ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142802 topics in this forum
-
4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம். முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் உறுதியளித்துள்ளார். முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் 4 வயதுடைய சிறுமியொருவரை, நபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காணொளி, சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து, குறித்த 45 வயதுடைய நபர் ஒருவரும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
-
-
- 4 replies
- 486 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) நாட்டில் கணினி அறிவு 39 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. மேல் மாகாணம் உயர்வான மட்டத்திலும், கிழக்கு மாகாணம் குறைவான மட்டத்திலும் காணப்படுகிறது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சாமலி கருணாரத்ன தெரிவித்தார். தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வயது மற்றும் தொழிற்றுறை முன்னேற்றம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணினி அறிவு தொடர்பில் கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய ஆண்களின் கணினி அறிவு 40.9 சதவீதமாகவும், பெண்களின் கணினி அறிவு 37.2 சதவீதத்தா…
-
- 0 replies
- 324 views
-
-
12 JUN, 2024 | 05:06 PM இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. சனாதனன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி சூரியாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த…
-
- 0 replies
- 321 views
-
-
12 JUN, 2024 | 05:24 PM எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) சித்தார்த்தன் எம்.பி.,யின் கந்தரோடை இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் கௌதமன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். ஒன்றரை மணிநேரத்துக்கும் மேல…
-
- 0 replies
- 193 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களுக்கு முன்பாக 12ஆம் திகதி புதன்கிழமை மதியம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என வலயக் கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக பதாகைகளைத் தாங்கியவாறு அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறும், அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வை நடைமுறைப்படுத்து, அதிபர் ஆசிரியர்களில் கொள்ளை அடிக்கும் பணத்தை வழங்கு, மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் நாடாளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட…
-
- 0 replies
- 429 views
-
-
12 JUN, 2024 | 12:44 PM யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் டிப்பர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். குருணாகல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இவர் இன்று புதன்கிழமை (12) அதிகாலை யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், நுணாவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமொன்று இவரை மோதியுள்ளது. இதன்போது இவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 11:47 AM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளை வலியுறுத்தியுள்ளது. உலக பெளத்த மகா சம்மேளனத்தின் இலங்கை மத்திய நிலையம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பணியகம் ஆகியன இணைந்து இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை விருத்தி செய்யும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (11) நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தன. உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளையின் தலைவர் கலாநிதி சுதத் தேவபுரவின் தலைமையில் கொழும்பு மயூ…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 12 JUN, 2024 | 11:42 AM போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை சிறுவர்கள், குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து, யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியவில்லையே என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்கவிடம் சைவ சமயத் தலைவர்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (11) மாலை ஏழு மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்குச் சென்று சந்திப்பில் ஈடுபட்டனர். சந்திப்பில் நல்…
-
- 1 reply
- 220 views
- 1 follower
-
-
இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று (12) கலந்துரையாடவுள்ளது. இந்த நிறைவேற்று சபை கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான 4வது பிரிவின் கீழ் ஆலோசனை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசெக், சமீபத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இலங்கை கடன் மறுசீரமைப்பில் போதுமான மற்றும் வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். கடன் திட்டத்தின் தரத்திற்கு ஏற்ப வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டிவிடும் என்று தான் மிகவும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். மேலும்,…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை (2025) செப்டெம்பர் மாதம் நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்க பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து, பல்கலைக்கழக நுழைவை விரைவுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். https://t…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
13வது திருத்தம் தொடர்பில் சஜித்தின் கருத்து! தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி – பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்தார். அதன்படி நீங்கள் சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும், பேகராக இருந்தாலும் ஒரு தாயின் பிள்ளைகளாக கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும். இதேவேளை 13வது திருத்தம் குறித்து பேசும் போது பல்வேறு தலைவர்கள் பயப்படுவதாகவும் அவர்கள் அரசியல் சந்தர்ப்பவா…
-
- 2 replies
- 219 views
- 1 follower
-
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே க…
-
-
- 40 replies
- 2.9k views
-
-
-
-
- 7 replies
- 594 views
-
-
11 JUN, 2024 | 07:11 PM மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் ஒரு குழு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பல பிராந்தியங்களில் விநியோகிப்பதற்கான 300 தொன் பேரீச்சம்பழங்களை உலக உணவுத் திட்டத்திடம் இன்று, செவ்வாய்கிழமை (11), கையளித்தது. இலங்கை குடியரசிற்க்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச உணவுத் திட்டத்தின் துணைப் பணிப்பாளர்/ ஜெரார்ட் ரெபெல்லோ மற்றும் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் பின் அப்துல்லா அல்-கலாஃப் போன்றோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர் . உலக உணவுத் திட்டமானது இப்பேரீத்தம் பழங்களை 200,…
-
- 1 reply
- 497 views
- 1 follower
-
-
11 JUN, 2024 | 07:08 PM வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் காணிகள் எல்லையிட்டு அளவீடு செய்வதற்காக வருகை தந்த வனவள திணைக்கள அதிகாரிகளை பொதுமக்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு கதிர்வேலர் பூவரசங்குளத்திலிருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் 2011 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் மீள்குடியேறியிருந்தனர். அவர்கள் வசித்த பிரதேசம் அனைத்தும் பற்றை காடுகள் நிறைந்ததாக காணப்பட்ட நிலையில் அவர்கள் குறித்த பகுதியை துப்புரவு செய்து விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் வன வளத்திற்குரிய காணிகள் இருப்பதாக தெரிவித்து வனவள திணைக்களத்தினர் இன்ற…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
11 JUN, 2024 | 05:35 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் சட்டவிரோத இயங்கி வந்த மாடு வெட்டும் கொல்களமொன்றை சவகச்சேரிப் பொலிஸார் முற்றுகையிட்டதுடன் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை மீட்டுள்ளனர் . இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளதுடன் மாடுகளை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன், நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் அண்மையில் வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் பொலிஸார் குறித்த சட்டவிரோதமாக இயங்கி …
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 02:00 PM தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழ் அரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை யாழில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது பிரதானமாக ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. இச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி சார்பி…
-
- 2 replies
- 404 views
- 1 follower
-
-
11 JUN, 2024 | 03:05 PM யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த, இராணுவத்தினருக்கு சொந்தமான பௌசர் வாகனம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.vir…
-
- 0 replies
- 461 views
- 1 follower
-
-
11 JUN, 2024 | 12:58 PM கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையினை பாதுகாப்பான ரயில் கடவையாக புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று செவ்வாய்க்கிழமை காலை (11) முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள் குடியேற்ற கிராமமான முகமாலை இந்திராபுரம் மக்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர் . இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையானது இதுவரை புன…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
11 JUN, 2024 | 01:11 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, துணைவி பகுதியில், வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வன்முறை கும்பல் இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர். வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185812
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
11 JUN, 2024 | 03:24 PM மட்டக்களப்பு வீதி தளங்குடா பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோன் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் உள்ளிட்ட 3 பேர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை பொத்துவில் அறுகம்பையில் இருந்து வவுனியா நோக்கி வாகனத்தில் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
10 JUN, 2024 | 04:58 PM மக்களவைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் தான் அதிமுக தோல்வி தழுவியதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரையில் மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது. இந்த காரணத்திற்காகவே காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆள முடியவில்லை, வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கை…
-
- 2 replies
- 285 views
-
-
Published By: VISHNU 11 JUN, 2024 | 01:35 AM யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி விடுதி இலக்கம் 7 இலக்க விடுதியில் நுழைந்து அங்கு கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்து மதியம் 12 மணி முதல் ஒரு மணிவரையன தமதி உணவு வேளையில். வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் சிற்றூழியர்கள், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். உத்தியோகத்தர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்து, ஆயுதம் தாங்கிய பொலிசாரை கடமையில் ஈடுபடுத்து, சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய், போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெட…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 JUN, 2024 | 01:29 AM அராலி வடக்கு பகுதியில் 10ஆம் திகதி திங்கட்கிழமை இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சிவகரன் மயூரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் தந்தையும், அண்ணாவும் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர் இன்று இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/185792
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 JUN, 2024 | 08:44 PM யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை தமிழரசு கட்சியினரை சந்தித்தனர். இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு திங்கட்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது. கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சிவிகே சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் சந்திப்பை மேற்கொண்டனர். https://www.virakesari.lk/article/185789
-
- 2 replies
- 290 views
- 1 follower
-