Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாம் வீடுகளில் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றோம். இதை யாராலும் தடுக்கமுடியாது. இப்படி இருக்கையில் கிளிநொச்சியில் கீதாஞ்சலி அம்மையார் மாவீரர் தினம் கொண்டாட அரசிடம் அனுமதி பெற்றுத் தருவேன் என்கிறார். இவர் யார் எமக்கு அனுமதி பெற்றுத்தர? காணாமற் போன தன் கணவரைத் தேட முயற்சிக்காத இவர் வாக்குப் பெறுவதற்காக கதைவிடுகிறார். இவரிடம் ஒரு சவால் விடுக்கிறேன் முடிந்தால் சிங்கள அரசினால் தரை மட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டி எழுப்பி மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். தென்மராட்சி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக்…

  2. மனித உரிமை ஆர்வலரான சுனிலா அபேசேகர இன்று திங்கட்கிழமை மாலை காலமானார். இவர் மனித உரிமைகள் பிரசாரத்திற்காக அரும்பாடுபட்டமைக்காக 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளினால் இவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதற்கு மேலதிகமாக மனித உரிமைகள் ஆணையகமும் இவரின் சேவையை பாராட்டி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/81931-2013-09-09-14-59-05.html

  3. நவம்பர் 15 ஆம் தேதி தமிழர் குறுதி தோய்ந்த இலங்கைத் தீவில் 'காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை' நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மார்ச் மாதத்தில் தமிழக மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டத்தை துச்சமென மதித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையை பாதுகாத்த இந்தியா, இப்போது இனக்கொலையாளி இராசபக்சேவுக்கு 'காமன்வெல்த்தின் கெளரவத் தலைவர்' என்ற மகுடம் சூட்டப் போகின்றது. இலங்கை அரசானது - கடந்த 2009 ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ஒரு சிங்கள இனவெறி அரசு, போருக்குப் பின்னாலும், தமிழர் வாழ்விடங்களில் இலட்சக்கணக்கான சிங்கள இராணுவத்தினரை நிறுத்தி வைத்திருக்கும் ஒரு இராணுவ சர்வாதிகார அரசு தமிழர்களின் இந்து, இஸ்லாமிய, கிருத்துவ மத அடையாளங்களை அழித்…

  4. -கெலும் பண்டார அடுத்த வருட முற் பகுதியில் நடைபெறவுள்ள இந்திய - இலங்கை ஆணைக்குழுவின் கூட்டத்தில் 100,000 இலங்கை அகதிகளை இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்புவது பற்றி ஆராயப்படும் என அதிகாரிகள் தெரிவித்தன. யுத்த காலத்தின்போது பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அடைக்கலம் கோரி தமிழ் நாட்டுக்கு சென்றனர். இவர்களில் 68,058 இலங்கை அகதிகள் 110 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும் 34,471 அகதிகள் இந்தியாவில் தமக்கு தெரிந்த குடும்பங்களுடன் தங்கியுள்ளனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் 5,628 அகதிகள் தாமாக இலங்கை திரும்பியதாகவும் இதற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவை உதவியளித்ததாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ தெரிவித்தார். மேலும் 2,400 பேர் இலங்கைக்கு திரும்பி…

  5. இலங்கை இராணுவத்தளபதி தயா ரத்னாயக்க அமெரிக்க இராணுவ பிரதானி ஜெனரல் ரெமோன் டி. ஒடியிரோனோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர கருத்துபரிமாறல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூசிலாந்தில் நடைபெறுகின்ற 8 ஆவது பசுபிக் இராணுவ பிரதானிகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இராணுவத்தளபதி நியூஸிலாந்துக்கு சென்றுள்ளார். இதன்போதே இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/81933-2013-09-09-15-13-13.html

  6. கிழக்கில், சிறிலங்கா இராணுவத்தின் நீர்க்காகம் தாக்குதல் - 4 போர்ப்பயிற்சி வரும் 11ம் நாள் ஆரம்பமாகவுள்ளது. வரும் 11ம் நாள் தொடக்கம் 23ம் நாள் வரையான 13 நாட்கள் நடக்கவுள்ள இந்தப் போர்ப்பயிற்சியில், 2698 சிறிலங்காப் படையினரும், 40 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, கதிரவெளி, திருகோணமடு, தொப்பிகல, நரக்கமுல்லை பகுதிகளில் இந்தப் போர்ப்பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் போர்ப்பயிற்சியில் சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் சிறப்புப் படைப்பிரிவுகளும், சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையின் சிறப்புப்படைப்பிரிவுகளும் பங்கேற்கவுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிறேசில், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 படையினரும் இதில் பங்…

    • 2 replies
    • 631 views
  7. நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களை பாதுகாப்பதற்கு தம்மால் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்மாலான முடிந்த சகல வழிகளிலும் முஸ்லீம்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக மட்டுமன்றி உலக முஸ்லீம்களுக்காகவும் தமது அரசாங்கம் குரல் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது புலிகள் இல்லாதொழிக்கப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்படும் என வாக்குறுதி அளித்ததாகவும், அதனை அவ்வாறே நிறைவேற்றியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். புலிகள் முஸ்லீம்களை விரட்டியடித்ததாகவும் …

  8. வட மாகாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிந்தனைகள் நடைமுறையில் இல்லை. இங்கு மஹிந்த ஹந்துருசிங்கவின் சிந்தனையே வழக்கில் இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதிலிருந்து இராணுவத்தை வரம்புமீற இடமளித்தால் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் பாரிய விளைவுகள் ஏற்படும் என்று சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவில் பாரதி சனசமூக நிலையத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: நான் சில நாட்களாகவே இராணுவம் வடமாகாணத் தேர்தலில் தலையிடுகின்றது என்று கூறி வந்தேன். அதற்கு ஒரு நல்ல உதாரணம் இன்று கிடைத்துள்ளது. இன்றைய ஞாயிறு தினகரனில் செய்தி வாசித்தேன். அதில் கட்டள…

  9. வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து விலகப் போவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக முக்கியமான அபிவிருத்தித் திட்டமான வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் தி;ட்டப் பணிகளிலிருந்து விலகிக் கொள்ள உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அபிவிருத்தித் திட்ட பொறுப்புக்களை வட மாகாணசபையில் ஆட்சி பீடமேறும் புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 22ம் திகதி வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டம், மாகாணசபை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார…

  10. நான் எதிர்க் கட்சியிலும் இருந்துள்ளேன் அரசின் அங்கத்தவனாகவும் இருந்துள்ளேன். சுயாதீன முடிவெடுக்க கூடிய நான் அரசின் பங்காளியாகவும் இருந்துள்ளேன். இவை அனைத்திலும் ஒரே விதமாக என்னால் பேச அல்லது நடந்து கொள்ள முடியாது. எதிர்க் கட்சியில் இருந்த போது பேசிய பேச்சுக்களை அமைச்சரவையில் அங்கத்தவனாக இருந்து கோண்டு பேச முடியாது. எனவே சந்தர்பங்கள் சூழ்நிலையில் செய்ய வேண்டியவற்றை நான் செய்து தான் இருக்கிறேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உணர்ச்சி ததும்பும் வசனங்களை விட எந்நேரத்தில் எது செய்ய வ…

  11. தனது இலங்கை விஜயத்தின் போது என்னை சந்தித்த இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வேறு சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வு இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இந்த அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தனது விஜயத்தின் போது ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை அரசாங்கத்துக்கு தான் நன்றியோடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான இலங்கையின் நிலைமையையும் சமய சகிப்புத்தன்மை, ஆட்சி முறைமை சட்டத்…

  12. நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து ஜாதிக ஹெல உறுமய இன்று திங்கட்கிழமை வெளிநடப்பு செய்துள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டம் குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றபோதே ஹெல உறுமய உறுப்பினர்கள் அந்த கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். வடமாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பிலுள்ள பிரிவினைவாத ஏற்பாடுகளை இரத்து செய்ய இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு தவறிவிட்டதென கூறியே அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு திருத்தம் ஒன்றை கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/81883-2013-09-09-12-09-24.html

  13. புராதன காலத்து புத்தர் சிலைகள் மூன்றினை அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவர் விற்பனை செய்வதற்கு முயற்சித்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் சமகிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த நிசாந்த பீரிஸ் என்ற வர்த்தகர் புதையல் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறி புராதன காலத்து புத்தர் சிலைகள் மூன்றினை கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு ஒரு கோடி 40 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்தவற்கு முயற்சித்துள்ளார். இது தொடர்பாக அநுராதபுரம் பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கு…

  14. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இன்று ஆரம்பமான 24வது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்காவில் தன்னை சந்தித்தவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார். இதையடுத்து உரையாற்றிய பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டதற்காக சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் சேம்பர்லைன் டோனஹே உரையாற்றும் போது, மனிதஉரிமைகள் விவகாரங்களை எதிர்கொள்வதற்கு, ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்கா…

  15. -எஸ்.கே.பிரசாத் வட மாகாணத்தில் ஐ.ஓ.சியின் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தின் ள நூணவில் பகுதியிலேயே இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/81839-2013-09-09-08-44-10.html

  16. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட காலப்பகுதியில் இந்தியாவின் உளவு பிரிவான றோ அவரை பின்தொடர்ந்ததாக தெரியவருகிறது என திவயின தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆணையாளர் சிறீலங்காவில் தெரிவித்த கருத்துகள் மற்றும் சந்தித்த நபர்கள் குறித்து ஆராய்வதற்காக இந்திய உளவு பிரிவு இலங்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆணையாளர் இலங்கைக்கு வந்த நாள் முதல் அவர் இலங்கையில் இருந்து வெளியேறும் நாள் வரை அவரது சகல நடவடிக்கைகள் குறித்தும் றோ தகவல்களை திரட்டியுள்ளது. கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் றோ புலனாய்வாளர்கள் அதிகளவான காலத்தை இலங்கையின் வடக்கில் செலவிட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் றோவின் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவரவி…

  17. முல்லைத்தீவு - விஸ்வமடு பொது நூலக வளாகத்தில் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் தங்கியிருப்பதால் இந்த நூலகத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இங்குள்ள மாணவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நூலகத்துடன் இணைந்ததாக சிறுவர் பூங்கா மற்றும் முன்பள்ளி என்பனவும் அமைந்திருக்கின்றன. இவற்றையும் சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் விஸ்வமடுவில் அமைந்துள்ள மேற்படி பொது நூலகத்தில் பல்துறைகளையும் சார்ந்த சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. இதனால், க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாண தரத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமது ஆய்வுத் தேடலை இங்கு மேற்கொள்ள இது பெரிதும் உதவியாக இருந்தது. மேலும் மே…

  18. காணாமற்போனோர் என எவரும் இல்லை என்று கூறும் அரசு, இறுதி போரில் இராணு வத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட மறுக்கின்றது. அரசின் இத்தகைய பதில்கள் இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளனவோ என்று சந்தேகப்பட வைக்கின்றன. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் நேற்று தெரி வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: "இலங்கையில் இரகசியத் தடுப்புமுகாம்கள் எங்கு இருக் கின்றன என்று பாதுகாப்புச் செயலர் சவால் விட்டுள்ளார். இது தெருவில் அப்பாவி மக்களை அச்சுறுத்தி விட்டு முடிந்தால் அதற் கெதிராக நடவடிக்கை எடுங்கள் என்று சண்டித்தனம் காட்டுவதற்கு ஒப்பானதாகும். வடக்கு, கிழக்கில் பலர் தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றனர். அ…

  19. மூன்று மாகாணங்களுக்குமான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. நாளை செவ்வாய்க் கிழமையும் வாக்களிப்பு நடைபெற உள்ளதாக தோ்தல்கள் உதவி ஆணையாளா் மொகமட் கூறினார். வாக்களிக்கத் தவறிய அரச ஊழியா்கள் எதிர்வரும் 12 ஆம் 13ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என்றும் உதவி தோ்தல்கள் ஆணையாளா் கூறினார். வடக்கு மத்திய வடமேல் மாகாணங்களுக்கான தோ்தல் இந்த மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இன்று தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96300/language/ta-IN/article.aspx

  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கன் புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கப்பட்டுள்ளார். இன்று காலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சத்தியலிங்கனின் ஆதரவாளர்களை வழிமறித்த கனகராயன்குளம் காவற்துறையினரும் புலனாய்வுப் பிரிவினரும் கடுமையான வாக்குவாதங்களின் பின்னர் வலுக்கட்டாயமாக அவரையும் ஆதரவாளர்களையும் காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்று 3 மணித்தியாலத்தின் பின் விடுவித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96301/language/ta-IN/article.aspx

  21. -எஸ்.கே.பிரசாத் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ஜோர்தான் கப்பல், தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்கப்பல் தற்போது இரும்புத் தேவைக்காக வெட்டப்பட்டு வருகின்றது. விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கப்பலை பார்க்கச் சென்ற பெருமளவான சுற்றுலாப் பயணிகள், முள்ளிவாய்க்கால் கப்பலடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அக்கப்பலுக்குச் செல்லும் பாதையில் வீதித் தடையொன்று போடப்பட்டு கப்பலடிக்குச் செல்லவிடாமல் படையினர் தடைசெய்துள்ளனர். இத்தடைகுறித்து படையினரிடம் கேட்டதற்கு, 'குறித்த கப்பலை தனியார் ஒருவருக்கு அரசாங்கம் விற்பனை செய்துள்ளதால் கப்பலில் இரும்புகள் வெட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று முதல் கப்பலடிக்கு வருவது தட…

  22. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சரணடைந்த புலிகளின் முக்கியஸ்த்தர்கள் மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களின் செல்லப்பிள்ளைகளாக உள்ளனர். தவிரவும் சரணடைந்த ஏனைய 12ஆயிரம் பேர்வரையிலான போராளிகள் புணர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர் என யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன், விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் பாப்பா, இளம்பரிதி, கலைபண்பாட்டுத் துறைப் பொறுப்பாளர் புதுவை ரத்தினது…

  23. இராணுவத்தினர் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயாராகவே இருக்கின்றனர் – தயா ரட்நாயக்க 08 செப்டம்பர் 2013 இராணுவத்தினர் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயாராகவே இருப்பதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தி;ல் வெளிநாட்டுப் படையினருடன் இணைந்து முப்படையினரும் விசேட பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர், 'கொர்மோரன்ட் ஸ்ட்ரைக் 4' என்ற பெயரில் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 11 – 23ம் திகதி வரையில் இந்த விசேட பயிற்சிகள் நடைபெறவுள்ளன. 2698 முப்படையைச் சேர்ந்தவர்களும், 40 வெளிநாட்டுப் படையினரும் இந்த பயிற்சியில்ஈடுபட…

  24. புலிகளின் 107 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர் 08 செப்டம்பர் 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் 107 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். நாளைய தினம் இந்தப் போராளிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதன்படி, இன்னமும் 232 முன்னாள் போராளிகள் மட்டுமே சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். வவுனியாவில் இந்த முன்னாள் போராளிகள் நாளைய தினம் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். குறித்த முன்னாள் போராளிகள் வெற்றிகரமாக தொழிற் பயிற்சிகளை முடித்துக் கொண்டுள்ளதாக மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். 11631 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கப்படையினரிடம் சரணடைந்திருந்தனர். இவர்களில் 232 பேர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், ஏனைய அனைவருக்கும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.