Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள கொழும்பு செல்லும் அதன் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு கடுமையான செய்தியை கொண்டு செல்லப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமானது மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் திட்டவட்டமான முன்னேற்றத்தைக் காண வேண்டுமென்ற செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கு எடுத்துச் செல்லப்போவதாக வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் ஹியூகோ ஸ்வயர் நாடாளுமன்றில் கூறியுள்ளார். பொதுநலவாய மாநாட்டிற்கு வரும் ஊடகங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தகவல் சேகரிக்க கட்டுப்பாடுகள் இருக்கலாகாதென்பதைத் தெளிவாகக் கூறியிருக்கின்றோம் எனவும் அவர் கூறினார். இலங்கை அரசாங்கம், பொதுநலவாயம்,…

  2. சிவில் விவகாரங்கள் இராணுவ அதிகாரிகளிடம்: இராணுவ ஆட்சியா? கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 அக்டோபர், 2013 - 17:01 ஜிஎம்டி கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடற்படைத் தளபதி ஜயனாத் கொலொம்பகே பொறுப்பேற்றுள்ளார் இலங்கையில் அரச நிறுவனமான இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடற்படையின் தளபதி நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டில் மேலோங்கிவரும் இராணுவமயமாக்கலின் இன்னொரு சமிக்ஞை என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கடற்படையின் தளபதியாக இருந்துகொண்டே இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலொம்பகே நேற்று புதன்கிழமை பதவியேற்றார். கப்பல்துறையின் அவருக்கு இருக்கின்ற அறிவும் தொழில்சார் அனுபவமும் கருதியே நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தப…

  3. Started by தமிழரசு,

    கிளிநொச்சி நகரிலிருந்து நடைபவணியொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. கல்வி, கலாச்சார மற்றும் விளையாட்டு ஆகிய திறன்களை இலங்கை சிறுவர்களிடையே ஊக்குவிப்பதற்காகவே இந்த நடைபவணி இடம்பெற்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இயன் பொத்தம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன உள்ளிட்ட பலர் இந்த நடைபவணியில் கலந்துகொண்டனர். (படங்கள்: ரொமேஷ் மதுசங்க, எஸ்.சிவகருணாகரன்) http://tamil.dailymirror.lk/--main/87910-rrrrrrr.html

  4. இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு தன்னால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் இம்மாதம் நடுப்பகுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று வடமாகாண முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனின் அந்தரங்கச் செயலாளர் ஏ.சுந்தரலிங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கில தினசரியான இந்துவில் மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்திற்கு அழைக்கிறார் விக்னேஸ்வரன் என்ற தலைப்பில் பிரசுரமா…

  5. பெண்கள் மீதான வன்புணர்வு: இழிவுநிலை மாறவேண்டும்-வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அதை பெரிதாக்கிப் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் நிலைமையே இங்கு காணப் படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான குறும்பட மற்றும் அசையும் படவெளியீட்டு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரை யாற்றுகையில்: ஆண்களுக்கு மேலான சுதந்திரம் ஒரு காலத்தில் பெண்களுக்கும…

  6. நாட்டின் வரலாற்றில் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பிரிவினைவாத நோக்கில் செய்த அழிவுகளை விட அதிகமான அழிவுகளை செய்துள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போது அவர் இதனை கூறினார். இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும், தொழிற்கல்வி தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை. அந்த கல்விமுறை தொடர்பில் அறியாமை அல்லது போதிய அளவில் புரிதல் இன்மை அல்லது தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் இன்மை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டலாம். தொழிற்கல்வி பற்றி சிந்திக்காமல், பல்கலைக்கழகம் சென்று வரவேண்டும் என்ற நோக்கம் மாத்திரமே இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாட்டில் …

  7. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரும் இங்கிலாந்து இளவரசர் நுவரெலியாவில் உள்ள பெட்ரோ தேயிலை தோட்டத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. 1954 ம் ஆண்டு மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும் இளவரசர் சார்ள்ஸின் தந்தையுமான கோமகன் பிலிப் இலங்கைக்கு விஜயம் செய்த போது பெட்ரோ தோட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் தனது விஜயத்தின் ஞாபகார்த்தமாக தேயிலை செடி ஒன்றையும் நாட்டியிருந்தார். இந்த தேயிலை செடியில் இருந்து பறிக்கப்பட்ட தேயிலையில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பை தேனீர் கடந்த வருடம் நடைபெற்ற மகாராணியின் வைர விழாவில் 40 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. தனது தந்தையின் விஜயத்த…

  8. யாழ். காங்கேசன்துறைப் பகுதியில் அனுமதியின்றி பிடித்து வைத்திருந்த சிங்கி இறால் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது. (படங்கள்: எஸ்.ஜெகநாதன்) http://tamil.dailymirror.lk/--main/87742-2013-10-31-03-45-59.html

  9. பேலியகொடவில் கடந்த 27 ஆம் திகதி முற்பகல் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை திறப்பதற்கு முன்னர் அங்கு கூடியிருந்த அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மத்தியில் எங்கே களனியின் உரிமையாளர் எனக் கூறி ஜனாதிபதி ஒருவரை தேடியதை காணக் கூடியதாக இருந்தது. ஜனாதிபதி அமைச்சர் மேர்வின் சில்வாவை தான் தேடுகிறார் என்பதை புரிந்து கொள்ள அங்கிருந்தவர்களுக்கு நீண்டநேரம் செல்லவில்லை. அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு மிகவும் பின்னால் அமைச்சர் மேர்வின் சில்வா காணப்பட்டார். ஜனாதிபதி தன்னை அழைக்கும் சத்தத்தை கேட்ட அமைச்சர் மேர்வின் சில்வா அங்கிருந்தவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு, என்றும் காணாத வகையில் மிகவும் மகிழ்ச்சியான முகமலர்ச்சியுடன் ஜனாதிபதிக்கு அருகில் சென்றார். அவர் வெ…

  10. காணொளி: இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் நிகழ்வுக்கு எதிராக சென்னை சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9820:2013-10-31-20-14-56&catid=1:latest-news&Itemid=18

  11. வடக்கில் இருந்து முஸ்லிம் மக்­களை வெளி­யேற்­றி­ய­மைக்கு வடக்குத் தமி­ழர்­களும் பொறுப்புக் கூற வேண்டும். அன்று துப்­பாக்கி முனையில் விரட்­டப்­பட்ட அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு இன்று வரை ஆத­ரவு கிடைக்­க­வில்லை. விக்கி­னேஸ்­வ­ரனும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் நாட­க­மா­டாது முஸ்லிம் மக்­களின் நிலங்­களை உட­ன­டி­யாக ஒப்­ப­டைக்க வேண்டும் என்று முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பு தெரி­வித்­துள்­ளது. பிர­பா­க­ரனால் முஸ்லிம் மக்கள் விரட்­டப்­பட்டு 23 வரு­டங்­க­ளா­கின்­றன. இதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்­றி­னையும் மேற்­கொள்­ள­வுள்ளோம் எனவும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது. செள­சி­ரி­பா­யவில் நேற்று முன்­தி­னம் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமை…

    • 5 replies
    • 859 views
  12. 2009 இல் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்து நீண்டகாலம் கழிந்துவிட்ட நிலையில், மக்களின் வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளது என்பதை நேரில் கண்டறிவதற்காக நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் மறே மக்களி கூடுதலாக தமிழர் வாழும் வடபிராந்தியத்துக்கு அடுத்த மாதம் செல்லவுள்ளார். பொதுநலவாய மாநாட்டுக்கு வரும்போது தான் வடபகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் மறே மக்களி இன்று தெரிவித்துள்ளார். 'வடக்கில் இடம்பெற்றுவரும் நல்லிணக்கச் செயற்பாடுகள், அதிகாரப்பகிர்வு என்பவற்றின் முன்னேற்றத்தில் நியூஸிலாந்து மிகுந்த அக்கறையோடு உள்ளது. மாநாடு முடிந்து தலைவர்கள் தத்தம் நாடு திரும்பும் முன்னர், வடக்கு நிலைமை பற்றி நான் பிரதமர் ஜோன் கீயிடம் அறிக்கை சமர்ப்பிப்பேன்' எனவும் அவர் அற…

  13. கடந்த ஞாயிறு நடுநிசியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது யாழ்ப்பாணம்-கண்டி A9 வீதியில் அமைந்திருந்த மகா பத்ரகாளி அம்மன் ஆலயம். பெரும் இயந்திரங்களைக் கொண்டு இந்த ஆலயம் நிர்மூலம் செய்யப்பட்டிருக்கிறது. ஓர் இனத்தின் மத தாற்பரியத்தின் மீது புல்டோசர்கள் பேயாட்டம் ஆடியிருக்கின்றன. ஒரு சமூகத்தின் இரத்த நாள-நாடிகளுடன் இரண்டறக் கலந்த நம்பிக்கைகளின் மீது அராஜகம் மீண்டும் தனது கோரத்தைப் பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் மதங்களும் வழிபாட்டுத் தளங்களும் . சமயம் சார்ந்த நம்பிக்கைகளும் புனிதமானவை; உயர்ந்தவை. அவற்றை மதித்து வாழ்வது மனித பண்பாடாகும். அதுமட்டுமன்றி, மாற்று மதங்களை இழித்துரைப்பதே குற்றமென்றிருக்கையில் அவற்றை அழித்தொழிப்பதென்பது அநியாயமும் அநாகரீகம…

  14. நாட்டில் அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக சிங்­கள மக்­களே உள்­ளனர். சிங்­க­ள­வர்­களை பகைத்துக் கொண்டு அர­சாங்­கத்­தினால் எதையும் செய்­ய­மு­டி­யாது. நாட்டில் சமா­தா­னமும் அமை­தியும் நில­வ­வேண்டும் என்­ப­தற்­கா­கவே சிறு­பான்­மை­யி­னரை ஆத­ரித்துக் கொண்டு செயற்­ப­டு­கின்றோம் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது. ஐக்­கிய தேசி­யக்­கட்சி சிறு­பான்­மை­யி­னரை ஆத­ரித்து ஆட்சி அமைக்­கலாம் என்ற நினைப்பில் செயற்­ப­டு­கின்­றது. இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் வீழ்ச்­சிக்கும் அவர்­களின் அர்த்­த­மற்ற கொள்­கை­களே காரணம் எனவும் அந்த அமைப்பு சுட்­டிக்­காட்­டி­யது. இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர கருத்துத் தெரிக்­கைய…

  15. வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் விரும்பவில்லை-முஸம்மில் தெரிவிப்பு கிழக்கு மக்கள் விரும்பினால் வடக்கு, கிழக்கு இணைப்பு நிச்சயம் இடம்பெறும். அதைத் தடுக்க முடியாது என வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு விடுத்துள்ள நிலையில், வடக்குக் கிழக்கை மீண்டும் இணைக்கும் தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவ்வமைப்பின் இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸமில் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தற்போது வெகுவாகப் பேசப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண சபையில் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் மக்கள்…

  16. வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இனவாத கருத்துக்களை முன்வைப்பதாக பொறியியல் மற்றும் வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளவத்தையில் மேன்பாலமொன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், வடக்கில் சிங்கள மக்களை மீண்டும் குடியேற இடமளிக்கமாட்டொமென தெரிவித்துள்ளார். விக்கினேஸ்வரன் என்பவர் , கொழும்பில் பிறந்தவர், அவரின் பிள்ளைகள் யுத்தத்திற்குச் செல்லவில்லை, அவர்களின் கழுத்தில் சைனைட் குப்பிகளை அணியவில்லை. அப்பாவி பெற்றோரின் பிள்…

    • 3 replies
    • 565 views
  17. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (30) மதியம் வட மாகாண முதலமைச்சர் இருதய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் நலமாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். விக்னேஸ்வரன் மருத்துவ பரிசோதனையின் பின் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் 24 மணிநேரம் சிகிச்சை பெற வேண்டி இருப்பதாகவும் நாளைய தினமே வீடு திரும்புவார் எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார். http://akkinikkunchu.com/new/index.php

    • 11 replies
    • 1.2k views
  18. கொழும்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்திய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் நேற்று புதுடெல்லிடியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். எனினும், இந்தச் சந்திப்பில் எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படவில்லையென இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் இந்தியா காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்திஷ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் கலந்துகொண்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. இதன்போது கொழும்பு மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனவும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழக கட்சிகளின் எதிர்ப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்தக…

  19. பிரித்தானிய பிரதமரின் யாழ்ப்பாண விஜயம் வரவேற்கப்பட வேண்டியது – கோதபாய ராஜபக்ஷ 31 அக்டோபர் 2013 பிரித்தானிய பிரதமரின் யாழ்ப்பாண விஜயம் வரவேற்கப்பட வேண்டியது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலங்கைக்கு எதிராக சர்வதேச யுத்தக்குற்றச் செயல் விசாரணைகளை வலியுறுத்தி நிற்கும் தரப்பினர், பிரித்தனரிய பிரதமர் டேவிட் கமரூனின் யாழ்ப்பாண விஜயத்தை பிழையாக பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பிழையான தகவல்களை வெளியிடுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை புலி ஆதரவு தரப்பும், மனித உரிமை அமைப்புக்களும் பயன்படுத்திகொள்ளக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு மட்டுமன்றி வன்…

  20. வலி.வடக்கு வீடழிப்பு ஜனாதிபதியுடன் பேச்சு ;உதயனுக்குத் தெரிவித்தார் சம்பந்தன் வலி.வடக்கில் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவுடன் இரண்டொரு தினங்களுக்குள் பேச்சு நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந் தன் நேற்று மாலை உதயனுக்குத் தெரிவித்தார். வலி.வடக்கில் 6 ஆயிரத்து 382 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ளது. இந்தப் பகுதிகளைச் சூழப்பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ளடங்கும் பகுதிகளில் உள்ள வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக இராணுவத்தினரால் தொடர்ச…

  21. (20ஆவது பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தின் அனைத்துப்பிரதி நிதிகளுக்கும் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் எழுதி அனுப்பிய குறிப்பாணை இது - விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்) 1974ம் ஆண்டு இலங்கையில் நிகழந்த 20ஆவது பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடுகளின் அனைத்துப்பிரதி நிதிகளுக்கும் திரு எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் எழுதி அனுப்பிய குறிப்பாணை இது. இந்தக்குறிப்பு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலோ அல்லது ஏனைய விடுதலை இயக்கத் தலைவர்களாலோ அனுப்பி வைக்கப்படவில்லை. புலிநீக்கம் ஆயுத நீக்கம், வன்போக்கு நீக்கம், களையெடுப்பு என்று முப்பொழுதும் தொழிற்பட்டுக்கொண்டு மென்போக்காளர்களாக தம்மை நிலை நிறுத்த பலர் முயன்று கொண்டு இருக்கும் இந்தக் காலத்தி…

  22. தம்புள்ளை மகா பத்திரகாளியம்மன் ஆலயம் இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவே இந்த ஆலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல வருடங்களாக தங்களது வழிபாட்டு தலமாக விளங்கிய ஆலயம் தற்போது முற்றாக அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாக அங்குள்ள தமிழர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் புனித பூமியாக அடையாளப்படுத்தப்பட்ட எல்லைக்குள் இந்த ஆலயம் அமைந்திருந்தது. அந்தப் பகுதிக்குள் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட போதிலும் ஆலயத்தில் தொடர்ந்தும் பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன. ஆலயத்தை அந்த இடத்திலிருந்து…

  23. வட­மா­காண சபை வெளி­நாட்டுச் சக்­தி­களின் உத­வி­யுடன் தனி இராட்­சியம் நோக்கிச் செல்ல முயன்றால் வடமேல் மாகாண சபை அதற்கு எதி­ராக செயற்­படும் என வடமேல் மாகாண முத­ல­மைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். மாகாண சபையின் மாதாந்த அமர்வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில், வட­மா­காண சபையை உரு­வாக்­கி­யது ஜன­நா­யக ரீதியில் வெற்­றி­யாகும். அதேபோல் வடமேல் மாகாண சபையில் நாம் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வெற்றி கண்­டுள்ளோம். எதிர்­கா­லத்தில் எமக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும். மாகாணம் முழு­வதும் கிரா­மிய மக்­களின் அபி­வி­ருத்தி தொடர்­பாக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். மக்கள் சேவையின் போது கட்­சி­பே­த­மில்­லாமல் செயற்­ப­ட­வேண்டு…

  24. வடபகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின்போது இராணுவத் தலையீடு இடம்பெற்றுள்ளது என எழுந்துள்ள முறையீடு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கண்காணிப்பாளர்கள் தமது இறுதி அறிக்கையில் இது தொடர்பாக ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அதில் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு வடமாகாணசபைக்கான தேர்தல் பரப்புரைக் காலத்தில் இராணுவத் தலையீடும், செல்வாக்கும் ஊடுருவியுள்ளமையை நாம் கவனத்தில் கொள்கின்றோம். இது ஒரு பாரதூரமான செயற்பாடு. குழப்பியடிக்கும் நடவடிக்கை. இந்தத் தலையீடு குறித்தும், செல்வாக்குப் பிரயோகம் குறித்தும் விசாரணை நடத்தப்படவேண்டும். இத்தகைய முறைகேடான செயற்பாடுகள் எதிர்காலத்த…

  25. மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - TNA 31 அக்டோபர் 2013 மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்க உள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களின் மனித உரிமை நிலைமைகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய ஏற்கனவே இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் கமரூன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.