ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
தீவிர தமிழீழ ஆதரவாளரும் தமிழினப் பற்றாளரும் திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான் அவர்களிற்கு வரும் எட்டாம் நாள் சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கான நாள் மிக நெருக்கமாக அண்மித்துள்ள நிலையில் திருமண ஏற்பாடுகளில் பரபரத்து காணப்படுகின்றது இருவீடும். திருமண ஏற்பாடுகள் ஒருபக்கம் அரசியல் பணி மறுபக்கமாக பரபரப்பாக இருந்த சீமான் அவர்களை சந்தித்தோம். உலகத் தமிழர்களிடம் உங்கள் வீட்டுப் பிள்ளையாக அறிமுகமாகி நெருக்கமான நம்பிக்கையான ஒருவராகிவிட்ட செந்தமிழன் சீமான் ஈழதேசம் இணையம் ஊடாக உலகத் தமிழர்களிற்கு தனது திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். அன்பின் அழைப்பு! பெருமதிப்பிற்கும், பேரன்பிற்குமுரிய தங்களுக்கு… செந்…
-
- 80 replies
- 6.5k views
-
-
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், காணாமற்போனதாகவும், சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச ஐ.நாவுக்கு சவால் விடுத்துள்ளார். சிறிலங்கா படையினர் மீது போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் ஐ.நாவும் ஏனைய தரப்பினரும் அதற்கான அடிப்படை ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தமாத இறுதியில் சிறிலங்காவுக்கு வரும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், சிறிலங்கா அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதாரமாக அமைந்த தரவுகளை தாமதமின்…
-
- 3 replies
- 802 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் தமது சொந்த நுட்பங்களையே பயன்படுத்தியதாக இராணுவத் தளபதி லொப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். திருகோணமலையில் நேற்றிரவு நடைபெற்ற கடற்படை மற்றும் கடல்சார் நிறுவனத்தின் புதிய அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், போரின் போது முன்னேற்றங்ளும், பின்னடைவுகளும் இருந்தன. எதிரிகளுக்கு ஏற்ப தாக்குதல் வியூங்களை கையாண்டோம். நாம் ஒரு வட்டத்திற்குள் இருந்து சிந்தித்து, எமது முறைகளை கண்டுப்பிடித்து அதன் அடிப்படையில் வெற்றி பெற்றோம். போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ளது. அதன் பின்னர் பல ஆச்சரியமான மாற்றங்கள் ஏற்ப…
-
- 5 replies
- 747 views
-
-
கொழும்பு மாநகரசபையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள், பொரளை பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவலறிந்த மாநகரசபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், மயானத்துக்கு விரைந்து தீக்கிரையாக்காப்பட்ட ஆவணங்களில் சிலவற்றை மீட்டு வந்துள்ளனர். 2007ஆம் ஆண்டும் முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகரசபையிலிருந்து திருடப்பட்டுள்ள இந்த ஆவணங்கள், அங்கிருந்து பொரளை பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள…
-
- 2 replies
- 320 views
-
-
விக்கினேஸ்வரனுக்கு சற்றும் சளைத்தவரில்லையாம் தவ(றான)ராசா – ஈபிடிபி சனிக்கிழமை, ஆவணி 3, 2013 2:10 pm ஜனதிபதி மகிந்தவின் வேண்டுகோளை (எச்சரிக்கை?)அடுத்து தனது முதலமைச்சர் பதவியை துாரப்போட்ட டக்ளஸ் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சின்னத்துரை தவராசா என்பவரை நியமித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.அவர்குறித்த பதிவு ஒன்றை ஈபிடிபி வெளியிட்டுள்ளது.அதனை கீழே தருகின்றோம். ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் இவர். ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட முற்போக்கு புத்திஜீவியாக மிளிர்ந்தவர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மூலம் நாடாளுமன்ற அரசியலில் பிரவேசித்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உ…
-
- 10 replies
- 1.5k views
-
-
திருகோணமலை - மாபல்பீச் பகுதியில் உள்ள விடுமுறை விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விமானப் படையில் பணி புரியும் பெண் ஒருவரும் விமானப்படை வீரர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். இலங்கை விமானப் படையினால் நடத்திச் செல்லப்படும் விடுமுறை விடுதியிலேயே இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானப்படை கொப்ரால் ஒருவர் குறித்த இருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் வின்கமான்டர் என்டி விஜேசூரிய தெரிவித்தார். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர் விமானப்படை கொப்ரால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் திருகோணமலை வைத்தியச…
-
- 4 replies
- 529 views
-
-
நெடுந்தீவில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஒரு சாதாரண விடையம். என்ன கொலையா நடந்து விட்டது. இதனைப் ஏன் வீனாக பெரிது படுத்துகின்றீர்கள் என்று அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான சுசில் பிரேமஜெயந்த ஊடகவியலாளர்களிடம் கேள்வியேழுப்பியுள்ளார். நெடுந்தீவில் உள்ளவர்களில் 90 வீதமும் ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவாளர்கள் ஆனால் மேற்படித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பி கட்சிக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் எவர் ஏறுக்குமாறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். யாழ்.வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. மேற்படிச் சந்திப்பில் அமை…
-
- 5 replies
- 592 views
-
-
மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்றும் அதற்கெதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் சூளுரைக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில், இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரனை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே, இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகை…
-
- 4 replies
- 573 views
-
-
தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி சிரிந்தோரன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடைந்தார். (படஙகள் : தீப அதிகாரி) http://tamil.dailymirror.lk/--main/79315-2013-08-19-04-34-26.html
-
- 12 replies
- 1.6k views
-
-
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கனடா உள்ளிட்ட எந்த ஒரு பொதுநலவாய நாடும் புறக்கணிக்காது என மாநாட்டின் செயற்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த மாநாட்டுகக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, பொதுநலவாய நாடுகளின் செயற்குழு பணிப்பாளர் ரிச்சர்ட் உக்கு உள்ளிட்ட, 17 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிச்சர்ட் உக்கு, இந்த முறை இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் எந்த ஒருநாடும் இதனை புறக்கணிக்காது என தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு, இந்த மாநாட்டை கனடா புறக்கணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. எனினும் கனடாவும் இந்த ம…
-
- 2 replies
- 527 views
-
-
யாழ். பொலிஸ் நிலையத் திற்கென நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத் தொகுதியில் வேலைபார்த்து வந்த தென்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை அடித்துக் கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதியரை கைது செய்துள்ளதாக யாழ். சிறு குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு எல்.விக்கிரம ராச்சி தெரிவித்தார். விழுந்து காயங்களுக்குள்ளாகியதாக கூறி யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த குருநாகல் பகுதியைச் சேர்ந்த அப்புஹாமி நிஷாந்த (வயது - 42) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நபரின் உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி, குறித்த நபரின் கையில் வெட்டுக் …
-
- 0 replies
- 446 views
-
-
காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நாவின் விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழில் கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. காணாமல்போனோரைக் கண்டறியும் குழு, காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு ஆகியன உட்பட மேலும் சில சிவில் அமைப்புகள் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையையாட்டி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இப்போராட்டம் நடைபெறும். இதன் பின்னர் காணாமல் போனோர் தொடர்பிலான 13 கோரிக்கைகள் அடங்கிய மனு நவநீதம்பிள்ளையிடம் கையளிக்கப்படும் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர் எஸ்.மகேந்திரன் தெரிவித்தார். இதில் எழிலனின் மன…
-
- 0 replies
- 318 views
-
-
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எந்தவொரு நாடும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை புறக்கணிக்காது பொதுநலவாய நாடுகள் செயலகம் அறிவித்துள்ளது. எந்தவொரு நாடும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை புறக்கணிக்கும் என எதிர்பார்க்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். அமர்வுகளுக்கான ஏற்பாடுகளை குறித்த தரப்பினர் கண்காணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அமர்வில் பங்கேற்கும் என எதிர்பார்ப்பதாக பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ரிச்சர்டு; உக்கு தெரிவித்துள்ளார். உண்…
-
- 0 replies
- 590 views
-
-
வடமராட்சிப் பகுதியில் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வடமராட்சி வதிரிப் பகுதியில் வலிகமாகம் தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினரும், வடக்குமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் கஜதீபன் என்பவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே மேற்படித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. குறித்த பகுதியில் நேற்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் போது அப்பகுதிக்குச் சென்ற தமிழ் தேச…
-
- 1 reply
- 742 views
-
-
சர்வதேச மனித நேய அமைப்புகள் அனைத்தும் சிறி லங்காவில் இந்த மாநாட்டை நடாத்த வேண்டாம் என்று பொதுநலவாயா நாடுகளின் அரசுகளுக்கு தமது அதிர்ப்தியை தெரிவித்து இருக்கும் நிலையில், தமிழ் நாடு எங்கும் இந்த மாநாட்டில் இந்திய கலந்து கொல்ல கூடாது என்ற குரலும், தமிழ்நாட்டு முதல் அமைச்சர் சிறி லங்காவை நட்பு நாடு அல்ல என்று இந்தியா அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் நிலையில் புலம்பெயர் தமிழ் மக்களும் பொதுநலவாயா மாநாடு சிறி லங்காவில் நடப்பது 'சர்வதேசத்திலில் இனவாதத்தை வளர்க்கவும், சர்வதேச சட்டங்களை எல்லோரும் மீராளாம், சர்வதேச சட்டங்களை எந்த நாடும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்பதை வலியுறுத்துவது போலாகும். சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் அதில் பொதுநலவாயா நாடுகள் உ…
-
- 1 reply
- 254 views
-
-
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் பலர் இந்து மதத்தவர்கள் செய்ய தயங்கும் கலாச்சார நடைமுறைகளை மிக நேர்த்தியாக செய்து வருகின்றனர். யாழ் நல்லூர் கந்தன் ஆலயவ வருடாந்த மஹோற்சவத்தில் வெளியாட்டு பெண்கள் பலர் சாறி உடுத்து வருவதை காணக்கூடியதாக இருப்பதுடன் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருனாரத்ன உடபட பல பொலிசார் இந்து முறைப்படி வேட்டி உடுத்து கொண்டு ஆலயத்திற்கு வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அது மட்டுமல்லாது வெளிநாட்டில் வசிங்கும் பல குடும்பங்கள் நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் படையெடுத்துள்ளதுடன் இம்முறை பாடசாலை விடுமுறை காலத்தில் திருவிழா நடைபெறுவதால் அதிகமான தென்பகுதி சிங்கள, முஸ்லீம்களும் ஆலயத்திற்கு தினம் தினம் வர…
-
- 5 replies
- 2.6k views
-
-
திருகோணமலையில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் இன்று கலந்துறையாடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீம் அப்துல் மஜீத் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டிருந்தனர். இதற்கமைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு தேவையான சகல வசதிகளும் கொண்டதாக புதிய கிரிகெட் விளையாட்டரங்கு திருகோணமலையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. http…
-
- 1 reply
- 327 views
-
-
வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான திட்டமிடல் குழுவொன்றை அவசர அவசரமாக உருவாக்கியுள்ளது. வடக்கு மாகாணத்தின் நிர்வாக மையமாக மாங்குளத்தையும், கலாசார மையமாக யாழ்ப்பாணத்தையும், வர்த்தக மையமாக கிளிநொச்சியையும், துறைமுக நகராக மன்னாரையும் அபிவிருத்தி செய்யும் வகையில், திட்டங்களை வகுப்பதற்காகவே வடக்கு மாகாண தேசிய பௌதிக திட்டமிடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லையில் உள்ள நகரஅபிவிருத்தி அமைச்சின் செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, நடந்த கூட்டத்திலேயே இந்தக் குழு ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறிலங்கா அமைச்சர் வீமல் வீரவன்ச, வடக்கு மாகாண ஆளுனர் ஜி.ஏ. சந்திரசிறி, வீடமைப்பு அமைச்சின…
-
- 2 replies
- 635 views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்க நைஜீரியாவிற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளித்துள்ளது. நிரந்தரமற்ற ஆசனமொன்றை பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி குட்லக் ஜொனதன் தலைமையிலான நைஜீரிய அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது. நைஜீரியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அனுர லியனகே, ஜனாதிபதி குட்லக் ஜொனதனை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் ஆசனம் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு இலங்கை ஆதரவளிக்க அளித்துள்ள உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியது என குட்லக் ஜொனதன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் நைஜீரிய ஜனாதிபதி குட்லக்கின் பிரசன்னத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக இலங்கை உயர்ஸ்தானிகர் அனுர லியனகே கு…
-
- 2 replies
- 317 views
-
-
எதிர்வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ள மெட்ராஸ் கபே படத்திற்கு தடை விதிக்குமாறு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்தப் படத்தை எதிர்ப்பவர்களுக்காக அதனை திரையிட்டுக் காட்டத் தயார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஜான் ஆபிரஹாம் அறிவித்துள்ளார். இப்படம் எழுப்பிய சர்ச்சை குறித்து பேசிய அப்படத்தின் இயக்குனர் ஷூஜித் சர்கார், மெட்ராஸ் கபே ஒரு ஆவணப்படம் கிடையாது, 90களில் இருந்த யாழ்ப்பாணத்தை களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட, ஒரு இரகசிய உளவாளியின் கதை என்று கூறியுள்ளார். ஹிந்தி, தமிழ் மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே படத்தின் முக்கிய நடிகர்கள் தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமானவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தப் படம் விடுதலைப் புலிகளை கொ…
-
- 3 replies
- 893 views
-
-
தமிழர்கள் செறிவாக வாழும் கனடா மற்றும் பிரித்தானியா நாடுகளுக்கு வருகை வருகை தந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களான சம்பந்தனும் சுமந்திரன் ஆகியோர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்கு, சிறிலங்கா அரசு உடன் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. சர்�வ�தே�சத்தில் தமி�ழீழ போராட்�டத்தை பல்�வேறு வழி�களில் புலம்பெயர் தமிழர்கள் முன்�னெ�டுக்�கின்�றனர் என்றும், நாடு கடந்த தமி�ழீழ அரசை அமைத்துக் கொண்டு சிறிலங்காவுக்கு எதி�ராக பல்வேறு செயற்�பா�டு�க�ளை மேற்கொள்கின்றனர் என சிறிலங்காவின் இராணுவ ஜெனரல் ஜகத்�சூ�ரிய தெரிவித்திருந்த நிலையில், குறித்த சிங்கள பௌத…
-
- 5 replies
- 849 views
-
-
ஈழத்தில் இருந்து ஒரு குரல் நெடுந்தீவு எங்கள் கோட்டை. “இதற்குள் எவனடா வந்தவன்” ஈபிடீபி கொலை வெறியாட்டம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தீவகத்திற்கான ஒரேயொரு வேட்பாளராக 12ம் இலக்கத்தில் போட்டியிடும் யாழ் மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களை ஆதரித்து நெடுந்தீவில் அவரது ஆதரவாளர்கள் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபோது.. ... நெடுந்தீவு மேற்கு ஒற்றைப் பனையடி என்றவிடத்தில் நேற்று மதியம் EPDP ஐச் சேர்ந்த சுதன் மோகனதாஸ் என்பவர்கள் துண்டுப் பிரசுரங்களைப் பறித்துக் கிழித்திருக்கிறார்கள். பின்னர் இரவு நேரம் நெடுந்தீவுப் பிரதேச சபையின் சிவப்பு நிற .NP. 253-5112 என்ற இலக்கம் கொண்ட பிக்கப் வாகனத்தில் வந்த பிரதேச சபைத் தலைவர் ரஜீப், ஈபிடீபி சுதன், மோகனதாஸ் , எட்வேட் ர…
-
- 16 replies
- 981 views
-
-
சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரக அலுவலகம் முன்பு மாணவர் அமைப்பினர் நன்றி தெரிவிக்க கூடினர். சிங்கப்பூர் பிரதமர், ராஜபக்ஷே இல்ங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்தது உண்மைதான் என்று சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், இது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும், மாணவர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் சிங்கப்பூர் பிரதமருக்கு, சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் மூலம் நன்றி தெரிவிக்கவே கூடியுள்ளோம் என்றும் கூறியுள்ளனர். மேலும் தூதரக மக்கள் தொடர்பு அதிகாரியிடம், சிங்கப்பூர் பிரதமருக்கு, தமிழக மாணவர் அமைப்பு நன்றி தெரிவித்ததாகவும் கூறியதோடு, எம் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்ந்து, ராஜபக்ஷேவிற்கு எதிராக சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ள கருத்துக்கள் தங…
-
- 4 replies
- 556 views
-
-
இலங்கையில், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நேரில் அழைப்பு விடுக்கவிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. புதுடில்லிக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்யவிருக்கின்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸே அழைப்பிதழை வழங்கவிருக்கின்றார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், உலக நாடுகள் பங்கேற்கும் இக்கூட்டத்தை அரசியல் காரணங்களைக் கூறி தவிர்க்கக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=903…
-
- 1 reply
- 317 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக விடுதலைப்புலிகளின் முன்னால் போராளி எழிலனின் மனைவி ஆனந்தி தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார். இம்மாதம் வருகை தரவுள்ள நவநீதம்பிள்ளையை அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது ஒரு குறிப்பிட்ட சில நேரம் காணமல்போனவர்கள் உறவுகளைச் சந்திக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தின் சாட்சியமாக நாங்கள் இருப்பதால் காணமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவரின் நேரடிக்கவனத்திற்கு கொண்டு வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?…
-
- 11 replies
- 1.3k views
-