Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பிரதம அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் நேற்று யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றிய அராஜகத்தின் மூலமாக தனக்கு இருந்த சிறியளவிலான செல்வாக்கையும் இழந்து விட்டார் என்று யாழ்.குடாநாட்டு மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த தாக்குதலை தாங்கள் மிக வன்மையாக கண்டிப்பதாகவும் இந்த சம்பவத்தை சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரியுள்ளனர். அராஜகங்கள் மூலமாக அரசியல் செய்கின்ற எவரையுமே நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அங்கஜனின் தந்தையான இராமநாதன் தலைமையிலான குண்டர் படை கூட்டமைப்பு மீது…

  2. ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் தமிழினத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்துவதாகவும் தயாரிக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியீடு செய்து தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்த வேண்டாம் என்று யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை சம்பாதிக்க வேண்டாம் என்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசிடம் மிகவும் விநயமாக நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் கபே திரைப்படத்தை இயக்கி ந…

  3. தமிழகர்களின் நியாமான விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நியாப்படுத்தி மதராஸ் கபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கிணங்க சென்னை திரையரங்கு ஒன்றில் 18.08.2013 அன்று அப்படம் திரைப்படப்பட்டது. இப் படத்தை பார்த்த தமிழ் அமைப்புக்கள் சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது. என கருத்து வெளியிட்டு உள்ளனர் .இதே வேளையில் மெட்ராஸ் கபே திரைப்படத்தை லண்டனில் சினி வேல்ட் திரையரங்கில் 23.08.2013 அன்று திரையிட திட்டமிட்டுள்ளார்கள். அதனால் மெட்ராஸ் கபே திரைப்படத்தை எதிர்த்து முற்…

  4. இலங்கை அரசின் சதியின் பின்புலத்தில், தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் 'மெட்ராஸ் கஃபே' என்ற திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளதோடு தமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் ஆகஸ்டு மாதம் 23 ம் திகதி திரையிடவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்படுவதை தமிழகத்தில் உள்ள தமிழர்கள் வன்மையாகக் கண்டித்து மாபெரும் மக்கள் எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்நிலையில் கனடிய மண்ணிலும் மற்றய புலம் பெயர் தேசங்களில் எல்லாம் எதிர் வரும் ஆகஸ்ட் 23 ம் திகதி இத்திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக கேள்விப்படும் நாம் இதனை வன்மையாக கண்டித்து …

  5. தமிழக அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஈழத்தமிழ் மாணவர்களை ஊக்குவித்து உறுதுணை வழங்கும் நிகழ்வொன்று இடம்பெறுள்ளது. தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழ் பெற்றோர்களின் பிள்ளைகளான இம்மாணவர்கள் தமிழக அரசுப் 1012ம் வகுப்பு ஆண்டுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்ணை பெற்றிருந்தனர் இம்மாணவர்களை மதிப்பளிக்கும் பொருட்டு அரண் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வரங்கில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையப் பிரதிநதி பேராசிரியர் சரசுவதி அவர்கள் பங்கெடுத்து, அம்மாணவர்களுக்கு விருதுகளை வழங்கியிருந்ததோடு கருத்துரையினையும் வழங்கியுள்ளார். இம்மாணவர்களுக்கு தந்தை பெரியார் நினைவு விருதை நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களும் .தேசத்தின் குரல் அன்ரன் பாலச…

  6. நான் சர்வாதிகாரி கிடையாது – ஜனாதிபதி தாம் ஒர் சர்வாதிகாரி கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ஆட்சியின் வாழ்ந்து வரும் பலரே தமக்கு எதிராக சர்வாதிகாரி என்ற பட்டத்தை சூட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வாதிகாரி என தம்மை குற்றம் சுமத்தக் கூடிய அளவிற்கு கருத்துச் சுதந்திரம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதற்காக தம்மை சர்வாதிகாரி என அழைக்கின்றார்கள் என்பது புரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் பகிரங்கமான முறையில் தம்மை சர்வாதிகாரி என அழைக்கின்றார்கள் என்பது புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். …

    • 2 replies
    • 645 views
  7. யாழ்ப்பாணத்திற்கு இன்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பிரதிநிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆகியோர் கலந்துரையாடுவதையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் ஈ.சரவணபவன், ஐக்கிய தேசியக்கட்சியின் முதன்மை வேட்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் ஆகியோரையும் படங்களில் காணலாம். (படங்கள்: எஸ்.கே.பிரசாத்) http://tamil.dailymirror.lk/--main/79681-2013-08-21-09-13-31.ht…

  8. தமிழ் இனம் மீண்டும் எழுச்சி காணும் காலம் விரைவில் வரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் நீதியரசருமான சீ.பி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில். வடக்கு மாகாணசபையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சையமாக வெற்றிகொள்ளும். ஆனாலும் அதில் 3 இல் 2 பெரும்பான்மையுடன் வெற்றி கொள்வதே தற்போதை காலத்தின் தேவையாக உள்ளது. காலத்திற்கு காலம் தமிழர்கள் பல்வேறுபட்ட அழிவுகளைச் சந்தித்து வந்துள்ளனர். ஆனாலும் நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டு எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. எமக்கே…

    • 1 reply
    • 556 views
  9. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு நாளை விஜயம் செய்யவிருக்கின்றார். இருத்தரப்பு உறவுகள் மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்கே அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/79597-2013-08-21-05-24-39.html

  10. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் தனது கருணை மனு குறித்து பல்வேறு விவரங்களைக் கோரியுள்ளார். வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் மாநிலத் தகவல் ஆணையத்திடம் தனது கருணை மனு குறித்து பல்வேறு விவரங்களைக் அவர் இன்று கோரியுள்ளார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் லீனா மேரி ஜார்ஜ் என்ற ஆராய்ச்சியாளருக்கு தன்னை சிறையில் பேட்டி எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன் எனவும் தான் தெரிந்து கொள்ள விரும்புவதாக கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் அறையிலிருந்தே காணொளி இணைப்பின் மூலம் மாநிலத் தகவல் ஆணையருடன் இன்று காலை தொடர்பு கொண்டு பல்வேறு தகவல்களை அவர் க…

  11. யுத்தத்தின் காரணமாக சேதமாக்கப்பட்ட மக்களின் வாகனங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் யாழ். விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த வாகனங்களை அவர் காணமுடியாத வகையில் தற்போது மறைப்புச்செய்யப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அந்த மக்கள் தமது சகல உடமைகளையும் இழந்து இடம் பெயர்ந்து சென்றனர். யுத்தத்தின் பின் அந்த மக்கள் மீண்டும் அந்த மண்ணில் குடி…

  12. கனடாவில் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை. கனடா டொரன்டோவில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் கிளை ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் நாம் பங்கேற்றிருந்தோம். அதில் 500 பேர் வரையில் கலந்துகொண்டிருந்தனர். நான் பேசி முடிந்ததும் அவர்கள் எழுந்துநின்ற எனது பேச்சுக்கு வரவேற்பளித்தனர். அந்தச் சந்திப்பில் நாடுகடந்தவர்கள் இருந்தார்களா அல்லது நாடு கடக்காதவர்கள் இருந்தார்களா என்பது குறித்து எமக்குத் தெரியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். கனடா சென்றுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி…

  13. கண்டி, கல்ஹின்னையில் அமைச்சர் ரவூப் ஹகீமினால் திறந்து வைக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி அலுவலகம் மீது நேற்று தாக்குதல் ஒன்று நடந்ததாக கண்டி மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் உவைஸ் ரஸான் தெரிவித்தார். அலுவலகத்திற்குள் புகுந்த சுமார் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று அலுவலகத்தை தாக்கிதாகவும் அப்போது அங்கிருந்த தனது சகோதரரான மொஹமட் சியான் என்பவர் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்தார். காயமடைந்தவர் அங்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் உவைஸ் ரஸான் மேலும் தெரிவித்தார். இத் தாக்குதலின் போது அலுவலகத்திலிருந்த உடைமைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இக் காரியாலயத்தை …

  14. சுமார் 3,000ற்கு மேற்பட்டோர் ஊவா மாகாணத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகினர். எனினும் அடுத்த ஆறு தொடக்கம் பத்து மாதங்களிற்குள் அவர்களில் பலர் இறக்கலாம் என ஊவா மாகாண சுகாதார அமைச்சு அச்சம் வெளியிட்டுள்ளது. சுமார் 3,000 பேர் சிறுநீரக நோயிற்காக ஊவா மாகாணத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் இவர்களின் வாழ்கை அபாய நிலையில் உள்ளது என மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பென்வெல தெரிவித்தார். இந்த நோய் ஆசனிக், பூச்சி கொல்லி மற்றும் இரசாயன உரம் போன்றவற்றின் பாவனையினால் ஏற்படுகின்றது என வைத்தியர்கள், பல்கலைக்கழ பேராசிரியர்கள் மற்றும் சுகாதார அ…

  15. "மெட்ராஸ் காபே" திரைப்படத்தை திருச்சியில் தடை செய்ய கோரி நாம் தமிழர் அமைப்பினர் இன்று காலை (21.08.2013) நடைபயணமாக சென்று மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் மனு கொடுத்ததோடு திரைப்படத்தை வெளியிட்டால் கடுமையான போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துச் சென்னறனர். http://www.seithy.com/breifNews.php?newsID=90734&category=TamilNews&language=tamil

  16. திருகோணமலை மாபில்பீச் பகுதியில் உள்ள படையினர் விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த விமானப்படை கொப்ரால் இன்று (21) பகல் உயிரிழந்துள்ளார். திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் என்டி விஜேசூரிய தெரிவித்தார். காலி - கரந்தெனியவைச் சேர்ந்த 30 வயதான மதுரகுமார பிரியதர்ஷன என்ற விமானப்படை கொப்ராலே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தான் காதலித்த விமானப்படை வீராங்கனை இன்னுமொரு விமானப்படை வீரருடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த விமானப்படை கொப்ரால் வீராங்கனை மீது துப்பாக்கிச்சூடு நடாத்தி தானும் சுட்டுக் கொண்டார். அதில் குறித்த வீராங்கனையும் அவருக்கு அருகில் நின்ற மற்றுமொரு விமானப்படை வீரரும் …

  17. அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை வெளியேற்ற கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிலுள்ள கச்சைக்கொடி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள அரச காணிகளில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை வெளியேற்றக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் புத்த பிக்கு ஒருவரும் இராணுவத்தினரும் இணைந்தே சிங்கள குடியேற்றத்தை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத காணி சுவீகரிப்பை நிறுத்து, அரச அதிகாரிகளே நில ஆக்கிரமிப்பை நிறுத்துங்கள், ஆளுநரே காணி ஆக்கிரமிப்புக்கு ஆணையிடாதே, சமாதானம் என்ன சாத்தான் ஆக்கிரமிப்பா போன்ற வாசகங்களை ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்ட…

  18. இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காணப்பட்டிருந்தால் நாம் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டிருக்காது. உள்நாட்டில் ஏமாற்றப்பட்டமையினாலேயே நாம் வெளிநாடுகளுக்குச் சென்று பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசவேண்டியுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். வடக்கில் இருப்பவர்கள் கனடா, இந்தியா உட்பட வெளிநாடுகளில் சென்று பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். இதனால் எதுவும் நடக்காது. எமது உள்நாட்டுப் பிரச்சினையை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் பேசித் தீர்க்க வேண்டும். இதனை கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் செயற்படவேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் நுவரெலியாவில் நடைபெற்…

  19. அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகப் பயணித்த மற்றுமொரு படகு நேற்றுக் கடலில் மூழ்கியுள்ளது. இப் படகிலிருந்து 106 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து 120 கிலோ மீற்றர் கடல் மைல் தொலைவிலேயே இப்படகு மூழ்கியிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று மூழ்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சுங்கப் பிரிவினரின் விமானங்களும், அவுஸ்திரேலிய கடற்படையினரின் கப்பலொன்றும் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. படகில் பயணித்தவர்களில் இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், படகிலிருந்தவர்…

  20. நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள தாய்லாந்து மற்றும் ஜப்பான் நாட்டு இளவரசிகள் தலதாமாளிகைக்கு சென்று வழிபாடுகளிலில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோருடன் சென்றே வழிபாடுகளில் ஈடுபட்டனர். தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி சிரிந்தோரன் மற்றும் ஜப்பான் இளவரசி சுகுகோ ஆகியோரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymirror.lk/--main/79567-2013-08-20-13-11-43.html

  21. யுத்தத்தின் காரணமாக சேதமாக்கப்பட்ட மக்களின் வாகனங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் இடம் பெறவுள்ள நிலையில் குறித்த வாகனங்களை அவர் காணமுடியாத வகையில் தற்போது மறைப்புச்செய்யப்பட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,, வன்னியில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக அந்த மக்கள் தமது சகல உடமைகளையும் இழந்து இடம் பெயர்ந்து சென்றனர். யுத்தத்தின் பின் அந்த மக்கள் மீண்டும் …

  22. போர்க்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று காரணம் காட்டி, சிறிலங்காவின் இரண்டு மூத்த மேஜர் ஜெனரல்களை, பயிற்சிக்கு ஏற்றுக் கொள்ள அமெரிக்கா மறுத்துள்ளது. மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மற்றும் இராணுவச் செயலர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஆகியோரையே, நியூசிலாந்தின் ஓக்லாந்தில் நடத்தவுள்ள இராணுவப் பயிற்சிக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. வரும் செப்ரெம்பர் 9ம் நாள் ஆரம்பமாகவுள்ள பசுபிக் இராணுவ முகாமைத்துவக் கருத்தரங்கிற்கு அனுப்புவதற்கு, சிறிலங்கா இராணுவத் தலைமையகம், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மற்றும் இராணுவச் செயலர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, வன்னிப் படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஆகியோரின் பெயர்களைப் பரிந்துரை செய்திருந்தது. …

  23. செய்தி : ஜே.எம்.ஹபீஸ்) ஜப்பான் இளவரசி இத்சூபுகோ இன்று கண்டியில் வரலாற்றுப் புகழ் மிக்க எசல பெரஹராவைப் பார்வையிட உள்ளார். நான்கு நாள் சுற்றுலாவில் இலங்கை வந்துள்ள இளவரசி ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். அத்துடன் அனுராதபுரம், பொலன்னருவை போன்ற இடங்களுக்கும் சென்று சமய கலாச்சார விடயங்கள் பலவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வார். படங்கள் உதவி : லங்காதீப - See more at: http://madawalanews.com/news/regional-news/7693#sthash.TBuCy1Bj.dpuf ............ஏதோ நம்மாள முடிஞ்சது

  24. கொட்டகலை, கொமசல் பிரதேசத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம், ராஜதுறை மற்றும் தொழிலாளர் தேசிய சங்க வேட்பாளர் சிறிதரன் ஆகியோர் ஹட்டன் நோக்கி பயணித்த வாகனம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னதாக அப்பிரதேசத்தில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்க வேட்பாளர் சிறிதரனுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வாகனத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களே தம்மை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. …

  25. மஹியங்கனை, மகாவலி ரஜமகா விகாரையின் விகாராதிபதியும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வடரேக விஜித தேரர் மீது இனம் தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. மஹியங்கணையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்தபோது கெப், முச்சக்கரவண்டிகளில் வந்தவர்களால் பிலிமத்தலாவ பிரதேசத்தில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த வடரேக விஜித தேரர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கேசரிக்கு கருத்து வெளியிட்டார். 18ஆவது வளைவிலிருந்து தன்னை தொடர்ந்து வந்த குழுவினர் பொது பல சேனாவைப் பற்றி தான் விமர்சித்ததாக கூறி தன்மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.அத்துடன் தாக்குதல் நடத்த வந்தவர்கள் கண்டி பொது பல சே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.