ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரையும் இராணுவம் அச்சுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. குறித்த வேட்பாளரின் பிரத்தியேக தகவல்களை இராணுவம் தற்போது சேகரித்து வருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதனைத்தவிர, மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களின் விபரங்களையும் இராணுவம் தற்போது சேகரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர்களின் பிள்ளைகளது பெயர் விபரங்கள், அவர்கள் கல்வி பயிலும் பாடசாலை தொடர்பான விபரங்கள் ஆகியவற்றையும் இராணுவம் சேகரிக்க ஆரம்பித்துள்ளது. இராணுவத்தின் இந்த செயல்பாடானது அரசியல் சுதந்திரற்கு விடுக்கப்படும் மிகப்பெரிய அச்சுறத்தல் எ…
-
- 0 replies
- 378 views
-
-
நேற்று மஹிந்த ராஜபக்ஷ சுமார் 500 மிலியன் டாலர் செலவில் அமைக்கபப்ட்ட துறைமுகத்தினை திறந்து வைத்துள்ளார்.இந்த திட்டம் பெருமளவு சீன உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.பெரிய கப்பல்கள் வந்து போவதற்கு வசதியாக இந்தப் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அம்பாரை துறைமுகம் திறக்கபப்ட்டு அங்கு ஈ, காக்கா கூட போகாத நிலையில் பெரும் நட்டத்தில் இயங்கிக்கொண்டு இருக்கின்ரது. இது இவ்வாறு இருக்க கொழும்பு துறைமுகத்தில் புதிதாக ஒரு முனையம் திறக்கவேன்டிய தேவை என்ன?. நோக்கம் ஒன்றுதான் அதுதான் சீனாவின் நோக்கம். இவ்வாறான துறைமுக திட்டத்தினை அபிவிருத்தி செய்வதன் ஊடாக தென்னிந்தியாவிற்கு செல்லும் வணிக கப்பல்களை கொழும்பு துறைமுகத்திற்கு வரவளைப்பதன்மூலம் இந்திய கடல் வா ணிபத்தில் வீழ்ச்சியை ஏற்ப…
-
- 0 replies
- 649 views
-
-
ரத்துபஸ்வல மக்களை சுடுமாறு கட்டளையிட்டது யார்? ஊடக அமைப்புக்கள் கேள்வி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த ரத்துபஸ்வல பொதுமக்களை சுடுமாறு கட்டளையிட்டது யார் என்பதை தெரியப்படுத்துமாறு ஊடக அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுதந்திர ஊடக அமைப்பின் செயலாளர் சுனில் ஜயசேகர கவலை வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள போதும் வெரிவேரிய சம்பவம் குறித்து உரிய முறையில் அறிக்கையிட ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த றுகுனகே குற்றஞ்சாட்டியுள்ளார். அவ்வாறாயின் அந்த அடையாள அட்டையை வைத்திருப்பது…
-
- 0 replies
- 393 views
-
-
அண்மையில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் பயணித்த படகொன்று இந்தோனேஷிய கடல் பரப்பில் விபத்துக்குள்ளானது. மேலும் வாசிக்க... http://tamilworldtoday.com/?p=26531
-
- 3 replies
- 657 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது வேட்பாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும், தற்போதைய நிலைமையில் தேர்தல் அத்துமீறல்கள் இடம்பெறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மிகவும் விரிவாக எடுத்துக் கூறினார்கள். இவ்விடயத்தினை பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் மிகவும் ஆர்வமாக கேட்டறிந்து கொண்டனர். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், சீ.வீ.கே சிவஞானம், அனந்தி எழிலன் உள்ளிட்ட பல வேட்பாளர்கள…
-
- 1 reply
- 471 views
-
-
முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளதாக இந்திய உளவுப் பிரிவான றோ அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=26451
-
- 11 replies
- 721 views
-
-
இலங்கையில் கொழும்புத் துறைமுகம் பாரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான துறைமுகத்துக்குள் பெரிய கப்பல்கள் பிரவேசிப்பதற்கு வசதியாக இந்த விரிவுபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த செயற்திட்டத்தின் 85 வீத செலவினத்தை சீன அரசு வழங்கியுள்ளது. மிகுதி 15 வீதத்தை இலங்கை அரசு செலவிட்டுள்ளது.கொழும்புத் துறைமுக அபிவிருத்தி செயற்திட்டத்தின் முதற்கட்டமான தெற்கு- கொழும்பு முனையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை காலை திறந்துவைத்தார். பெரியளவான கொள்கலன்களை ஏற்றிய கப்பல்கள் தரித்துநிற்பதற்கு வசதியாக இந்த தெற்கு துறைமுக முனையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் அண்டை நாடுகளிலும் சீனாவின் ஆதிக்கம…
-
- 0 replies
- 484 views
-
-
கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபராக ஆரையம்பதி பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி வாசுகி அருள்ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபராக கடமையாற்றிய கே.விமலநாதன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டதையடுத்து அவரின் வெற்றிடத்திற்கு திருமதி வாசுகி அருள்ராஜா கடந்த 2ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளராக கடமையாற்றிய எஸ்.வாசுதேவன் ஆரையம்பதி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி ஆரையம்பதி செயலாளர் எஸ்.வாசுதேவன் தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். : http://www.thinakkathir.com/?p=51593#sthash.6Dl45irb.dpuf
-
- 0 replies
- 423 views
-
-
புங்குடுதீவுக் கடற்கரையில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்தச் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். குடாநாட்டின் தீவக கடற்பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக கரையொதுங்கும் சடலங்கள் வரிசையில் நேற்றும் புங்குடுதீவு கடற்கரையில் மேற்படி சடலம் மீட்கப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புங்குடுதீவு 10 வட்டாரத்தில் கடற்கரையில் அழுகிய நிலையில் சுமார் 35 முதல் 45 வரையான வயது மதிக்கத்தக்க ஆணொருவரது சடலமொன்று கரை ஒதுங்கியிருப்பதை அறிந்த பொது மக்கள் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலை ஒப்படைத்துள்ளனர். நேற்று மீட்கப்பட்ட இந்தச் சடலத்துடன் தீவக கடற்பரப்புக்களில் இதுவரை …
-
- 0 replies
- 418 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் David Cameron அவர்கள் பங்கெடுத்துக் கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா தொடர்பிலான பிரித்தானியாவின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங் கொண்டுவருவதற்கான அழுத்தத்தினை பிரயோகிக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. பொதுமக்களின் கையொப்பங்களை திரட்டி அந்தந்த தொகுதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக, பிரித்தானியாவின் வெளிவிகார தேர்வுக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுநலவாய உச்சிமாநாட்டு விவகாரம் மட்டுமல்ல அதற்கும் அப்பால், சிறிலங்கா தொடர்பில் பிரித்தான…
-
- 0 replies
- 364 views
-
-
முஸ்லீம்களது மயானத்தையும் பறித்தது கடற்படை! புல்மோட்டையினில் பரிதாபம்!! திங்கட்கிழமை, 05 ஆகஸ்ட் 2013 09:58 புல்மோட்டையில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான மயானம் ஒன்றை இலங்கை கடற்படையினர் சுவீகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அங்குள்ள முஸ்லிம் மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். தமது முஸ்லி;ம் தலைவர்கள் இந்த விடயத்தில் கண்டுகொள்ளாப்போக்கை கடைப்பிடிப்பதாகவும் முஸ்லிம் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஏற்கனவே புல்மோட்டையில் உள்ள 500 ஏக்கர் காணி, பௌத்த விஹாரை ஒன்றை அமைப்பதற்காக பௌத்த பிக்கு ஒருவருக்கு இலங்கை அரசாங்கத்தினால் தாரைவார்க்கப்பட்டது இந்தநிலையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் பதவிவகிக்கின்றபோதிலும்;…
-
- 0 replies
- 423 views
-
-
இலங்கையினில் நீதித்துறையை தீர்மானிப்பவர் கோத்தாவே! போட்டுடைத்தது டெலிகிராப்!! திங்கட்கிழமை, 05 ஆகஸ்ட் 2013 10:21 பிரதமநீதியரசரின் ஊடாக இலங்கையின் உயர்நீதிமன்றத்தை அந்த நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக கொழும்பு டெலிகிராப் இணையத்தளம் தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் முன்னர், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசராக செயற்பட்டவராவார். எனவே அவர் கோட்டாயவுக்கு விசுவாசமாக செயற்படுபவர் ஆவார்.எனவே அவரை பயன்படுத்தி கோட்டாபய ராஜபக்ச, உயர்நீதிமன்றத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக கொழும்பு டெலிகிராப் தெரிவித்துள்ளது. சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான டுபேக்கோ நிறுவன வழக்கு ஒன்று அண்மையில் இடம்பெற்றபோது க…
-
- 0 replies
- 491 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இந்த பள்ளிவாசலில் நேற்றிரவு ரமழான் மாதத்தின் 27 இரவு நேர தொழுகை போன்ற வணக்க வழிபாடுகள் இடம்பெற்றன. இந்த இரவில் வழமை போன்று பள்ளிவாயல் சார்பில் ஒருவர் நன்றி தெரிவித்து உரையாற்றுவது வழக்கமாகும். அதனடிப்படையில் நேற்றிரவும் இந்த பள்ளிவாசலின் தலைவர் மர்சூக் அகமட்லெவ்வை உரையாற்றிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற இருவர் பள்ளிவாயல் தலைவரிடம் கேள்வி கேட்க முற்பட்டதுடன் பேச வேண்டாம் என தடுக்கவும் முற்பட்டுள்ளனர். இதனையடுத்து பள்ளிவா…
-
- 4 replies
- 414 views
-
-
அண்மைய ஊ்டகங்களில் 2005 இல் கல்கிசை பயங்கரவாத தடுப்பு இன்ஸ்பெக்டர் கடத்தப்பட்டு வன்னியில் வைத்து புலிகளால் கொல்லப்பட்ட செய்தி பரபரப்பாக வெளியாகிவருகிறது. அன்று அவர் கடத்தப்பட்ட பின்னணித்தகவல்கள் குறித்து ஆராய்ந்தபோது கிடைத்தவை இந்தப்பதிவில், 2004 ஆம் ஆண்டு கருணா புலிகளை விட்டு வெளியேறிய பின்னர் கிழக்கிலும் தெற்கிலும் புலிகளின் புலனாய்வுத்துறை வளம் பெருமளவு கருணாகுழுவின் நடவடிக்கைகளுக்கான திருப்பப்பட்டது.கிழக்கில் புலிகளின் புலனாய்வுத்தளபதி கீர்த்தியின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.தெற்கில் ஏற்கனவே இருந்த புலனாய்வுவலைப்பினலுடன் புதிதாக நியுட்டன் என்வரும் களம் இறக்கப்பட்டார். (கிழக்கு புலனாய்வுத்துறை தளபதி கீர்த்தி) நியுட்டன் என்ற நவம்பர் விஸ்கி விடுதலைப்புலிகளி…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமது நாட்டு காவல்துறையினரை இலங்கையில் நிலைநிறுத்துவது குறித்து மாலைதீவு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அண்டை நாடுகளில் காவல்துறை உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்துவதன் மூலம் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என மாலைதீவு காவல்துறை மா அதிபர் அப்துல்லா ரியாஸ் தெரிவித்துள்ளார். நாட்டுக்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதனை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுப் பிரஜைகளே அதிகளவில் மாலைதீவில் போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் காவ…
-
- 1 reply
- 230 views
-
-
அண்மையில் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஆசிரிய மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை வெலிவேரிய பிரதேசத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் கொல்லப்பட்டனர். இன்றைய தினம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளன. மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளத…
-
- 1 reply
- 320 views
-
-
வடமாகாண சபைத் தேர்தல் - நவிப்பிள்ளையின் விஜயம் காரணமாகவே மக்களின் காணிகள் விடுவிப்பு 04 ஆகஸ்ட் 2013 டக்ளஸின் அழுத்தம் அல்ல - அவ்வாறாயின் வலிகாமம் வடக்கில் 6500 ஏக்கர் நிலத்தை விடுவிக்க ஏன் அவரால் முடியாதுள்ளது சுரேஸ் கேள்வி நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலை நோக்காக் கொண்டும் நவநீதம் பிள்ளையின் விஜயத்தினை கருத்தில்கொண்டுமே இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் வாழும் மக்களுக்கு ஜனநாயக உரிமை கிடைக்கவேண்…
-
- 5 replies
- 534 views
-
-
ஊடக அறிக்கை! செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கடும் உழைப்பினால் உயர் பாதுகாப்பு வலயங்கள் மீட்கப்பட்டு வருவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தெரிவித்திருக்கும் கூற்றுக்கு ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் அரசியல் பீடம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,... எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம். இதை இலக்காக கொண்டு, எமது வழிமுறையில் நின்று எமது மக்களின் நிலங்களை மக்களிடமே மீட்டுக்கொடுப்பதில் நாம் படிப்படியாக வெற்றி கண்டு வருகின்றோம். இதை கண்டு அச்சப்படுகின்ற கூட்டமைப்பு, டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழுதத்தங்களால் மக்களின் நிலங்கள் மீட்டப்படவில்லை என்றும், நவநீதப்பிள்ளையின் வருகையை ஒட்டி…
-
- 6 replies
- 781 views
-
-
வட மாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கி நாட்டை மீண்டும் பிளவுபடுத்த அரசாங்கம் தயாரில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், "சுமார் 30 ஆண்டுகள் நாட்டை பீடித்திருந்த யுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இன்று நாட்டில் குண்டு வெடிப்பதில்லை. நாட்டின் நாலாபுரத்திற்கும் செல்ல முடியும். ஆனாலும் சர்வதேச மட்டத்தில் இன்னும் பிரிவினையை முன்னெடுக்க சில சக்திகள் தீவிரமாக உழைத்துக்கொண்டுள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேரதல்கள் மூலம் நாம் சர்வதேச…
-
- 2 replies
- 400 views
-
-
கடந்த ஒரு வார காலத்தில் தீவகக் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய ஆறு உடலங்களில் மூன்று சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார். கடந்த 27ஆம் திகதி நெடுந்தீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட 47 தொடக்கம் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பணிப்பாளர் குறிப்பிட்டார். அத்துடன் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட ஒரு பெண்ணினதும் ஒரு சிறுமியினதும் உடல்களும் இதுவரை இனம் காணப்படாத அதேவேளை அவ்விரண்டு சடலங்களும் அவுஸ்திரேலியா சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களினதாக இருக்குமா என ச…
-
- 0 replies
- 368 views
-
-
வெலிவெரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் இரு இளைஞர்கள் மரணமாகியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை சிறிலங்காப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும், தாக்குதல்களில் 50இற்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்தனர். இவர்களில் மோசமான காயங்களுக்குள்ளான 8 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 19 வயதான சாமிலி ரவிசன் என்ற மாணவர் நேற்றுமுன்தினம் இரவு மரணமானார். பின்னர், 27 வயதான, நிலந்த என்ற இளைஞர் நேற்று பிற்பகல் மரணமானார். இதையடுத்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோரின் தொகை 3 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, இந்தத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாக …
-
- 7 replies
- 511 views
-
-
கொழும்பில் சீனா அமைத்துள்ள புதிய கொள்கலன் துறைமுகத்தை, எந்தவொரு இராணுவத் தேவைக்கும் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று இந்திய அரசாங்கத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. இந்தத் தகவலை ரைம்ஸ் ஒவ் இந்தியா நாளேடு வெளியிட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்தில், 500 மில்லியன் டொலர் செலவில் சீனா அமைத்துள்ள கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனையம், இந்தியப் பெருங்கடலில் நுழைவதற்கான மாற்று கடற்பாதையைப் பெறும் சீனாவின் கனவை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா குறிப்பிட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் 450 மில்லியன் டொலர் செலவில் சீனா அமைத்த துறைமுகத்தை திறந்த போதும், இதுபோன்ற வாக்குறுதியை இந்தியாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் வழங்கியதாகவும் அந்தச் செய்தியில் கூற…
-
- 3 replies
- 345 views
-
-
தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான மகிந்தரின் இணைப்பாளராக ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா, மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராக 1996 ஆம் ஆண்டு தனது ஊடகப்பணியை ஆரம்பித்த சிவராஜா, மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி மற்றும் தினக்குரல் பத்திரிகை நிறுவனம் என்பனவற்றில் அரசியல் செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியராக இதுவரை கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரான சிவராஜா, இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவை மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பவற்றின் செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். http://goldtamil.com/…
-
- 0 replies
- 686 views
-
-
Gordon Weiss எழுதிய *கூண்டு" என்ற புத்தகத்திலிருந்து இலங்கை தீவு பற்றி ஒரு சில சுவாராஸ்யமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். சிலரிற்கு இது ஏற்கனவே தெரிந்தவிடயங்களாக இருக்கலாம். உங்களிற்கு தெரிந்தவற்றையும் இங்கே பதியலாம். ----------------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கையின் இன்னொரு பெயர் தான் செரென்டிப். தற்செயலாக மகிழ்சிக்குரியவற்றை கண்டுபிடிப்பது என்பது அதன் பொருள். அரேபிய மொழியில் இலங்கையை செரென்டிப் என்று அழைப்பார்கள். வட இந்தியாவில் இருந்து கி.மு. 483இல் விஜயன் 700 வீரர்களுடன் நாடுகடத்தப்படுகிறான். அதே ஆண்டில் தான் புத்தரும் மரணமடைந்ததாக நம்பப்படுகிறது. அதற்கு முன்னர்…
-
- 1 reply
- 679 views
-
-
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (04) மாலை வீசிய சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதமடைந்துள்ளன இவற்றில் 15 வீடுகள் முழுமையாகவும், 48விடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார். குறிப்பாக கரடியனாறு பிரதேசத்தில் 10 வீடுகள் முழுமையாகவும், 7 வீடுகள் பகுதியளவிலும், மரப்பாலம் பிரதேசத்தில் 5 வீடுகள் முழுமையாகவும், 37 வீடுகள் பகுதியாகவும், கித்துல் பிரதேசத்தில் 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமைடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பனிப்புரையின் பேரில் குறித்த பகுதிகளுக்கு சென்ற அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்…
-
- 0 replies
- 355 views
-