Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலைக்கு 24 மணித்தியால நீர் வெட்டு திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை புதன்கிழமை (14) காலை 8 மணிமுதல் நாளை மறுதினம் வியாழக்கிழமை (15) காலை எட்டு 8 மணி வரையான 24 மணித்தியாலய நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் திருகோணமலை முகாமையாளர் கே.வாசுதேவன் தெரிவித்தார். நீர் சுத்திகரிப்பு விஸ்தரிப்பு பணிகள் காரணமாக இந் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. திருகோணமலை நகரம், கிண்ணியா, தம்பலகாமம், குச்சவெளி, கந்தளாய், மூதுார் ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=43250

    • 0 replies
    • 320 views
  2. வடமாகாணசபை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட போதிலும் யாழ்ப்பாணம் உட்பட சகல மாவட்டங்களிலும் தமிழ் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மந்தநிலையிலேயே காணப்படுவதாக அங்குள்ள உள்ளுர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=27751

    • 0 replies
    • 497 views
  3. ஜூலை 12 ஆம் திகதி ஞானசார தேரர் மஹியங்கனை விகாரையில் பேச்சுவார்த்தை - பின்னர் பள்ளிவாசல் மீது தாக்குதல் - பன்றி இறைச்சி வீச்சு ஒரு முஸ்லிம் வணக்கஸ்தலத்தையாவது தமது அமைப்பு உடைத்தது என்பதை உறுதிப்படுத்தினால், தனது காவி உடையை கழற்றி விட்டு, இராணுவத்தில் இணைந்து கொள்ள போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார் எனவும் தற்போது ஞானசார தேரர் அதனை செய்வதற்கான காலம் கனிந்துள்ளதாகவும் மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் மகாவலி மகா விகாரையின் விகாரதிபதியுமான வட்டரெக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார். மலையக முஸ்லிம் பேரவை ஏற்பாடு செய்திருந்த வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி ஞானசார தே…

  4. அர­சாங்­கமும் இரா­ணு­வமும் அரங்­கேற்றும் காடைத்­த­னமான நாடகமே நாவற்­குழி விகாரை மீதான தாக்­குதல்:சுரேஷ் யாழ். நாவற்­கு­ழியில் விகாரை மீதான கைக்­குண்டுத் தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இரா­ணு­வத்­தி­னரே உள்­ளனர் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். இந்தக் கைக்­குண்டுத் தாக்­குதல் இரா­ணுவப் பிர­சன்­னத்தை நியா­யப்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் திட்­ட­மிட்ட நாடகம் எனவும் இந்தத் தாக்­கு­தலை கண்­டிப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். ஜன­நா­யக வேட­மிட்டு அர­சாங்­கமும் அதன் இரா­ணு­வமும் அரங்­கேற்றும் காடைத்­த­னங்­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார். நாவற்­குழ…

    • 0 replies
    • 311 views
  5. அரசாங்கம் : இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாட்டின் எந்த பகுதிக்கு செல்லும் எந்த தரப்பை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அதற்கு எந்த தடைகளும் இல்லை எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்வதில் எந்த தடையுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் அமைதி, சுதந்திரமான சூழ்நிலைகள் குறித்து நேரடியாக கண்டறிவதற்காக மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். அவர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை செல்லும…

    • 2 replies
    • 590 views
  6. யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இடைப்போக வெங்காயப் பயிர்ச்செய்கையில் வெங்காய உண்மை விதை நாற்று மூலம் 130 ஹெக்ரேயர் நிலப்பரப்பளவில் வெங்காயப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருட காலபோக வெங்காயப் பயிர்ச்செய்கையின்போது நிலவிய காலநிலை மாற்றம், வெள்ளப்பெருக்கு போன்ற காரணிகளால் 65 வீதத்திற்கு மேல் சேதமடைந்து தப்பிப் பிழைத்த வெங்காயமும் பிடியாக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்ட நிலையில் கணிசமான அளவு குமிழ் அழுகி சேதமடைந்துள்ளது. இந்த நிலைமைகளினால் குடாநாட்டில் விதை வெங்காயத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு என்றுமில்லாத அளவு விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலமையில் உண்மை வெங்காய விதையை பயன்படுத்தி உற்பத்திசெய்யப்பட்ட வெங்காய நாற்று மூலம் வெங்காயப் பயிர்ச்செய்கை ம…

  7. யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரி அதிபரின் வீடு திருடர்களால் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த ஆடி அமாவாசைத் தினத்தன்று நிகழ்ந்துள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, அதிபரும் அவரது மனைவியும் புன்னாலைக்கட்டுவனில் உள்ள வீட்டில் வாழ்கின்ற நிலையில், அதிபரின் மனைவி புத்தூருக்கு சொந்த விடயமாக சென்றவேளை திருடர்களால் கதவுகள் உடைக்கப்பட்டு பெருமளவான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. ஆயினும் தமது வீடு உடைக்கப்பட்டு திருடப்பட்டு விட்ட நிலையிலும் தமது வீட்டுக்குச் சென்று பார்வையிட முடியாத நிலையில் இருப்பதாக அதிபர் தெரிவித்துள்ளார். அவர் தற்போது க.பொ.த உயர்தர பரீட்சை நிலைய இணைப்பாளராக கடமையாற்றுவதால் திருட்டுச் சம்பவம் குறித்து தன்னால் சென்று பார்வையிட முடியாதுள்ளதா…

  8. கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் திருப்தியளிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அக்கட்சியின் உயர் மட்டக் குழு ஒன்று நேற்று கூடி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தமது கட்சியினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இக் கூட்டத்தின் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். எனினும் அவ் விசாரணைகள் திருப்தியளிப்பதாக அவர் குறிப்பிட்டார். http://www.pathivu.com/ne…

  9. வெலிவேரிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. வெலிவேரிய மற்றும் கிராண்ட்பாஸ் சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. துரித கதியில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அனைத்து இலங்கையர்களினதும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ம் திகதி வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தனர். ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் …

  10. வடக்கில் படைக்குறைப்பு காரை நகரில் அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் பம்மாத்து 35ஏகர் நில அபகரிப்போடு அம்பலமாகியது - படைத்தளத்திற்கு நில ஆக்கிரமிப்பு மறுபுறம் வடக்கில் படைக்குறைப்பு பற்றிய பெரும் பிரச்சாரங்களை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் சுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பினை ஆக்கிரமித்து பாரிய இராணுவத்தளமொன்று காரை நகரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. பொதுமக்களது காணிகள் மற்றும் காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளென இதற்கென ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. காரைநகரின் பிரபல கசூரினா கடற்கரை ஓரமாக வரலாற்று பெருமை மிக்க ஈழத்து சிதம்பரம் ஆலயத்தை அண்மித்த சூழலில் இப்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த கடற்கரையி…

  11. யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறையின் சித்திரமும் வடிவமைப்புத் துறை மாணவர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த துறையின் கல்விச் செயற்பாடுகள் கடந்த 23ம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், இன்றுடன் 20 நாட்களாகியும் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை காலமும் இணைப்பாளராக பணியாற்றி வந்தவர் பதவி விலகியதைத் தொடர்ந்து இப்பிரச்சனை எழுத்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் மேலும் இப்பிரச்னைக்கு கூடிய விரைவில் தீர்வு ஒன்று வழங்கப்படும் என நிர்வாகத்தினர் இன்று காலை க…

  12. சிறிலங்காவிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்கியதாக வெளியான செய்திகளை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நிராகரித்துள்ளார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அன்ரனி நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் முப்படைகளுக்காக, ரஸ்யா, இஸ்ரேல், பிரித்தானியா, அமெரிக்கா, சுலோவாக்கியா, போலந்து, பின்லாந்து, சிறிலங்கா ஆகிய நாடுகளில் இருந்து 23.5 பில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் பிரிஐ செய்தி நிறுவனம் மற்றும், ஊடகங்கள் பலவும் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன. இது பொய்ச்செய்தி என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஒருபோதும் இந…

    • 4 replies
    • 509 views
  13. ஈழத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவே நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாண சபையானது இனப்பிரச்சினைக்காக தீர்வாக அமையாது எனவும் இந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலானது தமிழ் மக்களின் அரசியலை மேலும் முன்னேற்றும் ஒரு களமாக அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.http://goldtamil.com/?p=6433

  14. யாருமே இல்லாத கடையில் மூன்றாவது முறையும் 'ரீ' ஆத்திக்காட்டும் புத்திசாலித்தனத்துடன் மகிந்த & co வின் அரசியலமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு கடந்தவாரம் கூடியிருந்தது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=27713

    • 0 replies
    • 434 views
  15. பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுப்பதன் ஊடாகவும் இதய சுத்தியுடன் அரசுடன் பேசுவதன் மூலமுமே அரசியல் தீர்வை உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் பிரசார அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். - See more at: http://www.thinakkural.lk/article.php?local/owzcrmhxwj4711b52340b4de10640cww4c4566b804c9880aa0b4af5fndixu#sthash.OX2U1u7M.dpuf

  16. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு தேர்தல் அறிவிப்பின் பின்னராக ஆள்பிடிக்கும் நடவடிக்கைகளை அரசு வடக்கிலும் முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே ஜக்கிய தேசியக்கட்சி பிரபலமொன்றை யாழ்ப்பாணத்திலும் தேர்தலில் களமிறக்கியிருக்கும் ஆளும் தரப்பு மறுபுறத்தே கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களது தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிற்கு வலை வீசி வருகின்றது. இவ்வகையில் சுன்னாகம் பிரதேச சபை உறுப்பினரொருவர் இன்று ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து பத்திரிகையாளர் மாநாட்டினையும் நடத்தியுள்ளார். கூட்டமைப்பில் மாகாண சபையில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த த.சிவகுமார் எனும் குறித்த கூட்டமைப்பு சார்பு பிரதேச சபை உறுப்பினர் தாம் அரசுடன் இணைந்து வழைமை போன்று மக்களிற்க…

  17. விடுதலைப் புலிகள் இயக்கம் 34 நாடுகளில் தடை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தவர் லக்ஸ்மன் கதிர்காமர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் 8ம் ஆண்டு நினைவு நிகழ்வும் அவரது உருவச்சிலை திறப்பும் நேற்று கொழும்பில் நடைபெற்றது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், “வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களை மட்டும் முதன்மைப்படுத்தி தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. வரலாறு தொட்டே சிறிலங்காவின் ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதா…

    • 3 replies
    • 414 views
  18. சிறிலங்கா கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கான உரிமையை, சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாரிய இழுவைப் படகுகள் மூலம் சீன நிறுவனம் சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு உரிமை வழங்கும் இந்த உடன்பாட்டில், சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவே கையெழுத்திட்டுள்ளார். இந்த சீன நிறுவனம் 40 பாரிய இழுவைப் படகுகளை சிறிலங்கா கடற்பரப்பில், மீன்பிடிக்கப் பயன்படுத்தவுள்ளது. சீன இழுவைப் படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீனில் 10 சதவீதம் மட்டும், சிறிலங்கா கடற்றொழில் திணைக்களத்துக்கு வழங்கப்படும். எஞ்சிய 90 சதவீத மீன், சீன நிறுவனத்துக்கே சொந்தமாகும். அதேவேளை, சீன நிறுவனத்துக்கு…

    • 2 replies
    • 241 views
  19. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியாவை கலந்துகொல்லுமாறு அழைப்பு விடுப்பதற்காகவே அவர் இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின்போது இரு தரப்பு உறவு குறித்தும் இந்திய அரச தலைவர்களுடன் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளக்கூடாது என இந்தியாவிலுள்ள சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (த ஹிந்து) http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/78709-2013-08-13-13-29-01.html

    • 1 reply
    • 358 views
  20. குளோபல் தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் புதிய பிரதமா் ஒருவரை நியமிப்பது தொடா்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினா்களுடன் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகின்றது. அமைச்சா்களான பேராசியரியா் ஜி.எல.பீரிஸ் நிமல்சிறிபால டி சில்வா, பசில் ரஜபக்ச ஆகியோரின் பெயா்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. புதிய பிரமா் தொடா்பாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அரசாங்கம் ஆலோசித்து வரும் நிலையில் இன்னனும் முடிவுகள் எடுக்கப்படவில்லை. தற்போதைய பிரதமா் டி.எம்.ஜயரட்ன அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இந்த ஆண்டு தை மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனாலும் புதியதாக ஒருவா் தொிவாகும் வரை அவரை பிரதமாராக தொடர்ந்து பதவி வகிக்குமாறு ஜனாதிபதி கேட்டிருந…

    • 3 replies
    • 462 views
  21. மறைந்த வெளிவிகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமரின் எட்டாவது நினைவு தினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கொழும்பு – 07இலுள்ள லக்ஷமன் கதிர்காமர் நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவரின் உருவச் சிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது. (படங்கள்: பிரதீப் டில்ருக்ஷன) http://tamil.dailymirror.lk/--main/78527-2013-08-12-11-24-18.html

    • 13 replies
    • 635 views
  22. பதில் பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் அலரி மாளிகையில் பதில் பிரதம நீதியரசராக ஸ்ரீபவான் சத்தியப்பிரமானம் செய்துள்ளார். பிரதம நீதியரசா் மொஹான் பீரிஸ் வெளிநாடு சென்றமையினால் ஸ்ரீபவான் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது. சத்தியப்பிரமான நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளா் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95223/language/ta-IN/article.aspx

    • 2 replies
    • 577 views
  23. கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக இந்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி எழுத்து மூலம் நேற்று அளித்த பதில் ஒன்றிலேயே, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவின் முப்படைகளுக்கும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயுதங்களை வாங்குவதற்கு 2.35 இலட்சம் கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ரஸ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா, போலந்து, சுலோவாக்கியா, பின்லாந்து, சிறிலங்கா ஆகிய நாடுகளில் இருந்தே இந்த ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன. ரஸ்யாவில் இருந்தே ஆகக் கூடுதலாக, ஒரு இ…

    • 1 reply
    • 312 views
  24. இந்தியா, இலங்கையிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் இலங்கையிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்திய பாராளுமன்றம் இந்தத் தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ரஸ்யா, இலங்கை, அமெரிக்கா, போலந்து, ஸ்லோவாக்கியா, பிரித்தானியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிடமிருந்து முப்படையினர் ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆன்டனி தெரிவித்துள்ளார். கோடிக்கணகக்hன ரூபா பெறுமதியான ஆயுதங்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. ரஸ்யாவிடமிருந்து பாரியளவில் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, இலங்கையிடமிருந்து எவ்வாறான ஆயுதங்கள் எவ்வளவு ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கொள்…

    • 2 replies
    • 590 views
  25. காலி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் என கடற்படை தெரிவித்துள்ளது. கரையிலிருந்து 220 மைல் தொலைவில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். 26 பெண்கள், 27 ஆண்கள் உட்பட 35 சிறுவர்கள் இவர்களில் அடங்குகின்றனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றபுலனாய்வுபிரிவினரிடம் ஒப்படைக்கப்ப்பட்டனர். இவர்கள் கடலிலிருந்து பாதுகாப்புடன் படையினரால் அழைத்து வரப்பட்டனர். கூடுதலான சிறுவர்கள் இருந்தமையினால் படகினை வேகமாக செலுத்த முடியாத நிலைகாணப்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களை கரைக்கு எடுத்து வர கூடுதலான நேரம் அவசியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவர்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.