ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
வடக்கில் உருவாகியுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கொண்டு வரவிருந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பாக ஆளுந்தரப்பு எம்.பி.ஏ.எச்.எம்.அஸ்வர் எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினையால் நேற்று வியாழக்கிழமை சபை நடவடிக்கைகள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியினால் 10 நிமிடங்களுக்கு இடை நிறுத்தப்பட்டன. பாராளுமன்றத்தில் நேற்று வடக்கில் உருவாகியுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தன் எம்.பி. சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை விவாதத்திற்கு சமர்ப்பிக்க முற்பட்ட போது ஒழுங்குப் பிரச்சினை கிளப்பிய அஸ்வர் எம்.பி.இவ்விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் 177/201…
-
- 0 replies
- 436 views
-
-
சிறிலங்காவில் ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியே இடம்பெறுகின்றது என்று மேல் மாகாண சபை உறுப்பினரான நிரோன் பாதுக்க தெரிவித்துள்ளார். மகிந்த ஹிட்லரைப் போன்றே ஆட்சி செய்து வருகின்றார். ஹிட்லர் அன்று நீதி கேட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு வதைத்துத் துன்புறுத்தியதைப் போன்றே மகிந்த தண்ணீர் கேட்ட மக்களை இரணுவத்தைக் கொண்டு அடக்கியுள்ளார். இராணுவம் வெற்றியடைய வேண்டும் என்று போதி பூஜை செய்து பிரித் ஓதி சமய வழிபாடுகளில் ஈடுபட்ட மக்களை அதே இராணுவமே சுட்டுக்கொன்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இராஜகிரியவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நிரோன் பாதுக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவி…
-
- 1 reply
- 439 views
-
-
மத்தல மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவையை விஸ்தரித்து பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது. அம்பாந்தோட்டை - மத்தல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் மத்தல விமான நிலையத்தின் ஊடாக இலங்கை செல்லும் விமானக் கட்டணங்களை குறைத்துள்ளது. இதேவேளை எமிரேட்ஸ், கல்ஃப் எயார் போன்ற வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களின் விமானங்களை மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கவும் அங்கு நிறுத்திவைப்…
-
- 0 replies
- 210 views
-
-
சிறீலங்காவில் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களை கட்டுப்படுத்த நீதித்துறையை வலுப்படுத்த வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்படுகிறது.சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் 30 ஆண்டுகள் பழமையானவை என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாட்சியங்கள் தொடர்பான சட்டங்களும் ஒரு நூற்றாண்டு பழமையானது என பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.உத்தேச சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உலகின் ஏனைய நாடுகளைப் போன…
-
- 1 reply
- 437 views
-
-
நாளை முதல் மூன்று நாட்களுக்கு பர்சீட் எனப்படும் எரிகல் பொழிவை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிட்டவுள்ளது. இதில் எதிர்வரும் 13ஆம் திகதி ஒரு மணித்தியாலத்திற்குள் சுமார் 50 எரிகற்களை காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வானம் தெளிவாக இருந்தால் நள்ளிரவு தொடக்கம் அதிகாலை வரை வடகீழ் வான் பரப்பில் பர்சீட் எரிகல் பொழிவை காண முடியும் என கலாநிதி காவன் ரத்னதுங்க தெரிவித்துள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=810942227709768609
-
- 0 replies
- 398 views
-
-
பொத்துவில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவுக்குட்பட்ட அறுகம்பை உல்லாச புரியில் பிரசித்தி பெற்ற உணவகமொன்று நேற்று தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- உல்லை அறுகம்பையில் உல்லாச விடுதியும் உணவகமும் நடத்திவரும் முஹம்மது சாஜஹான் என்பவரின் வை நொட் எனும் உணவகம் இனந்தெரியாத விஷமிகளால் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.உணவகத்தின் கூரை மற்றும் உணவகத்தின் பல முக்கிய தளபாடங்களும் சம்பவத்தில் அழிந்துள்ளன. பொத்துவில் குற்றத்தடுப்பு பொலிஸார் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். http://www.sankathi24.com/news/32174/64//d,fullart.aspx
-
- 1 reply
- 400 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகங்கள் இரண்டு இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. இது பற்றி மேலும் கடந்த 4ம் தேதி கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயர் பலகையை அகற்றி விட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாவட்டத் தலைமைச் செயலகம் கிளிநொச்சி என்ற பெயரப் பலகை மாட்டப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கி வந்த இடத்திலும் மறு நாளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட அலுவலகம் என்றிருந்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாவட்டத் தலைமைச் செயலகம் கிளிநொச்சி என்ற பெயர்ப் பலகை திறக்…
-
- 3 replies
- 416 views
-
-
நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலை நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் நடாத்துவதன் மூலம் வடக்கு மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்ள முடியும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=27045
-
- 1 reply
- 367 views
-
-
கம்பஹா, வெலிவேரிய பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி ஏற்பட்ட சம்பவத்தைப் போல, நாடு முழுவதும் அரசாங்கத்திற்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடும் என அரசாங்கப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களுக்கமைய மீண்டும் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிவேரிய சம்பவம் குறித்து விசாரணைகள் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளை திட்டமிட்டு இழுத்தடிப்புச் செய்வதற்கான முயற்சிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்காரணமாக வெலிவேரிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆயுதங்களுக்குப் பதிலாக வேறு ஆயுதங்களே …
-
- 1 reply
- 720 views
-
-
வடக்கு கிழக்கு காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் புதல்வரது காணிகள் உள்ளிட்ட காணிகளை அரசாங்கம் சுவீகரித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சம்பூரில் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் கிழக்கு மக்களுக்கு வாக்குறுதி அளித்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95030/languag…
-
- 1 reply
- 618 views
-
-
(கிளிநொச்சி.ஆகஸ்ட்-8) கிளிநொச்சி ஜெயபுரம் கிராம மக்கள், பூநகரியின் திக்குவில் செம்மங்குன்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட மரமுந்திரிகைத் தோப்பை அடிப்படையாகக் கொண்டு தமக்குத் தொழில் வாய்ப்பை வழங்குமாறு, ஜனாதிபதியிடம் மனுவொன்றையும் சமர்ப்பித்துள்ளனர். இந்த மனுவில் 1983ம் ஆண்டு ஜெயபுரம் குடியேற்றத் திட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து தொழில் வாய்ப்புக்கள் இல்லாதவர்களாக இப் பிரதேச மக்கள் காணப்படுகின்றனர். இங்குள்ள மக்களுக்கு வயல் நிலங்கள் கூட வழங்கப்படவில்லை. சுமார், 448 குடும்பங்கள் வசித்து வருகின்ற இக் கிராமத்தில், மரமுந்திரிகைச் செய்கையை அடிப்படையாகக் கொண்டு தொழில் வாய்ப்பை உருவாக்கித் தாருங்கள் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேற்படி மரமுந்திரிகை காணி ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பரப…
-
- 0 replies
- 360 views
-
-
முத்தையா காணி திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் வினாயகபுரம் 35 ஏக்கர் நிலத்தை தமிழ் அரசியல்வாதிகளின் உதவியுடன் அபகரிப்புக்கு எதிராக திருக்கோவில் பிரதேச சபை நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதாக அதன் தவிசாளர் தெரிவிக்கின்றார். காணி உரிமையாளர்கள் 1978 ஆண்டு அவுஸ்ரேலியா சென்றுவிட்டார்கள். நீண்ட காலத்திற்கு கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருக்கு அதன் உரிமைகள் கைமாற்றம் (pழறநச ழக யவவழசநெல வழங்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைமாற்றம் செய்யப்பட்ட காணி, காணியில்லாத அப்பகுதி தமிழ் மக்களுக்கு ஒரு பகுதி பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பேரழிவினால் சிலர் இறந்து விட்டார்கள். அத்துடன், அக்காணி…
-
- 1 reply
- 711 views
-
-
மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் அராபியர்களால் சொல்லொணாத் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு சித்திரவதைக்குள்ளானவர்கள் ஒருவரேனும் வாராந்தம் இலங்கைக்கு வந்தவண்ணமே உள்ளனர். இந்த வரிசையில் நேற்று முந்தினம் மாத்தளை மடவள பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் மிகவும் சித்திர வதைக்குள்ளான நிலையில் இலங்கை திரும்பி மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த பெண், தன்னை அடித்து துன்புறுத்திய எஜமானர்கள் தனது தலைமுடியை வெட்டியதாகவும் பல நாட்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு கூட அனுமதிக்க வில்லை என்றும் குறிப்பிடுகின்றார். அத்துடன் தனக்கான ஊதியத்தை 2 மாதங்களாகியும் வழங்காத நிலையில் ஊதியம் கேட்டபோது இ…
-
- 0 replies
- 349 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் காவல்துறையினர் படையினர் மற்றும் கடற் படையினர் ஆகியோர் இணைந்த ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களில் இந்த ரோந்து நடவடிக்கைள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் தொடர்பில் அவதானிப்பதற்காகவே இந்த ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரையோரங்களிலுள்ள விடுதிகளில் தங்குபவர்கள் நடமாடுபவர்கள் வெளிப் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்து கடற்கரை ஓரங்களில் காணப்படுபவர்கள் தொடர்பில் ரோந்து செல்லும் பாதுகாப்பு படையினர் அவதானம் செலுத்தி வருகின்றனர். அண்மை காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்க…
-
- 0 replies
- 292 views
-
-
ஊர்காவற்றுறைப் காவல்துறையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு இன்றுவரை அடையாளம் காணப்படாத இரு பெண்களின் சடலங்களையும் அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்தியாசாலைப் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.ஸ்ரீபவானந்தராசா நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார். சிறுமியின் சடலம் ஒன்றும் பெண்ணொருவரின் சடலமும் கடந்த ஜீலை மாதம் 31 ஆம் திகதி மேற்படி காவல்துறையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் யாழ்.தீவகம் வேலணையிலுள்ள கடற்கரைகளில் கரையொதுங்கிய சடலங்களே மேற்படி இரண்டு சடலங்களுமாகும். இவர்கள் யார், இவர்கள் எங்கே சென்றபோது உயிரிழந்தார்கள் என்ற எந்தவொரு விபரங்களும் தெரியவரவ…
-
- 0 replies
- 487 views
-
-
வடக்கு, மத்திய மற்றும் வட மேல் மாகாண சபை தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதனை தேர்தல்கள் செயலக சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் தொடர்பான அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அஞ்சல் மூல வாக்களிப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை இந்த மாதம் 15 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. அஞ்சல் மூல வாக்காளர் அட்டை அடங்கிய பாதுகாப்பு பொதி இந்த மாதம் 22 ஆம் திகதி அஞ்சலகத்திடம் கையளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வன்னியில் துணை சிவில் பாதுகாப்புக் குழுக்களிற்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறி நடத்தப்படவிர…
-
- 0 replies
- 299 views
-
-
போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டு 3 வருடங்கள் கடந்தபின்பேனும் தாம் வாழ்வதற்கு ஒருவீடு அமைத்துவிட வேண்டும் என்ற அவாவுடன் இந்தியன் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமதுமணல் தேவையினை பெற்றுக்கொள்ள மக்கள் மணல் ஏற்றுவதை இராணுவத்தினர் தடுத்து அடாவடித்தனம் செய்வதோடு இலஞ்சம் கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட முக்கொம்பன் 150வீட்டுதிட்டம், 65வீட்டுத்திட்டம் மிதுசன், செக்காலை, கண்ணகை புரம் கிழக்கு, கண்ணகைபுரம் மத்தி, கண்ணகைபுரம் மேற்கு போன்ற மிகவறுமைப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களில் மணல் தேவையினை பூர்த்தி செய்ய யாழ்ப்பாணம், கொழும்பு என்று செல்லவேண்டி உள்ளதுடன் இவ்வாறு சென்று பெற்றுவரும் அனுமதியில் மாதம் 250 ட்ரக்ரர்லோட் அனுமதி மட்டுமே வழங்க…
-
- 0 replies
- 305 views
-
-
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் ஆதரவாளர்களினால் ஒட்டப்படுகின்ற சுவரொட்டிகளை மற்றும் துண்டுபிரசுரங்களை அகற்றும் நடவடிக்கையில் படையினரும் காவல்துறையினரும் மும்மூரமாக ஈடுபட்டுள்ளார்கள். வடமாகாண தேர்தலில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களினதும சுவரொட்டிகள் அண்மைய நாட்களாக ஆதரவாளர்களினால் பரவலாக ஒட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிராக சிறீலாங்காஅரசின் சிறீலங்கா சுதந்திர மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் சுவரொட்டிகளை ஒட்டுகின்றன எனினும் தற்போது அவற்றை அகற்றும் நடவடிக்கையில் படையினரும் சிறீலங்கா காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளார்கள். தமிழ்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்களின் சுவரொட்டிகளே கிழித்தெறியப்பட்டும் கழிவு எண்ணைய் பூசப்பட…
-
- 1 reply
- 406 views
-
-
யாழ். நல்லூர் ஆலய சூழலில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் முழுமையாகத் தடை செய்யப் பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அ. அச்சுதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது நல்லூர் ஆலயத்தின் வருடார்ந்த உற்சவம் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் இடம்பெறவுள்ளன. இக்காலக்கட்டத்தில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பிரசாரங்கள் செய்வது சுவரொட்டிகள் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற செயற்பாடுளில் ஈடுபடுதல் தடை செய்யப்பட்டுள்ளது.இதனை மீறிச் செயற்படுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டநடவெடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பிரதேசம் வணக்கத்துக்கரிய பிரதேசம் என்பதால் மேற்படி செயற்பாடுகள்…
-
- 1 reply
- 300 views
-
-
தேசிய கீதம் இசைக்கப்படாமைக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு தெற்கு துறைமுக ஆரம்ப நிகழ்வுகளின் போது என்ன காரணத்திற்காக தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டியது கட்டாயம் என்ற போதிலும்இ இந்த நிகழ்வின் போது தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீன அழுத்தங்கள் காரணமாக தேசிய கீதம் இசைக்கப்படவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிகழ்வின் போது இலங்கை தேசியக் கொடிகளை விடவும் அதிகளவில் சீனத்தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை…
-
- 5 replies
- 870 views
-
-
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வரும் 18ம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் நொவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கையளிப்பதற்கே, ஒரு நாள் பயணமாக அவர் புதுடெல்லி செல்லவுள்ளார். அந்த அழைப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டாலும், கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து அவர் பின்னரே முடிவெடுப்பார் என்று புதுடெல்லித் தகவல்கள் கூறுகின்றன. கொமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்சிங் பற்கேற்பதா இல்லையா என்பது, ஐ.நா.மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறிலங்கா பயணத்தை அடுத்து அளிக்கவுள்ள அறிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள…
-
- 2 replies
- 425 views
-
-
டீ.சீ.டீ என்றழைக்கப்படும் டய்சைனைட் டயமைட் எனும் நச்சு இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பால்மா மாதிரிகளை இரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தீர்மானித்துள்ளார். இதேவேளை, டீ.சீ.டீ நச்சு இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பால்மா வகைகளை விற்பனை நிலையங்களிலிருந்து உடனடியாக அகற்றுமாறு உரிய பால்மா நிறுவனங்களுக்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இதற்கமைய, மெலிபன், பொஃன்டெரா மற்றும் பி.எம்.மொஹமட் அலி ஆகிய நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அங்கர் 1+, அங்கர் முழு ஆடைப் பால்மா, மெலிபன், டயமன்ட் பால்மா ஆகிய பால்மா வகைகளே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. …
-
- 2 replies
- 1k views
-
-
தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் ஆகியோர் இன்று காலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனா். கனடாவில் உள்ள பொது அமைப்பு ஒன்றின் அழைப்பில் அங்கு செல்லும் அவா்கள் வடமாகாண சபைத் தோ்தல் தொடா்பாக கனடாவில் வாழும் தமிழா்களுக்கு விளக்கமளிப்பா் என்றும் கனடா அரச அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும் கூட்டமைப்பு தகவல்கள் கூறுகின்றன. கனடா பயணத்தை முடியத்துக் கொண்டு அவா்கள் அமெரிக்காவுக்கும் செல்லவுள்ளனா் என கூறப்படுகின்றது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95015/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 647 views
-
-
காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் வடக்கில் மாநில அரசு உருவாகும் - பிரதமர் [Thursday, 2013-08-08 15:15:48] வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதானது, வடக்கில் மாநில அரசாங்கம் ஒன்று உருவாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகும் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகம் ஒன்றை கம்பளையில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாட்டன், முப்பாட்டன்மார் பாதுகாத்து கொடுத்த தாய் நாட்டை எந்த சந்தர்ப்பத்திலும் இரண்டாக பிரித்து வேறுபடுத்தப் போவதில்லை. பௌத்த மத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் 2 ஆயிரத்து 557 வருடங்கள் பேணி பாதுகாத்த இந்த நாட்டை துண்டுகளாக பிளவுப்படுத்த வெளிநா…
-
- 1 reply
- 363 views
-
-
வடக்கில் ஜனநாயக தேர்தலா? இராணுவத் தேர்தலா? டி.எம்.சுவாமிநாதன் கேள்வி! [Thursday, 2013-08-08 16:53:04] அரசாங்கம் வடமாகாண சபைத் தேர்தலினை ஜனநாயக தேர்தலாக நடத்தப் போகின்றதா அல்லது இராணுவத் தேர்தலாக நடத்தப் போகின்றதா என்பதே எமது கேள்வி, தமிழ் மக்களுக்கு சுதந்திரமான ஒரு ஆட்சி வேண்டுமெனில் ஐக்கிய தேசியக் கட்சியோடு ஒன்றிணையுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்தார். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் செய்த தவறினை இம் முறை வடமாகாண சபைத் தேர்தலிலும் செய்யமாட்டார்கள். இலங்கைக்கு சிறந்ததொரு ஆட்சியினை அமைக்க தமிழ் மக்கள் ஒன்றிணைவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஐக்கிய …
-
- 1 reply
- 400 views
-