாத நபர்கள் “ஏன் தேசியக் கொடியை ஏற்றினாய்”, “நீ ஆமி, பொலிஸுடன் சேர்ந்தால் பெரிய கொம்பனா?” என கேட்டு தன்னை அடித்ததாக குறித்தநபர் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்த சம்…

  10. எழு தமிழா ! இனி எங்கள் காலம்! கழுத்தை இறுக்கும் சர்வதேச அழுத்தங்களினால் மூச்சுத் திணறத் தொடங்கியிருக்கிறது சிறிலங்கா அரசு. ஐ.நா. மனிதவுரிமைகள் அவையில், சிறிலங்கா அரசுக்கு எதிரான மூன்றாவது தீர்மானம் அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்படுவது உறுதிசெய்யப்பட்டு சிறிலங்கா அரசுக்கும் அறிவிக்கப்பட்டுவிட்டது. சர்வதேச போர்க் களத்தில் தமிழர்களை எதிர் கொள்ள, சர்வதேச ஆதரவினைத் தமக்கு சார்பாகத் திரட்ட, நாடுநாடாக அலைந்து கொண்டிருக்கிறது சிங்கள தேசம். ஐ.நா. அவையில் இந்தத் தடவையும் என்ன குண்டு வெடிக்குமோ? என அலறிக்கொண்டிருக்கிறார் அரசு தலைவர். இந்நிலையில் 66 ஆவது சுதந்திரதினம் என்பது சிறிலங்கா அரசுக்கு உண்மையான சுதந்திரதினமாக அமையுமா என்பது கேள்விக்குறியே! பிரித்தானிய…

  11. எல்லாரும் இலங்கைக்கொடியை கட்டித் தொங்க விட்டிருக்கினம் நாங்களும் தொங்கவிட்டிருக்கிறம் இலங்கை சுதந்திரம் அடைந்து இன்றுடன் 66ஆவது ஆண்டு. நாடளாவிய ரீதியில் கொடியேற்றி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=866342622704620403

  12. ஐ.நா மனிதஉரிமை பேரவையில் இலங்கை மீது சுமத்தப்படும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பெரும் அநீதி என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலையில் நடைபெற்ற 66வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வர முயற்சிக்கும் யுத்த குற்றச்சாட்டுகள் சமாதானத்தை விரும்பாதவர்களின் செயல்பாடுகள் என்றும், நாட்டின் பிரிவினைவாதத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரலை வைத்திருப்பவர்களினால் வழங்கப்படும் தகவல்களை வைத்தே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்றும் கூறினார். எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பிற மனித உரிம…

  13. இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு யாழ். மாவட்டமும் தாராகி வருகின்றதனைக் காணக்கூடியதாக உள்ளது. இலங்கை அந்நியர் ஆட்சியின் கீழிலிருந்து விடுபட்டு நாளையுடன் 66 வருடங்கள் ஆகின்றது. அதன்படி இன்றையதினத்தில் இருந்து நாளைய சுதந்திரதினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கான கடைகளில் இலங்கைக்கொடி விற்பனை செய்யப்படுவதுடன் அவற்றை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறியகொடி எனின் 25 ரூபாவுக்கும் பெரிய கொடி எனின் 100 ரூபா மற்றும் அதற்கு மேலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன் சாரதிகள் தங்களது வாகனங்களின் முகப்பில் இலங்கைக் கொடியை கட்டியுள்ளதுடன் வர்த்தக நிலையங்களிலும் மற்றும் திணைக்களங்களிலும் இன்றைய தினமே இலங்கைக்கொடி பறக்கவிட…

  14. தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி புரளியைக் கிளப்பினார் என்ற சந்தேகத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சுவீடனில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று டுபாயிலிருந்து சுவீடன் நோக்கிப் பயணம் செய்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தின் விமானிகள் அறைக்குள் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறியவாறு நுழைய முயன்றுள்ள நிலையில் இவர், மடக்கிப் பிடிக்கப்பட்டு; வயர்களால் கைகள் கட்டப்பட்டு தரையில் கிடத்தப்பட்ட நிலையில் குறித்த விமானம் ஆலண்ட் விமான நிலையத்தை சென்றடைந்தது. பின்னர் சுவீடனின் ஸ்டொக்கொம் அர்லான்டா விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட…

  15. மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு தம்புள்ள பஸ் நிறுத்துமிடத்தில் தங்களுக்கு வேண்டிய விதத்தில் இருப்பதற்கு இடமளித்ததாக கூறப்படும் காதல் பஸ் தம்புள்ளைக்கு மீண்டும் வருவதற்கு இடமளிக்கமாட்டேன் என்றும் அந்த பஸ் திரும்பிவந்தால் அடித்து நொறுக்குவேன் என்று அமைச்சர் ஜனக்க பண்டா தென்னக்கோன் தெரிவித்தார். கலேவலயில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த பஸ்ஸின் வீதி அனுமதிப்பத்திரத்தையும் இரத்துசெய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். குறித்த பஸ்ஸில் தங்களுக்கு விரும்பிய விதத்தில் இருப்பதற்காக மாணவர்களிடமிருந்து ஒரு மணிநேரத்திற்கு 300 ரூபா அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த பஸ்ஸிலிருந்து கைது செய்யப்பட்ட ம…

  16. GTBC.FMன் விழுதுகள் நிகழ்ச்சியில் தர்மலிங்கம் சித்தார்த்தன்:- 1) இலங்கையின் அரசியல் அமைப்பு சொல்கிறது மாகாண சபையின் ஆளுநர் நிறைவேற்று அதிகாரமுடையவர். 2) மாகாண சபையை ஒரு தீர்வாக நாம் கருதவில்லை - மாகாண சபை இனப்பிரச்சனைக்கான தீர்வும் மையாது என்பதில் தெளிவாக உள்ளோம். 3) ஒரு அரசியல் தீர்வு என்பது அரசியல் மைப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைக் கொண்டு வரமுடியும். 4) TNA அரசாங்கத்துடன் பேசும் போது தரவுகள் வடிவிலே தீர்வு குறித்து கொடுத்திருக்கிறோம். 5) 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டபோதே விடுதலை இயக்கங்கள் இதனை தீர்வாக ஏற்கவில்லை. 6) "மாகாண சபை முறைமையை இந்தியப் பிரதமர் கொண்டுவந்த போது நடத்திய முக்கிய கூட்டத்தில் …

  17. இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட இந்த சம்பவம் ஏதுவாகக் கூடுமென அச்சம் அமெரிக்காவின் உயர் ராஜதந்திரி ஒருவருக்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட இந்த சம்பவம் ஏதுவாகக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மகளீர் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி கெதரீன் ரசலுக்கே இவ்வாறு வீசா மறுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10-11ம் திகதிகளில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கெதரீன் ரசலுக்கு இலங்கை அதிகாரிகள் வீசா வழங்க மறுத்துள்ளதாக அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பெண்களை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதயிhக மேம்படுத்தி …

  18. போருக்குப் பிந்திய வடமாகாணத்தின் விவசாய நடவடிக்கைகளில் மத்திய அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் அதிக ஈடுபாட்டைக் காட்டி வருகின்றன. வடக்கின் விவசாயத்தை மீளக்கட்டியெழுப்புவதில் வெளியாரின் முயற்சிகளை நாம் வரவேற்கும் அதேசமயம், இவர்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டியும் உள்ளது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (31.01.2014) முழங்காவில் பொதுமண்டபத்தில் சர்வதேசத் தொழிலாளர் நிறுவனத்தின் அனுசரணையின்கீழ் பப்பாசிப் பழங்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் நல்லினப் பப்பாசிக் கன்றுகளை வழங்கும் வைபவம் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வரா…

  19. டெல்லி: லட்சக்கணக்கில் குழந்தைகளும், வயது வந்தோரும் இன்னும் படிப்பறிவின்றி இருக்கும் தற்போதைய சூழலில், 2015 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் கல்வி என்ற தனது இலக்கிலிருந்து இவ்வுலகம் நழுவக்கூடிய சாத்தியத்தை படைசாற்றுவது போல் இருப்பதாக யுனைட்டெட் நேஷன்ஸ் (யுஎன்) அமைப்பு ஒன்று கூறியுள்ளது. யுனைட்டெட் நேஷன்ஸ் அமைப்பு உலகம் முழுவதும் உள்ள ஒரு ஆய்வை நடத்தியது. இதில் பல ஆய்வில் பல முக்கிய காரணிகளை மையமாக கொண்டு துவங்கப்பட்டது, இதன் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது என் இந்த அமைப்பு தெரிவித்தது. இதில் படிப்பறிவில்லாத மக்கள் எந்த நாட்டில் அதிகமுள்ளனர் என்ற ஆய்வும் அடங்கும். உலகில் இந்தியாவில் தான் படிப்பறிவில்லாத முதியோர்கள் அதிக அளவில் உள்ளனர், அதாவது உலகெங்கிலும் இவ்வாறு படிப்பறிவின்ற…

    • 9 replies
    • 1.1k views
  20. பேரறிவாளன் - சாந்தன் - முருகன் தூக்கில் இருந்து மீள்வார்களா? உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? டில்லி வழக்கறிஞர் பிரபு இராமசுப்ரமணியம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இன்றைய விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி இருந்தனர். ஆனால் இந்த கருணை மனு 11 ஆண்டு கால தாமதத்துக்குப் பின்னர் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தி…

  21. வட மாகாணத்தின் மிக உயரமான 25 அடி கொண்ட சிவபெருமான் சிலை யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் – சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இத்திருவுருவ சிலை தமிழர் முறைப்படி நேற்று ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டு, அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. யோகர் சுவாமிகளின் சிவ தொண்டர் அமைப்பை சேர்ந்தவர்கள் இவற்றை முன்னின்று மேற்கொண்டு உள்ளார்கள். சம்புநாதர் ஆலயத்தை சுற்ற உள்ள ஆலயங்களில் இருந்து சிவனடியார்களால் ஓம் நம சிவாய என்கிற மந்திர பாராயணத்துடன், பூரண கும்பங்கள் கொண்டு வரப்பட்டு, சம்புநாதர் ஈஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இலங்கையிலேயே முதன்முதலாக தமிழ் முறைப்படி திருக்குடமுழுக்கு இடம்பெற்று உள்ள கோவில் இதுவே ஆகும். http://www.e-jaffna.com/archives/22504

    • 14 replies
    • 5.1k views
  22. சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டிக்குமாறு யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை தாயகத்திலும் தமிழகத்திலும் பன்னாடுகளிலும் உள்ள தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறிலங்காவின் சுதந்திர தினமானது சிங்கள மக்களுக்கு மட்டுமானது. தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை. விரைவில் எங்களுக்கு சுதந்திரம் வழங்குவதற்கு பன்னாட்டு அரசுகள் ஆவன செய்யவேண்டும் என்று இன்றைய கரிநாள் மூலமாக அனைத்து தமிழ் மக்களும் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என்றும் யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்களைக் கொன்றொழித்து அடிமைகொள்ளத் துடிக்கின்ற சிறிலங்காவின் சுதந்திர தினமாக இன்று செவ்வாய்க்கிழமையை தமிழ் மக்கள் கரிநாளாக அனுஸ்டிக்க வேண்டும். தாயகத்…

  23. மட்டக்களப்பில் போர்க்காலத்தில் காணாமல்போன முஸ்லிம்களின் புதைகுழிகள் தொடர்பாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக காணாமல்போனோர் தொடர்பாக ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.காத்தான்குடி பிரதேச பிரதிநிதிகள் குழு, காணாமல்போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி. பரணகமவை ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடியது. குறிப்பாக, காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பாக முழுமையான அறிக்கையொன்று தங்களுக்கு வழங்கப்பட வேண்டும், காணாமல்போன முஸ்லிம்களின் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரின் சமய முறைப்படி அடக்கம் செய்தல், குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குதல் போன்றன தொடர்பாக இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. …

  24. ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள தீர்மானத்திற்கு எதிராக பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிக்க பல நாடுகளின் ஆதரவு திரட்டப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பல நாடுகளுக்கு விஜயம் செய்து, ஆதரவு திரட்டியுள்ளேன். சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள் குறிதது விளக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தீர்மானத்தை தோற்கடிக்கும் நோக்கில் இலங்கைக்கு ஆதரவளிக்க சில நாடுகள் ஏற்கனவே உறுதியளித்துள்ளன.…

  25. சிறீலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடும் சிங்கள மக்களுக்கு தமிழீழ மகனின் கடிதம், அறுபத்திஆறாவது சுதந்திரதின கொண்டாட்டங்களில் மூழ்கிப்போய் இருக்கும் சிங்கள தேசத்தவனே உன் பக்கத்து தேசத்தவனின் மடல் இது. வாழேந்திய சிங்கக் கொடியை தூக்கிஆட்டுவதில் காட்டும் களிப்பை கொஞ்சம்குறைத்து இந்த மடலை படிப்பாய் என்றே நம்புகிறேன். ஜெயவேவா சத்ததையும் கொஞ்சம் குறை..அப்போதுதான் எல்லாம் புரியும் உனக்கு. உயிரினங்கள் அனைத்தும் பிரியமான- மிகமிக விருப்பமான ஒரு சொல் இருக்குமாக இருந்தால் அதுதான் “சுதந்திரம்” விடுதலை” என்பன. உன் தேசசுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருப்பாய். காலிமுகக் கடற்கரையில் உன் முப்படைகளையும் கொண்டு நிலமதிர அணிவகுப்பிடு. கறுப்புகண்ணாடியும் சிவப்பு தோள் துண்டும் அணிந்த உன் தேச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.