Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -ஜுட் சமந்த மாதம்பேயில் சற்று முன்னர் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாதம்பே-சுதுவெல்லயிலுள்ள பழைய இரும்பு கடையிலேயே இந்தவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவ்விடத்தில் பழைய இரும்புகளை உருக்கும் தொழிற்சாலையும் இருப்பதனால் என்ன வெடித்துள்ளதுதென்று இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த மாதம்பே பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, ஆட்லெறிக்கு பயன்படுத்தப்பட்ட ரவையே வெடித்து சிதறியிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் பயன்படுத்தப்பட்ட ஆட்லெறிக்கா…

  2. கொக்கிளாய் கடல் நீரேரியில் தடைசெய்யப்பட்ட வலைகள், உபகரணங்களைப் பயன் படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்களை நேற்றுமுன் தினம் வெள்ளிக்கிழமை கடலில் வைத்து எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன். கொக்கிளாய் கடல் நீரேரியில் தடை செய்யப்பட்ட கூட்டு வலைகளைப் பயன்படுத்தி இறால், மீன்கள் ஆகியவற்றைப் பிடிப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மீனவர்களின் அபகரிப்பு நடவடிக்கைகளை, நேரில் கண்டறியும் பொருட்டு கொக்கிளாய் பகுதிக்குச் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், அங்குள்ள மீனவர்களின் உதவியுடன் நீரேரிக்கும் சென்றார். கடல் நீரேரியில் இயந்திரம் பொருத்திய …

  3. தீர்­மா­னங்­களை இதர மாகாண சபை­க­ளுக்குத் திணிக்க முயற்­சிக்­கின்­றது. அதி­காரப் பகிர்வு என்­ப­தற்குப் பதி­லாக தங்கள் அதி­காரப் பர­வ­லையே மேற்­கொள்ள அர­சாங்கம் இந்த வித­மான முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கி­றது. இது எந்த வகை­யிலும் ஏற்கக் கூடிய ஒன்று அல்ல என்றும் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனாதி­ராஜா தெரி­வித்தார். கூட்­ட­மைப்பின் நிலைப்­பா­டுகள் மற்றும் கட்சி நெருக்­க­டிகள் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட அவர் மேலும் கூறு­கையில், ஜன­நா­யகப் பண்­பு­க­ளுக்கு மக்­க­ளாக இருந்­தாலும் சரி, அர­சாங்­க­மாக இருந்­தாலும் சரி மதிப்­ப­ளிப்­பது அவ­சி­ய­மாகும். மக்கள் ஒரு­மு­க­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு தங்கள் வாக்­கு­களை வழங்­கி­யுள்­ளார்கள். இதனை உணர்ந்த அர­சாங்கம் அர­சிய…

  4. போரின் இறுதி எட்டு மாதங்களில் காணாமல் போனதாக கூறப்படும் 146 ஆயிரத்து 679 பேர் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பின் ஊடகம் ஒன்று இந்த கோரிக்கை குறித்த செய்தியை பிரசுரித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை முன்வைக்கவேண்டும். அத்துடன் தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை மாற்றும் முயற்சியை கைவிடவேண்டும் என்றும் ஆயர் கேட்டுள்ளார். தாம் வன்முறைகளை எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ள ஆயர், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வன்முறைகளையும் தாம் கண்டித்தமையை சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் பொதுமக்களை கொலை செய்தமையையும் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஆயர் குறிப்ப…

  5. இந்நாட்டு அமைச்சரவைக்காக வருடம் ஒன்றிற்கு 350 கோடி செலவிடப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். எவ்வாறாயினும் அமைச்சர்கள் அநேக காலங்களில் தமது பிரதேசங்களில் இருப்பதில்லை எனவும் அவர்களுக்காக பெருந்தொகையான பணம் செலவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். அமைச்சர்களது எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் மகாவலி திட்டம் போன்ற இரண்டு திட்டங்களை மேற்கொள்ள முடியும் என ஹரிசன் மேலும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=95371&category=TamilNews&language=tamil

  6. சென்னையில் கடந்த 15 நாட்களாக மேற்கொண்டிருந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழர் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு இன்று மாலை கைவிட்டார். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது, இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 1-ந் தேதி தியாகு சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்துடன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் ஆதரித்தனர். ஆனால் கடந்த வாரம் தியாகுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதி…

  7. கிளிநொச்சியில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் இராணுவ கட்டளைத் தளபதி தயாரத்னவும் நேற்று புதிய பௌத்த கோயில் ஒன்றைத் திறந்து வைத்தனர். அதன் உச்சியில் பௌத்த சின்னங்களை பதித்தனர். காலையில் மாங்குளத்தில் உள்ள ஶ்ரீ சுகதவிகாரையின் தாதுகோபுரமும் திரைநீக்கம் செய்யப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர்கொயில் தலைவர் வண. ஹிங்குராக்கந்தை சுமன தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது என்றும் கிளிநொச்சியில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகம் (SFHQ-KLN) இந்த விகார கட்டுமானத்துக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்கியது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். http://www.ilankainet.com/2013/10/blog-post_19.html

  8. வவுனியாவில் பௌத்த பிக்கு ஒருவரால் நடத்தப்படும் இல்லம் ஒன்றில் தமிழ் சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக வந்த முறைப்பாடு குறித்த தாம் புலனாய்வுகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை பொலிஸ் தரப்பு பேச்சாளரான அஜித் றோகண அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் பௌத்த பிக்கு இதுவரை கைது செய்யப்படாதது குறித்து சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் சங்கத்தால் விமர்சிக்கப்பட்டிருந்தது. அது குறித்து பொலிஸ் தரப்பு பேச்சாளரான அஜித் றோகண அவர்களிடம் கேட்ட போது, முதற்கட்ட விசாரணைகளின் போது, அந்தச் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட போது அவன் அந்த பிக்குவின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்று கருதப்படுவதாகவும் அதன் காரணமா…

  9. சிறீலங்காவின் தென்பகுதியில் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நீடித்து வருவதால் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடல் சார்ந்த பிரதேசங்களில் நிலவும் வானிலை தொடர்பில் மீனவர்களுக்கு ஏற்னவே தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை புத்தளத்திலிருந்து மாத்தறை ஊடாக காலி வரையான கடற் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படுமெனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடதக்கது http://www.sankathi24.com/news/34607/64//d,fullart.aspx

  10. சாந்தி சந்சிதானந்தத்தின் இந்தக் கட்டுரை பல கேள்கவிளை உருவாக்கி இருக்கிறது. இந்த இடத்தில் அண்மையில் ஐ.ஆர்.என் ஆய்வொன்றை தமிழாக்கம் செய்து வெளியிட்டு இருந்தோம். இந்த அமைப்பு ஏற்கனவே பல சமூக ஆய்வுகளை செய்தி அறிக்கைகளாக வெளியிட்டு இருக்கின்றது. அவற்றையும் நாம் தமிழாக்கம் செய்து வெளியிட்டு இருக்கிறோம். அது போன்றே பாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறி வரும்வடக்கு – விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள்:- என்ற செய்தியையும் ஐ.ஆர்.என் அறிக்கையின் தமிழாக்கம் என வெளியிட்டு இருந்தோம். எமது தளத்தைப் பார்வையிட்டு வருவோருக்கு மிகத் தெழிவாக தெரியக் கூடிய விடயம் நாம் பரபரப்புக்காக கட்டுரைகளையோ செய்திகளையோ மிகைப் படுத்தல்களையோ வெளியிடுவதில்லை. தவறுதலாக அத்தகைய உணர்வை வாசகர்…

  11. பொதுநலவாய நாடுகள் அமர்வினை நிராகரிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – ஜோன் கீ பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை நிராகரிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைளைக் காரணம் காட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளில் பங்கேற்பதனை தவிர்ப்பது நியாயமாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு ஓர் பொது நிகழ்வு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டின் மனித உரிமை விவகாரம் அல்லது வேறும் விடயத்திற்காக அமர்வுகள் அல்லது நிகழ்வுகளில் பங்கேற்காமல் விடுவது பொருத்தமாகாது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கருதினால் கிழக்கு ஆசிய மாநாடுகள், எபேக் மாநாடுகள்…

  12. சிறிலங்கா அதிபரின் மகனான 27 வயதுடைய நாமல் ராஜபக்ச ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அதிபர் ராஜபக்சவின் நெருங்கிய உறவினர்கள், மைத்துனர்கள் போன்றோர் நாட்டின் அமைச்சுக்கள் மற்றும் மாகாணங்களின் மிக முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு The Telegraph ஊடகத்தின் வெளிவிவகாரத்திற்கான தலைமைச் செய்தியாளர் David Blair கொழும்பில் இருந்து தொடராக தனது உடகத்திற்கு அனுப்பிவரும் செய்தி அறிக்கையில் தெரிவித்து வருகிறார். அதில் ஒரு குறிப்பு இது: தமது அரசாங்கத்தை குடும்ப வியாபாரமாக மாற்றியுள்ள நான்கு சகோதரர்களால் ஆளப்படும் நாடே சிறிலங்காவாகும். 2005ல் சிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முதன்முதலாக தெரிவுசெய்யப்…

  13. சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது, சிறிலங்காவின் ஆடை மற்றும் கைத்தறி தொழிற்சாலைகளின் அபிவிருத்திக்கு உதவுவதுடன், இதன்மூலம் சிறிலங்காவின் வறுமைக்குட்பட்ட கிராமங்களில் நிலவும் வறுமைநிலையை இல்லாதொழிக்கும். சிறிலங்காவின் ஆடைத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், சிறிலங்காத் தீவின் கிராமங்களில் வேலையற்ற பெண்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்காகக் கொண்டு தைத்த ஆடைகளை சந்தைப்படுத்துவதற்கான அனைத்துலக சந்தைகளை கண்டறிவதற்கும் சீனாவுடன் மேற்கொள்ளப்படும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் சீன முதலீட்டாளர்கள் உதவுவார்கள் என சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகக் கலந்துரையாடுவதற்…

  14. -எஸ்.ஜெகநாதன் தமிழ் மக்கள் தேர்தலில் அளித்திருந்த ஆணைக்கு அமைவாக வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அரசிடமிருந்து பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வலி.மேற்கு பிரதேச சபையின் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் மக்கள் உரிமைகளைப் பெறுவதற்காக 60 வருடங்களாக போராடி வருகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் மற்றும் ஆயுத ரீதியிலான போராட்டங்கள் அனைத்தும் பேரினவாதிகளால் முள்ளிவாக்காலில் சிதைக்கப்…

  15. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத்தேர்தல்களில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் தங்களுடைய சொத்து விபரங்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்காவிடின் அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இது தொடர்பில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த மூன்று மாகாண சபைக்கான தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் சிலர் தங்களுடைய சொத்துவிபரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். மாகாண சபைகள் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்வதற்கு மு…

  16. -எம்.எஸ்.எம்.நூர்தீன் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பேனிப்பாதுகாத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செல்லும் அதே வேளை தென்னிலங்கையிலுள்ள பௌத்த சமூகத்துடனும் உடன் பட்டுச் செல்ல ஆயத்தமாக உள்ளோம் என வட மாகாண சபை உறுப்பினர் அஸ்ஸெய்க் அஸ்மின் ஐய்யூப் தெரிவித்தார். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை இரவு நடாத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே வட மாகாண சபை உறுப்பினர் அஸ்ஸெய்க் அஸ்மின் ஐய்யூப் மேற்கண்டவாறு கூறினார். வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு போனஸ் ஆசனத்தின் மூலம் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப…

  17. இம்மாதம் இறுதி வாரத்தில் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தொடருக்கு மாகாண சபைகளின் முதலமைச்சர்களை அழைப்பதற்கு அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது. அதன்படி வடமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அந்த அமைச்சரவை கூட்டத்தொடரில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றபோதிலும், அமைச்சரவை கூட்டத்தொடருக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு கலந்து கொள்வதாக அரச தரப்பு மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பாக வினவிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர்…

    • 0 replies
    • 570 views
  18. வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு, அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்துக்கு இயற்கை அளித்த மிகப்பெரும் கொடை பனைவளம். அந்தப் பனைமரங்களை ஆதாரமாகக் கொண்டு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தால் நாம் யாரிலும் தங்கி வாழவோ அல்லது யாருக்கும் அடிபணிந்து வாழவோ வேண்டிய அவசியம் இல்லை என்று விவசாய அமைச்சர் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தை றோட்டரக்ற் கழகம் முன்னெடுத்துள்ள இலங்கையில் ஒரு இலட்சம் பனைமரக் கன்றுகளை நடும் திட்டத்தின் தொடக்க வைபவம் கடந்த வெள்ளிக் கிழமை (18.10.2013) சிறுப்பிட்டியில் இடம்பெற்றது. இந் நிகழ்சியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொ.ஐங்கரநேசன் தொடர்ந்து உரையாற்றுகையில், பனைமரங்கள் இலங்கையில் தமிழர்தாயகமான வட…

  19. இலங்கை தமிழர்கள் போன்று பல்வேறு நாடுகளில் துன்பப்படும் இந்திய வம்சாவளிகள் பாதுகாக்கப்படல் அவசியம் என்று பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மோடி தொடர்ந்து பேசியதாவது, இந்திய கலாசாரம், உறுதித்தன்மை, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அத்துடன் வெளிநாட்டுக்கொள்கை வகுக்கப்படும் போது இந்தியாவில…

  20. கலேவெல பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதல் நடத்தியுள்ளனர். தனது கடமைகளை முடித்துக் கொண்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சா ளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப் பிட்டுள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும், தாக்குதல் தொடர்பில் மூவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். தாக்குதலில் காயமடைந்த கலேவ…

  21. மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும்என பிரேரித்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பிர்னர் கைது 18 அக்டோபர் 2013 பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வளர்களால் விசாரணைக்கு உட்பட்டுள்ளார். வடக்க்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பலத்த சர்ச்சசை ஏற்பட்டு உள்ளதுடன் தீர்மானத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை வலையத்துள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இந்த தீர்மானத்தின் எதிரொலியாக கிளிநொச்சி கரச்சி பிரதேச சபையும் நேற்று (17.10.13) மற்றயதொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. அத்தீர்மானத்தில் வடக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள…

    • 6 replies
    • 975 views
  22. வவுனியாவினில் சிறுவர்கள் மீதான பலவந்த ஓரினச்சேர்க்கைகுட்படுத்திய குற்றச்சாட்டினில் தேடப்பட்டு வரும் பிக்குவை வவுனியாவினிலுள்ள தனது விருந்தினர் விடுதியினிலேயே வடக்கு ஆளுநர் சந்திரசிறி தங்க வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.தற்போது இலங்கைப்பொலிஸார் தேடிக்கொண்டிருப்பதாக பத்திரிகைகளிற்கு கூறிக்கொண்டிருக்கும் குறித்த பிக்குவையே ஆளுநர் சந்திரசிறி மேல்மட்ட பணிப்பினையடுத்து மறைத்து வைத்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் வவுனியாவில் உள்ள சிறுவர் இல்லமொன்றினை நடத்தி வந்த பிக்கு ஒருவர், அங்கிருந்த 22 சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு பலவந்தமாக உட்படுத்தி வந்துள்ளார். ஆயினும் இவ்வாறான பாதகச் செயலைப் புரிந்த அந்தப் பிக்கு இன்னமும் கைது செய்யப்படவில்லை.பாதி…

  23. வட மாகாணத்தில் இருந்து படையினரை வெளியேற்றும் அதிகாரம் சர்வதேசங்களுக்கு இல்லை. எமது நாட்டில் பாதுகாப்பினை பலப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது என படை பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு கிழக்கில் பெண்கள் பாதிக்கப்படுவதில் படையினரை பொறுப்புக் கூறமுடியாது. எமது கடமை மக்களை பாதுகாப்புதே தவிர சீரழிப்பதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கில் இருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றுவதில் சில அமைப்புகளும் வடக்கின் கட்சிகளும் சர்வதேச அமைப்புகளும் மும்முரமாக செயற்படுகின்றன. இலங்கையில் இன்று அமைதியானதொரு சூழலினை ஏற்படுத்தியதில் இலங்கை இராணுவத்தினரை முக்கிய பங்கு வகிக்கின்றனர்.இவை இலங்கையர்களுக…

  24. மன்னார் நானாட்டான் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் வைத்து வணங்கப்பட்டு வந்த 178 ஆண்டுகள் பழமை வாய்ந்த அடைக்கலமாதா திருச்சொரூபம் கடந்த வாரம் இனந்தெரியாதோரால் திருடிச்செல்லப்பட்டுள்ளது . கண்ணாடிக் கூட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த திருச்சொரூபத்துக்கு அணியப்பட்டிருந்த ஆடைகள் கழற்றப்பட்டு அதே இடத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திருச்சொரூபம் திருடிச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக முருங்கன் காவல் நிலையத்தில் ஆலய நிர்வாக சபையினர் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து மோப்ப நாய்கள் கொண்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. http://www.sankathi24.com/news/34583/64//d,fullart.aspx

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.