Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்களை கண்காணிக்குமாறு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கடமை புரியும் (The State Intelligence Service (SIS) officers at the BIA) அலுவலர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினூடாக ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமானநிலையத்தில் தரையிறங்கும் போது சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கும் தங்குமிட முகவரி கொழும்பு முகவரியாக வழங்கப்படுவதாகவும் எனினும் அவர்கள் தங்கும் முகவரி வேறு முகவரியாக அமைவதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் தரையிறங்கும் வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரி…

  2. சில மேற்கத்தைய நாடுகள் தமது நலனுடன் ஒத்துப்போகக்கூடிய இலங்கை அரசாங்கமொன்றை காண விரும்புகின்றது என பாது­காப்புச் செய­லாளர் கோட்டாபய ராஜ­பக்ஷ தெரி­வித்­தார். இதற்காக இலங்கையின் தலை விதியை அவை தீர்மானிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­தத்தைப் பர­வ­லாக்க மேற்­கொள்­ளப்­படும் முயற்சிகள் தொடர்பில் அர­சாங்கம் மிகுந்த அவ­தா­னத்­துடன் இருப்­ப­தாக பாது­காப்பு செய­லாளர் தெரி­வித்­தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்­ப­மா­கி­யுள்ள பாதுகாப்பு தொடர்­பான மூன்று நாள் சர்­வ­தேச கருத்­த­ரங்­கில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­த…

    • 4 replies
    • 443 views
  3. இந்திய சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா அசாரே இம்மாதம் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதனை அன்னா அசாரேவின் வழக்கறிஞரான மிலிந்த் பவார் இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளார். அசாரே இம்மாதம் கனடா மற்றும் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவருக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், அவருக்கு ஒழுங்கான பாதுகாப்பளிக்க வேண்டியது இந்திய மத்திய அரசின் கடமை எனவும் அன்னா அசாரேவின் வழக்கறிஞரான மிலிந்த் பவார் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=6851

    • 6 replies
    • 711 views
  4. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற “விதவைகள் முன்னணி” என்ற சுயேட்சைக் குழுவானது ஈ.டி.டி.பி ஒட்டுக்குழுவின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் களமிறக்கப்பட்ட பெண்கள் அமைப்பாகும். யாழ்.குடாநாட்டிலுள்ள விதவைகளின் வாக்குகளை திசை திருப்புவதற்காக இந்தப் பெண்கள் அணியை ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு களமிறக்கியுள்ளது என்று யாழ்ப்பாணத்திலுள்ள சங்கத24ன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை ஆண்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு ஆயிரக்கணக்கான விதவைகளை உருவாக்கியுள்ள டக்ளஸ் தேவாநந்தாவும் அவரின் ஈ.பி.டி.பி கட்சியும் இன்று அதே விதவைகளிடம் வாக்குகளைப் பெற்று வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கும் கனவுடன் விதவைகள் முன்னணி என…

  5. நவி பிள்ளையின் கருத்து ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 ஆகஸ்ட், 2013 - 17:56 ஜிஎம்டி மாற்று மீடியா வடிவில் இயக்க http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/08/3c0365d0_newdayanjayathilkevisit_130831_navipillaidayan_au_bb.mp3 மே 2009 காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து தர்க்கம் புரிந்தவர் தயான் ஜயதிலக்க ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவி பிள்ளையின் கருத்துக்கள் சர்வதேச சமூகத்தை வழிநடத்தும் என்று இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் எதேச்சாதிகாரப் பாதையில் செல்வாக நவி பிள்ளை வெளிப்படுத்தியக் கருத்து மிகச் சரியான அவதானிப்பு என்றும் அவரது இலங்கை விஜயம் சர்வதேச மிகப்பயனுள்…

  6. பழம் பெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவின் சப்பரத் திருவிழா நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது. யாழ்ப்பாணம் உட்பட வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என பலரும் இத்திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர். காவடி ஆட்டம், குதிரையாட்டம், தீப்பந்தம் விளையாட்டு போன்றனவற்றுடன் பாடசாலை மாணவர்களுடைய பயணையுடனும் சப்பரம் மாலை 6 மணியளவில் ஆலய வெளிவீதியுலா வந்தது இரவு 7 மணியளவில் இருப்பிடத்தினை அடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 7.30 மணிக்கு தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் கலந்து கொள்ள ஏராளமான அடியார்கள் வருகைதருவது வழக்கம். இந்நிலையில் தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்…

  7. 'இலங்கையிடம் 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை இந்தியா ஒப்படைத்தது. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழ்நிலை வேறு. தற்போது இருக்கும் சூழ்நிலை வேறு. அப்போது இலங்கை நம்மிடம் நட்புறவுடன் இருந்தது. தற்போது இலங்கை நம்மிடம் முன்பு போல் இல்லை. இந்த நிலையில் கச்சத்தீவை திரும்ப பெறுவது அவசியம்' என்று இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு விரோதமான செயல்களில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்திய மீனவர்கள் கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கச் சென்றால் அவர்களைக் கைது செய்வது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபடுகிறது. இந்த நிலையில் கச்சத்தீவை திரும்ப பெறுவது அவசியம். இது பற்றி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்…

  8. கொழும்பு டும்பிகேஷன் வீதி பம்பலப்பிட்டி முதல் லிப்டன் சுற்றுவட்டம் வரையில் அபிவிருத்தி செய்வதற்காக (பாதசாரிகள் நடப்பதற்கு கற்களை நட்டு, பூச்செடிகளை வைப்பதற்கு) பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் வேண்டுகோளுக்கமைய முன்வைக்கப்பட்ட அனுமதிப்பத்திரற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் மகிந்த ராஜபக்‌ஷவினால் முன்வைக்கப்பட்ட இந்த அனுமதிப் பத்திரத்திரத்தின் மதிப்பீடு 1032 மில்லியன் ரூபாவாகும். கொழும்பு மாநகரின் அபிவிருத்தி செயல்திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வீதியின் நீளம் 3.8 கிலோமீற்றராகும். இதற்கமைய ஒரு மீற்றர் நீளத்திற்கு 2.6 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. http://goldtamil.com/?p=7982

  9. தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டுமானால் சிங்கள அரசு முதலில் தேசியக் கொடியிலுள்ள வாளேந்திய சிங்கத்தை தூக்கி எறிந்து விட்டுச் சிறுத்தைப் புலியை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சூழலியலாளரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான பொ.ஐங்கர நேசன் தெரிவித்தார். புத்தூரில் நேற்று மாலை இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எங்கள் ஆயுதங்களைப் பறித்து தோற்கடித்த அரசு இப்போது வாக்கு ஆயுதத்தையும் அபிவிருத்தியைக் காட்டி எம்மைத் தோற்கடிக்கப் பார்க்கின்றது. இன்று இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வீதிப் புனரமைப்பு, கட்டடங்களும் அபிவிருத்தியா? இங்கு அபிவிருத்தி நடந்திருக்கு மானால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும…

  10. சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பில் வெளியிட்ட கருத்துகள், முற்றிலும் நியாயமற்ற – தவறான – பக்கசார்புடையவை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நவநீதம்பிள்ளையின் அறிக்கையின் தொனி மற்றும் பொருள் என்பன நடுநிலைமைக் குறைபாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார். கம்போடியாவிலும், யூகோஸ்லாவியாவிலும் போர் முடிந்து பல ஆண்டுகளாகியும் செய்யமுடியாத புனரமைப்புப் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் நான்கே ஆண்டுகளில் செய்திருப்பதாகவும், அதை நவநீதம்பிள்ளை கவனத…

  11. தம்புள்ளையில் உள்ள காளி கோயிலின் மூலவிக்கிரகம் நேற்று இரவு பௌத்த அடிப்படைவாதிகளால் எடுத்துச் செல்லப்பட்டு உடைத்தெறியப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட விக்கிரமகத்தின் பாகங்கள் வேறு இடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கோயில் மற்றும் அருகில் உள்ள பள்ளிவாசல் ஆகியவற்றை அகற்றவேண்டும் என்று அங்குள்ள பௌத்த விஹாராதிபதி தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளார் இதனையடுத்து குறித்த கோயில் நிர்வாகத்தினர் எதிர்வரும் 15ம் திகதி வரை தமக்கு அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத பௌத்த அடிப்படைவாதிகள் நேற்று இரவு விக்கிரகத்தை எடுத்து சென்று உடைத்துள்ளனர். ஏற்கனவே தம்புள்ளையில் உள்ள அம்மன் கோயிலும் பாதை சீரமைப்பின் நிமித்தம் அகற்றப்பட்டமை…

  12. இலங்கையின் வவுனியா பிரதேசத்திற்கான பிபிசி தமிழோசை செய்தியாளர், பொன்னையா மாணிக்கவாசகம், இன்று திங்கட்கிழமை, பயங்கரவாதப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால், விசாரணைக்காக அழைக்கப்பட்டார். பிபிசி தமிழோசைக்காக கடந்த சுமார் 15 ஆண்டுகளாக வட இலங்கையிலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மாணிக்கவாசகத்துக்கு, இந்த அழைப்பாணைக்கான காரணங்கள் குறித்து முன்னதாக அறிவிக்கப்படவில்லை. விசாரணையின் போது அவரது வழக்குரைஞர் உடன் இருக்கவும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. விசாரணையின்போது, மாணிக்கவாசகம் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு விசாரணைக்கைதிகளிடமிருந்து கடந்த சில மாதங்களில் வந்த சில கைத்தொலைபேசி அழைப்புகள், மற்றும் அவர் திரும்ப அவர்களுக்கு விடுத்த அழைப்புகள் பற்றி விசா…

  13. தேர்தல் வாக்குக்காக தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ். அத்துடன் எமது மக்களை மஹிந்தவிடம் அடிமைப்படுத்தும் வேலையையும் அவர் மேற் கொள்கிறார். தமிழினத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் இவர்களை ஆதரிக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிரசாரக் கூட்டம் புத்தூரில் நேற்றுத் திங்கட் கிழமை மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரி வித்ததாவது: எமது இனத்தின் இருப்பை முற்றாக அழிப்பதற்காகவே இராணுவம் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் எமது இனத்தை இல்லாதொழிக்கும் திட்டமிட…

    • 3 replies
    • 493 views
  14. கலதாரி ஹோட்டலில் நடைபெறும் பாதுகாப்பு கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியும் கலந்துகொண்டுள்ளார். இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இதில், தூதரகங்களின் இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் உட்பட வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். 'போருக்குப் பிந்திய ஸ்ரீலங்கா - சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்' என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில், 300 இற்கும் அதிகமானோர் பங்கு பற்றுவதாக இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/81235-2013-09-03-11-19-22.html பாதுகாப்பு தொடர்பான மூன்று நாள் சர்வதேச கருத்…

  15. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. Pics By:Joy jaya kumar யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே இத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ. விக்கினேஸ்வரன், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். வடமாகாண சபைத் த…

  16. நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டுமாக இருந்தால் சிங்கள அரசு முதலில் தேசியக் கொடியிலுள்ள வாளேந்திய சிங்கத்தை தூக்கி எறிந்து விட்டுச் சிறுத்தைப் புலியை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சூழலியலாளரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான பொ.ஐங்கர நேசன் தெரிவித்தார். புத்தூரில் நேற்று மாலை இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எங்கள் ஆயுதங்களைப் பறித்து தோற்கடித்த அரசு இப்போது வாக்கு ஆயுதத்தையும் அபிவிருத்தியைக் காட்டி எம்மைத் தோற்கடிக்கப் பார்க்கின்றது. இன்று இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வீதிப் புனரமைப்பு, கட்டடங்களும் அபிவிருத்தியா? இங்கு அபிவிருத்தி நடந்திருக்கு மானால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும். அ…

  17. தமிழீழ விடுதலைப் புலிகள் இன விடுதலைக்காக போராடியவர்கள்: நேபாளத்தின் பிரதமர் தமிழீழ விடுதலைப் புலிகள் உலகளாவிய ரீதியில் விடுதலைப் போராட்டங்களுக்கு முதன்மையாக திகழ்ந்தனர். அடக்குமுறைக்குட்பட்ட மக்களுக்கு கதாநாயகர்களாக திகழந்தார்கள். இவையெல்லாம், வெளிவந்த தகவல்கள். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார். இச்செய்தியை the himalayan times தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஒரு தசாப்த காலமாக நீடித்த கிளர்ச்சிகளின் போது புலிகளுடன் தொடர்புகளை பேணியதாகக் குறிப்பிட்டுள்ளார். நேபாள மாவோயிஸ்ட்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2008ம் ஆ…

  18. தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் உயிர்த்தியாகம் செய்த, தமிழர்கள் நினைவாக, தஞ்சாவூர் விளார் கிராமத்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவுச்சின்னத்துக்கு அருகில், தமிழ் அன்னையின் சிலை ஒன்றும் நிறுவப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க வேண்டும் என்று கோரி, ஈழத்தமிழர் ஆதரவு இயக்கத்தின் சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்பி வை…

  19. அவுஸ்திரேலியாவில் இருக்கும் Liberal Party நீண்ட காலமாக பாதுகபப்பை தேடிவரும் அகதிகளுக்கும், எங்களின் தூய்மையான விடுதலைப்போராட்டத்திற்கும் வெவ்வேறு வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். எதிர்கட்சியின் துணைத் தலைவர் Julie Bishop அவர்கள் சிறிலங்காவிற்கு சென்று வந்ததும் அங்கே தமிழர்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திவரும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் சிறிலங்காவை பாராட்டினார். ஆனால் எங்கள் மக்களுக்கு சிறிலங்கா அரசு தொடர்ந்தும் கொடுத்து வரும் பெரும் துயரங்களை நாங்கள் யாவரும் அறிவோம். பாதுகாப்பை தேடிவரும் தமிழீழ அகதிகளின் வரவை எதிர்ப்பவர்களின் வாக்கை தம் பக்கம் திருப்புவதற்காகவும். அவுஸ்திரேலிய ப…

  20. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கையில் நிரந்தரமாக ஸ்தாபிக்கப்படுவது அவசியமென கடந்த வாரம் வருகை தந்திருந்த மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையிடம் தமிழ்க் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நவநீதம்பிள்ளையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தமிழ்க் கூட்டமைப்பின் தூதுக் குழுவில் அங்கம் வகித்திருந்த விக்னேஸ்வரன் உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் தான் தெரியப்படுத்திய விடயங்கள் பற்றிக் குறிப்பிடும் போதே இலங்கையில் மனித உரிமைகள் பேரவையின் நிரந்தர கண்காணப்புக்குழுவின் பிரசன்னத்திற்கான தேவைபற்றி கோரிக்கை விடுத்ததாகக் கூறின…

  21. இலங்கையில் புகைத்தல் காரணமாக ஒரு நாளில் மட்டும் 54 பேர் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறாக வருடம் ஒன்றிற்கு 20,000 பேர் வரையானோர் உயிரிழப்பதாகவும் அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புகைத்தலுக்காக இலங்கை பிரஜைகள் நாள் ஒன்றுக்கு 210 மில்லியன் ரூபாவை செலவிடுகின்றனர். புகைத்தலினால் ஏற்படும் நோய்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்கை பெறுபவர்களுக்காக 12,000 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை 8 வகையான புற்றுநோய் மற்றும் கண் பார்வை கோளாறு என்பன புகைத்தலினால் ஏற்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=91857&category=TamilNews&language=tamil

  22. வட மாகாண சபை தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் இடம் பெறுவதனை வேட்பாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான மக்கள் இயக்கம் கஃபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் சட்ட விரோத ஆயுதப்பாவனை அதிகரித்துள்ளமையினால் வேட்பாளர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஆயுதக்குழுக்களிடமுள்ள ஆயுதங்களை பொலிஸார் களைந்து வேட்பாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.http://goldtamil.com/?p=7877

  23. தொல்பொருள் ஆய்வு எனக் கூறி இராணுவத்தினர் பௌத்த விகாரைகளை அமைக்கும் முயற்சி ஈடுபட்டு வருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அம்பாறை – தங்கவேலாயுத புரம் பகுதியில் இராணுவத்தினர் தொல் பொருள் ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்து அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அகழப்பட்ட இடங்களில் விஹாரை அமைப்பதற்கான அத்திவாரங்கள் இடப்பட்டுள்ளதாக தெரிவித்த கூட்டமைப்பின், தமிழர் கிராமமாக காணப்பட்ட தங்க வேலாயுத புரத்தை சிங்கள மயமாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்; மேலும் தகவல் தருகையில். குரல் பதிவு – அரியநேத்திரன். http://tamilworldtoday.com/home

    • 0 replies
    • 428 views
  24. அரசாங்கத்தையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்தையும் சீர்குலைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மாத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசின் பங்காளி என்றவகையில் அந்த பொறுப்பிலிருந்து தான் விலகபோவதில்லை என்றும் அவ்வாறான முயற்சியை யாராவது எடுப்பார்களாயின் உரிய நேரத்தில் பாடம் கற்பிப்பதற்கு தன்னுடைய கட்சிக்கு முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசிற்கும் எங்களுடைய கட்சிக்கும் இடையிலான உறவை புரிந்துகொள்ளாத சில அமைச்சர்கள் தன்னுடைய கட்சியை அரசாங்கத்திலிருந்து தூக்கிவீசுவதற்கு முயற்சித்தாலும் அந…

  25. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு கடந்த வாரம் வரலாறு காணாத வகையில் சரிவடைந்ததை தொடர்ந்து, இந்த நிலை தொடர்ந்தும் நிலவும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மதிப்பிறக்கம் இலங்கையில் மட்டும் நிலவும் ஒரு விடயமல்ல எனவும், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தின் பலம் பொருந்திய பொருளாதார சூழ்நிலைகள் நிலவும் நாடுகளிலும் சம காலத்தில் காணப்படும் விடயமாக அமைந்துள்ளதென அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இந்த மதிப்பிறக்கத்துக்கு காரணம், அமெரிக்காவின் வட்டி வீதங்கள் எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளமையாகும் என அறிவிக்கப்படுகிறது. இந்த மதிப்பிறக்கத்தை தவிர்க்கக்கூடிய வகையில் இலங்கை மத்திய வங்கி நாணய மாற்று பெறுமதிகளில் தலையீட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும், நீண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.